Friday, November 9, 2012

ஆடைகளின் மீது மோகம்
பத்து, இருபது வருடங்களுக்கு முன் கூட மக்கள் ஆடைகளுக்கு இப்போது செலவழிப்பது போல் பணம் செலவழிப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் இன்று!!!!!!!

கிராமங்களில் உள்ள மக்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்று சொல்வோம். அப்படிப் பட்ட மக்கள் வியர்வை சிந்தி வயலில் உழைத்து, சம்பாதிக்கும் பணத்தில் வருடத்தில் ஒரு நாள், பொங்கல் அன்று புத்தாடைகள் உடுத்தி தைத் திருநாளை கொண்டாடுவதுண்டு. தீபாவளிக்கு கூட புத்தாடைகள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

நடுத்தர மக்களும் வருடத்தில் ஒரு தடவை தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ துணிமணிகள் எடுப்பார்கள். பிறந்த நாளுக்கு கூட இரண்டாம் பட்சம் தான். வசதி படைத்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இன்று அப்படியில்லை. நடுத்தர மக்களும் எப்போது வேண்டுமானாலும் ஆடைகளை வாங்கி தள்ளுகிறார்கள். இதைத் தவறென்று சொல்லவில்லை. அவரவர்களின் விருப்பம். நாட்டில் பணபுழக்கமும் அதிகரித்து வருகிறது என்று தெரிகிறது.

மால்களிலும், துணிக்கடைகளிலும் ஒவ்வொரு பண்டிகைக்கும், ஏன் சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு கூட தள்ளுபடிகளைக் கொடுத்து விற்பனையை அள்ளுகிறார்கள். மக்களும் தேவையோ, இல்லையோ வாங்குவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்கள்.  அதுவும் தில்லி போன்ற பெருநகரங்களில் உள்ள மக்கள் மால்களில் வாங்குவதை பார்த்தால் சற்று பயமாகத் தான் இருக்கும். இவர்கள் காசு செலவழிப்பதை பற்றி யோசிப்பதேயில்லை. பிளாஸ்டிக் பொருளாகட்டும், வேறு எதுவாக இருந்தாலும் வண்டி கொள்ளாத அளவு வாங்குவார்கள்.

நாம் இப்படியிருக்க ஒரு சாரார் மிகவும் வறுமையில் கிழிந்த உடைகளை உடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் தேவையான போது உடைகளை வாங்குவோம். உங்களிடம் காசு இருக்கும் பட்சத்தில் ஏழை எளிய குழந்தைகளுக்கு முடிந்த போது துணிமணிகளை வாங்கிக் கொடுத்தால் அவர்களும் மகிழ்வார்கள் அல்லவா!மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்


21 comments:

 1. நல்ல கருத்துத்தான். ஆனால் மனது வருவதில்லை. பழைய துணிகளைத்தான் கொடுக்கிறோம்.

  ReplyDelete
 2. //என்னவரின் வலைப்பூ
  venkatnagaraj//

  கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் தேவலை. என்னவர் என்றால் ?

  ReplyDelete
 3. உண்மைதான்! மனம் கவர்ந்த பதிவு! நன்றி!

  ReplyDelete
 4. சிந்திக்கவைக்கும் சிறப்பான பகிர்வுகள்..

  ReplyDelete
 5. நுகரும் சக்தி அதிகமாகி விட்டது.இப்போதெல்லாம் கொஞ்சம் பழையதானாலும் தூக்கி எறிந்து விடுகிறார்கள்

  ReplyDelete
 6. அனைவரையும் சிந்திக்க வைக்கும் பதிவு.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 7. சிந்திக்க வைக்கும் கட்டுரை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. இந்த தீபாவளி நேரத்தில் நீங்கள் சொன்னதுபோல ஏழைகளுக்கு புதுத் துணிகள் வாங்கிக் கொடுக்கலாம்.

  எல்லோரையும் சிந்திக்க வைத்து விட்டீர்கள் ஆதி!

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 9. எல்லோருக்கும் துணிகள் மேல் பைத்தியம் பிடிச்சிருக்கு.

  ReplyDelete
 10. உண்மைதான் ஆதி. தீபாவளி பண்டிகைக்கு வீட்டில் வேலை பார்பவர் மட்டும் இன்றி,வாட்ச்மேன்,பேப்பர்காரர்,பால்காரர் என்று எல்லோருக்கும் புதுத்துணி வாங்கி கொடுப்பது என் கணவரின் வழக்கம்.

  ReplyDelete
 11. சிந்திக்க வைக்கும் பதிவு. உண்மை தான்.

  ReplyDelete
 12. மனிதாபிமானம் மிக்க மனதுடன் நல்ல சிந்தனையை விதைத்துள்ளீர்கள். இதை நாம் கடைப்பிடிக்க முயல்வோம். மிக்க நன்றி.

  ReplyDelete
 13. நல்ல கருத்துதான். ஆனால் சிலர் பழைய துணியைக் கூட பாத்திரமாக்குவதற்கே பயன்படுத்துகின்றனர்.

  ReplyDelete
 14. நல்ல கருத்து... பாராட்டுக்கள்...

  நன்றி...
  tm4

  ReplyDelete
 15. அன்பு நண்பரே இன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவை நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.

  நன்றி

  http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_9.html

  ReplyDelete
 16. துணிகள்தான் என்றில்லை, எல்லாவகை வியாபாரங்களிலும், கடைகளிலும் கூட்டம்தான்!
  பிடி அரிசி திட்டம் போல இதிலும் ஒரு நடைமுறை கொண்டு வரலாம்!

  ReplyDelete
 17. வாங்கட்டும் .. நிறைய வாங்கட்டும் .அப்போதாவது பழையவை மிகுந்து இல்லாதவர்களுக்கு கிடைக்குமே..

  புடவை மரத்தில் காய்த்தால் ஏழைப் பொன்னம்மாவுக்கு எளிதாய்க் கிடைக்கும்..

  கஷ்டமா இருக்கு ஆதி!

  ReplyDelete
 18. இப்பதிவை படித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 19. ஸாரி, ரொம்ப லேட்டுதான், ஒத்துக்கிறேன்!!

  /வாங்குவதை பார்த்தால் சற்று பயமாகத் தான் இருக்கும்.//
  ஆமாம்ப்பா, பார்த்துப் பார்த்து, பாய்ந்து பாய்ந்து வாங்குறாங்க சில மக்கள்ஸ்!! வருடத்தில் இரண்டு பெருநாட்களுக்கு மட்டும் உடைவாங்கியது போய், தனது பிறந்த நாள், தனது மண நாள், நெருங்கிய உறவுகளின் பிறந்த நாள்/மண நாள் (விழாக்களில் அணிய!!), உறவுகளின் கல்யாணங்கள், புதுமனைபுகுவிழா etc. etc. என்று துணிமணி அதுவும் ஆயிரக்கணக்கில் விலைகொடுத்து வாங்குவதைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது!! அவங்க கொல்லையில் பணங்காச்சி மரம் இருக்கும்போல... அட இருந்தாலும்கூட, இப்படியா வாங்கணும்??

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…