Thursday, November 15, 2012

கதம்பம் – 11வாசிப்பனுபவம்:-
 

 
சமீபத்தில் வாசித்த சில நூல்கள். புத்தகங்களின் சுவாரசியத்தில் பதிவுலகுக்கு கூட அவ்வப்போது வருவதில்லை….:) மூன்று நான்கு நாட்கள் கழித்து வந்து மொத்தமாக படிக்கிறேன்….:)

குருபீடம் – ஜெயகாந்தன்
குறுநாவல்கள் – N.C மோகன்தாஸ்
சாரதையின் தந்திரம் – கல்கி
கற்பூர கனவுகள் – தேவிபாலா
என்றென்றும் உன்னோடு தான் – ரமணிசந்திரன்
கடவுள் தந்த இரு மலர்கள் – காஞ்சி. பாலச்சந்திரன்

முதல் மூன்றும் நூலகத்திலிருந்து எடுத்தவை. மீதி மூன்றும் பக்கத்து வீட்டில் இரவல் வாங்கிப் படித்தது. ஜெயகாந்தன் அவர்களுடைய ”குருபீடம்” ஒரு சிறுகதை தொகுப்பு. தேவிபாலாவின் ”கற்பூர கனவுகள்” ஒரு பெண் எப்படி இருக்கக் கூடாது, அப்படியிருந்தால் என்ன விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை பற்றிய கதை. ரமணிசந்திரன் அவர்களுடைய ”என்றென்றும் உன்னோடு தான்” கதை மிகவும் விறுவிறுப்பான கதை. ”கடவுள் தந்த இரு மலர்கள்” வித்தியாசமான காதல் ஜோடிகளை பற்றியது.

சாரதையின் தந்திரம் புத்தகத்தில் உள்ள ஏழு கதைகள் ஏற்கனவே என் பதிவில் முன்பு எழுதியிருந்த கமலாவின் கல்யாணம் என்ற புத்தகத்தில் உள்ளது தான். அதனால் பாக்கி மூன்று கதைகளையும் படித்தேன்.

தற்போது ”இக்ஷ்வாகு குலதனம் என்னும் ஸ்ரீரங்க மஹாத்மியம்” புத்தகத்தை சிறிது சிறிதாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு கவிதை:-

மின்வெட்டால் கொசு ஒன்று கடித்ததன் பின் விளைவு! கவிதையை படித்த பின் நாம இப்போ இந்த பதிவை தொடரத் தான் வேணுமான்னு கேட்கக் கூடாது…..

”சொறிய சொறிய சுகம்
சொறிஞ்ச பின் ரணம்
மருத்துவருக்கு கொடுக்கணும் பணம்
தேவையா? யோசிங்க இக்கணம்!”

நவராத்திரி பொம்மை விற்பவருடன் ஒரு சந்திப்பு:-

நண்பர் வீட்டிலிருந்து விஜயதசமிக்கு பிறகு பொம்மை விலை குறைவாக இருக்கும் என்று அவர்களுக்காக வாங்கச் சொல்லியிருந்தார்கள். அதனால் ஒரு அஷ்டலஷ்மி செட்டும், ரங்கநாதர் பொம்மையும் வாங்கினேன். அப்போது நல்ல மழையாக இருந்ததால் கடைக்காரரிடம் சற்று பேச்சுக் கொடுத்து கொண்டிருந்தேன். பொம்மை சீசன் இல்லாத போது என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தான் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார்கள். கணவன் பேசும் போது நிறைய ஆங்கில வார்த்தைகளை சரளமாக உபயோகப்படுத்தினார். அதே போல் மனைவியை கடிந்து கொள்ளும் போது கூட சிவபுராணத்திலிருந்து பாட்டுகளை எடுத்துச் சொன்னார். பொம்மை வியாபாரம் இல்லாத நாட்களில் கார்த்திகை விளக்குகள், பொங்கல் பானை செய்வது, கோடைகாலத்தில் பானைகள்-ன்னு  வியாபாரம் தொடர்ந்து கொண்டேயிருக்குமாம். ஆனாலும் கைவேலைகளுக்கு இப்போ மவுசு கம்மி தான் என்றார்.

நகைச்சுவை துணுக்கு:-

முடியாது
முடியாது
முடியாது!

சில விஷயத்தை யாராலும் மாத்த முடியாது.

1 காலிப்ளவரை தலையில் வைக்க முடியாது.
2 GOLD FILTER ஐ அடகு வைக்க முடியாது.
3 கோல மாவில் தோசை சுட முடியாது.
4 வீணாப்போன மெசேஜ் வந்தாலும் உங்களால படிக்காம இருக்க முடியாது!!!!

ரோஷ்ணி கார்னர்:-

நவராத்திரி சமயத்தில் ரோஷ்ணிக்கு அவளுடைய கிச்சன் செட்டுக்கான சில பொருட்கள் கிடைத்தது. ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு. தத்ரூபம். பாருங்களேன்…சில வருடங்களுக்கு முன் திருச்சூரிலிருந்து கோவைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது நடந்த உரையாடல்….

ரோஷ்ணி : அப்பா அது என்னப்பா?
அப்பா : அது தான் MOUNTAIN. தமிழ்ல மலைன்னு சொல்வாங்க
ரோஷ்ணி : அப்பா அது எனக்கு வாங்கித்தாப்பா?
அப்பா : சரிடா செல்லம்.
ரோஷ்ணி : இப்பவே வேணும்ப்பா?
அப்பா : அடுத்த தடவை வாங்கித் தரம்மா
ரோஷ்ணி : ஓகே….. என் செல்லக்குட்டி அப்பா.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ”அடேங்கப்பா இவ அப்பா பெரிய ஆளு தான் போல….. மலையெல்லாம் வாங்கித் தரேன்னு சொல்றாரே”……. :)

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

25 comments:

 1. நவராத்திரி பொம்மை விற்பவருடன் ஒரு சந்திப்பு

  நானும் ஒரு பொம்மைக்காரருடன் பேசிக்கொண்டிருந்தேன் ...

  அருமையான அழகான கதம்பம் ...!

  ReplyDelete
 2. கதம்பம் அருமை. ரோஷ்ணி கார்னர் சூப்பர்ங்க :-))

  ReplyDelete
 3. நேரடியாக‌, தோழிக‌ளுட‌ன் பேசுவ‌து போல‌வே இருக்கிற‌து உங்க‌ள் எழுத்தின் ந‌டை.

  ReplyDelete
 4. ஆஹா மலை எல்லாம் ரிஜிஸ்டர் செய்தீங்களா??

  ReplyDelete
 5. வெங்கட் தான் ஏழு மலைகளுக்கு சொந்தக்காரர் ஆயிற்றே ; ஒரு மலை பெண்ணுக்கு கொடுப்பதில் பிரச்சனை இல்லை :)

  ReplyDelete
 6. குரு பீடம் அருமையான கதையாச்சே..

  ரோஷ்ணி இவ்வளவு சுட்டியா.. சைலண்ட்டா இருக்கறா மாதிரி இருந்துகிட்டு.. சேட்டை நல்லா பண்ணறாங்களே..

  ReplyDelete
 7. கதம்பம் வழக்கம்போல் அருமை
  சொல்லிச் செல்வதில் ஏதோ அவசரம் தெரிந்தது
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அருமையான பதிவு! இரசித்தேன்!என்னுடைய வலைப்பூவில் "நலம் தருவாய் நரசிம்மா!" மற்றும் "வாழ வை!" கவிதைகள். தங்களின் தகவலுக்கு! நன்றி!

  ReplyDelete
 9. கதம்பம் நல்லா இருக்கு ரோஷ்னி ரியல்லி சூப்பர்

  ReplyDelete
 10. கவிதை நல்லாவே இருக்கு... மலையை எப்படி வாங்கிக் கொடுக்கப் போகிறார்னு மலைப்பா இருக்கு!

  ReplyDelete
 11. கதம்பம் அருமை...

  கவிதை கூட சிரிக்க வைத்தது...
  tm7

  ReplyDelete
 12. இட்லி பாத்திரம் செம ..எனக்கு ஒன்னு ஆர்டர் ..:)

  மலையே வாங்கித்தரச்சொல்லுற மகளும் பெரியாள்..அப்பாவும் பெரியாள்.தான்..:))

  ReplyDelete
 13. nahaisuvai super.malaiya vaangi vaikka ippave idaththai ready pannunga.kathampam rasitchen.

  ReplyDelete
 14. பிரமாதம் சமையல் செட். ஸ்ரீரங்கம் வந்தால் வாங்க முடியுமா.
  பொம்மைக்காரர் பேட்டியும் அருமை.
  சீக்கிரம் வாங்கித் தரச் சொல்லுங்க. வெட்டி எடுத்துட்டுப் போயிடப் போறாங்க. ரோஷ்னி படே ஆள் தான்.:)

  ReplyDelete
 15. கதம்பம் நல்ல மணத்துடன் இருந்தது. பாராட்டுக்கள்.

  //ரோஷ்ணி : அப்பா அது என்னப்பா?

  அப்பா : அது தான் MOUNTAIN. தமிழ்ல மலைன்னு சொல்வாங்க

  ரோஷ்ணி : அப்பா அது எனக்கு வாங்கித்தாப்பா?

  அப்பா : சரிடா செல்லம்.

  ரோஷ்ணி : இப்பவே வேணும்ப்பா?

  அப்பா : அடுத்த தடவை வாங்கித் தரம்மா

  ரோஷ்ணி : ஓகே….. என் செல்லக்குட்டி அப்பா.//

  ;))))))

  அதனால் தான் எங்கள் வீட்டுக்கு தாங்களும், வெங்கட்ஜி யும் வருகை தந்தபோது ரோஷ்ணியை தங்களுடன் கூட்டி வராமல் போனீங்களா?

  நல்லவேளை எங்கள் வீட்டருகே உள்ள திருச்சி மலைக்கோட்டை தப்பியது. இல்லாட்டி அது இப்போ அங்கே டெல்லியில் அல்லவோ இருக்கும். ;))))))

  பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 16. குழந்தை பேசிய அழகில் நிச்சயம் அப்பாவிற்கு மலை மட்டுமில்லை, க‌டலையே வாங்கித்தரத்தோணுவதில் தப்பில்லை!

  கதம்பம் மணக்கிறது ஆதி!!

  ReplyDelete
 17. இப்பதிவை படித்து கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் பல.

  ReplyDelete
 18. வாசித்த புத்தகப் பகிர்வும் குழந்தை பேச்சும் பதிலும் அருமை ஆதி.

  ReplyDelete
 19. ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பு 3 பாகங்கள் இணையத்திலேயே கூடக் கிடைக்கின்றன.

  ரோஷ்னி கார்னரில் உள்ள பொம்மைகள் தத்ரூபமாய் இருக்கின்றன!

  ReplyDelete
 20. ''..வீணாப்போன மெசேஜ் வந்தாலும் உங்களால படிக்காம இருக்க முடியாது!!!! ..''
  இது சிரிப்பு வந்திட்டுது. உண்மையும் தான்!..
  குழந்தைப்(பிள்ளைப்) பேச்சு அருமை.
  வெங்கட்டுடன் ஆக்கக் கருத்துப் பரிமாறுவேன்.
  நீங்க மனைவி என்று கேட்டு வைத்திருக்கிறேன்.
  பதிவு சுவவயாக இருந்தது.
  இனிய நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 21. http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html

  இங்கு ஒரு நிமிடம் வந்தூ போங்க

  ReplyDelete
 22. //”அடேங்கப்பா இவ அப்பா பெரிய ஆளு தான் போல….. மலையெல்லாம் வாங்கித் தரேன்னு சொல்றாரே”//

  கிரானைட் பிஸினஸ் பண்ற ஐடியா இருக்குதோ அப்பாவுக்கு? :-))))

  ReplyDelete
 23. ரோஷ்ணி கார்னர் சூப்பர்.
  நானும் இதே செட் மதுரையில் வாங்கினேன் பேரனுக்கு எத்தனை வித சமையல் சாமான் உண்டோ அத்தனையும் வாங்கி இருக்கிறான் பேரன் ஒரு நாள் பகிர்ந்து கொள்கிறேன் அந்த சமையல் சாமான் படங்களை உங்களுடன்.
  வாசிப்பு அனுபவம் எதையும் மறக்க செய்யும் அருகே இருப்பவர் கூப்பிட்டால் கூட காது கேட்காது.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…