Monday, October 29, 2012

என்றுதான் திருந்துவார்களோ?
தலைப்பைப் பார்த்ததும் யார் எதற்காக என்றுதானே கேட்கத் தோன்றுகிறதுசமீபத்தில் நடந்த சில சம்பவங்களை பற்றி உங்களோடு பகிர்ந்து கொண்டு என் ஆதங்கத்தை வெளிப்படுத்தி நம் மக்கள் என்று தான் திருந்தப் போகிறார்களோ என்று கேட்க வேண்டும்.

முதல் சம்பவம்:

சமீபத்தில் உறவினர் ஒருவர் கண் மருத்துவமனைக்கு சென்று விட்டு வந்து என்னிடம் பகிர்ந்து கொண்ட சம்பவம் இது. காவிரியின் கிளை ஆறான கொள்ளிடத்தில் குளிப்பதற்காக சென்ற ஆறு வயது சிறுவன் தன் கண் பார்வையையே இழந்து விட்டானாம். அவன் மருத்துவமனையில் சிகிச்சையெடுத்தும் தன் இடது கண் பார்வையை இழந்து விட்டு வலியால்  துடித்தானாம். எதனால் இப்படி? ஆற்றில் கிடந்த பீங்கானோ, கண்ணாடியோ அவன் கண்ணை பதம் பார்த்திருக்கிறது. வீட்டில் தேவையில்லாத பொருள் என்று தோன்றுவதையெல்லாம் ஆற்றில் கொண்டு வந்து வீசியதன் விளைவு இது? அந்த சிறுவன் துடித்த துடிப்பை அவர்கள் சொல்லி கேட்கும் போதே மனம் பதைபதைக்கிறது.

இரண்டாவது சம்பவம் :-

சமீபத்தில் ஒருநாள் கோவிலுக்கு சென்றிருந்தோம். அங்கு ஒருவர் எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருந்தார். என்னவென்று விசாரித்தால், அவர் பாண்டிச்சேரியிலிருந்து வந்திருக்கிறாராம். ஸ்வாமியை தரிசனம் செய்து விட்டு ஹோட்டலில் சாப்பிட்டு  மாலையில் ஊர் திரும்பலாம் என்று கோவில் பிரகாரத்தில் சற்றே கண் அயர்ந்திருக்கிறார். எழுந்து பார்த்த போது அவரது கதர்சட்டையும் அதனுள் வைத்திருந்த 300 ரூபாயையும் காணோம்.  பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் தான் வேலையாக உள்ளதாகவும் கையில் ஊருக்கு செல்ல பணம் சற்றே குறைவாக உள்ளதாகவும், அதை விட சட்டை இல்லாமல் எப்படி ஊர் செல்வதென்றும் கண் கலங்கி அமர்ந்திருந்தார். எங்கள் கைகளில் இருந்த பணத்தைக் கொடுத்து விட்டு, வீட்டில் உள்ள இவருக்கேற்ற அளவுள்ள சட்டையை  கொடுத்ததும் மகிழ்ந்து தன்னுடைய முகவரியும் தந்து நன்றி கூறினார். எவ்வளவு பணம் இருந்தாலும் தன்னுடைய இடத்தை விட்டு வெளியே வந்த இடத்தில் தன்னுடைய பணம் மற்றும் பொருட்கள் களவு போனால் தடுமாற்றமும் கலக்கமும் வருவது தான்ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா? சட்டை கசங்காமல் இருக்க வேண்டுமென நினைத்து அருகில் வைத்து விட்டு உறங்கலாமா

டிஸ்கி: இந்த சம்பவத்தை உறவினர் ஒருவரிடம் கூறிய போது "எனக்கென்னவோ அவர் உண்மையிலேயே பணத்தை தொலைத்திருப்பாரான்னு சந்தேகமா இருக்கு. ஒரே ஆசாமி வேறொரு இடத்தில் வேறொரு கதையைக் கூறி அவர்களின் அனுதாபத்தையும் பணத்தையும் பெற்றுச் சென்றதைப் பார்த்திருக்கிறேன் என்றார்.யாரைத்தான் நம்புவதோ உதவும் நெஞ்சம்இவர்களைப் போன்றவர்கள் செயலால் நிஜத்தில் சிக்கலில் மாட்டி அல்லல் உறுகிறவர்கள் பாடு இன்னும் இறுகிப் போகிறது.


மூன்றாவது சம்பவம் :-

கண் மருத்துவமனையில் நடந்தது தான் இந்த சம்பவமும். பரிசோதனை செய்து கொள்ள வந்த ஒரு பெண்மணி தனக்கு சில்லறை தேவைப்படுவதாகச் சொல்லி ஐநூறு ரூபாயை பக்கத்தில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்மணியிடம் தந்திருக்கிறார். அதற்குள் இந்தப்  பெண்மணியை மருத்துவர் அழைக்கவே உள்ளே சென்று விட்டு சிறிது  நேரங்கழித்து வந்து பார்த்த போது அருகில் அமர்ந்திருந்த பெண்மணியைக் காணவில்லை. தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. தெரியாத ஒருவரிடம் பணத்தை கொடுத்து விட்டு சென்றதனால் ஐநூறு ரூபாயை தொலைத்து விட்டு புலம்பிக் கொண்டிருந்தார். 

கடைசி இரண்டு சம்பவங்கள் நமக்கு சொல்வது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைத் தான். ஆனால் ஆறு வயது சிறுவனின் பார்வை பறி போன விஷயம்……L


மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

47 comments:

 1. எல்லாவிஷயதிலுமே கவனமாக இருந்தாலும் சில சமயம் ஏமாந்துதான் விடுகிரோம்.ஏமாறு கிரவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் போல இருக்கு

  ReplyDelete
 2. ஆறு வயது சிறுவனின் பார்வை பறி போன விஷயம்……ரொம்ப கொடுமையானது...

  ReplyDelete
 3. தலைப்பும் பகிர்வும் மிகச் சரி
  வர வர ஏமாற்றுபவர்கள் அதிகமாவதால்
  உண்மையானவர்களுக்குக் கூட
  உதவமுடியாமல் போவது நிஜம்
  பயனுள்ள பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. முதல் சம்பவத்தில் அந்தப்பையனை நினைத்தால் பாவமாக உள்ளது.

  இரண்டாவது சம்பவம் உண்மையாகவும் இருக்கலாம்.
  தாங்கள் உதவி செய்தது நல்லதே. அதில் தவறு ஒன்றும் இல்லை.

  மூன்றாவது சம்பவமும் கேட்க மனதுக்கு கஷ்டமாகவே உள்ளது. முக்கியமாகக் கண் மருத்துவமனைக்குச் செல்பவர்கள், தகுந்த நம்பிக்கைக்கு உரிய துணையுடன் செல்வது தான் நல்லது. முடியாதபோது, தன் தேவைக்குத்தகுந்தவாறு பல்வேறு சில்லரைகளாக மாற்றிக்கொண்டு தான் செல்லவேண்டும்.

  எதிலும் நாம் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.

  ReplyDelete
 5. பாவம் அச்சிறுவன் ..GLASS துண்டு கை காலில் பட்டாலே வலி உயிர் போகும் ..கண்களில் பட்டு அப்பிள்ளை எப்படி துடிதிருப்பான்
  எல்லாம் பொறுப்புணர்வு இல்லா சிலரால் ஒரு குழந்தை அவதிபடுகிறது இரண்டாவது சம்பவத்தில் பாவம் பெரியவர் ..நீங்க உதவி செய்தது நல்லதுதான் ..ஒருசிலர் செய்யும் ஏமாற்று வேலைகளால் எல்லார் மேலும் சந்தேக பார்வை வருது ..

  ReplyDelete
 6. சிறுவன் சம்பவம் வருத்தப்படுத்துகின்றது.

  ReplyDelete
 7. வருத்தமாகத்தான் இருக்கிறது,இன்னும் இது போன்ற சம்பவங்கள் நிறையவே உள்ளது,எத்தனை நிகழ்வுகளைப் பார்த்தாலும் எதிலாவது ஏமாந்து விடுகிறோம்.

  ReplyDelete
 8. சிறுவனின் பார்வை போனது கலங்க வைக்கும் விஷயம்.

  கவனமாக இருந்தாலும் சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்பது உண்மைதான்.

  ReplyDelete
 9. பையனின் பார்வை பறி போனது உண்மையிலேயே வருந்தத்தக்கது. தேவையில்லாத பொருள்ன்னா ஆத்துலதான் கொட்டணும்ங்கற பழக்கத்தை நம்ம மக்கள் இனிமேலாவது மாத்திக்கணும்.

  ஒரு சிலர் ஏமாத்தறதால உண்மையிலேயே உதவி தேவைப்படறவங்களுக்கு நம்மால உதவ முடியறதில்லைங்கறதும் என்னவோ உண்மைதான்..

  ReplyDelete
 10. முதலாவது சம்பவம் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

  ஏமாற்றுகிறவர்கள் நிறைந்த உலகில் நாம் நல்லது நினைத்து செய்தோம் எனத் திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதாகிறது. ஒவ்வொருவர் பின்னும் சென்று ஆராய்ந்திடவும் முடியாது.

  ReplyDelete
 11. மற்ற இரண்டும் சிறு பண விஷயம் ; அதை விடுங்க

  முதல் விஷயம் மனதை தைக்கிறது கொடுமை !

  ReplyDelete
 12. பையனின் விசயம் ரொம்ப கொடுமைங்க...

  ReplyDelete
 13. அந்தப் பையனின் நிலையை நினைத்துப் பார்த்தாலே மனம் கலங்குது தோழி. கண்ணில் தூசு விழுந்தாலே கஷ்டப்படும் நிலையில் பீங்கான் துண்டு... ஹாரிபிள்... இரண்டாவது விஷயத்தில் உங்கள் கூற்று சரி. ஏமாற்றுபவர்கள் சிலரால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களும் கஷ்டப்படுகிறார்கள். என்னத்தச் சொல்ல... மனுஷ ஜென்மங்கள்!

  ReplyDelete
 14. பையனின் கண்பார்வை பறிபோனது கொடுமையான விஷயம்! நல்லப்தொரு விழிப்புணர்வைத் தரும் பதிவு!

  ReplyDelete
 15. வாங்க லஷ்மிம்மா,

  என்னுடைய ஆதங்கத்தை புரிந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 16. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 17. வாங்க ரமணி சார்,

  கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

  ReplyDelete
 18. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

  ReplyDelete
 19. வாங்க ஏஞ்சலின்,

  கருத்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 20. வாங்க கந்தசாமி ஐயா,

  தங்களின் கருத்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 21. வாங்க ஆச்சி,

  கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிப்பா.

  ReplyDelete
 22. வாங்க ரமாரவி,

  தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 23. வாங்க அமைதிச்சாரல்,

  தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 24. வாங்க ராமலஷ்மி,

  தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 25. வாங்க மோகன்குமார்,

  தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 26. வாங்க திண்டுக்கல் தனபாலன்,

  தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 27. வாங்க கணேஷ் சார்,

  தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 28. வாங்க சேஷாத்ரி சார்,

  தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 29. சம்பவம் 2,3-இத்தனை ஏமாற்றுக்கள் நடக்கின்ற போதும் உதவும் நெஞ்சங்கள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. உலகமும்!

  ReplyDelete
 30. முதல் விஷயம் மனசைக் கலங்கடிச்சுருச்சு:( என்ன கொடுமைடா சாமி.......

  மத்த ரெண்டும் காசு. நாம்தான் கவனமா இருக்கணும்.

  நம்ம மக்கள்ஸ் திருந்தவே மாட்டாங்க. செய்யறது தப்புன்னு முதலில் உணர்ந்தால்தானே திருந்த முடியும்?

  ReplyDelete
 31. நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன..
  சின்னப் பையன் பாவம்..

  ReplyDelete
 32. வாங்க கே.பி.ஜனா சார்,

  தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 33. வாங்க டீச்சர்,

  தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 34. வாங்க ரிஷபன் சார்,

  தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 35. வாங்க முனைவர்.இரா.குணசீலன்,

  தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 36. அந்த பையனை நினைத்தால் ரொம்ப கழ்டமாக இருக்கு
  இரண்டு நாள் முன் ஒரு கண்ணாடி டம்லர் சிதரி காலில் இரண்டு இடத்தில் குத்தி விட்டது அதே தாங்க முடியல கண்ணில் என்றால் ரொம்ப அப்பா நினைக்க வே கழ்டமாக இருக்கு,
  அந்த சிறுவனை நினைத்தால் ரொம்ப பாவமாக இருக்கு

  ReplyDelete
 37. Feeling sad to read about the little boy, will pray for him...:(

  ReplyDelete
 38. சிறுவனுக்கு கண் போன சம்பவம் மனதில் வலிக்கிறது! மற்ற இரண்டு சம்பவங்களும் சற்றே உஷாராக இருந்தால் போதும் . எல்லா பகிர்வுகளும் அருமை விழிப்புணர்ச்சியை கொடுக்குகிறது.

  ReplyDelete
 39. தில்லியில் இது போல என் நண்பர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது கட்டிட வேலை நடந்த ஒரு இடத்திலிருந்து ஏதோ கண்ணில் விழுந்த் மாதிரி இருக்க உடனே கண்ணைக் கசக்காமல் மருத்துவரிடம் சென்றார். கண்ணில் கண்ணாடித் துகள் விழுந்திருந்ததை மருத்துவர் நீக்கினார். தெரியாமல் கண்ணைக் கசக்கியிருந்தால் நிலமை விபரீதமாக ஆகியிருக்கும்.

  முன்பெல்லாம் இது போன்ற கட்டிட வேலை நடக்கும் இடங்களில் தட்டிகள் போன்று போட்டு மறைத்திருப்பார்கள். அது இது போன்ற தூசி துகள்கள் காற்றில் பரவுவது ஓரளவுக்காவதுத் தடுக்கப்படும்.

  நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் நாம் செய்யும் சிறுசிறு தவறுகள் இதுபோல் பலரைப் பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இது போன்ற நமக்குத் தெரியவரும் சில சம்பவங்கள் நம்மை சீர்பட வைத்தால் நல்லது.

  பகிர்வுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 40. அடப் பாவமே. இப்படிக்கூட நடக்குமா ஆதி.
  குழந்தையின் கண் போய்விட்டதே. சமூகம் எப்போ திருந்துமோ நமக்குத் தெரியாது. நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அதுதான் யதார்த்தம்.

  ReplyDelete
 41. பகிர்ந்த சம்பவங்கள் விழிப்புணர்வை எற்படுத்தக் கூடியவை.உஷாராக இருந்து கொளவது நல்லது.

  ReplyDelete
 42. Dear Adhi, enna kovai2delhi2srirangam aagi vittadha?! al recent posts about srirangam means you moved there or is this a LONG vacation? :)

  ReplyDelete
 43. அருகி வ‌ரும் ம‌னித‌நேய‌த்தையே இச்ச‌ம்ப‌வ‌ங்க‌ள் காட்டுகின்ற‌ன‌.

  ReplyDelete
 44. எல்லாரும் சொன்னதுபோல, சிறுவன் கண்பார்வை விஷயம்தான் பதற வைக்கிறது. த்குந்த சிகிச்சையின் மூலம் பார்வை திரும்பி கிடைக்க வழி அமையப் பிரார்த்தனைகள்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…