Monday, October 1, 2012

சில இடங்களில் சில மனிதர்கள்
நாம் எந்த இடத்திலிருந்தாலும் வயது வித்தியாசமில்லாமல் சிலரோடு நல்ல நட்பு ஏற்பட்டு விடுகிறது. அப்படி நான் ஸ்ரீரங்கம் வரும்போதெல்லாம் ஏற்படும்/ஏற்பட்ட சில நட்புகளைப் பற்றி இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நட்பு தாத்தா:

இந்தத் தாத்தாவோடு எனது நட்புக்கு வயது ஏழு. நான் கருவுற்றிருந்த போது பிரசவத்துக்கு முன் தினமும் காலையிலும், மாலையிலும் நடைப் பயிற்சி செய்வேன். காலையில் மொட்டை மாடியில் 50 நடையும், மாலையில் கோவிலுக்கு சென்று பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு வீட்டுக்கு வருவதும் தான் பயிற்சி. அப்படி ஒரு நாள் மாலை நடக்கும் போது என்னை இந்த தாத்தா கூப்பிட்டுயார் வீட்டு பெண் நீ?” என்று விசாரித்து எனக்கு  பேரிச்சைகளையும், மல்லிகைப்பூக்களையும் சுகப்பிரசவம் ஆக சில ஸ்லோகங்களையும் எழுதி கொடுத்து தினமும் சொல் என்று சொன்னார். திடீரென்று என்றாவது கூப்பிட்டு ஸ்லோகத்தை சொல்லச் சொல்லி தப்பில்லாமல் சொல்கிறேனா என்று பார்ப்பார். இப்படி ஆரம்பித்தது எங்கள் நட்பு. நான் "சார்" என்று கூப்பிட்டாலும் "தாத்தா" என்று அழைக்கும்படி சொல்வார். (சிலருக்கு அவர்கள் தாத்தா ஆகும் வரை மற்ற குழந்தைகள் தாத்தா என்று கூப்பிட்டால் கூடப்  பிடிக்காது.) தாத்தாவுக்கு வயது மிகவும் குறைவு தான். நான்கு வருடங்களுக்கு முன்பு 96. வயதான காரணத்தால் கொஞ்சம் சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்வார் அவ்வளவே. இப்போதும் தன்னுடைய வேலைகளை தானே தான் செய்து கொள்கிறார் தனியாக இருக்கும் இவர்


இந்த முறை தான் கொஞ்சம் உடம்புக்கு முடியலை என்றார்.

அன்பான ஒரு மாமி:
இந்த மாமியும் எனக்கு பிரசவ நேரத்தில் தான் அறிமுகமானார். அப்போது  பக்கத்து வீட்டில் இருந்தார். மாமியார் ஊருக்கு போயிருந்த சமயத்தில் என்னை அவ்வளவு அன்பாய்ப்  பார்த்துக் கொண்டார். எனக்கு ஜாதிப்பூ மிகவும் பிடிக்கும் என்று ஒருநாள் சொன்னேன். அவ்வளவுதான். தினமும் ஜாதிப்பூ வாங்கி எனக்கு வைத்து விட்டு நடைப்பயிற்சிக்கு என்னுடன் துணையாக வருவார். முற்பகல் பதினோரு மணியாகி விட்டால் மாமிகொதிகஞ்சிகொண்டு வந்து கொடுத்து உடனே வெண்ணையும், பனங்கல்கண்டும்  போட்டு குடிக்கும்படி அன்பாய் மிரட்டல் விடுவார். எனக்காகவே கொஞ்சமாக அரிசி போட்டு வடித்து கஞ்சி வைத்துக்  கொடுப்பார். மாமியார் ஊரிலிருந்து வந்த பின்பும்  கூட அந்த மாமியே தரட்டும்மா என்று சொல்லிட்டேன். பிரசவம் வரை தொடர்ந்தது கஞ்சி. இப்போ வரைக்கும் எப்போ ஊருக்கு வந்தாலும் மாமியை பார்க்காமல் இருக்க மாட்டேன். மாமிக்கே நான் வந்திருப்பது தெரிந்து விட்டால் என்னை தேடிக்கொண்டு வந்து விடுவார்.
டெல்லி பாட்டி:
இந்த முறை பழக்கமானவர் தான் இந்த பாட்டி. டெல்லியில் ஐம்பது வருடங்களுக்கு மேல்  இருந்தவராம். இவரது கணவர் மற்றும் மகனுடன்  அரங்கன் காலடியில் இருக்க வேண்டும் என்று வந்தவர். கணவர் ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இங்கு வந்து சில காலங்களுக்குள் கணவர் இறந்து விட, அடுத்த பதினைந்தே நாளில் மகனும் இறந்திருக்கிறார். இப்போது பாட்டி தனியாகத்தான்  இருக்கிறார். தள்ளாத வயதிலும் தன்னுடைய வேலைகளை தானே செய்து கொண்டு. யாராவது அவரது கணவரின் இறப்பைப்  பற்றி கவலைப்பட்டு கேட்டால், "வந்தார், வந்த வேலை முடிந்து விட்டது. சென்று விட்டார்" என்பார்.. டெல்லி பற்றி யாராவது பேசினால் குங்கும நிறத்தில் இருக்கும் பாட்டியின் முகம் சந்தோஷத்தில் இன்னும் சிவந்து விடும். ”எங்கிருந்தீர்கள்? டெல்லி மாதிரி வரவே வராதுஎன்று சொல்லிக் கொண்டேயிருப்பார். என்னை எப்போது பார்த்தாலும் அன்பாய் விசாரிப்பார்.
அன்பான தம்பதிகள்:


இவர்களும் இம்முறை கோவிலுக்கு  சென்ற  போது பழக்கமானவர்கள். நான் செல்லும் நேரத்தில் தான் அவர்களும் வருவார்கள். சில நாட்கள் பார்த்துக் கொண்டோம். பின்பு புன்னகைத்து அறிமுகப்படுத்திக் கொண்டோம். என் கையைப்  பிடித்துக்  கொண்டு " நீ பிரார்த்திப்பது எல்லாம் நிச்சயமாக நடக்கும்!" என்று ஆசீர்வாதம் செய்தார்கள். ஒரு நாள் வரவில்லையென்றாலும் "நேற்று ஏன் வரவில்லை... இன்று என்ன சுடிதார் இல்லாமல் புடவையில் வந்திருக்கிறாய்?" என்று அன்பான விசாரிப்புகள். தம்பதிகள் இருவரும் சேர்ந்து சுவாமியை பிரதட்சணம் செய்வார்கள். பின்பு மாமாவை உட்கார சொல்லி விட்டு மாமி மட்டும் பிரதட்சணம். மாமா BHELல் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்பு இருவரும் சேர்ந்து செல்வார்கள். வழக்கமான ஜோல்னா பையுடன் மாமியும், நடக்க சற்று ஏதுவாக அவர் தோளை பிடித்தபடி மாமாவும் போவார்கள்.

இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை பார்ப்பது இப்போது அரிது. அவர்கள் நம்மிடம் செலுத்தும் அன்பு நம்மைக்  கட்டிப் போட்டு விடுகிறது. வயதானவர்களை பொறுத்த வரை அவர்கள் சொல்லும் விஷயங்களை நாம் சலிப்பின்றி பொறுமையாக கேட்க வேண்டும். அதுவும் திரும்ப திரும்பச் சொன்னாலும், புதிதாக கேட்பது போல் கேட்டால் அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

மீண்டும் சந்திப்போம்.

ஆதி வெங்கட்.


டிஸ்கி: தற்செயலாக எழுதியது இந்த பதிவு. ஆனால் இன்று உலக முதியோர்

தினமாம். இந்த நாளுக்கு ஏற்ற பதிவாக அமைந்து விட்டதில் மகிழ்ச்சி.


23 comments:

 1. நல்ல மனிதர்கள் சிலரின் சந்திப்புக்களை
  நயம் படக்கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. மிக அழகான கோர்வை

  ReplyDelete
 3. .//அவரது கணவரின் இறப்பைப் பற்றி கவலைப்பட்டு கேட்டால், "வந்தார், வந்த வேலை முடிந்து விட்டது. சென்று விட்டார்" என்பார்.. .//

  //கணவனை இழந்த நிறைய பேர் சமீபத்தில் ஹோம் சிக் போலவும், மன நிலை பாதிக்க பட்டும், செயலிழந்தும் இருக்கின்றனர்.//

  எல்லோரும் டெல்லி பாட்டி போல் இருபப்தில்லை
  டெல்லி பாட்டியின் மன திடமாக இருகக் போய் தான் அப்படி சொல்ல முடியுது

  ReplyDelete
 4. அதுவும் திரும்ப திரும்பச் சொன்னாலும், புதிதாக கேட்பது போல் கேட்டால் அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்./
  சரியா சொன்னீங்க ஆதி ..
  அழகா அருமையா எழுதியிருக்கீங்க ..எதேச்சையா எழுதினாலும் உலக முதியோர் தினத்துக்கு ஏற்றார்போல அமைந்தது ..உண்மையில் உங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்

  ReplyDelete
 5. அருமையான மனிதர்களைப்பற்றிய பகிர்வு.

  ReplyDelete
 6. உலக முதியோர் தினம். இந்த நாளுக்கு ஏற்ற பதிவாக அமைந்து விட்டதில் மகிழ்ச்சி.

  பாராட்டுக்கள்..

  ReplyDelete

 7. உலக முதியோர் தினத்தில் பொருத்தமான பதிவு.

  ReplyDelete
 8. நினைத்துப் பார்த்து மகிழ வேண்டிய நட்புகள்!
  நன்று

  ReplyDelete
 9. இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை பார்ப்பது இப்போது அரிது. அவர்கள் நம்மிடம் செலுத்தும் அன்பு நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. வயதானவர்களை பொறுத்த வரை அவர்கள் சொல்லும் விஷயங்களை நாம் சலிப்பின்றி பொறுமையாக கேட்க வேண்டும். அதுவும் திரும்ப திரும்பச் சொன்னாலும், புதிதாக கேட்பது போல் கேட்டால் அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.//

  உண்மை! வித்யாசமான மனம் கவர்ந்த பதிவு! பகிர்விற்கு நன்றி! என்னுடைய வலைப் பக்கத்தில் சில குறுங்கவிதைகளும், மகள் எழுதிய கவிதையையும் பகிர்ந்துள்ளேன்! நேரம் கிடைக்கையில் படித்து தங்களின் கருத்தினைப் பதிய விழைகிறேன்! நன்றி!

  ReplyDelete
 10. இந்த பதிவை படித்து கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் பல....

  ReplyDelete
 11. சிறப்பான பகிர்வு,,

  தொடருங்கள்,,,

  ReplyDelete
 12. வணக்கம் சகோதரி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_5.html) சென்று பார்க்கவும்...

  நன்றி...

  ReplyDelete
 13. தொழிற்களம்,

  நன்றிங்க.

  திண்டுக்கல் தனபாலன்,

  தகவல் தந்ததற்கு நன்றிங்க.

  ReplyDelete
 14. அன்புடன் பழகியவர்களை மறக்க முடியாது.

  ReplyDelete
 15. ஆஹா! நானும் பூங்கொத்தையே தந்து விடுகிறேனே!வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.

  ReplyDelete
 16. முதியோர் தினத்தில் ஏற்ற பதிவு ! நானும் முதியோன் தான்!

  ReplyDelete
 17. புதிய இடுகைகள் சில என் வலைப்பூவில்! தங்கள் தகவலுக்கு! நன்றி!

  ReplyDelete
 18. இனிய நட்புகள் எம்மனத்திலும் இடம் பிடித்துள்ளார்கள்.

  ReplyDelete
 19. அன்பான மனிதர்களின் அன்பான அணுகுமுறை பற்றி அழகான பதிவு.

  ReplyDelete
 20. தாத்தா பற்றி ஒரு பதிவா !!
  தாவித் தாவி திரும்பப்படித்தேன்

  தருவதற்கும் ஒன்றுமில்லை
  பெறுவதற்கும் ஒன்றுமில்லை.

  செய்வதற்கு வேலையில்லை.
  செல்வதற்கு வழியுமில்லை.

  என்றாலும்
  என்னைச் சுற்றி எப்போதும்
  எட்டு வாண்டுகள் ( வான்டட் கள் அல்ல )
  வஞ்சனை இல்லாமல்
  உரையாடுகிறார்கள்.


  நானும் ஒரு தாத்தா.
  dha dha அல்ல.

  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 21. நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…