Monday, September 17, 2012

எச்சரிக்கை! எங்க இடத்தை அழிச்சா...

"என்னங்க, தலைப்பிலேயே மிரட்டுனா பயமா இருக்காதா?"-ன்னு  பயந்து ஓடாதீங்க, மேலே படிங்க.  

ஊர்ல இருக்கற காடு, மரம், செடி, கொடின்னு எல்லாத்தையும் அழித்துக்கொண்டு  இருக்கோம்.  ஆற்றுப் படுகைகள், தோப்புகள், விளை நிலங்கள்  என ஒன்றையும் விடாமல் அழித்து வீடுகளாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாற்றிக் கொண்டு வந்தால் அங்கிருக்கும் உயிரினங்கள் எங்கு செல்லும்? அப்படி நாம் கட்டிய  வீடுகளே அவர்களுக்கும் வீடுகள்.ஸ்ரீரங்கத்தை பொறுத்தவரை அடுக்குமாடி குடியிருப்புகள் இல்லாத இடம் எங்குள்ளது என்று பைனாகுலர் மூலம் தேடவேண்டியிருக்கிறது.  அந்தளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆதிக்கம். இந்த ஊரில், விஷ்ணுவின் திருவடிகளுக்கு அருகிலே தங்களுக்கென்று ஒரு வீடு இருக்கட்டும் என்று  எங்கிருந்தெல்லாமோ மக்கள்  வாங்கிப் போட்டு விடுகிறார்கள். விலையும் தில்லிக்கு இணையாக உள்ளது. (வீடு பார்த்த அனுபவங்கள், அதில் தெரிந்து கொண்ட விஷயங்கள் என ஒரு பதிவே போடலாம் போலிருக்கு!) புதிதாக கட்டுபவர்கள் ஒருபுறம் இருக்க, பழைய காலத்து அகலம் குறைவாக, ஒரு தெருவிலிருந்து பின் தெரு வரை நீண்ட  வீடு உள்ளவர்களும் அதை இடித்து விட்டு அந்த நீளத்தை பாதியாக்கி முன்புறம், பின்புறம் என 5,6 வீடு கட்டி விடுகிறார்கள். இந்த மாதிரி வீடுகளில், காசு கொடுத்தாலும் இயற்கைக் காற்றுக்கு வழியேயில்லை. நாள் முழுதும் மின்விசிறி சுற்றிக் கொண்டேயும்   குழல் விளக்குகள் எரிந்து கொண்டேயும்  இருக்க வேண்டும். அதற்கு முதலில் தடையில்லா மின்சாரம் வேண்டும். அது கிடைப்பதோ குதிரைக் கொம்பு - ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இருப்பதில்லை. 

எதைப் பற்றியோ எழுத ஆரம்பித்து எங்கேயோ போய் விட்டதோ பகிர்வு?  தோ வந்துட்டேன்.   தோப்புகளின் அழிவை பற்றி சொன்னேன் அல்லவா? சென்ற முறை வந்த போது என் மாமியார் தினமும் வீட்டிற்கு பின்புறம் காலையும், மாலையும் ஏறக்குறைய 13 குரங்குகள் வரிசையாக வந்து அட்டகாசம் செய்வதாக புலம்பிக் கொண்டிருந்தார். இப்போது அது 25-க்கு மேல் ஆகி விட்டது. அவைகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் வருகிறது.  பட்டியல் போட்டால் ஹனுமார் வால் போல நீளளளளளளளம்...பால்கனியில் இருக்கும் தண்ணீர்க்  குழாயை திறந்துவிட்டுச் செல்வது, குட்டிகள் ஜன்னலின் வழியே வீட்டுக்குள் நுழைந்து கிடைக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு செல்வது, கொடிகளில் காயும் துணிமணிகளை கிழித்து விட்டு செல்வது ஆகியவை தினம் தினம் நடக்கும் விஷயங்கள். பின்புறத்  தெருவில் உள்ள காய்கறிக்காரர் வண்டியில் இருந்து காய்களை எடுத்துக் கொண்டு வந்து சாப்பிடுகிறது. குட்டி ஒன்று [அவ்வளவு அழகு!] வீட்டிற்குள் வந்து fridge-ஐ திறந்து பழங்கள் எடுத்துக் கொண்டு போனது! 

முகம் பார்க்கும் சின்ன கண்ணாடி ஒன்றினை எடுத்துப் போய், மணிக்கணக்காய் தன் அழகை பார்த்துக் கொள்கிறது.  எப்படி இருந்தாலும் அதன் கண்களுக்கு அது அழகுதானே! தண்ணீர் குழாயினை திறந்து விடுவதால், தண்ணீர் வீணாகிறதே என்று பழைய துணியால் கட்டி வைத்தால், துணியைக் கடித்துக் கிழித்து விட்டு செல்கிறது. இனி அந்த குழாயையே எடுத்து விட வேண்டியது தான். மொட்டை மாடியிலும் எதையாவது காய வைப்பவர்கள்.  அவைகளிடமிருந்து காப்பாற்ற தாங்களும் சேர்ந்து காய வேண்டியிருக்கிறது, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.. 

அவர்களின் இடத்தை நாம் ஆக்கிரமித்துக்கொண்டு அவைகளை குறை சொல்வதில் அர்த்தமில்லை. இப்படியே போனால் தலைப்பில் சொன்னது போல அவைகள் நம்மைப் பார்த்து கேள்வி கேட்டாலும் ஆச்சரியமில்லை!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


48 comments:

 1. என்னத்த சொல்ல, கண்ணை விற்று சித்திரம் வாங்குகிறோம்

  ReplyDelete
 2. குட்டி ஒன்று [அவ்வளவு அழகு!]


  நிதர்சன அவஸ்தைகள் !

  ReplyDelete
 3. பரவால்ல ரொம்ப ஈசியா எடுத்துக்குறீங்க :)

  ReplyDelete
 4. பெரும்பாலும் எல்லா அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இதே போலத் தான் நடப்பதாக அறிகிறோம்.

  துணி காயப்போடவும், வடாம் பிழியவும், வேறு சில வேலைகளுக்காக மொட்டை மாடிக்குத் தனியாகச் செல்லவே அஞ்ச வேண்டி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

  இங்கு SRC மகளில் கல்லூரி அருகில் உள்ள ”கணேஷ் தர்ஷன்” என்ற அடுக்கு மாடிக்குடியிருப்பின் மொட்டை மாடிக்கு வரும் குரங்குகளில் சில மட்டும் குழாயைத்திறந்து குடிநீர் அருந்தியபின் அழகாக திரும்ப அதை மூடிவிட்டும் செல்கின்றன. தண்ணீரை வீணாக்கக்கூடாது என விழிப்புணர்வு கொண்டுள்ளன.;)

  இருப்பினும் சில குரங்குகள் மட்டும் அப்படியே திறந்து விட்டுச் சென்று விடுவதால், இப்போது அந்தக் குழாய்க்கு ஒரு பூட்டு போட்டு வைத்துள்ளனர்.

  கஷ்டம் தான் அவைகளின் இடங்களைத் தான் இன்று நாம் ஆங்காங்கே ஆக்ரமித்து வருகிறோம் என்பது உண்மை தான்.

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. Dear
  At the present juncture we have to tolerate this kind things. There is no other go. All the best for your blog.
  vijay/Delhi

  ReplyDelete
 6. எங்க ஏரியாவிலும் தினமும் குரங்காரின் அட்டகாசம் தான். (எங்க ஏரியாவுக்கு பேரே மங்கிபள்ளின்னு சொல்லியிருக்கேன். :))

  அதிகாலையிலேயே அட்டண்டென்ஸ் கொடுத்துவிடுவார். படிக்கட்டுகளில் இறங்க கூட பயம். எப்போது எங்கிருந்து வருவார்னே தெரியாது.

  ReplyDelete
 7. இப்பல்லாம் குரங்கு கள் கூட புத்திசாலிகளாக மாறிவிட்டன. நான் சென்னை போயிருந்தப்போ என்கையிலேந்தே வாட்டர் பாட்டிலை பிடிங்கிண்டு போயி அது தண்ணியா ஜூசான்னு மோந்துபாத்துதான் மூடியதிறந்து குடித்தது.

  ReplyDelete
 8. பாவம் அதுங்க எங்கேதான் போகும்? பால் பாக்கட்டை அழகா கட் பண்ணி அது உறிஞ்சி குடிக்கிற அழகே அழகு..

  ReplyDelete
 9. //வீட்டிற்குள் வந்து fridge-ஐ திறந்து பழங்கள் எடுத்துக் கொண்டு போனது! //

  என்னாது!!?? விட்டா ரேஷன் கார்டுல பேர் சேக்க வேண்டி வரும் போலருக்கு!! :-))))))

  ReplyDelete
 10. வாழ்விடங்களைப் பறிகொடுத்துவிட்டு சில உயிரினங்கள் அழிந்துவிடுகின்றன சிட்டுக்குருவிகளைப் போல். சில தங்களால் முடிந்தவரை வாழ முயற்சிசெய்கின்றன, இந்தக் குரங்குகளைப் போல். மலைப்பகுதிகளில் அடிக்கடி யானைகள் கிராமங்களில் புகுந்துவிடும் காரணமும் இதுதானாம். அவற்றின் பாதைகளில் நாம் கிராமங்களையும் வயல்களையும் அமைத்துக்கொண்டு அவை நமக்குக் கெடுதல் செய்வதாய் புலம்பிக்கொண்டிருக்கிறோம். மிகவும் தேவையான அலசல். தொடருங்க ஆதி.

  ReplyDelete
 11. திருச்சியில் தோப்புகளெல்லாம் இப்பொழுது மனைகள் ஆகிவிட்டனவே. அப்படித்தான் இருக்கும்.

  ReplyDelete
 12. அவர்களின் இடத்தை நாம் ஆக்கிரமித்துக்கொண்டு அவைகளை குறை சொல்வதில் அர்த்தமில்லை.//

  மிகச் சரியான கருத்து
  வீடு வேண்டுமானால் நம்முடையதாக இருக்கலாம்
  தோப்பாக இருந்த அந்த இடங்களுக்கு
  அவர்கள் பரம்பரையாய் இருந்த இடங்க்ளுக்கு
  அவர்களுக்கு அனுபவ பாத்தியதை இருக்கத்தானே செய்யும் ?

  ReplyDelete
 13. குரங்குகளின் குறும்புகள் படிக்க சுவை!

  ReplyDelete
 14. நம் ஆக்கிரமிப்புக்கள் தொடரும் வரை அதன் வரவும் இருக்கும்.
  அதற்கு பழம் தரும் மரங்கள் வெட்டப்பட்டு அடுக்கு மாடி குடியிருப்பாய் மாறும் போது அது நம் வீட்டில் உள்ள fridge-ஐ திறந்து பழங்களை எடுத்து சாப்பிட்டு தான் தன் பசியை போக்கி கொள்ளவேண்டும்.

  ReplyDelete
 15. பெங்களூர் மல்லேஷ்வரத்தில் பலவருடங்கள் முன் இருந்தோம். இதேபோல குட்டிக்குரங்கு வீட்டுக்குள் வந்து ஃப்ரிஜ்ஜைத் திறக்கும். பால்கனி கதவைக் கவனக்குறைவாக மூடாமல் விட்டு வந்தால் 6,7 குரங்குகள் கூட நுழைந்து பரேட் நடத்தும்.

  நல்ல எச்சரிக்கை:).

  ReplyDelete
 16. சரியாகச் சொன்னீர்கள். அவர்கள் வாழ்வதற்கான இடங்களை அழித்து நாங்கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றோம். அவற்றிற்கு போதிய உணவு கிடைப்பதில்லை பாவம் எங்கே செல்லும்.

  ReplyDelete
 17. காலம் கடந்து விட்டது,விழிப்புணர்வு இனியாவது ஏற்படட்டும்.சுவாரசியமான பகிர்வு.குரங்கு சேட்டை என்றால் இது தானோ!

  ReplyDelete
 18. வேறு வழியில்லை... மனிதர்களின் ஆக்கிரமிப்புக்கள் இருக்கும் வரை இப்படித் தான்...

  ReplyDelete
 19. வாங்க எல்.கே,

  ஆமாம். நீங்க சொல்வது சரி தான்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 20. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 21. வாங்க மோகன்குமார் சார்,

  என்ன பண்றது! ஈசியா தான் எடுத்துக்கணும்...

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 22. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  குழாயை மூடி விட்டு சென்றால் தான் பரவாயில்லையே... அந்த குரங்குகள் சமத்து தான்...:)

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 23. வாங்க விஜயராகவன் சார்,

  பொறுத்துத் தான் போகணும்...:)

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 24. வாங்க புதுகைத் தென்றல்,

  உங்க ஏரியாவிலும் இப்படித்தானா....
  இங்கயும் இப்படித்தான் பால்கனி கதவைத் திறந்தா எதிர்ல உட்கார்ந்து முறைத்துக் கொண்டிருப்பார்...:)

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 25. வாங்க லஷ்மிம்மா,

  நாங்க இந்த முறை விராலிமலை போயிருந்தப்போ ஸ்லைஸ் பாட்டிலை பிடுங்கிக் கொண்டு போய் குடித்தது. இதைப் பற்றி என் கணவர் அவரது பதிவில் எழுதியிருக்கிறார். ரோஷ்ணி பயந்து போய் இனிமே இந்தக் கோவிலுக்கே வரக் கூடாது என்று சொல்லி விட்டாள்...:))

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 26. வாங்க ரிஷபன் சார்,

  ஓ! உங்க வீட்டில் பால் பாக்கெட்டை கட் பண்ணி குடித்ததா...

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 27. வாங்க ஹுசைனம்மா,

  அப்படித் தான் ஆகிடும் போல இருக்கு...:))

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 28. ஹய்யோ... 12 வருஷத்துக்கு முன்னால நான் பார்த்த அந்த ஸ்ரீரங்கம் இப்போ இல்லையா...? பெரிய வீடுகளை இடிச்சு குட்டிக் குட்டி வீடுகளாக் கட்டி வாடகைக்கு விட்டு காசு பாக்கற நகரப் பழக்கம் அங்கயும் வந்தாச்சா? அப்றம் எப்டி இயற்கைக் காத்து வரும்? (ஹுஸைனம்மா மேடம்... சூப்பர் கமெண்ட் போங்கோ...)

  ReplyDelete
 29. தஞ்சையிலும் எங்கள் வீட்டுக்குள் திறந்திருந்த ஜன்னல் வழியே ஒரு குரங்கு நுழைந்து என் சினேகிதி கையிலிருந்த அரிசிப்பாத்திரத்தைப் பிடுங்கி வேக வேகமாய் சாப்பிட, என் சினேகிதி அலறிய அலறலில் வீட்டுக்குள் நிறைய‌ பேர் நுழைந்து விட்டார்கள்!
  நீங்கள் சொன்ன மாதிரி அதன் இடத்தை அபகரித்தால், அது நம் வீட்டுக்குள் வ‌ராமல் எங்கே போகும்?
  நல்ல பதிவு!

  ReplyDelete
 30. வாங்க கீதமஞ்சரி,

  நீங்க சொல்வது சரி தான். யானைகள் கிராமங்களுக்கு வருவதும் இந்த காரணத்தால் தான்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 31. வாங்க சீனு அண்ணா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 32. வாங்க ரமணி சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 33. வாங்க கே.பி.ஜனா சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 34. வாங்க கோமதிம்மா,

  ஆமாம்மா. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 35. வாங்க ராமலஷ்மி,

  ஓ! உங்க வீட்டிலும் ஃபிரிஜ்ஜை திறந்திருக்கா? இங்கயும் பால்கனி கதவையோ, ஜன்னலையோ சற்று திறந்திருந்தாலும் உள்ளே வந்து விடும்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 36. வாங்க மாதேவி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 37. வாங்க ஆசியா உமர்,

  விழிப்புணர்வு வர வேண்டும்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 38. வாங்க திண்டுக்கல் தனபாலன்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 39. வாங்க கணேஷ் சார்,

  இனி இடமே இருக்காது போலிருக்கு.... அப்புறம் அவங்கள்லாம் எங்கே போவாங்க.... ஹுசைனம்மா சொல்றது மாதிரி தான் ஆயிடும்...:))

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 40. வாங்க மனோம்மா,

  அரிசி பாத்திரத்தை பிடுங்கியதா.....அலறத்தான் முடியும்...

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 41. நெய்வேலியில் ஏதேனுமொரு சீச‌னில் ப‌ற‌வைக‌ள் ச‌ர‌ணால‌ய‌ம் நோக்கி வ‌ருவ‌து போல் வ‌ருவ‌துண்டு. ஊர் ஊராய் துர‌த்தினால் என்ன‌ தான் செய்யும்:) நாய் பிடிக்க‌ சுகாதார‌த் துறையில் ஆட்க‌ள் இருப்ப‌துபோல் எங்க‌ளுக்கு குர‌ங்கு பிடிக்க‌வும் உண்டு. சொன்னால் வ‌லையோடு வ‌ந்து அல்லாடி த‌ள்ளாடி கொண்டு செல்வ‌ர்.

  அவ‌ற்றின் வாழ்வாதார‌ங்க‌ளைப் ப‌றித்துக் கொண்ட‌த‌ற்குப் பிராய‌ச்சித்த‌மாய் த‌னி ரூம் போட்டு க‌ட்டி, மூன்று வேளையும் உண‌வும் கொடுக்க‌ யாருக்கிருக்கிற‌து பெரிய‌ம‌ன‌சு?! ஆஞ்ச‌நேய‌ர் த‌ய‌வால் கொல்ல‌ப்ப‌டாம‌ல் த‌ப்பிக்கின்ற‌ன‌. க‌டித்து வைத்தால் தான் வைத்திய‌ம் கிடையாதாமே... சாலையில் அடிப‌ட்டு இற‌ப்ப‌வைக்கு ப‌ய‌ப‌க்தியோடு சிலை வைத்து வ‌ழிபாட்டுத் த‌ல‌மாக்கிய‌தும் இருக்கிற‌து. ந‌ல்ல‌ வ‌ர‌ப்ப்ர‌சாதி!

  குர‌ங்கு வீட்டுக்குள் வ‌ந்தால் த‌ண்ணீர் எடுத்து விசிறிய‌டித்தால் ப‌ய‌ந்து ஓடிவிடும். ஆண்க‌ளிட‌மும் ப‌ய‌ம் உண்டு அவ‌ற்றுக்கு. நாமென்றால் எல்லாவ‌ற்றுக்கும் ச‌ற்று இள‌ப்ப‌ம் தான். பாட்டி சொல்லிக் கொடுத்த‌ப‌டி சொம்புத் த‌ண்ணீரைத் தான் விசிறிய‌டிப்ப‌து.

  ReplyDelete
 42. //அவர்களின் இடத்தை நாம் ஆக்கிரமித்துக்கொண்டு அவைகளை குறை சொல்வதில் அர்த்தமில்லை.//  சரியா சொன்னீங்க ஆதி .சுற்று கட்டு வீடு என்பார்களே அதையெல்லாம் இனி காணவே போவதில்லை .மெட்ராசில் புறநகர் பகுதியிலும் அடிக்கடி இவர்கள் பட்டாளமாய் திரிவதுண்டு ..இங்கே இங்கிலாந்திலும் காடுகளை அழித்து வீடுகள் வருவதால் நரிகள் மான்கள் நடு ரோட்டில் இரவிரவாய் சுற்றுகின்றம்ன ..பாவம்

  ReplyDelete
 43. முகம் பார்க்கும் சின்ன கண்ணாடி ஒன்றினை எடுத்துப் போய், மணிக்கணக்காய் தன் அழகை பார்த்துக் கொள்கிறது. //

  உண்மையில் சிரிச்சுட்டேன் இதை படித்துவிட்டு ..காட்டுக்குள் இருந்த வரை அவைகளுக்கு தன் முகம்தெரியாது...கொஞ்ச நாளில் மேக்கப் பாக்சை தூக்கி சென்றாலும் ஆச்சர்யமில்லை

  ReplyDelete
 44. அவங்க வீட்டை (காடுகளை) அழிச்சிட்டுத்தான்..நாம நமக்கு தேவையான வீடுகளை கட்டிக்கொண்டு வருகிறோம்! அவங்க வீடு தொடர்ந்து அழிக்கப்படும்போது பாவம் அவங்க எங்கே போவாங்க? நம்ம வீடுகளுக்குத்தான் வருவாங்க!

  ReplyDelete
 45. வாங்க நிலாமகள்,

  தண்ணீரை விசிறி அடிப்பதை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இனி அதை கடைபிடித்தால் நன்றாக இருக்கும்....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 46. வாங்க ஏஞ்சலின்,

  இங்கிலாந்தில் நரியா..... மேக்கப் பாக்ஸ், ரேஷன் கார்டில் பெயர் எல்லாம் இனி குரங்குகளிடம் இருக்கும் போலிருக்கு.....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 47. வாங்க வரலாற்று சுவடுகள்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…