Thursday, September 6, 2012

கதம்பம்-9
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை மீண்டும் சந்திக்க வந்து விட்டேன். எல்லோரும் நலம் தானே? இந்த முறை கதம்பத்தில் திருச்சி ஸ்பெஷல் இடம் பெறுகிறது.


தவற விட்ட அரிய வாய்ப்பு:-

ஸ்ரீரங்கத்தில் ஒருநாள் அவசர வேலையாக நானும் ரோஷ்ணியும் தெற்கு வாசல் என்று சொல்லப்படுகிற கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்னே நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி, தன் நான்கு வயது மகளை சின்ன சைக்கிளில் வைத்து தள்ளிக் கொண்டே போய்க் கொண்டிருந்தார். மாம்பழக்கலரில் மெரூன் பார்டர் போட்ட பட்டு புடவையை மடிசாராக கட்டிக் கொண்டிருந்தார். நானும் அவரை பின்னாலிருந்து கவனித்துக் கொண்டே அவரைத் தாண்டி செல்கையில் இவர் அவராக இருக்குமோ? அல்லது அவரைப் போல் ஜாடையா, என்றெல்லாம் யோசித்தபடியே,  இல்லை புகழ்மிக்க அவர் ஏன் சாலையில் நடந்து செல்ல வேண்டும். என்று நினைக்கையில்  அவர் என்னையும், ரோஷ்ணியையும் பார்த்துச் சிரிக்க நாங்களும் அவரை பார்த்து புன்முறுவல் செய்து விட்டு அவசர வேலை இருந்த படியால் சென்று விட்டோம். வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து யோசனை செய்கையில் ஒரு பொறி தட்டவே கணவரிடம் சொன்னேன். ஆம் நீ நினைத்தவர் தான். அவர் அங்கு தான் இருக்கிறார். மிகவும் எளிமையானவர் என்றதும் எனக்கு மிகவும் சங்கடமாகி விட்டது. கையில் பேப்பர் பேனா இருந்தும் அவரிடம் என்னைப்பற்றிய சின்னஅறிமுகம் செய்து கொண்டு ஒரு கையெழுத்து கூட வாங்காமல் விட்டுவிட்டோமே! இனி இது போல் வாய்ப்பு எப்போது கிட்டுமோ என்று என்னையே நொந்துகொண்டேன்.[பட உதவி: கூகிள்]இருங்க இருங்க இப்போ  சஸ்பென்ஸை உடைத்து விடுகிறேன். அவர் யாரென்றால் கதாகாலட்சேபங்கள் செய்யும் புகழ்மிக்க திருமதி விசாகா ஹரி அவர்கள் தான்.

பால்தூக்கால் ஒரு நட்பு:-

எங்கள் குடியிருப்பில் ஒரு தாத்தா தினமும் காலையில் வடஇந்தியாவில் பால் வாங்க பயன்படுத்தும் தூக்கை எடுத்து கொண்டு செல்வதை கவனித்திருக்கிறேன். தண்ணீர் எடுத்து வர சென்ற போது அந்த தாத்தாவும் அந்த தூக்கில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். பேச வாய் துடித்த படியால் "தாத்தா நீங்க தில்லியா?" என்று நான் வினவ, அவர் தான் அஸ்ஸாம் மாநில குவாஹத்தியில் பல வருடம் வேலை செய்ததாக சொன்னார். நான் தூக்கை பார்த்து தான் கேட்டேன் எனக் கூற, அது அவருடைய மாமியாருடைய தூக்காம். அவர் மும்பையில் இருந்ததாகவும் இது அவருடைய நினைவாக தான் வைத்திருப்பதாகவும் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னை பற்றிய விவரங்களையும் தெரிந்து கொண்டு அவரது இல்லத்தில் இப்போது அவரும் அவரது வயதான தாயும் இருப்பதாக சொல்லி தன் இல்லத்திற்கு ஒருநாள் வரும்படி அழைப்பு விடுத்தார்.


வாழ்க்கையில் தான்   எத்தனை எத்தனை ஆச்சரியங்களும், சுவாரசியங்களும் கொட்டிக் கிடக்கின்றன. மும்பையில் இருந்த தூக்கு குவாஹத்தி சென்று இப்போது ஸ்ரீரங்கத்தில். அதன் மூலம் எனக்கு ஒரு நட்பு கிடைத்திருக்கிறது.

பன்னீர் சோடா:-

எப்போது திருச்சி வந்தாலும் பன்னீர் சோடா குடிக்காமல் இருந்ததில்லை. அடிக்கும் வெய்யிலுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்குவதில்லை. அப்போது இந்த பன்னீர் சோடா தான் அமிர்தம் போல் இருக்கும். விலை நான் திருச்சிக்கு வாக்கப்பட்டு வந்த போது (எங்கேயோ போயிடாதீங்க பத்து வருடங்களுக்கு முன்பு தாங்க) 1.50 ரூபாயாக இருந்தது. இப்போது 8 ரூபாய். வாய் மணக்க மணக்க பன்னீர் சோடாவின் ருசியே அலாதி தான். இனிமே திருச்சி வந்தா மிஸ் பண்ணாம குடித்துப் பாருங்க.


எட்டு ரூபாய் சீப்புக்கு இந்தப் பாடா... :-


[பட உதவி: கூகிள்]


திருச்சி புகழாம் மங்கள் & மங்கள் பாத்திரக்கடல் சென்றிருந்தோம். பாத்திரங்கள் மட்டும் தான் என்றில்லை சென்னை சரவணா ஸ்டோர்ஸ் போல் பலமாடிகளில் எல்லாமே இங்கும்  உண்டு. முதலில் ஒரு இடத்தில் சில பொருட்களை பார்த்துக் கொண்டிருந்தேன். சரி ஒவ்வொரு பிரிவாக பார்த்து வேண்டியவற்றை எடுப்போம் என்று முதலில் ஒரு சீப்பை எடுத்துக் கொண்டு வேறு ஒரு பொருளை அங்கிருந்த பணியாளரிடம் கேட்க அது மேல் மாடியில் என்று சொல்ல சரி மாடிக்குப்  போகலாம்   என்று நகர்ந்தால் சீப்பை கொண்டாங்க... இங்கேயே பில் போட்டு காசை கொடுத்துடுங்க என்றனர். சரி என்று பார்த்தால் மூன்று இடங்களில் பில் போட்டு இங்கே கொண்டாங்க அங்கே கொண்டாங்க என்று அலைய விட்டு அடுத்த பிரிவுக்கு சென்றால் ஒரு மாடியிலேயே இரண்டு இடங்களில் பில். அதற்கு இங்கே அங்கே என்று அலைச்சல். ஏன் இப்படி?


தில்லியில் எல்லா இடங்களிலும் பொருட்களை வாங்கி முடித்துக் கொண்டு வாசலுக்கருகே பில் போட்டு ஸ்கேனரில் செக் பண்ணி அனுப்புவார்கள். இங்கேயும் அதை பின்பற்றலாமே...

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை...

ஆதி வெங்கட்.58 comments:

 1. புகழ்மிக்க திருமதி விசாகா ஹரி அவர்களை பார்த்தது மகிழ்ச்சியலிக்கிறது..

  கதம்பம் மணக்கிறது.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. ஆஹா! முதல் கதம்பத்தில் அரியதோர் வாய்ப்பை இப்படி நழுவ விட்டு விட்டீர்களே! அச்சச்சோ !!
  எனக்கே மிகவும் வருத்தமாக இருக்கிறதே!!!
  உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

  ReplyDelete
 3. அட நல்லா வாய்ப்பை விட்டுட்டீங்களே

  ReplyDelete
 4. //மும்பையில் இருந்த தூக்கு குவாஹத்தி சென்று இப்போது ஸ்ரீரங்கத்தில். அதன் மூலம் எனக்கு ஒரு நட்பு கிடைத்திருக்கிறது.//

  ஆஹா! தூக்கி நிறுத்திப்பார்க்க வேண்டிய நட்பாகத் தான் உள்ளது, நட்புக்குக் காரணமான அந்தத் தூக்கு வாழ்க!

  ReplyDelete
 5. //வாய் மணக்க மணக்க பன்னீர் சோடாவின் ருசியே அலாதி தான். இனிமே திருச்சி வந்தா மிஸ் பண்ணாம குடித்துப் பாருங்க.//

  நான் இதை அடிக்கடி வாங்கிக்குடிப்பதுண்டு. ஏன் மற்ற ஊர்களில் இது கிடைக்காதா? மேடம்.

  ReplyDelete
 6. //தில்லியில் எல்லா இடங்களிலும் பொருட்களை வாங்கி முடித்துக் கொண்டு வாசலுக்கருகே பில் போட்டு ஸ்கேனரில் செக் பண்ணி அனுப்புவார்கள். இங்கேயும் அதை பின்பற்றலாமே...//

  இங்கும் முன்பு அப்படித்தான் செய்து கொண்டிருந்தார்கள். இப்போ சமீபத்தில் தான் இதனை ஏதோ காரணத்தால் மாற்றி விட்டார்கள்.

  இங்கெல்லாம் சென்றால் மிகவும் நமக்குப் பொறுமை வேண்டும். செலெக்‌ஷன், பில்லிங், பெயிங் கேஷ், செக்கிங், பேக்கிங்க் என பல்வேறு சட்ட திட்டங்கள் உண்டு. கும்பலும் குறையவே குறையாது.

  ஆனால் இந்த மங்கள் அண்டு மங்களில் கிடைக்காத பொருட்களே கிடையாது. தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை, வெங்கலம், இரும்பு, எவர்சில்வர், ப்ளாஸ்டிக், எலெக்ட்ரானிக்ஸ் என எதையும் விடாமல் மிகப்பெரிய அளவில் வியாபாரத்தில் இன்று கொடிகட்டிப்பறக்கிறார்கள். மக்களும் அங்கு தான் போய் மோதுகிறார்கள்.

  மொத்தத்தில் எங்கள் ஊர் கதம்ப மணம் உங்களின் இந்தப்பதிவினில் மிகுந்த வாசனையுடன் வீசுகிறது. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்.

  அன்புடன்
  vgk

  ReplyDelete
 7. பகிர்வு சுவாரசியம் விசாகா ஹரியிடம் பேசாம வந்துட்டீங்களே மெட்ராஸ்போகும்போதெல்லாம் பன்னீர் சோடா எங்க கிடைக்குனு தேடுவேன் இன்றுவரை என் கண்களில் படவேமாட்டேங்குது

  ReplyDelete
 8. நல்ல தொகுப்பு. பால்தூக்கு ஊர்விட்டு ஊர் நினைவுகளைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறது.

  ReplyDelete
 9. நான் 7 வருடம் இருந்த ஊர் ; திருச்சி மீது தனி பாசம் உண்டு. ரோஷினிக்கு எங்கள் அன்பு. அஜூ மற்றும் நாட்டி அவளை கேட்டதாக சொல்லுங்கள்

  ReplyDelete
 10. மணக்கும் கதம்பம்

  ReplyDelete
 11. பதிவும், அன்பர்களின் கருத்தும் அருமை...

  நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தாலும் சிறப்பான பகிர்வை கொடுத்துள்ளீர்கள் சகோதரி... நன்றி...

  ReplyDelete
 12. ஒருவழியா வந்துட்டீங்களா!! வாங்க, வாங்க...

  //வடஇந்தியாவில் பால் வாங்க பயன்படுத்தும் தூக்கை//

  அப்படி என்ன ஸ்பெஷல் தூக்கு? படம் போட்டா நாங்களும் பாத்திருப்போம்ல!

  இங்க பலமாடி கடைகளில் பொருட்கள் வாங்கும்போது அந்தந்த மாடிகளில் பணம் செலுத்திவிடவேண்டும். இறுதியில் பணம் கட்டிய பில்லை கீழ்த்தளத்தில் காண்பித்தால், பொருட்களைத் தந்துவிடுவார்கள். நாம் சுமந்துகொண்டு திரிய வேண்டியதில்லை.

  ReplyDelete
 13. ஸ்ரீரங்கம் உங்கள் பார்வையில் சுவாரசியமாய் இருக்கிறது

  ReplyDelete
 14. கதம்ப மலரின் வாசம்
  மனத்தை மயக்கியது
  இனியேனும் அடிக்கடி பதிவ்கள் தர
  அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

  ReplyDelete
 15. ஊர்ப்பாச‌ம் க‌ம‌க‌ம‌க்கிற‌து.

  ReplyDelete
 16. ரொம்ப நாளுக்கப்புறம் வந்தாலும் நல்ல மணமான கதம்பத்தோட வந்துருக்கீங்க.. அடிக்கடி எழுதுங்க.

  ReplyDelete
 17. புகழ்மிக்க திருமதி விசாகா ஹரி அவர்களை பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது..

  ReplyDelete
 18. வந்தாச்சா வாங்க வாங்க

  ReplyDelete
 19. ஆமாங்க... இந்த மாதிரி இடங்கள்ல பர்ச்சேஸ் பண்ணுற போது எனக்கும் உங்களோட கருததுதான். பில் போடறதுக்கே நாம தனித்தனியா நேரம் செலவழிக்க வேண்டியிருக்கு. பன்னீர் சோடா... கொஞ்ச நாளா நான் மிஸ் பண்ணிருக்கற ஒரு ப்ரெண்ட் அது. இங்க சென்னைல அவ்வளவு நல்லா இருக்கறதில்ல. விசாகா ஹரியை மறுமுறை பாத்தா பேசிட்டு எழுதுங்க. ரோஷ்ணி நலம்தானே... எப்படியோ உங்கள் தளத்துல நீண்ட நாள் கழிச்சு கருத்திட்டதுல கொள்ளை சந்தோஷம் எனக்கு.

  ReplyDelete
 20. Well come back!!
  இப்பதான் நெட் வசதி + நேரம் கிடைத்ததா?

  ReplyDelete
 21. திருச்சி போயி இப்பதான் பதிவெழுத திரிச்சி வந்தோ! வரணும்! வரணும்!.

  ReplyDelete
 22. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 23. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  நிச்சயம் வருத்தத்தை தான் தந்தது. அன்று முழுதும் புலம்பிக் கொண்டிருந்தேன். ரோஷ்ணி தான் சமாதானப்படுத்தினாள். திரும்ப பார்த்துக்கலாம் என்று.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 24. வாங்க எல்.கே,

  ஆமாம். நல்ல வாய்ப்பு தான். அதன் பிறகு அவர்கள் வீட்டின் வழியே பல் முறை சென்றும் கூட பார்க்க சந்தர்ப்பம் அமையவில்லை.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 25. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  ஆமாம் சார். நட்புக்கு காரணமான அந்த தூக்கு வாழ்க என்று தான் சொல்ல வேண்டும்...:)

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 26. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  கோவையில் இருந்தவரை பன்னீர் சோடாவை பற்றி கேள்விப்பட்டதில்லை... திருச்சியில் தான் குடித்திருக்கிறேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 27. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  பில் போட அலைஞ்சது தான் மிச்சம். ஆளுக்கொரு புறம் வரிசையில் நின்று கொண்டு பணம் செலுத்திக் கொண்டிருந்தோம். பொறுமை தான் மிகவும் வேண்டும்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 28. வாங்க லஷ்மிம்மா,

  பேசாம வந்தது வருத்தம் தான். அவசரம் வேறு. அது போக அங்கு தான் உள்ளார் என்று எனக்கு தெரியாதும்மா. பார்க்கலாம் சந்தர்ப்பம் அமையுதா என்று....
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 29. வாங்க ராமலஷ்மி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 30. வாங்க மோகன்குமார் சார்,

  திருச்சி எனக்கும் பிடித்த ஊராகி விட்டது...:) ரோஷ்ணியிடம் அஜு, நாட்டி விசாரித்ததாக சொல்லிவிட்டேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 31. வாங்க குட்டன்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 32. வாங்க திண்டுக்கல் தனபாலன்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 33. வாங்க ஹுசைனம்மா,

  என்னுடைய வரவுக்காக கூட ஆவலுடன் காத்திருந்தீங்களா!!!!!!!!!

  என்னுடைய இந்த பதிவில் அந்த தூக்கின் படத்தை போட்டுள்ளேன். பாருங்க.
  http://www.kovai2delhi.blogspot.in/2011/12/blog-post_07.html

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 34. வாங்க வரலாற்று சுவடுகள்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 35. வாங்க ரிஷபன் சார்,

  ஸ்ரீரங்கத்துக்காரரான உங்களிடமிருந்து சுவாரசியமாய் இருக்கிறது என்ற கருத்துரையை பெற்றது குறித்து மிகவும் மகிழ்ச்சி சார்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 36. வாங்க ரமணி சார்,

  உங்களுடைய அன்பான வேண்டுகோளுக்கு நன்றி சார். இனி அடிக்கடி பதிவுகள் தர முயற்சிக்க்கிறேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 37. வாங்க ரமணி சார்,

  தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 38. வாங்க நிலாமகள்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 39. வாங்க அமைதிச்சாரல்,

  உங்க வேண்டுகோளுக்கு நன்றிங்க. இனிமேல் அடிக்கடி பதிவுகள் தர முயற்சிக்கிறேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 40. வாங்க கே.பி.ஜனா சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 41. வாங்க சமுத்ரா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 42. வாங்க அமுதா கிருஷ்ணா,

  ஆமாங்க வந்துவிட்டேன்...

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 43. வாங்க கணேஷ் சார்,

  ஆமாம் சார். பில் போடறதுக்கே பெரும்பாலான நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கு. நானும் திருச்சியில் தான் பன்னீர் சோடா குடித்திருக்கிறேன். சென்னையிலும் கிடைக்குதா... அடுத்த முறை நிச்சயம் பார்த்து விட்டு எழுதுகிறேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 44. வாங்க சீனு அண்ணா,

  ஆமாம். இப்பத்தான் நெட் வசதியும், நேரமும் கிடைத்தது.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 45. வாங்க ஈஸ்வரன் சார்,

  வந்து, வந்து....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 46. நீண்ட நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்! வரும்போதே கதம்ப வாசத்துடன் வந்து விட்டீர்கள்! கதம்பம் மணக்கிறது!

  நிலாமகள் சொல்வது போல ஊர்ப்பாசம் தூக்கலாகத் தெரிகிற‌து! ' சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா' பாடல் நினைவுக்கு வருகிறது!

  தஞ்சையில் பன்னீர் சோடா மிகவும் பிரபலம்! ஒவ்வொரு முறையும் தஞ்சை செல்லும்போது நிறைய வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் நிரப்பும் பழக்கம் என் கணவருக்கு எப்போதும் உண்டு!

  மங்கள் மங்களில் பில் போடுவதற்குள் பொறுமை இழந்து தேர்வு செய்த பொருள்களை அப்படியே வைத்து விட்டு வந்து விடலாமா என்று சில சமயம் யோசித்திருக்கிறேன்.

  ReplyDelete
 47. வெல்கம் பேக். ஊர் நினைவுகளோடு கூடிய நல்ல பகிர்வு.பன்னீர் சோடா இதுவரை குடித்ததில்லை.கேட்கவே ஆசையாக இருக்கு.

  ReplyDelete
 48. வாங்க மனோம்மா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 49. வாங்க ஆசியா உமர்,

  பன்னீர் சோடாவை ஒருமுறை குடித்துப் பாருங்கள். அப்புறம் விட மாட்டீர்கள்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 50. மிகவும் அருமையான தகவல் நன்றி தோழரே

  ReplyDelete
 51. பன்னீர் சோடாவில் பழைய டேஸ்ட் இப்போது இல்லை என்று எனக்குத் தோன்றும்! மனப்ரமை! பெரிய கடைகளில் இந்த பில் போடும் உபத்திரவம் பெரிய உபத்திரவம்தான்.

  ReplyDelete
 52. நல்ல கதம்பம் அருமை.
  நெட் வந்து விட்டது அருமையான பதிவுகள் இனி உங்களிமிருந்து வரும் வாழ்த்துக்கள் ஆதி.ரோஷ்ணி நலமா?

  ReplyDelete
 53. வாங்க மோகன்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றீ.

  ReplyDelete
 54. வாங்க ஸ்ரீராம்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 55. வாங்க கோமதிம்மா,

  ரோஷ்ணி நலமுடன் இருக்கிறாள்.
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…