Monday, September 24, 2012

கதம்பம் 10

இம்முறை  பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி பார்ப்போம்...

வாசித்தவை :

 [பட உதவி: கூகிள்]

பதிவுலகுக்கு வராமல்  விடுமுறையில்  இருந்த காலத்தில் சில புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்... வாய்ப்பு கிடைக்கும் போது நீங்களும் வாசித்து பாருங்க...

கடமையும் கடைவிழியும் – விக்ரமன்
காதல் தெய்வம் – கு.ம.கிருஷ்ணன்
கல்யாணமே வைபோகமே – நா.ராமச்சந்திரன்
அம்மா காத்திருப்பாயா? – சுமங்கலி
அற்புதமான கதைகள் – அநுத்தமா
திசை மாறும் வாழ்க்கை – லதா முகுந்தன்
புண் உமிழ் குருதி – அசோகமித்திரன்
கமலா டியர் கமலா – அகஸ்தியன்
ரொட்டி ஒலி – அகஸ்தியன்


தமிழ் வாழ்க :

சென்னைக்கு மே மாத விடுமுறையில் சென்ற போது அங்காடிகளின் வாசலில் அவர்கள் வைத்திருந்த பெயர்ப்பலகை கவனத்தை ஈர்த்தது...

பயணப் பொருளகம் – TRAVELLERS SHOP
அறைகலனகம் – FURNITURE SHOP
அடுமனை – BAKERY
மின் பொருளகம் – ELECTRICAL SHOP
வன் பொருளகம் – HARDWARE SHOP

என்ன நல்லாயிருக்குல்ல...

டிப்ஸ் :


[படம்:  சிறுமுயற்சி வலைப்பூவிலிருந்து]

காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது பாலிதீன் கவரில் போட்டு வைப்போம் இல்லையா... நீண்ட நேர மின் துண்டிப்பில் கவரில் நீர் சேர்ந்து காய்கறிகளை வீணாக்கி விடும். அதற்குப் பதிலாக காய்கறிகளை துணிப்பைகளில் (பருத்தி) போட்டு வைத்தால் மின்சாரம் நெடுநேரம் இல்லையென்றாலும், ஈரம் அதிகம் இருந்தாலும் பை இழுத்து விடும். காய்கறிகள் ஒரு வாரம், பத்து நாள் வரை கூட நன்றாக இருக்கிறது. நான் அப்படித் தான் செய்கிறேன்.

இந்த துணிப்பைகளை வைத்து இன்னோரு உபயோகம் ஒன்றும் இருக்கிறது. இதை பல வருடங்களாக நான் செய்து கொண்டு வருவது. பட்டுபுடவைகளை இரும்பு பீரோவில் வைப்பதால் ஜரிகை கறுத்து விடுகிறது என்று நான் கேள்விப்பட்டதுண்டு. அதனால் இந்த மாதிரி துணிப்பைகளில் போட்டு வைப்பதால் ஜரிகை கறுக்கவில்லை. இதையும் செய்து பாருங்களேன்...

மஞ்சப்பைகளையும், துணிப்பைகளையும் இப்படி உபயோகிக்கலாமே...

ஆடிப்பூர திருவிழா:

 

[பட உதவி: கூகிள்]

ஸ்ரீரங்கத்தில் ஆடிப்பூரத்திற்காக ஆண்டாள் கண்ணாடி அறை சேவை  கோலாகலமாக இருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்திருந்து தினம் ஒரு அலங்காரம் செய்திருந்தார்கள். பார்க்கவே கொள்ளை அழகு... தினமும் அரங்கனின் லீலை தான்...

கஜேந்திர மோட்சம், சேது பந்தனம், காளிங்க நர்த்தனம், உலகளந்த பெருமாள், துலாபாரம், சிசுபாலன் ருக்மயி உடன் கிருஷ்ணரும், ருக்மிணியும், கனாக்கண்ட ஆண்டாள் திருமணக்கோலம் அரங்கனை கைப்பிடித்தல், துவாரக்நாத்ஜீ இப்படி பத்துநாட்களும் கண்கொள்ளாக் காட்சி தான். அந்த இடமே நம்மை அந்த காலத்திற்கு கொண்டு சென்றது.. அந்தளவுக்கு தத்ரூபம். வாய்ப்பு அமையும் போது இந்த சமயத்தில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கன், ஆண்டாளின் ஆசியைப் பெறுங்கள்.

சோதனை எலிகளின் மூலம் சோதனை:


[பட உதவி: கூகிள்]

சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு ரெசிபியை செய்து பார்த்தேன். நன்றாக வந்திருந்தது. காரம் தான் கொஞ்சம் ஜாஸ்தின்னு கணவரின் கருத்துரை. அடுத்த முறை கொஞ்சம் குறைத்தால் சரியாகிவிடும். அது என்ன ரெசிபி என்பவர்களுக்கு, வாங்கி பாத் அதன் பெயர். கத்திரிக்காய் சாதம். கத்திரிக்காயே எங்கள் வீட்டில் யாருக்கும் பிடிக்காது. வட இந்திய சப்ஜியான பேங்கன் கி பர்த்தா என் கணவருக்கு மட்டும் பிடிக்கும். முடிந்த அளவு டப்பாவில் போட்டு கொடுத்து விடுவேன்.... இந்த முறையில் சாதம் செய்ததில் எல்லோருக்குமே காய் உள்ளே சென்றது.. ரெசிபி வேண்டுமென்பவர்களுக்கு அடுத்த பதிவில் தருகிறேன். ஆஹா! இன்னோரு பதிவு தேத்திட்டேன்...


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


36 comments:

 1. நல்ல கதம்பம். கத்திரிக்காய் பிடிக்காதா ?? எண்ணை கத்திரிக்காய் பண்ணுங்க. நல்லா இருக்கும்

  ReplyDelete
 2. சுவாரஸ்யம். நிறைய விதமான புக் படிச்சிருக்கீங்க வெரி குட்

  ReplyDelete
 3. கதம்பம் அருமை.
  நானும் புத்தக கண்காட்சியில், தேவன் அவர்களின் கதைகள் வாங்கினேன்.
  எங்கள் வீட்டிலும் துணி பையில் தான் காய் வைக்கிறோம். கத்திரிக்காய் சாதம்(வாங்கிபாத்) செய்வேன், பிஞ்சு கத்திரிக்காய் என்றால் மிக நன்றாக இருக்கும் காரம் ரொம்ப ஏற்காது பிஞ்சு கத்திரிக்காய்.
  முன்பு பார்த்து இருக்கிறேன் கண்ணடி சேவை. மறுபடியும் பார்க்க ஆவல்.

  ReplyDelete
 4. அருமையான டிப்ஸ்

  ReplyDelete
 5. நல்ல வாசனையான கதம்பம்தான்.

  //சோதனை எலிகளின் மூலம் சோதனை//

  சபாஷ்! சரியான தலைப்பு.

  ReplyDelete
 6. துணிப்பை காய்கறி குட் ஐடியா.எனக்கு பச்சை கத்திரிக்காய் மட்டுமே பிடிக்கும்.

  ReplyDelete
 7. - சொல்லவே வேண்டாம் உங்களுக்கே தெரியும், நீங்க குடுத்த லிஸ்ட்ல நான் ஆர்.சி நாவல் ஒண்ணு தான் படித்தேன்...:) நல்ல கதம்பம் ஆதி, இந்த பக்கம் வந்து நாளாச்சு, படித்ததில் மகிழ்ச்சி


  - தமிழ் வாழ்க சூப்பர்... அது தமிழ் வால்க'வா ஆகாத வரை சந்தோஷம் தான்


  - சூப்பர் டிப்ஸ், இதன் மூலமா பிளாஸ்டிக் உபயோகத்தையும் தவிர்க்கலாம்... நல்ல விஷயம்


  - ஆடிப்பூரம் அட்டகாசம்


  - வாங்கிபாத், வாங்க நாங்க ரெடி, போஸ்ட் போடுங்க ஆதி...:)

  ReplyDelete
 8. தமிழ்ப்படுத்திய பெயர்களை ரசிக்க முடியுது. ஆனா எல்லாம் சென்னைல பாதியா தான் இருக்கு. மைஃபேர் லேடி பேன்சி ஸ்டோர்ஸ்-ங்கற பேருக்கு தமிழ் வடிவம் மைஃபேர் லேடி அழகுப் பொருளகம்னு பொட்டிருந்தாங்க. இப்படி பாதி ஆங்கிலம் சமயத்துல என்னை வதைக்குதுங்க. நிறையப் படிச்சதுக்கு என் வாழ்த்துக்கள். அதுல ஒண்ணு ரெண்டுக்காவது விமர்சனம் எழுதினா என்னை போல பாமர ஜனங்களுக்கு உதவியா இருக்கும்ல? துணிப்பை ஐடியா பலே. காய்கறிகள்ல எனக்கு ஆகாதது கத்தரிக்காய் மட்டும்தான். அதனால நே கமெண்ட்ஸ். கதம்பம் அருமைங்க.

  ReplyDelete
 9. Useful infomation.. (tips).
  thanks for sharing

  ReplyDelete
 10. வாழ்க தமிழ்..நல்லா இருக்கு..

  மஞ்சப்பை ந்னா சும்மாவா.. :)

  ReplyDelete
 11. துணிப்பை உபயோகம் பற்றிய தகவல் உபயோகமாகா இருந்தது.

  ReplyDelete
 12. வாங்க எல்.கே,

  எண்ணை கத்திரிக்காய் குழம்பு சிறுவயதில் அம்மா செய்து சாப்பிட்டிருக்கிறேன்....ஆனாலும் கத்திரிக்காய் என்றால் ஏனோ பிடிப்பதில்லை...

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 13. வாங்க மோகன்குமார் சார்,

  படித்த புத்தகங்கள் அனைத்துமே நூலகத்திலிருந்து என் மாமனார் எடுத்துக் கொண்டு வந்து தந்தது.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 14. வாங்க கோமதிம்மா,

  உங்க வீட்டிலும் துணிப்பையில் தானா..... ஆண்டாளின் கண்ணாடி சேவை காண வாருங்கள்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 15. வாங்க மோகன்.பி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 16. வாங்க ஈஸ்வரன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 17. வாங்க அமுதா கிருஷ்ணா,

  ஓ! உங்களுக்கு பச்சை கத்திரிக்காய் பிடிக்குமா.....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 18. வாங்க புவனா,

  வாங்கிபாத் ரெசிபிக்கு ஆதரவா!!!....சரி தயார் பண்றேன்...:)

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 19. வாங்க கணேஷ் சார்,

  பாதி ஆங்கிலத்தில் இருக்கா.....அது மோசமாச்சே....
  விமர்சனம் எழுத முயற்சி செய்கிறேன் சார்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 20. வாங்க மாதவன் ஸ்ரீனிவாச கோபாலன்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 21. வாங்க முத்துலெட்சுமி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 22. வாங்க திண்டுக்கல் தனபாலன்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 23. வாங்க கே.பி.ஜனா சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 24. நல்ல கதம்பம் .ரெசிப்பியை எத்ர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 25. //எங்கள் வீட்டில் யாருக்கும் பிடிக்காது//

  வீட்டில் இருக்கிறது நீங்க மூணு பேர். அதில உங்க ரெண்டு பேருக்கும் கத்தரிக்கா பிடிக்காதுன்னா, ”யாருக்குமே” பிடிக்காதுன்னு ஆகிடுமா!! என்னா வில்லத்தனம்!! :-)))))))

  ReplyDelete
 26. அடுத்த பதிவிற்கு வெயிட்டிங் வாங்கி பாத் ரெசிப்பி வேணும்.ஆமாம் துணிப்பையில் பட்டுசேலை போட்டு வைப்பது தெரியும்,ஃப்ரிட்ஜ் விஷ்யம் புது கண்டுபிடிப்பாக இருக்கே.புத்தகப் பகிர்வு அருமை.தமிழ் வாழ்க பகிர்வு சுவாரசியம்..

  ReplyDelete
 27. இன்றைய கதம்பம் மிக அருமை ....உங்கள் பகிர்வுக்கு நன்றி.......
  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 28. அருமையான பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள் மேடம்.

  ReplyDelete
 29. வாங்க ஆச்சி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 30. வாங்க ஹுசைனம்மா,

  ஓ! அப்படி வரீங்களா....:))

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 31. வாங்க ஆசியா உமர்,

  ரெசிப்பி விரைவில் தர முயற்சி செய்கிறேன்....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 32. வாங்க Easy (EZ) Editorial Calendar,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 33. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 34. கதம்பம் அருமை,.. துணிப்பை நல்ல டிப்ஸ்.

  ReplyDelete
 35. வாங்க அமைதிச்சாரல்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…