Monday, April 30, 2012

ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா
தலைப்பை பார்த்ததுமே புரிந்திருக்குமே உங்களுக்கு. ஆமாங்க நான் ஹிந்தி கற்றுக் கொண்ட அனுபவங்களை, அந்த சோகக் கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். என் மீண்டும் பள்ளிக்கு போகலாம் தொடர்பதிவில் சொன்னது போலவே ஆறாம் வகுப்பு ஆரம்பத்திலேயே எங்க வீட்டுக்கு மேல் வீட்டில் உள்ள ஒரு ஹிந்தி கற்பிப்பவரிடம் என்னை முதல் தேர்வான ”பிராத்மிக்” (PRATHMIC) சேர்த்து விட்டார் என் அம்மா.

அதிலிருந்து ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு தேர்வாக எழுதித் தேறிக் கொண்டிருந்தேன். காலையில் ஆறு மணிக்கு எழுந்து மேல் வீட்டு டீச்சரிடம் கற்றுக் கொள்ள செல்ல வேண்டும். இதுவே எரிச்சல் என்றால், தப்பாக எழுதினாலோ இல்லை தெரியவில்லை என்றாலோ முட்டி போடச் சொல்வார் அந்த ஆசிரியர். இது பெரிய எரிச்சல். பள்ளிப்படிப்பு தவிர கூடுதலாக படிக்கும் இதிலும் முட்டி போடச் சொல்வது பெரிய கொடுமை… (நீங்க என்ன சொல்றீங்க?)

அந்த ஆசிரியர் அருகிலேயே மர ஸ்கேல் அல்லது குச்சி (எதுக்கா? அடிக்கத் தான்...) வைத்திருப்பார். இதனுடன் ஹிந்தி தமிழ் டிக்‌ஷனரி. ஆமாங்க முக்கால் வாசி நேரம் இதைப் பார்த்து தான் அர்த்தம் சொல்வார். ஏனோ இந்த முட்டி போடுதல், அடி வாங்குவது, எதற்கெடுத்தாலும் டிக்‌ஷனரியை பார்த்து சொல்லுதல் இந்த காரணத்தினாலேயே ஹிந்தியே பிடிக்கவில்லை. அம்மாவிடம் சொன்னாலும் மேல் வீடு தான் அருகில் இருக்கிறது என்பதால் வேறு எங்கும் அனுப்பவில்லை.

பரீட்சைக்கு முன்னர் இருமுறை ஏதாவது பள்ளிகளில் செமினார் வைப்பாங்க. அப்பா அழைத்துச் சென்று விட்டு விட்டு இருந்து மாலையில் அழைத்து வருவார். முதல் பரீட்சையன்று தேர்வு எழுதும் செண்டருக்கு சென்றதும் பயமாகி விட்டது. காரணம் அங்கு சிறியவர்கள் முதல் 60 வயது பெரியவர்கள் வரை தேர்வு எழுதுவதைக் கண்டதும் எனக்குள் என்னவோ செய்தது. கிடுகிடுவென்று தேர்வினை எழுதி விட்டு வந்து விட்டேன். வரும் வழியில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பயத்தில் வாந்தியே எடுத்து விட்டேன். அன்று செளசெள (என்ர ஊர்ல மேரக்காய்) கூட்டு சாப்பிட்டிருந்தேன். அன்று முதல் பல வருடங்களுக்கு செளசெளவே சாப்பிடாமல் இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மதிப்பெண் எவ்வளவு என்றெல்லாம் கேட்கக் கூடாது ஜஸ்ட் பாஸ். போதாதா?...

அடுத்து மத்யமா, ராஷ்ட்ரபாஷா என்ற இரு தேர்வுகளையும் எப்படியோ படித்து தேறி விட்டேன். அதற்கடுத்த நான்காம் தேர்வான பிரவேசிகாவில் ஒருமுறை தோற்று விடாப்பிடியாக (வீட்டில் விடவில்லை) படித்து மீண்டும் எழுதி தேறினேன். அதோடு எங்க மேல் வீட்டு டீச்சரும் வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஏரியாவுக்கு போயிட்டாங்க. ”அப்பாடா! தப்பித்தேனா…” என்றால் இல்லையே…

அடுத்த தேர்வான விஷாரத்தில் இரண்டு பிரிவுத் தேர்வு (பூர்வாத், உத்தராத்) இது டிகிரிக்கு ஈடானது. இதை கற்றுக் கொள்ள டவுன் ஹாலில் ”அஞ்சு முக்கு” என்றொரு பிரபலமான இடம் உண்டு. விஜயா பதிப்பகம், நேந்திரம் சிப்ஸ்களின் மணம் என்று பல விஷயங்கள் உண்டு இந்த இடத்தில். என் அப்பாவின் அலுவலகத்தின் அருகில் தான் உள்ளது இந்த இடம். இங்கு சக்தி ஹிந்தி செண்டர் என்ற இடத்தில் என்னை சேர்த்து விட்டார் அப்பா. இங்கு நிறைய பேர் அவரவர்களின் நேரத்திற்கு தகுந்த படி கற்றுக் கொள்ள வருவார்கள்.

பள்ளியிலிருந்து மாலை வந்ததும் கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாகி பேருந்தை பிடித்து 20 நிமிட பயணத்தில் அப்பாவின் அலுவலகம் சென்று விட்டு (எதற்கா? அப்போ தானே எதிர்த்தாற் போல் உள்ள அரோமா பேக்கரியில் ஏதாவது சாப்பிட வாங்கித் தருவார்) அங்கிருந்து இந்த செண்டருக்கு செல்வேன். இங்கு வருபவர்களில் நான் தான் பள்ளி மாணவி. மற்றவர்கள் டிகிரி முடித்து விட்டு வீட்டிலிருப்பவர்கள். அல்லது வேலைக்கு செல்ல முயற்சி செய்பவர்கள். இந்த டீச்சர் நல்லபடியாக சொல்லித் தந்தார். தேர்வும் எழுதி முதல் பிரிவான பூர்வாத்தை தேறினேன்.

அடுத்த பிரிவான உத்தராத்துக்கு தான் திண்டாட்டமாகி விட்டது. நானும் ஒன்பதாம் வகுப்புக்கு சென்றிருந்தேன். பள்ளி நேரத்தையும் ஷிப்ட் முறையில் மாற்றியதால் மாலை 5.30க்கு தான் வீட்டுக்கு வருவேன். அதற்கப்புறம் ஹிந்தி வகுப்புக்கு செல்வது கஷ்டமாகி விட்டது. (இருட்டிய பிறகு வெளியே அனுப்ப மாட்டார்கள் அல்லவா…) சில நாட்கள் காலையில் சென்டருக்கு சென்று வருவேன். அதற்கு பிறகு ஆர்.எஸ் புரத்தில் சில நாள், இப்படி எப்படியோ நானே படித்து இரண்டாம் பிரிவையும் தேறி விட்டேன். இந்த விஷாரத் இரு பிரிவுகளையும் முடித்தவுடன் திருச்சியில் பட்டமளிப்பு விழா வைத்திருந்தார்கள். மூப்பனார் அவர்களின் கையால் வாங்க வேண்டிய சான்றிதழை திருச்சிக்கு செல்ல முடியாத காரணத்தால் தபாலில் பெற்றுக் கொண்டேன்.

இதன் கூடவே DIRECTORATE OF HINDI EDUCATION, DELHI (அப்பவே தில்லியோடு தொடர்பு வந்திடுச்சு பாருங்க.) யிலிருந்து ஆறு மாத டிப்ளமோ கரஸ்ஸில் பண்ணலாம் என்று சேரச் சொன்னாங்க. அதையும் சேர்ந்து தான் வைப்போமே என்று சேர்ந்தாச்சு. அப்பப்போ பாடங்கள் வரும். பேப்பர்ஸும் பூர்த்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்தேன். செமினார்கள் இருக்கும். கேந்திரிய வித்யாலயாவில் தேர்வு எழுதினேன். எல்லோரும் பெரியவர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த தேர்வு எழுதி தேறினால் INCREMENT  கிடைக்குமாம்.

என் பின்னால் இருந்த ஒருவர் நான் எழுதிய விடைத்தாளை காண்பிக்கும்படிச் சொல்ல, பயந்து போய் என் விடைத் தாளையே எடுத்து கொடுத்து விட்டேன். (கொடுக்காம போனா வெளில வந்து அடிச்சுடுவாங்களோ என்ற பயம் தான்) அவரும் எழுதி விட்டு மரியாதையாக கொடுத்து விட்டார். அந்த டிப்ளமோவையும் முதல் வகுப்பில் தேறி விட்டேன்.

இப்போ நான் பத்தாவது வந்திருந்ததால் அதை காரணம் காட்டி அடுத்த தேர்வான ப்ரவீன் பண்ண முடியாது என்று சொல்லி வீட்டில் தப்பி விட்டேன். நான் D.M.E பண்ணிய பிறகு கூட அப்பா எவ்வளவோ தடவை சொல்லியும் நான் கேட்கவில்லை முடியாது என்று சொல்லி விட்டேன். ஒவ்வொரு தேர்வின் போதும் அங்கிருப்பவர்களை பார்த்தால் எல்லோரும் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருப்பார்கள். அதைப் பார்த்தாலே வயிற்றை கலக்க ஆரம்பித்து விடும். ஹிந்தி இலக்கணம் இருக்கே… அப்பப்பா...

சரி இவ்வளவு படித்து என்ன பயனடைந்தேன் என்கிறீர்களா?...

திருமணம் முடிந்து தில்லி வந்து இறங்கியதிலிருந்து இப்போ வரை ஹிந்தியில் எழுதிய எந்த பெயர்ப் பலகையையும் உடனே படித்து விடுவேன். வேறு எதற்கும் உபயோகமாக வில்லை. பேச்சு வழக்கு என்பது நாளாக ஆகத் தான் வந்தது. பல மாநிலத்தவர்கள் இங்கிருப்பதால் ஒவ்வொருவரின் ஸ்டைலில் அவர்கள் பேசும் ஹிந்தியை புரிந்து கொள்வதற்கே நாளானது.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி 1: இது என்னுடைய 100வது பதிவு. எப்படியோ திக்கித் திணறி நூறு பதிவுகள் எழுதி விட்டேன். எனக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கு. தொடர்ந்து எனது பதிவுகளுக்கு ஆதரவு தந்த/தரும் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


டிஸ்கி 2: என் வலைப்பூவில் சில நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தமிழகத்துக்கு வருகை. அதனால எல்லோரும் விடுமுறையை எஞ்சாய் பண்ணுங்கபைபை.

78 comments:

 1. 100வது பதிவுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. பரீட்சைக்கு முன்னர் இருமுறை ஏதாவது பள்ளிகளில் செமினார் வைப்பாங்க.//

  என் மகன்களை இந்த வகுப்புகளுக்கும் , தேர்வுகளுக்கும் நாங்கள் சிரம்ப்பட்டு அழைத்துச் செல்வோம்..

  அவர்கள் தேர்வு அன்று புத்தத்தை ஒளித்து வைத்துவிட்டு புத்தகத்தைக்காணோம் என்று படுத்துவார்கள்..

  ReplyDelete
 3. "ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா"

  100 வது பதிவிற்கு வாழ்த்துகள்..

  கோடை விடுமுறைக்காக தமிழகம் வரும் தங்களை அன்போடு வரவேற்கிறேன்..

  ReplyDelete
 4. நூறாவது பதிவுக்கு தலைநகரில் வசிப்பதால் தேசிய மொழியுடனான தொடர்பையும் அனுபவத்தையும் அழகாப் பதிவிட்டுட்டீங்க. பாராட்டுகள் ஆதி.

  இன்னும் பல நூறு பதிவுகள் இட்டு எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்க.

  விடுமுறை இனிதாய்க் கழிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. // (அப்பவே தில்லியோடு தொடர்பு வந்திடுச்சு பாருங்க.) // அருமை

  உங்களைப் போலவே நானும் ஹிந்தி படிக்க சிரமப் பட்டேன். ஹிந்தியும் என்னிடம் வருவதற்கு சிரமப் பட்டதால் வீட்டிலும் விடுவிட்டர்கள்.

  வது பதிவிற்கு வாழ்த்துக்கள். விடுமுறை இனிமையானதாக அமைய வாழ்த்துக்கள். நேரம் இருந்தால் http://seenuguru.blogspot.in/2012/04/blog-post_30.html படித்து பின்னூட்டமிடுங்கள்

  ReplyDelete
 6. நூறாவது பதிவிற்கு நெஞ்சம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் ஆதி!!

  ஹிந்தி கற்றுக்கொண்ட அனுபவம் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. நீங்கள் சொல்வது சரி தான். பேசும் ஹிந்திக்கும் படித்த ஹிந்திக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. நானும் நிறைய அனுபவப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் படித்த படிப்பு முக்கியத் தருணங்களில்
  நிச்சயம் உபயோகப்படும்.

  விடுமுறையை மகிழ்வுடன் கொண்டாடுங்கள்!!

  ReplyDelete
 7. 100 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
  கோடை விடுமுறையை கோலாகலமாக கொண்டாடித் திரும்ப
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. 100 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. மிக விரிவாய், விளக்கமாய் எழுதப்பட்ட இடுகை. அருமை. மிக சின்ன வயதில் ஹிந்தியில் நிறைய முடிச்சிட்டீங்க

  இந்த பதிவின் தலைப்பு நிறைய பேரை உள்ளே வர வைக்கும். " ஹிந்தி கற்று கொண்ட அனுபவங்கள்" என வைத்திருந்தால் பலரும் எஸ் ஆகியிருப்பாங்க. நீங்களும் பிரபல பதிவர் ஆகி நல்லா தலைப்பு வைக்க கத்துக்கிடீங்க (சீரியஸா தான் சொல்றேன்)

  நான் முடித்து: பிராத்மிக் மட்டுமே. ஆனாலும் ஹிந்தி எழுத்து கூட்டி இப்போதும் படித்து விடுவேன்


  சென்னை வரும் ரோஷினியை சந்திக்க ஆவலாக உள்ளோம்.

  நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 10. அன்புள்ள ஆதி வெங்கட்

  உங்களது நூறாவது பதிவுக்கு நல வாழ்த்துகள். சென்னை விடுமுறை ட்ரிப் நல்ல என்ஜாய் பண்ணுங்க

  விஜய்

  ReplyDelete
 11. 100- வது பதிவுக்கு வாழ்த்துகள் பேச்சு ஹிந்தியும் எழுத்து படிப்பு ஹிந்தியும் வித்யாசமாகத்தான் இருக்கும்.அதை சுவாரசியமா சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 12. 100 ஆவது பதிவு பஹூத் அச்சா ஹை.

  வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

  ஜாலியாக விடுமுறையைக் கழித்துவிட்டு வாருங்கள்.

  ReplyDelete
 13. ஹிந்தி சீக்னேக்கா கஹானி( எனக்குத் தெரிந்த ஹிந்தியில் சொல்றேன்) என்று தலைப்பிட்டிருக்கலாமோ....

  வந்த இடத்துல ஹிந்தி கத்துக்கிட்டிங்கன்னு நினைச்சேன்,இங்க வருவதற்கு முன்னே இம்புட்டு ஹிந்தி கத்துகிட்டுருக்கிங்கன்னு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.

  கஷ்டப்பட்டாலும் இத்ன கிளாஸ்,ப்ரீட்சை எல்லாம் அட்டெண்ட் செய்துருக்கீங்க.வாழ்த்துகள்.

  வாரத்திற்கு ரெண்டு மணி நேரம் ஹிந்தி கிளாஸ்க்கு போனதில் ஒன்னும் மண்டையில் ஏறாததால் மூன்றாவது வாரத்திற்கு பின் போகவே மாட்டேன்னு அடம்பிடித்து ஹிந்தி கிளாசுக்கு கும்பிடு போட்ட பாவத்திற்கு தண்டனையாக,என்னை வட இந்தியாவிற்கு வந்து நேரடியா ஹிந்தி கத்துக்கன்னு விதி விட்டுவிட்டது.அப்ப ஆரமிச்ச வெறுப்பில் இன்னமும் ஹிந்திய கத்துக்குறேன்,கத்துக்கிறேன்,கற்றுக்கொண்டே இருக்கிறேன்........

  ஊருக்கு போகும் நேரத்தில் ஹிந்திக்கும்,பதிவிற்கும் பிரியாவிடை கொடுக்கும் விதத்தில் 100வது பதிவை அமைத்துவிட்டீர்கள்.

  மேலும் பல நூறு பதிவுகள் பதிவிட வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஆதி.

  பள்ளிப்படிப்பு தவிர கூடுதலாக படிக்கும் இதிலும் முட்டி போடச் சொல்வது பெரிய கொடுமை… (நீங்க என்ன சொல்றீங்க?)

  எனக்கும் அது பெரிய கொடுமையாகத்தான் தெரிகிறது.

  இந்த தேர்வு எழுதி தேறினால் INCREMENT கிடைக்குமாம்.//

  INCREMENT கிடைக்க அந்த மனிதருக்கு உதவி விட்டீர்கள்.

  நீங்கள் விடுமுறைக்கு தமிழ்நாடு, நான் வடநாடு ஜீலை மாதம் இருந்தால் வாருங்கள் எங்கள் ஊருக்கு.

  ReplyDelete
 15. நீங்கள் தேசிய மொழியை கற்ற விதத்தை சுவாரசியமாகச் சொல்லி உள்ளீர்கள். விடுமுறையை நன்கு ஆனந்தமாகக் கழித்திட வாழ்த்துக்கள் ஆதிவெங்கட்.

  ReplyDelete
 16. பத்தாம் வகுப்பு முடிக்கிறதுக்குள்ள இந்தில பெரிய படிப்பெல்லாம் முடித்தது ஆச்சர்யம்.....

  செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 17. பதிவர் வவ்வால் மட்டுமே ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா படிக்கிறார் என்று நினைத்தேன்.இப்ப நீங்களுமா:)

  ReplyDelete
 18. அச்சா! அச்சா! பஹூத் அச்சா!

  ReplyDelete
 19. நானும் ஹிந்தியை கசப்பு மாத்திரை மாதிரி கஷ்டப்பட்டுத்தான் படிச்சேன். எனக்கு அதிகம் பயன்படலைன்னாலும் உங்களுக்காவது டெல்லில போய் பயன்படுதேன்றதுல சந்தோஷம். அப்புறம் இது 100வது பதிவா..? நான் 100 முடிக்கறப்ப நீங்களும் செஞ்சுரி போட்ருக்கறதுல அதிக குஷியோட உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. நான் முதல் இரண்டு பரிட்சைகளை மட்டுமே எழுதினேன்.அதுவும் என் இரண்டு பையன்களை ஸ்கூலில் சேர்த்த பிறகு அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டுமே என்று படித்தது. அதன் பின் வீட்டின் அருகில் இருந்த டீச்சர் கல்யாணம் செய்து போய்விடவே ஹிந்தி என்னிடம் இருந்து தப்பித்தது. இங்கு KV-யில் படித்ததால் என் இரு மகன்களும் ஹிந்தியில் நன்கு பேசுவார்கள்.அத்துடன் நான் திருப்தி அடைந்து கொண்டேன். சென்னை விசிட் இருக்கா??

  ReplyDelete
 21. 100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.சுவாரசியமான பகிர்வு.விடுமுறையில் தொடர்ந்து அசத்துங்க.

  ReplyDelete
 22. 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  ஹிந்தி கற்ற அனுபவம் சிறப்பாக இருக்கு.
  நான் பிராத்மிக்குடன் நிறுத்திவிட்டேன். ஆனால் என் பெரிய பெண் பிரவீன் முடித்துவிட்டாள்.

  நான் வலைத்தள இணைப்பு பிரச்சனையால் இரண்டு மாதங்களாக வலையுலகத்தின் பக்கம் வரமுடியாமல் இன்றுதான் வருகிறேன்.நீங்க விடுமுறைக்கு செல்லுகிறீர்கள்.விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. நீங்கள் 100 - வது பதிவை எட்டிப் பிடித்ததற்கு
  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆதிவெங்கட்.

  ReplyDelete
 24. 100வது பதிவுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்

  are you coming to Srirangam ?

  ReplyDelete
 25. எனது சிறிய வயது நினைவுகளை நினைவூட்டி விட்டீர்கள். 4ஆம் வகுப்பில் ஆரம்பித்து 9ஆம் வகுப்பிற்குள் விஷாரத் பூர்வார்த் வரை எழுதியுள்ளேன். இன்று வரை பேச்சு வழக்கு கை கூடவில்லை.

  ReplyDelete
 26. 100வது பதிவுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்...

  ReplyDelete
 27. சதமடிச்சதுக்கு என் இனிய பாராட்டுகள். இனியும் சதங்கள் பல எழுதணுமுன்னு வாழ்த்துகின்றேன்.

  டில்லி மருமகளாக ஆகப்போறோமுன்னு முன்கூட்டியே தயாராகிட்டீங்க போல:-))))

  விடுமுறையை மகிழ்ச்சியாக் கழித்துவிட்டு தெம்பா வாங்க.

  ReplyDelete
 28. 100 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 29. செம!!.. உங்களுக்கும் டெல்லிக்குமான தொடர்புக்கு அந்தக்காலத்துலயே நல்லா ஸ்ட்ராங்காத்தான் அடிக்கல் போட்டுருக்கீங்க.  அன்புடன்,

  அமைதிச்சாரல்.

  ReplyDelete
 30. ஹிந்திப் பாடம் எல்லாம் அடிச்சு சொல்லிக் கொடுத்தாங்களா... முட்டிப் போடச் சொன்னாங்களா....ஆச்சர்யம். நான் ஹிந்தி படித்த நாட்கள் நினைவுக்கு வந்தன!. ஆசிரியர் என்னை விட சிறியவர். படிக்க வந்த பெண் ஒருத்தியை அவர் வம்பிழுத்த போது ஆன தகராறில் என் ஹிந்தி படிப்பு நின்று போனது!

  சமீபத்தில்தான் ஏதோ ஒரு புத்தகத்தில் ஐந்தாம் வகுப்போ ஆறாம் வகுப்போ படித்த பெண் ஹிந்தியில் மாஸ்டர் டிகிரி முடித்து நிறைய பேருக்கு டியூஷன் எடுத்து பெயர் வாங்கியிருப்பதைப் படித்தேன்.

  ReplyDelete
 31. நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 32. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

  உங்கள் மகன்களின் ஹிந்தி அனுபவங்களை பற்றி இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 33. வாங்க மதுமதி சார்,

  தங்களின் வாழ்த்துக்களுக்கும், அன்பான வரவேற்புக்கும் நன்றி.

  ReplyDelete
 34. வாங்க கீதமஞ்சரி,

  அனுபவங்களை நாம் நினைத்து பார்க்கும் போதும் சரி, பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போதும் சரி, அது ஒரு சுவாரசியம் தானே....
  தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 35. வாங்க சீனு,

  தேசிய மொழி நிறைய பேருக்கு சிரமமாக தான் இருந்திருக்கிறது போல....:) வாழ்த்துகளுக்கு நன்றி.
  நேரம் கிடைக்கும் போது அவசியம் உங்கள் பதிவுகளை படிக்கின்றேன்.

  ReplyDelete
 36. வாங்க மனோம்மா,

  படித்தது நிச்சயம் எங்கேயாவது உபயோகிக்க பயன்படும் என்பது உண்மை தான். என் அனுபவங்களை ரசித்ததற்கும், வாழ்த்துக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 37. வாங்க ரமணி சார்,

  தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 38. வாங்க சித்தப்பா,

  தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 39. வாங்க மோகன்குமார் சார்,

  ஹிந்தி அனுபவங்களை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தவுடன் இந்த தலைப்பு தான் உடனே எனக்குத் தோன்றியது. ஆமாம் சார். நீங்கள் சொன்னது போல அனுபவங்கள் என்று தலைப்பிட்டிருந்தால் அவ்வளவாக யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். தங்களின் விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 40. வாங்க விஜயராகவன் சார்,

  தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 41. வாங்க லஷ்மிம்மா,

  தங்களின் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிம்மா.

  ReplyDelete
 42. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களின் வாழ்த்துக்களுக்கு தன்யவாத் சார்.

  ReplyDelete
 43. வாங்க ஆச்சி,

  தலைப்பு குறித்து தங்களின் பரிந்துரைக்கு நன்றி. நாம் எதை வேண்டாம் என்று ஒதுக்குகிறோமோ அது நம்மை தேடி வரும். ஹிந்தியை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் வாக்கப்பட்டிருப்பது ஹிந்திலேயே பிறந்து ஹிந்தியிலேயே வளர்ந்த ஊர்.....:)

  சப்பாத்தி எனக்கு அறவே பிடிக்காது. ஆனால் என் கணவர் சாதத்தை விட மூன்று வேளையும் சப்பாத்தி கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்....:)

  வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.

  ReplyDelete
 44. வாங்க கோமதிம்மா,

  தங்களின் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா. உங்கள் ஊருக்கு வர முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
 45. வாங்க புவனேஸ்வரி மேடம்,

  தங்களின் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 46. அப்பாடி எத்தனை சிரமப்பட்டிருக்கிறீர்கள் ஆதி. ஆனால் நம் ஊர் இந்தி மும்பையிலும் பலிக்கவில்லை.

  நல்ல படியாக விடுமுறையை எஞ்சாய் செய்யுங்கள்.
  முடிந்தால் சென்னைக்கும் வரவும்.

  ReplyDelete
 47. வாங்க பத்மநாபன் சார்,

  தங்களின் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 48. வாங்க ராஜ நடராஜன்,

  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 49. வாங்க ஈஸ்வரன் சார்,

  தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 50. வாங்க கணேஷ் சார்,

  பெரும்பாலும் எல்லோருக்கும் ஹிந்தி கசப்பு மாத்திரையாக தான் இருந்திருக்கிறது போலும்....:)
  உங்களுடைய 100வது பதிவன்றைக்கு தான் நானும் செஞ்சுரி அடித்திருக்கிறேன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி சார்.
  தங்களின் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 51. வாங்க அமுதா கிருஷ்ணா,

  ஓ! இரண்டு பரீட்சை எழுதியுள்ளீர்களா! நல்லது. மகன்கள் ஹிந்தி பேசுவது குறித்து மகிழ்ச்சி.

  சென்னையில் இருக்கப் போகும் நேரம் மிகக் குறைவு. ...ஆனால் பார்க்க வேண்டிய உறவினர்களும், நண்பர்களும் மிகவும் அதிகம்.....:)

  தங்களின் கருத்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 52. வாங்க ஆசியா உமர்,

  தங்களின் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 53. வாங்க ராம்வி,

  உங்க பெண் பிரவீன் முடித்து விட்டாரா.....க்ரேட்.
  நானும் உங்களை நெடுநாட்களாக காணோமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

  தங்களின் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க..

  ReplyDelete
 54. வாங்க புவனேஸ்வரி மேடம்,

  மீண்டும் வருகை தந்து வாழ்த்து சொன்னதற்கு நன்றி.

  ReplyDelete
 55. வாங்க ரிஷபன் சார்,

  ஆமாம் சார். ஸ்ரீரங்கத்துக்கு தான் வருகிறோம்.
  தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 56. வாங்க மாதவன் சார்,

  தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 57. வாங்க குமார் வீரராகவன்,

  உங்கள் சிறுவயது நினைவுகளை ஞாபகப்படுத்தியதில் மகிழ்ச்சி. பூர்வாத் முடித்துள்ளீர்களா....நல்லது.

  பேச்சு வழக்கு என்பது தனி டிபார்ட்மெண்ட்....:)
  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 58. வாங்க சே.குமார்,

  தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 59. வாங்க டீச்சர்,

  டெல்லிக்கு வாக்கப்பட்டு வருவேன்னு நினைச்சு தான் படிக்க வச்சாங்களோ....ஆச்சரியமாத் தான் இருக்கு.

  தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி டீச்சர்.

  ReplyDelete
 60. வாங்க கே.பி.ஜனா சார்,

  தங்களின் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி சார்.

  ReplyDelete
 61. வாங்க அமைதிச்சாரல்,

  ஆமாங்க. ஸ்ட்ராங்கான அடிக்கல் தான். நினைத்து பார்த்தா ஆச்சரியம் தான். கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை, தில்லிக்கு வரப்போகிறேன் என்று.

  தங்களின் கருத்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 62. வாங்க ஸ்ரீராம்,

  ஆமாம். முட்டி போட்டிருக்கிறேன். அடிகளும் வாங்கியிருக்கிறேன்.....கொடுமை. கோபமாக வரும். என்ன செய்வது....

  ஐந்தாம் வகுப்பு பெண்ணை பற்றிய தகவல்.... சந்தோஷம்.

  தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 63. வாங்க வல்லிம்மா,

  ஆமாம். படிக்கும் இந்திக்கும், பேச்சு வழக்குக்கும் ஒத்து வருவதேயில்லை.....)

  சென்னையில் நாங்கள் இருக்கும் ஒரு நாளில், முடிந்த வரை முயற்சி செய்கிறேன் அம்மா.

  தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா.

  ReplyDelete
 64. //மோகன் குமார் said...
  இந்த பதிவின் தலைப்பு நிறைய பேரை உள்ளே வர வைக்கும். " ஹிந்தி கற்று கொண்ட அனுபவங்கள்" என வைத்திருந்தால் பலரும் எஸ் ஆகியிருப்பாங்க. நீங்களும் பிரபல பதிவர் ஆகி நல்லா தலைப்பு வைக்க கத்துக்கிடீங்க//

  ரிப்பீட்டு...

  நல்லா விளக்கமா, விவரமா, சுவாரஸ்யமா எழுதிருக்கீங்க. எனக்கு “தூர்தர்ஷன்”தான் முதல் ஹிந்தி ஆசான்!! பிறகு, அபுதாபி வந்து டாக்ஸி டிரைவர்களிடம் தத்துபித்தென்று பேசியும் பழகிக் கொண்டேன். இப்போது என் மகனகளுக்கு ஹிந்திப் பாடம் சொல்லிக் கொடுப்பதனால் மேலும் கற்றுக் கொள்கிறேன்.

  நீங்க சொன்ன மாதிரி, “ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது”!! இங்கேயும் பள்ளிகளில் 1-12ம் வகுப்பு வரையிலும் ஹிந்தி மற்றும் அரபி கற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களால் சரளமாக, அட திக்கித்திக்கிகூடப் பேச முடிவதில்லை. பேசிப் பழகுவதுதான் நிலைக்கிறது. ஆங்கிலமே அப்படித்தானே!!

  நூறு பதிவுகளுக்கும், தமிழகப் பயணத்திற்கும் வாழ்த்துகள் ஆதி.

  ReplyDelete
 65. வாங்க ஹுசைனம்மா,

  உங்கள் ஹிந்தி அனுப்வங்களும் நல்லாயிருக்கு. ஆமாங்க....பேச பேசத்தானே வரும்.

  தங்களின் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 66. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் .விடுமுறையை சந்தோஷமா என்ஜாய் செய்திட்டு வாங்க .அழகாக எழ்தியிருக்கீங்க உங்க ஹிந்தி படித்த அனுபவங்களை .
  பெரும்பாலும் ஹிந்தி டீச்சருங்க பிரம்போடுதான் இருப்பாங்கன்னு கேள்வி .சூப்பர் ஹிட் முக்காபலா பார்த்து புரிஞ்சா போதும்னு நான் ரொம்ப கஷ்டப்படல்லை .
  enjoy your holidays .

  ReplyDelete
 67. ஹிந்தி அந்த நாலு ஃபோனாடிக் சவுண்ட்டைக் கண்டு,
  PUC யில் பயந்து ஓடி வந்து விட்டேன்..க..க்க..க்க்க..கக்க்க்க்க..காக்கா...
  போதும்டா சாமி!

  ReplyDelete
 68. கோவைக்கு போறீங்களா எத்தனை மாதம்

  ஹி ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு ரஹ் தாத்தாஅ......

  ReplyDelete
 69. 100 வது பதிவுக்கு வாழ்த்துகக்ள்

  ReplyDelete
 70. வாழ்த்துகள்.

  கோடை விடுமுறையை சந்தோசமாகக் களியுங்கள்.

  ReplyDelete
 71. ஆதி செஞ்சுரி போட்டாச்சா? வாழ்த்துக்கள்... கலக்குங்க..

  ReplyDelete
 72. நூறாவ‌து ப‌திவுக்கு வாழ்த்துக‌ள்! இந்தி க‌ற்ற‌ அனுப‌வ‌ம் வெகு சுவை! பேச்சு வ‌ழ‌க்கு நாளாக‌ நாளாக‌த்தான் வ‌ந்த‌து என்ற‌ உங்க‌ நேர்மை என‌க்கு ரொம்ப‌ பிடிச்ச‌து. இன்னும் ப‌ய‌ண‌க்க‌ளைப்பு தீர‌லையா... ப‌ய‌ண‌ அனுப‌வ‌ங்க‌ள் ப‌ற்றிய‌ ப‌திவுக்கு காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 73. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
  http://blogintamil.blogspot.in/2012/06/7.html

  ReplyDelete
 74. 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ////நானும் ஹிந்தி காத்துட்டு தன் இருக்கேன் வரமட்டுது -உங்க கிட்ட தன் கத்துக்கணும் (ஓசில கத்துக்கணும் ) அருமையான தளம் இது தன் என் முதல் வருகை இனி தொடர்வேன்

  ReplyDelete
 75. myself completed prathmic ...nw study madhyama.....
  i study in sabha....fr me it is useful in reading advertisements only.......

  ReplyDelete
 76. நூறு நூறாய் பெருக வாழ்த்துகின்றேன்.

  விடுமுறை இனிக்கட்டும். பதிவுக்கு மேட்டர் தேத்தறதை விட்டுடாதீங்க:-))))

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…