Monday, April 16, 2012

"ஒரு வண்ணத்துப்பூச்சியின் கோபம்" – வாசிப்பனுபவம்
இரா.பசுமைக்குமாரின் ”ஒரு வண்ணத்துப்பூச்சியின் கோபம்” உலக புத்தக கண்காட்சியில் நான் தேர்வு செய்து வாங்கிய புத்தகம். சமூக விழிப்புணர்வு சிறுகதைகள் என்ற தலைப்பை பார்த்தவுடன் வாங்கத் தோன்றியது. இவரின் எழுத்தை முதன் முறையாக வாசிக்கிறேன். சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை, அவலங்களை தன்னுடைய எழுத்தால் புரிய வைக்கிறார்.

இவர் லால்குடியை சேர்ந்தவராம். பத்திரிக்கையாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், டாக்குமெண்டரி மற்றும் குறும்பட இயக்குனர், திரைப்பட ஆய்வாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர், திரைப்புனல் திரைப்பட இயக்கத்தின் மாநில அமைப்பாளர் என்று தொடர்கிறது இவரது பன்முக திறமை. தமிழகத்தின் முன்னணி ஏடுகளில் இவரது படைப்புகள் வெளி வருகிறதாம்.

பதிமூன்று சிறுகதைகளை அடங்கிய தொகுப்பு இது. என் மனதை பாதித்த சில கதைகளிலிருந்து  சில துளிகள்…

”கரும்பு வெட்டு” என்ற சிறுகதையில் வாழையடி வாழையாக நெல்லை பயிரிட்டு வந்த ஒரு விவசாயி ”கரும்பு இன்ஸ்பெக்டர்” சொன்ன வார்த்தைகளை நம்பி கரும்பைப் பயிரிட்டு அதை அறுவடை செய்யும் நேரத்தில் வெட்ட ஆர்டர் தராமல் போனதும், நொந்து போகிறார். லஞ்சம் கொடுக்காமல் காரியங்கள் நடக்காத இன்றைய நிலையில் ஏழை விவசாயிகள் படும் பாட்டை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். இறுதியில் கரும்புக் காட்டை அந்த விவசாயியே எரிக்கும் போது மனது பதைபதைக்கிறது.

”கல்யாணப் புடவை” என்ற கதையில் மனமொத்த தம்பதியினரின் அன்புப் பிணைப்பை அழகாக எளிமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். திருமண நாளன்று கணவனுக்கு பிடித்த கல்யாண பட்டுப்புடவையை கட்டிக் கொண்டு சினிமாவுக்கு செல்ல வேண்டியவள், கணவனுக்கு உடம்பு சரியில்லாமல் போய் மருந்து வாங்கக் கூட பணம் இல்லாமல் கடைசியில் தன் கல்யாணப் புடவையையே அடமானம் வைத்து பணம் வாங்கச் செல்லும் போது நம் கண்களில் கண்ணீர் பொங்குவதென்னவோ உண்மை.

புத்தக தலைப்பாக உள்ள சிறுகதையில் வண்ணத்துப்பூச்சியை போன்று மென்மையான மனைவியை கணவன் தொடர்ந்து செய்யும் சித்ரவதையால் இறுதியில் அவள் சீறி எடுக்கும் முடிவை நமக்கு சொல்லி அதிரவைக்கிறார்.

”ஒரு பைக் எரிந்து கொண்டிருக்கிறது” என்ற கதையில் மக்கள் ஒரு சம்பவத்தை எதிர்நோக்கும் பார்வை கிராமத்திலும், நகரத்திலும் எப்படியெல்லாம் மாறுபடுகிறது என்று சொல்லியிருக்கிறார். நகரத்தில் உள்ள மக்களிடம் மனிதாபிமானம் என்பது மறைந்து கொண்டே வருவதையும், தனக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்ற ஒவ்வொருவரின் மனப்பாங்கும் இந்த கதையில் தெள்ளத் தெளிவாகிறது.

இப்படி பல விதமான சம்பவங்களை கருத்தில் கொண்டு புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார். கதாசிரியர் லால்குடியைச் சேர்ந்தவர் என்பதால் கதைக்களம் முழுவதும் பெரும்பாலும் திருச்சியைச் சுற்றியே உள்ளது. மனதுள் ஏற்படும் குழப்பங்களால் அது படும் பாட்டை கொள்ளிடம் ஆற்றின் பரந்த மணற்பரப்பில் வெறும் கால்களால் மத்தியான வெய்யிலில் நடப்பது போன்று உள்ளதாக எழுதியிருக்கிறார்.

நீங்களும் வாங்கி படித்துப் பாருங்களேன். 

புத்தகத்தை வாங்க:

சாந்தா பதிப்பகம்
முத்துவிழா இல்லம்
13/5, ஸ்ரீபுரம் 2வது தெரு
இராயப்பேட்டை, சென்னை – 600014.
தொலைபேசி – 28115618, 28116018
விலைரூ.50.

நட்புடன்

ஆதி வெங்கட்
புது தில்லி.


49 comments:

 1. மனதுள் ஏற்படும் குழப்பங்களால் அது படும் பாட்டை கொள்ளிடம் ஆற்றின் பரந்த மணற்பரப்பில் வெறும் கால்களால் மத்தியான வெய்யிலில் நடப்பது போன்று உள்ளதாக எழுதியிருக்கிறார்.

  அருமையாய் வாசிப்பனுபவத்தை பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. ”கரும்பு வெட்டு” என்ற சிறுகதையில் வாழையடி வாழையாக நெல்லை பயிரிட்டு வந்த ஒரு விவசாயி ”கரும்பு இன்ஸ்பெக்டர்” சொன்ன வார்த்தைகளை நம்பி கரும்பைப் பயிரிட்டு அதை அறுவடை செய்யும் நேரத்தில் வெட்ட ஆர்டர் தராமல் போனதும், நொந்து போகிறார். லஞ்சம் கொடுக்காமல் காரியங்கள் நடக்காத இன்றைய நிலையில் ஏழை விவசாயிகள் படும் பாட்டை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். இறுதியில் கரும்புக் காட்டை அந்த விவசாயியே எரிக்கும் போது மனது பதைபதைக்கிறது.//////////

  லஞ்சம் கொடுத்தால் தான் வாழமுடியும் என்றால்
  அப்போ நடுத்தர ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளின் நிலைமை?

  ReplyDelete
 3. கொள்ளிடம் ஆற்றின் பரந்த மணற்பரப்பில் வெறும் கால்களால் மத்தியான வெய்யிலில் நடப்பது போன்று உள்ளதாக எழுதியிருக்கிறார்.//

  அந்த அனுபவம் ஏற்பட்டவர்களுக்கு தெரியும் அப் அப்பா எப்படிப் ப்ட்ட பதை பதைப்பு!

  உங்கள் வாசிப்பனுபபகிர்வு படிக்க தூண்டுகிறது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நீங்கள் சுட்டிய பல கதைகளின் தலைப்பே வித்யாசமாக உள்ளது. விமர்சனம் நூலை படிக்க தூண்டுகிறது. பசுமை குமார் சிறுகதை அவ்வப்போது விகடனில் பார்த்த ஞாபகம்

  ReplyDelete
 5. நல்ல புத்தகங்கள் படிக்க கிடைத்திருக்கு உங்களுக்கு. அதை எங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம்.

  ReplyDelete
 6. படிச்சு ரசிச்சதை அருமையா பகிர்ந்திருக்கீங்க. புத்தகம் வாங்க அட்ரஸ், விலை எல்லாம் தந்திருக்கறது ரொம்பவே நல்லாருக்கு. I Like this verymuch Madam! Tks!

  ReplyDelete
 7. சிறுகதைகளில்தான் எழுத்தாளனின் முழு வீரியத்தையும் உணர முடியும். அந்த வகையில் இந்தத் தொகுப்பு நல்லாவே இருக்கும்னு தோணுது. படிச்சதைப் பகிர்ந்தது வெகு சிறப்பு.

  ReplyDelete
 8. நல்ல பகிர்வு. வாய்ப்பு கிடைப்பின் வாங்கி வாசிக்கிறேன். நன்றி ஆதி.

  ReplyDelete
 9. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 10. வாங்க வைரை சதீஷ்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 11. வாங்க கோமதிம்மா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 12. வாங்க மோகன்குமார் சார்,

  நான் இவரின் எழுத்தை முதல் முறையாக வாசித்தேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 13. வாங்க லஷ்மிம்மா,

  ஆமாம்மா. இந்த முறை உடனே படிக்க ஆரம்பித்து விட்டேன். இதுவரை 7 புத்தகங்கள் படித்தாயிற்று.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 14. வாங்க நிரஞ்சனா,

  எல்லோருக்கும் உதவியாக இருக்கும் அல்லவா.....தங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 15. வாங்க கணேஷ் சார்,

  நன்றாகவே இருந்தது சார். நீங்களும் படித்துப் பாருங்கள். என் கணவரும் படித்து விட்டு அருமையாக இருந்ததாகச் சொன்னார்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 16. வாங்க ராமலஷ்மி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 17. மனதுள் ஏற்படும் குழப்பங்களால் அது படும் பாட்டை கொள்ளிடம் ஆற்றின் பரந்த மணற்பரப்பில் வெறும் கால்களால் மத்தியான வெய்யிலில் நடப்பது போன்று உள்ளதாக எழுதியிருக்கிறார்.

  படிச்சு ரசிச்சதை அருமையா பகிர்ந்திருக்கீங்க

  ReplyDelete
 18. பசுமைக்குமார் என் நண்பர்களில் ஒருவர். நாங்கள் ஒன்றாக வேலை செய்து வந்தோம். அவருடைய நூலைப்பற்றிய தகவல் கிடைத்ததில் மகிழ்ச்சி. நீங்களும் விமர்சக உலகில் நுழைகிறீர்கள். மகிழ்ச்சி.

  ReplyDelete
 19. வாசித்த அனுபவத்தினை நன்றாக விவரித்துள்ளீர்கள்.

  ReplyDelete
 20. பசுமைக்குமார் அவர்களின் சிறுகதைதொகுப்பைப்பற்றிய அறிமுகம நன்று.வாழ்த்துக்கள்,வணக்கம்/

  ReplyDelete
 21. நல்ல பகிர்வு. நீங்கள் பகிர்ந்த விதத்திலேயே எங்கள் மனம் பதைத்து போனது.சிறுகதை தொகுப்பு நான் விரும்பி படிப்பதுண்டு.

  ReplyDelete
 22. படித்த புத்தகத்தை பகிர்ந்து கொண்டது அருமை.
  எழுதியது யார்? எங்கள் திருச்சி லால்குடிக்காரர் அல்லவா! அது சிறப்பாக இருப்பதில் வியப்பேதும் இல்லை தான்.

  ReplyDelete
 23. //கொள்ளிடம் ஆற்றின் பரந்த மணற்பரப்பில் வெறும் கால்களால் மத்தியான வெய்யிலில் நடப்பது போன்று உள்ளதாக எழுதியிருக்கிறார்.//

  நிஜமாகவே நானும் என் சித்த்ப்பாவும் (அவர் செருப்பை என் அம்மாக்கு தந்ததால்) கும்பகோணம் மேலைக்காவேரியில் இது போல ஆற்றைக் கடந்திருக்கிறோம். நல்ல வேளையாக அவர் மேல் துண்டு அணிந்திருந்தார். கொஞ்சம் ஓடுவோம் பின் துண்டை போட்டு நிற்போம். ரொம்ப கடினம் தான்.

  நல்ல நூல் அறிமுகம் நன்றி.

  ReplyDelete
 24. என்ன அழகான தலைப்பு...

  ReplyDelete
 25. விமர்சனம் மிக அருமை ஆதி வெங்கட்

  ReplyDelete
 26. வாங்க ரிஷபன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 27. வாங்க ஷாஜஹான் சார்,

  பசுமைக்குமார் அவர்கள் தங்களுடைய நண்பர் என்பதும் ,அவரும் நீங்களும் ஒன்றாக பணியாற்றியதும் அறிந்து மகிழ்ச்சி சார்.
  படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் இதுவரை நான் 7 புத்தகங்களை பற்றி எழுதியிருக்கிறேன்.
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 28. வாங்க விச்சு,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 29. வாங்க விமலன்,

  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 30. வாங்க ஆசியா உமர்,

  நீங்களும் சிறுகதை பிரியரா..... நாவல்களை போல சிறுகதைகளை நாம் ஒரே மூச்சில் படிப்பதில்லை என்று நினைக்கிறேன். விட்டு விட்டு தான் படிப்போம்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 31. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  ஆமாம் சார். உங்கள் ஊர்க்காரர் தான். திருச்சி எழுத்தாளர்களின் ஊரோ.....:)

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 32. வாங்க சீனு அண்ணா,

  அடடா! உங்களுக்கு அது போல அனுபவமே இருக்கா.... ரொம்ப கடினம் தான்...

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 33. வாங்க ஸ்ரீராம்,

  அருமையான தலைப்பு தான்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 34. வாங்க தேனம்மை லஷ்மணன்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete
 35. சிறப்பான அறிமுகம்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 36. வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 37. வாங்க ரமணி சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 38. படிச்சதை மிக அருமையா சொல்லி இருக்கீங்க .. பகிர்ந்து கொண்ட முறையிலேயே புத்தகத்தை வாங்கணும் ஆர்வம் வந்து இருக்கு.. புத்தகம் கிடைக்கும் விலாசம் கொடுத்தது மிக அருமை..

  ReplyDelete
 39. படித்ததோடு மட்டுமல்லாது எங்களுடன் அருமையான
  ஒரு கதைத் தொகுப்பை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஆதி.

  ReplyDelete
 40. வாங்க சவிதா,

  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 41. வாங்க புவனேஸ்வரி மேடம்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 42. ஆதி, நான் இரண்டு நாட்களுக்கு முன் இலங்கை பயணக் கட்டுரையின் கடைசி பாகத்தை முடித்தேன். அது மகளிர் சக்தியில் காட்ட வில்லை ஏன் என்று தெரியவில்லை.
  போனவாரம் எழுதிய உறவோடு உறவாடி 2 பாகம் மட்டும் காட்டுகிறது.

  முடிந்த போது படியுங்கள்

  ReplyDelete
 43. பகிர்வுக்கு நன்றி. இந்தப் புத்தகம் என் புத்தக அலமாரியில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. சமூக அவலங்களை நம் மனக் கண்முன் படமாக்குவதில் வல்லவர். நன்றி

  ReplyDelete
 44. உங்கள் வாசிப்பு அனுபவம் எங்களுக்கு நன்மையாக முடிகிறது. மிக அருமையாக விவரித்திருக்கிறீர்கள் ஆதி. கதையோ கற்பனையோ அதில் பாதி நிஜ வாழ்வும் அடங்கும் இல்லையா. மிக மிக அருமை. நன்றிமா. முடிந்தால் வாங்கிப் படிக்கிறேன்.

  ReplyDelete
 45. வாங்க கோமதிம்மா,

  இலங்கை கோவில்கள் தரிசனம் பெற்றேன். அருமையாக இருந்தது.
  அது அப்படித்தான் சில சமயம் அப்டேட் ஆகாமல் போய் விடுகிறது.....:(

  ReplyDelete
 46. வாங்க சீனு,

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 47. வாங்க வல்லிம்மா,

  அவசியம் வாங்கி படித்துப் பாருங்கள். நிச்சயம் நிஜமும் கலந்து தான் இருக்கும்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…