Saturday, April 7, 2012

கேரள ஸ்டைல் குழம்பு


[காராமணி போட்டு செய்தது] 

எத்தனையோ விதமான குழம்புகளை செய்து சாப்பிடுகிறோம். அந்த விதத்தில் இது ஒரு புது மாதிரியான குழம்பு. சத்துள்ளதும் கூட. நான் என் மகளிடம் இது ”புரோட்டீன் குழம்பு” என்று சொல்லி தான் கொடுப்பேன். என் அம்மா செய்ததில் நான் மிகவும் விரும்பி சாப்பிட்டது. கேரளக் குழம்புகளில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்திருப்பார்கள். இதுவும் அப்படித்தான். அதனால் தான் இந்த பெயர். உங்களுக்காக அதன் செய்முறை…



தேவையானப் பொருட்கள்:-



கொண்டைக்கடலை (அ) காராமணி – இரண்டு கையளவு

உருளைக்கிழங்கு – 1

கத்திரிக்காய் – 1

புளி – எலுமிச்சையளவு

தேங்காய் – அரை மூடி

பச்சை மிளகாய் – 4 (அ) 5 அவரவர்களின் காரத்திற்கு ஏற்ப

இஞ்சி – ஒரு சின்ன துண்டு

சீரகம் – ஒரு தேக்கரண்டி

மஞ்சள்தூள் – சிறிதளவு

கடுகு – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :-


[கொண்டைக்கடலை போட்டு செய்தது]


கொண்டைக்கடலை அல்லது காராமணி இவற்றில் எதை வேண்டுமானாலும் இந்த குழம்பு செய்ய உபயோகிக்கலாம். இந்த பயறுகளில் ஒன்றை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். குழம்பு செய்வதற்கு முன்பு பயறை குக்கரில் சாதம் வைக்கும் போதோ அல்லது தனியாகவோ நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும் ,கத்திரிக்காயையும் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை தாளித்த பொருட்களுடன் சேர்த்து சற்று வதக்கிக் கொண்டு புளியை கரைத்து விடவும். குழம்பிற்கு தேவையான அளவு உப்பையும், சிறிதளவு மஞ்சள்தூளையும் சேர்க்கவும். நன்றாக கொதித்து காய்கள் வெந்தவுடன், வெந்த பயறையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இந்த சமயத்தில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி இவற்றை தண்ணீர் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த விழுதை கொதிக்கும் குழம்பில் சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து மிதமான தீயில் சற்று கொதிக்க விட்டு இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான, சத்தான, வயிற்றுக்கு கெடுதல் செய்யாத கேரள ஸ்டைல் குழம்பு தயார். நீங்களும் செய்து பார்த்து ருசியுங்கள்.

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

டிஸ்கி – 1 பச்சை பயறையும் சிறிதளவு இந்த பயறுகளுடன் சேர்த்தும் செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது.


டிஸ்கி – 2:  குழம்பு நீர்க்க இருப்பது போல் தெரிந்தால் ஒரு தேக்கரண்டி அரிசி மாவை தண்ணீரில் கரைத்து சேர்த்து இரண்டு நிமிடத்தில் அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.

44 comments:

  1. எங்க மகனுக்கு பயறு ரொம்பப் பிடிக்கும்.இதே போல் செய்து கொடுக்கிறேன். நன்றி ஆதி. படம் மிக அழகு

    ReplyDelete
  2. இராஜராஜேஸ்வரிApril 7, 2012 at 8:29 AM

    சுவையான பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. அமைதிச்சாரல்April 7, 2012 at 8:30 AM

    குழம்பு அருமையாயிருக்கு ஆதி..

    ReplyDelete
  4. நாளை செய்து விடுவேன்.பாக்கவே நல்லா இருக்கு.அதோட சத்தானதாவும் செய்ய சுலபமாவும் இருக்கறதால இதை செய்யலாம்.பகிர்விற்கு நன்றி ஆதி

    ReplyDelete
  5. நல்லதொரு பகிர்வு. செய்யச் சொல்லிப் பார்க்கிறேன்... நன்றி.

    ReplyDelete
  6. ஹவுஸ் பாஸிடம் இதனை காட்டுறேன் நன்றி

    ReplyDelete
  7. சுவையான கேரளக்குழம்பு. அரிசிமாவு கரைத்து விட்டால் சுவை குறைந்து விடுவதுபோல இருக்கு

    ReplyDelete
  8. நல்ல குறிப்பு.சத்தும் சுவையும் கூட.

    ReplyDelete
  9. ரோஷ்ணிம்மா,

    கத்தரிக்காய் சேர்க்கலைன்னா புளி கூட வேண்டாம்.

    நல்ல குழம்புதான் இந்த புரோட்டீன் குழம்பு!

    ReplyDelete
  10. சமைக்கச் சொல்லி விடுகிறேன் விடுங்கள்..

    ReplyDelete
  11. சுவையான ருசிகரமான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. சாதாரணமாய் வெந்தயக் குழம்பில் கொத்துமல்லி போடுவதில்லை. பயறும்! செய்து பார்க்க வேணும்! ஒருமுறை ட்ரை செய்துடுவோம்...!

    ReplyDelete
  13. சூடான, சுவையான, காரசாரமான, ருசியான பதிவு.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. குழம்பு வித்தியாசமாக உள்ளது

    ReplyDelete
  15. வெந்தயம் போடாமல் செய்வோம் நாங்கள். நீங்கள் சொன்ன முறையில் செய்து பார்க்கிறேன் ஆதி.

    சத்தான புரொட்டீன் குழம்பை ரோஷ்ணி விரும்பி சாப்பிடுவாளா? நீங்கள் உங்கள் அம்மா குழம்பை விரும்பி சாப்பிட்டது போல்.

    ReplyDelete
  16. செஞ்சு பாத்துட்டா போவுது. காராமணினா என்னனு தெரியலியே!

    ReplyDelete
  17. காராமணி = Black eye bean தட்டைப்பயிறு.,

    ReplyDelete
  18. மிக்க நன்றி,

    நேற்று தான் தற்செயலாக உங்கள் பதிவு பார்த்தேன்,
    எனது மனைவிஇடம் தங்கள் கேரள ஸ்டைல் குழம்பு படித்து காட்டினேன்..கவனமாக குறிப்பு எடுத்து கொண்டார்,இன்று மதியம் சூப்பராக வைத்துவிட்டார்கள்.....super....very nice......thanks...இது போல் வித்தியாசமான சுவையான குழம்பு நான் இதுவரைக்கும் சாப்டது இல்லை......உங்கள் பணி சிறக்கட்டும்....நன்றி

    ReplyDelete
  19. செய்முறை எளிதாக உள்ளது. விரைவில் செய்துபார்த்துவிடுகிறேன். பகிர்வுக்கு நன்றி ஆதி.

    ReplyDelete
  20. வாங்க வல்லிம்மா,

    செய்து கொடுங்கள். மிகவும் சுலபமானது தான்.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

    ReplyDelete
  21. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  22. வாங்க அமைதிச்சாரல்,

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  23. வாங்க ராஜி,

    செய்து பார்த்தீங்களா? சுலபமானது தான்.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

    ReplyDelete
  24. வாங்க கணேஷ் சார்,

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  25. வாங்க மோகன்குமார் சார்,

    ஹவுஸ் பாஸ் செய்தாங்களா?

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  26. வாங்க லஷ்மிம்மா,

    அரிசி மாவு தேவைப்பட்டால் கரைத்து விடலாம். சுவை ஒன்றும் மாறுபடுவதில்லை. கரைத்து விட்டால் தான் பிசைந்து சாப்பிடவும் சேர்ந்தாற் போல நன்றாக இருக்கும். வீட்டில் உள்ள எல்லோருக்கும் காணும் (வரும்) என்று நினைக்கிறேன்.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

    ReplyDelete
  27. வாங்க ஆசியா உமர்,

    சத்தானதும், சுவையானதும் தாங்க. தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடக் கூட நல்லா இருக்குங்க.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  28. வாங்க டீச்சர்,

    ஆமாம். புளி கூட ஆப்ஷன் தான். ஆனா எனக்கு கொஞ்சம் புளிப்பு சுவை தூக்கலா இருக்கணும் எப்பவுமே....:))

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  29. வாங்க மதுமதி சார்,

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  30. வாங்க கே.பி.ஜனா சார்,

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  31. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  32. வாங்க ஸ்ரீராம்,

    வெந்தயம் எப்போதுமே குழம்புக்கு தாளிக்கும் போது என் அம்மா போடுவாங்க. அதனால நானும் அப்படியே செய்கிறேன். உடம்புக்கு நல்லது தானே.. கொத்துமல்லி கிடைச்சா போடுவேன். சீசனைத் தவிர மற்ற நாட்களில் பெரும்பாலும் இங்கு கிடைப்பதில்லை.

    தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  33. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

    மீண்டும் தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  34. வாங்க ஸாதிகா,

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  35. வாங்க கோமதிம்மா,

    ரோஷ்ணிக்கும் மிகவும் பிடிக்கும் என்னைப் போல்..:)

    என் தோழி ஒருவர் எப்போதும் வீட்டுக்கு வரும் போது இன்னிக்கு சாம்பார் என்றால் வரவில்லை என்பார். வத்தக்குழம்பு, கறிவேப்பிலைக் குழம்பு, மிளகுக்குழம்பு இப்படி ஏதாவது செய்தால் தான் வருவார்..:))

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

    ReplyDelete
  36. வாங்க அப்பாதுரை சார்,

    துளசி டீச்சர் உங்களுக்கு தகவல் தந்திருக்காங்க பாருங்க. ஹிந்தியில் காராமணியை LOBIYA னு சொல்வாங்க...

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  37. வாங்க வைரை சதீஷ்,

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  38. வாங்க டீச்சர்,

    மீண்டும் வருகை தந்து அப்பாதுரை அவர்களுக்கு தகவல் அளித்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
  39. வாங்க இனியவன்,

    குழம்பை செய்து பார்த்து ருசித்து பாராட்டியதற்கு நன்றிங்க.

    தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  40. கேரள குழம்பு நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete
  41. வாங்க கீதமஞ்சரி,

    விரைவில் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  42. வாங்க மாதேவி,

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…