Monday, April 2, 2012

ஃபிஜித்தீவு (கரும்புத் தோட்டத்திலே)
தில்லியில் நடைபெற்ற உலக புத்தக கண்காட்சியில் நம்ம துளசி டீச்சர் எழுதிய ”ஃபிஜித்தீவு” என்ற புத்தகத்தை வாங்கிய என் கணவர் தான் முதலில் இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார். வேறு ஒரு சிறுகதை தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்த நான், ஒருநாள் எதேச்சையாக இந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். ரொம்ப சுவாரசியமாக இருந்ததால் புத்தகத்தை நான் தான் முதலில் படித்து முடித்தேன்.

வேலை விஷயமாக மூன்று வருட காண்ட்ராக்டில் ஃபிஜிக்கு போக நேர்ந்ததில் ஆரம்பித்து அங்கு நம் இந்தியர்கள் எப்படி வந்து செட்டில் ஆனார்கள், அங்குள்ள நம்ம சாமி கோயில்கள், முருகன் எப்படி அங்கு வந்தான், அங்கிருப்பவர்களின் தொழில், அசற வைக்கும் புயல், உணவுப் பழக்கங்கள் இப்படி பலதரப்பட்ட விஷயங்களை முழுமையான மற்றும் சுவையான தகவல்களுடன் எழுதியிருக்கிறார்.

தமிழகத்தின் வறண்ட பகுதிகளிலிருந்து, “அடுத்த ஊரில் வேலை தருகிறோம், முடிந்ததும் கொண்டு வந்து விடுகிறோம்” என்று ஏஜெண்டுகளால் ஆசைகாட்டப்பட்டு சென்னைக்கு கூட்டிச் சென்று அங்கு கொட்டகையில் தங்க வைத்து, பின்பு ஃபிஜியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் கூலி வேலை செய்வதற்கு கப்பலில் அழைத்து சென்று மோசம் செய்யப்பட்ட இவர்களில்  பலர் நான்கு மாத கடும் கடல் பயணத்திலேயே நோய்வாய்ப்பட்டு இறந்தே போயிருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்களின் வழக்கப்படி இவர்களிடமும் சர் நேம் கேட்க ஒவ்வொரு வட இந்தியர்களின் பெயருக்குப் பின்னாலும் மஹராஜ் உள்ளது, காரணம் ஆங்கிலேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவர்கள் ”ஜி மஹராஜ்” என கூறியுள்ளனர். அதுவே சர் நேம் ஆகி விட்டதாம். இது போலவே நம்ம ஊர் குப்புசாமி கூப்புசாமி ஆகியிருக்கிறார். கரும்புத் தோட்ட வேலை முடிந்ததும் திரும்பிச் செல்ல வழியில்லாமல் இங்கேயே தங்கி விட்டனர். இவர்களின்  அடுத்த தலைமுறைகளும் தங்களுடைய சொந்த ஊர் எது என்று கூடத்  தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் திண்ணாமலை என்கிறார்களாம். அடுத்த ஊருக்கு வேலைக்கு சென்றிருப்பதாக நினைத்த அவர்களது குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்றும் தெரியாத இவர்களின் நிலை பற்றி என்ன சொல்வது.

நேடிவ் ஃபிஜியர்கள் காட்டு ஜனங்களாக நர மாமிசம் சாப்பிடுபவர்களாகத் தான் முன்பு இருந்திருக்கிறார்கள். சகமனிதரையே உண்ணும் இவர்களை ஒரு கிறிஸ்துவ அமைப்பினர் தான் அதிலிருந்து மீட்டு இப்போதைய உணவு முறைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் – அப்படி மாற்றுவதற்குள் அவர்களில் பாதிப் பேர் கடைசியில் காணவில்லை - அவ்வளவு ருசி போலிருக்கிறது நர மாமிசம். ஃபிஜியன் மொழிக்கு எழுத்துரு கிடையாதாம். அதனால் ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்திக் கொள்கிறார்களாம்.

ஃபிஜியர்களின் தேசிய விளையாட்டு ரக்பி. முதலில் இந்த விளையாட்டு வந்த கதையைச் சொல்லும் போது, ”எதிரிகளைக்  கொன்று அவர்களின் தலையை, பந்துக்கு பதிலாய் உருட்டி விளையாடுவார்களாம்” என்று சொல்லும்போது நமக்கு தலை தானாகவே ஆடுகிறது. பழங்குடியினரின் மதிப்பு மிக்க பொருட்கள் என்றால் திமிங்கலப் பல்லும், பாயும் தானாம். மதிப்பு மிக்கவர்கள் என்று நினைப்பவர்களுக்கு திமிங்கலப் பல் மாலை அணிவிப்பார்களாம்.

புரட்டாசி மாதம் வந்தாலே “குளுகுளா திருவிழா”ன்னு ஒண்ணு நடுத்துவாங்களாம். மாரியம்மன் முன்னிலையில் மைதா மாவில் சர்க்கரை சேர்த்து போண்டா போல் செய்து எண்ணெயில் போட்டதும் விரதமிருப்பவர்கள் கொதிக்கும் எண்ணெயில் இருந்து தங்கள் விரல்களாலேயே கோரி எடுப்பார்களாம். ஆமாங்க இந்த போண்டாவுக்கு பேர் தான் குளுகுளாவாம்.

இங்கு வியாபாரம் செய்ய வந்த குஜராத்திகளை பற்றி சொல்றாங்க… அது என்னன்னா…. ”சோம்பல் என்றால் என்ன?” என்று கேட்கும் ரகம்! எப்போதும் வெகு சுத்தமான ஆடைகளுடன், முகத்தில் ஒரு வாட்டமும் இல்லாமலிருக்கும் அவங்களை பார்க்கும் போதே நமக்கும் ஒரு உற்சாகம் வந்துடும். முதியோரை அவர்கள் பராமரிக்கும் விதமே தனி. எப்பவும் எது செஞ்சாலும் அவங்ககிட்டே கருத்துக்களைக் கேட்டே செய்றாங்க”.

நாட்டின் ஆட்சி ஒவ்வொருவர் கையாக மாற மாற பணத்தின் மதிப்பைக் குறைத்தார்களாம். இதனால் மக்களின் சேமிப்பு குறைய ஆரம்பித்தது. இப்படியே மூன்று வருட காண்ட்ராக்ட்டுக்காக இங்கு வந்தவர்கள் ஆறு வருடங்கள் தங்கி பின்பு மாறி அங்கிருந்து நியூசிக்கு சென்று அங்கேயே தங்கி விட்டார்களாம்.

இருபது வருடங்களுக்கு பிறகு ஃபிஜிக்கு சென்று தோழி வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டு அப்படியே இடைப்பட்ட காலத்தில் ஃபிஜி நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் நமக்குக்  காட்டுகிறார். இப்படிப் பட்ட சுவாரசியமான செய்திகளை தரும் இந்த புத்தகத்தை நீங்களும் வாங்கிப் படித்து அதன் முழுமையான சுவையை உணருங்கள்.

புத்தகத்தை சந்தியா பதிப்பகத்தினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.  அவர்களது முகவரி:-

சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53 - வது தெரு
9 - வது அவென்யூ
அகோக் நகர்
சென்னை – 600083
தொலைபேசி – 044 24896979
விலை – ரூபாய் 120.

மீண்டும் சந்திப்போம்,

நட்புடன்
ஆதி வெங்கட்.

27 comments:

 1. சுவாரசியமான செய்திகளை தரும் புத்தக அறிமுகப்புத்திக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. புத்தக அறிமுக பதிவு நன்றாக உள்ளது.வாங்கிப் படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது

  ReplyDelete
 3. ரோஷ்ணியம்மா!
  இன்று இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்களே!!!!!!

  மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 4. புத்தக அறிமுகம் அருமை. படிப்பதற்கான ஆவலைக் கிளறிவிட்டு விட்டீர்கள். நன்று.

  ReplyDelete
 5. புத்தக அறிமுகம் அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. பொறாமை எனக்கு பிடிக்காத குணம், ஆனால் பதிவுலகில் நான் பார்த்து பொறாமைப்படும் நபர் டீச்சரம்மா தான். பல ஊர்களும் சுற்றி அதன் அனுபவங்களை தனக்கே உரிய நகைச்சுவையுடன் சொல்வதில் வல்லவர். மேலும் பல நல்ல உணவு பொருட்களும் போட்டோ பிடிச்சு போட்டு நம்ம வயித்தெரிச்சலை கிளப்புவார்.

  "நீங்க இருக்கும் ஊருக்கு வந்து உங்க சமையலை ஒரு நாள் சாப்பிடுவேன்" என சொல்லிருக்கேன். அவரும் ஓகே சொல்லிருக்கார்.

  என்னிடமும் டீச்சரம்மா புக் ஒன்னு இருக்கு. பாதி தான் படிச்சு இருக்கேன். முடிச்சுட்டு விமர்சனம் எழுதணும்.

  பிஜி தீவு புத்தகத்தின் முக்கிய அம்சங்களை நன்கு சொன்ன உங்களுக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 7. அமைதிச்சாரல் அவர்களிடமிருந்து வந்த மின்னஞ்சல்:

  விமரிசனம் அருமையாயிருக்கு.. துளசியக்காவின் தளத்தின் வாசிச்சவையெல்லாம் உங்க எழுத்தை வாசிக்கும்போது திரும்பவும் மனசிலாடுது.. நன்றி ரோஷ்ணியம்மா :-)

  உங்க தளத்துல பின்னூட்ட முடியாட்டியும் மெயில்லயும் கருத்து சொல்லுவோமில்ல :-)

  ReplyDelete
 8. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 9. வாங்க ராஜி,

  அவசியம் வாங்கி படித்துப் பாருங்கள்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 10. வாங்க டீச்சர்,

  நன்றி எதற்கு.......உங்களை மாதிரி எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்பும், இந்த மாதிரி புத்தகங்களையெல்லாம் படிக்கும் வாய்ப்பும் கிடைத்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 11. வாங்க கணேஷ் சார்,

  அவசியம் வாங்கிப் படித்து பார்த்து அதன் சுவையை உணருங்கள்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 12. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 13. வாங்க மோகன்குமார் சார்,

  உங்களிடமிருக்கும் புத்தகத்தை படித்து விரைவில் விமர்சனம் எழுதுங்கள். காத்திருக்கிறோம்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 14. வாங்க அமைதிச்சாரல்,

  ஃபிஜித்தீவு பற்றி அவங்க எழுதினதை புத்தகத்தில் தான் முதல் முறையா படித்தேன்.

  பின்னூட்டம் இட முடியாவிட்டாலும் மின்னஞ்சல் மூலம் கருத்து சொன்ன தங்களுக்கு ஸ்பெஷல் நன்றிங்க.

  ReplyDelete
 15. இருக்கின்ற ஊரோ .. சுற்றிப்பார்க்கும் ஊரோ....சும்மா விஜயகாந்த் ரேஞ்சுக்கு புள்ளிவிவரமெல்லாம் குடுத்து எப்பூடீன்னு மிரட்டிருவாங்க :))

  ReplyDelete
 16. அருமையான பகிர்வு. வாசிக்க நினைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்று.விரைவில் வாங்கிடுவேன். நன்றி.

  ReplyDelete
 17. அவரது செல்வச் செல்வங்கள் நூலையும் வாய்ப்புக் கிடைப்பின் வாங்கி வாசித்திடுங்கள். அப்புத்தகம் குறித்த என் வாசிப்பனுபவம்:
  துளசி கோபாலின் ‘என் செல்ல செல்வங்கள்’ - ஒரு பார்வை

  ReplyDelete
 18. நல்ல பகிர்வு.

  ReplyDelete
 19. வாங்க முத்துலெட்சுமி,

  ஆமாங்க. எவ்வளவு தகவல்கள். நான் வியந்து தான் போனேன். அங்கங்கே அவங்க பாணியில் நகைச்சுவை வேறு......

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 20. வாங்க ராமலஷ்மி,

  விரைவில் வாங்கி படித்திடுங்கள். அவ்வளவு தகவல்கள் உள்ளன.
  செல்ல செல்வங்களும், நியூசிலாந்தும் வாங்கி வைத்துள்ளோம். உங்களோட விமர்சனம் படித்தப் பின் உடனேயே வாசிக்க தோன்றுகிறது.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 21. வாங்க ஆசியா உமர்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 22. தங்கள் நூல் விமர்சனமே அதிக சுவரஸ்யமாக உள்ளது
  நிச்சயமாக புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தான் வேண்டும்
  என்கிற ஆவல் படிக்கிற அனைவருக்குமே தோன்றும்
  கிடைக்குமிடம் மற்றும் விலை விவரங்கள் கொடுத்தமைக்கு நன்றி

  ReplyDelete
 23. வாங்க ரமணி சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 24. மற்றுமொரு அருமையான விமர்சனம்

  ReplyDelete
 25. வாங்க சீனு,

  என்னுடைய பல பதிவுகளை தொடர்ந்து படித்து கருத்து கூறிய தங்களுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 26. நீங்க சொல்றதை பார்த்தா சுவாரஸ்யமா இருக்கும்னு தோணுது தோழி. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. முயற்சி செய்றேன்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…