Tuesday, April 24, 2012

கதம்பம் - 8

ROOH AFZA
இந்தப் பெயரை தொலைக்காட்சி விளம்பரத்தில் பலரும் பார்த்திருப்பீர்கள். இல்லை நான் பார்த்ததில்லை என்பவர்களுக்கு "ROOH AFZA" என்பது தில்லியில் கோடையில் பெரும்பாலோர் வீட்டிலும் இருக்கும் ஒரு பானம். சர்பத் போல பிங்க் நிறத்தில் கண்ணாடி பாட்டிலில் கிடைக்கும். இதை பாலுடனோ, லஸ்ஸியுடனோ, அல்லது வெறும் தண்ணீருடனோ கலந்து உபயோகிக்கலாம். இதில் கலந்துள்ள மூலப்பொருட்கள் அனைத்தும் உடலுக்கு நன்மை விளைவிப்பவை. கேரட் சாறு, புதினா சாறு, சுரைக்காய் சாறு, ரோஜா பூக்களின் சாறு என இன்னும் நிறைய. சோடா கலந்து குடித்தாலும் நன்றாக இருக்கும். தண்ணீருடன் கலந்து சாப்பிடும் போது சிறிது எலுமிச்சை சாறும் சேர்த்துக் கொண்டால் சுவை இன்னும் கூடும். DABUR-ரிலும் "SHARBHAT E AZAM"  என்ற பெயரில் இதே போன்ற பானம் கிடைக்கிறது. அதிலும் இதிலுள்ள மூலப்பொருட்கள் தான் உள்ளன. உங்களுக்கு கிடைத்தால் வாங்கி பருகிப் பாருங்கள்.


புதிய கண்டுபிடிப்பு:-பெரிய விஞ்ஞானி ஆகிட்டாளோ என்று தயவு செய்து தப்பாகவெல்லாம் நினைச்சுடாதீங்க. சின்ன விஷயம் தான். உருளைக்கிழங்கை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி உப்பு, காரம் சேர்த்து கறி (பொரியல்) செய்வோம் இல்லையா? இத்தனை வருடங்களாக இதைச் செய்யும் போதெல்லாம் சே! அம்மா பண்ற ருசியே வரமாட்டேங்குதே என்று வருத்தப்பட்டதுண்டு. சென்ற வாரத்தில் ஒருநாள் இதே முறையில் கறி செய்யும் போது தோலை சீவாமல் தோலுடன் சேர்த்தே செய்து பார்த்தேன். என்ன ஆச்சரியம்! அதே ருசி. ஆஹா! ருசி இந்த தோலில் தான் இருந்திருக்கிறது என்பது தான் என் கண்டுபிடிப்பு. யாரும் அடிக்க வராதீங்க…


பிசிறில்லாத தோல், மண் இல்லாம நல்லா இருந்தா நன்றாக கழுவி விட்டு உபயோகிக்கலாம். தோலிலும் சத்து இருக்கு.


புதிதாக ஒரு பூ:சென்ற மாதம் முழுவதும் சாலையில் சிவப்பு நிறத்தில் உள்ள இந்த மலர்கள் தான் எங்கும் கிடந்தன. நல்ல உயரமான மரம். இலைகள் மிகவும் குறைவு. பூக்கள் தான் நிறைய… மலர்கள் தான் வண்டிகளின் நடமாட்டத்தால் நசுங்கி கிடக்கின்றன...

ரோஷ்ணி கார்னர்:-


ராஜ் டிவியில் பத்தாயிரத்து ஒன்றாம் தடவையாக "என் பொம்முகுட்டி அம்மாவுக்கு" படம் போட்டிருந்தாங்க. எதேச்சையாக சேனல் மாற்றும் போது பட ஆரம்பத்தில் வரும் ”ஏ சித்திரசிட்டுக்கள் சிவந்த மொட்டுகள்” என்ற பாடல் வந்ததும் சித்ரா அவர்கள் பாடிய அழகான பாடல் என்று நானும் ரோஷ்ணியும் பார்க்க ஆரம்பித்தோம். பாடல் முடியும் நேரத்தில் நான் சேனலை மாற்றினேன். காரணம் அந்த பாடலில் வரும் குழந்தை, தன்னுடைய பொம்மை தண்ணீருக்குள் விழுந்ததால் அதை எடுப்பதற்காக குழந்தையும் தண்ணீருக்குள் குதிப்பதாக சொல்லியிருப்பாங்க. (நல்லவேளை குழந்தை விழுவது போல் காட்ட மாட்டார்கள்) இந்த படத்தை பல முறை பார்த்துள்ளதால் எதற்கு இந்த விபரீதம் என்று நான் சேனலை மாற்றி விட்டு வேறு வேலையை பார்க்கச் செல்ல ரோஷ்ணி மாற்றி இதைப் பார்க்க நான் அவளுக்கு சொல்லி புரிய வைப்பதற்காக அப்பா, அம்மா பேச்சை கேட்காம பாப்பா தனியா போனதால் தான் அப்படி ஆனது. அதனால எல்லா குழந்தைகளும் அப்பா, அம்மா சொல்றதை கேட்கணும். அவங்க நல்லதை தான் சொல்வாங்க, என்று சொல்ல. அவளோ பொம்மை விழுந்தா அப்பாவிடம் சொல்லி வேற வாங்கிக்கலாம். எதுக்கு பாப்பா இதுக்கு போய் தண்ணிக்குள் குதிக்கிறா? இப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்றாள்.

அப்பாடா! தப்பித்தேன்…..மீண்டும் சந்திப்போம்,ஆதி வெங்கட்.
புது தில்லி.

66 comments:

 1. //பொம்மை விழுந்தா அப்பாவிடம் சொல்லி வேற வாங்கிக்கலாம். எதுக்கு பாப்பா இதுக்கு போய் தண்ணிக்குள் குதிக்கிறா? இப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்றாள்//

  very smart.

  ReplyDelete
 2. உருளைக்கிழங்கை தோலுடன் சமைத்தால் வாய்வும் குறையுமாம்..

  மாம்பழத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும்
  மாந்தம் அதன் தோலுடன் சாப்பிடுவதால் நிவாரணம் ஆகுமாம்.. தோலில் குரோமியச்சத்து அதிகம் இருக்கிறதாம்..

  பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. //இதில் கலந்துள்ள மூலப்பொருட்கள் அனைத்தும் உடலுக்கு நன்மை விளைவிப்பவை. கேரட் சாறு, புதினா சாறு, சுரைக்காய் சாறு, ரோஜா பூக்களின் சாறு என இன்னும் நிறைய. //

  ஆஹா, இதற்காகவே டெல்லிக்கு உங்கள் வீட்டுக்கு ஒருமுறை விசிட் அடிக்கணும் போல் உள்ளது.

  ReplyDelete
 4. //ருசி இந்த தோலில் தான் இருந்திருக்கிறது என்பது தான் என் கண்டுபிடிப்பு.//

  தோலில் தான் ருசியே உள்ளது என்று சொல்வதும் கேட்க ருசியாகவே உள்ளது.

  அது தான் உண்மையாகவும் இருக்கும்.

  //இராஜராஜேஸ்வரி said...
  உருளைக்கிழங்கை தோலுடன் சமைத்தால் வாய்வும் குறையுமாம்..

  மாம்பழத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும்
  மாந்தம் அதன் தோலுடன் சாப்பிடுவதால் நிவாரணம் ஆகுமாம்.. தோலில் குரோமியச்சத்து அதிகம் இருக்கிறதாம்..//

  தகவல் களஞ்சியமே சொல்லிவிட்டார்கள்.
  பிறகென்ன, அப்பீலே இல்லை.

  ReplyDelete
 5. //மலர்கள் தான் வண்டிகளின் நடமாட்டத்தால் நசுங்கி கிடக்கின்றன...//

  அழகான, நறுமணமுள்ள எல்லா மலர்களுக்குமே ஆயுள் குறைவாகத்தான் உள்ளது.

  மலர்களைப்போய் நசுக்குகிறார்களே, மிதிக்கிறார்களே, கசக்குகிறார்களே

  பூப்போல கையாள வேண்டாமா?
  என்று எனக்கும் தோன்றும்.

  ReplyDelete
 6. //பொம்மை விழுந்தா அப்பாவிடம் சொல்லி வேற வாங்கிக்கலாம். எதுக்கு பாப்பா இதுக்கு போய் தண்ணிக்குள் குதிக்கிறா? இப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்றாள்.//

  ரோஷ்ணின்னா ரோஷ்ணி தான். சூப்பர்.
  இந்த வயதிலேயே மெச்சூர்டு மைண்ட்.

  மொத்தத்தில் கதம்பம், தஞ்சாவூர் கதம்பம் போல நல்ல மணமாக உள்ளது.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 7. நல்ல ருசிகரமான தகவல்களைச் சொல்லி
  உள்ளீர்கள். பகிர்விக்கு நன்றி ஆதி வெங்கட்

  ReplyDelete
 8. கதம்பம் பகிர்வில் சொன்ன விஷயங்கள் சிம்ப்ளி சூப்பர்.

  ReplyDelete
 9. சில சமயங்கள்ல அம்மாக்களை விட பிள்ளைங்க நாங்க புத்திசாலியா இருந்து அசரடிப்போம்ல.. ரோஷ்ணிக்கண்ணு அழகாவே செர்ல்லியிருக்கா. சூப்பர்,

  ReplyDelete
 10. கதம்பம் நல்லா மணம் வீசுகிரது.

  ReplyDelete
 11. செல்லக்குட்டி படு ஸ்மார்ட்! இனிய பாராட்டுகள்.

  பலாப்பழம்கூட ஏராளமாத் தின்னுட்டு வயித்துவலி மந்தம் என்றால் ஒரு பலாக்கொட்டையைச் சுட்டுத் தின்னால் போதும். வலி போயே போச்!

  அந்தப்பூ பாதிரிப்பூ போல இருக்கே! இதுலே வெள்ளை வகையும் இருக்கும்.

  ரூ அப்ஸா நம்ம வீட்டிலும் எப்பவும் ஸ்டாக் உண்டு. ரோஸ் மில்க் செய்வேன். அதுலே கொஞ்சம் சப்ஜா விதைகளை ஊறப்போட்டுக் கலக்கிட்டால் வயிறு ஜில்!!!!

  ReplyDelete
 12. தில்லியில் மட்டுமல்ல இங்கும் பெரும்பானமையான வீடுகளில் இருக்கும்.மிகவும் குளிர்ச்சியான,சுவையான அதே நேரம் மற்ற பானக்களை விட விலை சற்று அதிகமுள்ள தரமான பானம்.

  உண்மைதான் மட்டன் குருமாவுக்கு எங்கள் பக்கம் உருளைக்கிழங்கும் சேர்ப்பார்கள்.அதிலும் களரிக்கறி என்று விஷேஷங்களுக்கு கிலோ கணக்கில் சமைக்கப்படும் பொழுது இந்த உருளையை பெரிய துண்டுகளாக தோல் சீவாமல் சேர்ப்பார்கள்.ஷாஃப்டும் சுவையும் தூக்கலாக இருக்கும்.

  // எதுக்கு பாப்பா இதுக்கு போய் தண்ணிக்குள் குதிக்கிறா? இப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்றாள்.

  அப்பாடா! தப்பித்தேன்…..//

  இதுதான் தாய்ப்பாசம்...:)

  ReplyDelete
 13. ஆதி, சிறந்த பானத்தின் அறிமுகம் நன்றாக இருக்கிறது.

  நான் அடிக்கடிசெய்யும் உருளை கிழங்கு காரபொரியல் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த பொரியல் பகிர்வு அற்புதம்.
  டெல்லியில் பார்த்து வியந்த பூ

  பொம்மை விழுந்தா அப்பாவிடம் சொல்லி வேற வாங்கிக்கலாம். எதுக்கு பாப்பா இதுக்கு போய் தண்ணிக்குள் குதிக்கிறா? இப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்றாள்.//

  ரோஷ்ணியின் பொறுப்பான பதில் மகிழ வைத்தது.
  கதம்பம் மணக்கிறது.

  ReplyDelete
 14. ரேஸ்மில்க் என்று நம் ஊரிலும் பாலில் ரூஅஃப்ஸா தான் கலப்பார்கள். இது இஸ்லாமியர்களின் வக்ஃப் போர்ட்-ன் ஹம்தர்ட் (Humdard) நிறுவனத்தால் தயாரிக்கப்படுவது. [வேறு brand-கள் இருந்தாலும் இதன் தரம் தான் சிறந்தது]. ரோஜா, கீரா, புதினா போன்றவைக் கலந்தாலும் இதன் முக்கிய் ingredient வெட்டிவேர். அதுதான் அதன் குளுமைக்குக் காரணம். எலுமிச்சை சாறில் சேர்த்துக் குடித்தால் தனி ருசிதான்.

  தோலுடன் உ.கிழங்கு செய்தால் வெங்கட்-க்கு பிடிக்காது என்று ஞாபகம்.

  ReplyDelete
 15. ரோஷினி புத்தி சாலியா இருக்கா

  உருளை கிழங்கு நல்ல தகவல் தான். செய்ய மிக எளிதான இந்த உணவை ஹவுஸ் பாஸ் இல்லாத போது தனியே ஒரு முறை சமைத்து பார்க்கணும் என்று ஆசை !

  ReplyDelete
 16. கதம்பம் அருமை ஆதி. குழந்தைகளுக்கு சில விவரங்களை சொல்லுவது நல்லதுதான். பாருங்க, ரோஷ்ணி நல்லவிதமா புரிஞ்சிருக்கா. இந்த மாதிரி சூழ்நிலையில் என்ன செய்யணுங்கிறதை அவங்களே புரிஞ்சி நடக்கும்போது பிரச்சனை இருக்காது.

  அந்தப் பூவிருக்கும் மரத்தையும் படம்பிடிச்சிப் போட்டிருக்கலாமே.. பார்க்கவே அழகா இருக்கு.

  உருளைக்கிழங்கு வறுவல் ருசிக்க இதுவும் ஒரு காரணமா? செய்துபார்த்திட வேண்டியதுதான். நன்றி ஆதி.

  ReplyDelete
 17. // (நல்லவேளை குழந்தை விழுவது போல் காட்ட மாட்டார்கள்) //

  Good work by the director.

  // எதுக்கு பாப்பா இதுக்கு போய் தண்ணிக்குள் குதிக்கிறா? இப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்றாள். //

  These days kids are exposed to intellectual thinking..

  :-)

  ReplyDelete
 18. :) நானும் அந்தப்பாட்டில் முடிவில் மாத்திடுவேன்..
  நிறைய சொல்ல வேண்டி இருக்குஎதப்பார்க்கிறமோ அப்பல்லாம் அட்வைஸ் செய்யவந்துடராங்கடான்னு இப்பல்லாம் பிள்ளைங்க தெளிவா நமக்கே திருப்பி சொல்லிடராங்க..

  ReplyDelete
 19. ROOH AFZA////

  விளக்கம் அருமை.தகவலுக்கும் நன்றி

  ReplyDelete
 20. ரூ அப்ஸா பெயர் விளம்பரத்தில் கேட்ட மாதிரி உள்ளது. என் பொ.கு.அ பாடல்கள் அத்தனையுமே ரசிக்கக் கூடிய பாடல்கள். நாங்கள் உ.கி இரண்டு வகையிலும் செய்வதுண்டு!

  ReplyDelete
 21. சொல்ல மறந்துட்டேன்...... இங்கே எங்க பக்கம் இதுக்கு ஜாக்கெட் பொட்டேடோன்னு சொல்றாய்ங்க.

  ஜாக்கெட்டைக் கழட்டாம அப்படியே பேக் பண்ணி சாப்பிட்டுடலாம்:-)))))

  ReplyDelete
 22. பேபி பொடேடோஸ் எப்பவும் நான் தோலுடன் சமைப்பது வழக்கம் .
  இங்குள்ள வட இந்தியர்கள் சமையலில் உருளையை தோலுடன் தான் சமைக்கிறார்கள் .
  ரூ அப் ஷா இங்கும் கிடைக்குது நான் கடல் பாசியுடன் சேர்த்து ஜெல்லி செய்வேன் .

  கதம்பம் அருமை .பிள்ளைகள் இப்பெல்லாம் படு ஸ்மார்ட் .
  நம்மை விட எதையும் ஈசியா புரிந்துகொள்ளும் மனபக்குவம் இந்த காலத்து பிள்ளைகளுக்குண்டு .

  ReplyDelete
 23. அடடா இது தெரியாம ஏகப்பட்ட உருளைக் கிழங்குத் தோலை வேஸ்ட் பண்ணிட்டோமே?

  ReplyDelete
 24. படித்தேன் அதிக தகவல்களைத் தெரிந்து கொண்டேன். அனைத்தும் புதிய தகவல்கள் . நன்றி .

  ReplyDelete
 25. இரண்டு சர்பத்தும் குடித்திருக்கிறேன்.மிகக் குளுமை.

  ரோஷ்ணி கெட்டிக்காரக் குழந்தை!

  ReplyDelete
 26. இக்காலக் குழந்தைகள் புத்திசாலிகள்:).

  உருளை டிப்ஸுக்கு நன்றி. /"ROOH AFZA"/ எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமானது.

  ReplyDelete
 27. அடச் சமத்து ரோஷ்னி:)
  ரூ அஃப்சா எனக்கும் முன்பு ரொம்பப் பிடிக்கும். இப்போது சர்க்கரைக்குப் பயந்து சாப்பிடுவதில்லை ஆதி.
  அந்தப் பூ ஆல்மண்டா என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 28. உருளைக்கிழங்கை எங்க வீட்டில் தோலுடன் தான் செய்வது,. அம்மா செய்வதுபோலவே நானும் செய்வ்ன். ஆனால் அந்த ருசி வராது. என் பெண்ணும் இதையே சொல்கிறாள்.

  ReplyDelete
 29. வாங்க manazeer masoon,

  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 30. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  தோலை பற்றிய தகவல்களுக்கு நன்றி.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 31. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  பதிவின் நீளம் கருதி எழுதவில்லை. இதில் பைனாப்பிள் சாறு, பாலக் கீரை, ஆரஞ்சு சாறு, தர்பூசணி சாறு, வெள்ளரிக்காய் சாறு என பலதும் உள்ளது சார். எல்லாமே உடலுக்கு நன்மை விளைவிப்பவை தான். சுவையும் நன்றாக இருக்கும்.

  டெல்லிக்கு வாங்க சார் தடபுடலான விருந்தே கொடுத்துடலாம்.

  ReplyDelete
 32. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தோலில் உள்ள சத்துக்களை பற்றி முன்பு ஒரு புத்தகத்திலும் படித்திருக்கிறேன். இராஜராஜேஸ்வரி மேடமும் சொல்லியிருக்காங்க. அப்போ அது நிஜம் தான்.

  ReplyDelete
 33. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  இந்த மலருக்கு மணமும் கிடையாது. பறிக்கும் உயரத்திலும் மரம் இல்லை. காற்றடிப்பதால் மலர்கள் மட்டும் விழுந்து வணடிகளின் நடமாட்டத்தால் நசுங்கி பரிதாபமாக இருக்கிறது. என்ன செய்வது.

  ReplyDelete
 34. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  இப்போதுள்ள குழந்தைகளே மெச்சூர்டாத் தான் இருக்காங்க.

  நான்கு பின்னூட்டங்களை தந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

  ReplyDelete
 35. வாங்க புவனேஸ்வரி மேடம்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 36. வாங்க ஆசியா உமர்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 37. வாங்க நிரஞ்சனா,

  அதென்னவோ உண்மை தான். அம்மாவை விட பசங்க புத்திசாலியா இருக்காங்க. சமயத்துல நல்ல யோசனையும் தருவாங்க....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 38. வாங்க லஷ்மிம்மா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 39. வாங்க டீச்சர்,

  பலாக்கொட்டை மேட்டர் - ஓ! அப்படியா! தகவலுக்கு நன்றி.

  பாதிரிப்பூவா! நான் இந்த ஏரியாவில் தான் பார்த்தேன். அங்கங்கே இருந்தது.

  சப்ஜா விதைகளையும் ROO HAFZA ல் சேர்ப்பது - இனிமே சேர்த்து விடுகிறேன்

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 40. வாங்க ஸாதிகா,

  //தில்லியில் மட்டுமல்ல இங்கும் பெரும்பானமையான வீடுகளில் இருக்கும்.மிகவும் குளிர்ச்சியான,சுவையான அதே நேரம் மற்ற பானக்களை விட விலை சற்று அதிகமுள்ள தரமான பானம்.//

  700 மில்லி 105 ரூபாய். கொஞ்சம் ஜாஸ்தி தான். ஆனா தரமானது.

  //உண்மைதான் மட்டன் குருமாவுக்கு எங்கள் பக்கம் உருளைக்கிழங்கும் சேர்ப்பார்கள்.அதிலும் களரிக்கறி என்று விஷேஷங்களுக்கு கிலோ கணக்கில் சமைக்கப்படும் பொழுது இந்த உருளையை பெரிய துண்டுகளாக தோல் சீவாமல் சேர்ப்பார்கள்.ஷாஃப்டும் சுவையும் தூக்கலாக இருக்கும்.//

  அப்படியா! உங்க தகவல்களுக்கு நன்றிங்க. மன்னிக்கணும். நான் இந்த ஐட்டங்களை பார்த்ததும் இல்லை. சாப்பிட்டதுமில்லை.....:)

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 41. வாங்க கோமதிம்மா,

  எனக்கும் இந்த குட்டி குட்டியா நறுக்கி செய்யும் பொரியல் தான் பிடிக்கும்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 42. வாங்க சீனு அண்ணா,

  ரோஸ் மில்க்குக்கு MAPRO வில் ”ரோஸ் ஷர்பத்” என்று கிடைக்கிறது. பாலில் கலந்தா ஆச்சு. பிரமாதம். திருச்சியில் இருந்து ரோஸ் எசன்ஸ் கூட வாங்கி வந்தேன். பிடிக்க வில்லை. இந்த ரோஸ் ஷர்பத்தில் குடிக்கும் போது இடையே வாயில் கடிபடும் ரோஜா இதழ்கள். ஃப்ரெஷ்ஷாக இருக்கும். MAPRO வில் வெட்டி வேர், இஞ்சி ஜூஸ் என்று விதவிதமாய் இருக்கிறது.

  //தோலுடன் உ.கிழங்கு செய்தால் வெங்கட்-க்கு பிடிக்காது என்று ஞாபகம்.//

  உங்க பழைய ROOM MATE ஆச்சே. அதான் சொல்றீங்க. நான் கேட்டேன், அதற்கு ”தெரியாது” என்கிறார். இது என்னவென்று எடுத்து கொள்வது. சாதுர்யமான பதில் தான்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 43. வாங்க மோகன்குமார் சார்,

  ஹவுஸ் பாஸ் இல்லாத போது செய்து சாப்பிடணுமா......நடத்துங்க...:)

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 44. வாங்க கீதமஞ்சரி,

  ஆமாங்க. குழந்தைகள் எப்படி எடுத்துக் கொள்வாங்களோன்னு நாம பயப்பட்டாலும், அவங்களே புரிஞ்சிக்கிட்டா நல்லது தான். அதை நல்ல விதமா புரிஞ்சுக்கணும். அதுக்கு தான் நாம அக்கறை எடுத்துக்கணும்.

  //அந்தப் பூவிருக்கும் மரத்தையும் படம்பிடிச்சிப் போட்டிருக்கலாமே.. பார்க்கவே அழகா இருக்கு.//

  மரத்தை படம் எடுக்க முடியவில்லை. இந்த பூவே சாலையில் நசுங்காமல் தப்பித்திருந்தது. அதை வீட்டுக்கு கொண்டு வந்து எடுத்தது. இந்த பூவை பற்றி தெரிந்து கொள்வதற்காக...

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 45. வாங்க மாதவன் சார்,

  நல்ல டைரக்டர் தான்....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 46. வாங்க முத்துலெட்சுமி,

  எங்க வீட்டிலும் ரோஷ்ணி சில சமயம் ஏதாவது சொல்வதுக்கு முன்னயே காதை மூடிக்குவா...

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 47. வாங்க வைரை சதீஷ்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 48. வாங்க ஸ்ரீராம்,

  அந்த படப் பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 49. வாங்க டீச்சர்,

  //இங்கே எங்க பக்கம் இதுக்கு ஜாக்கெட் பொட்டேடோன்னு சொல்றாய்ங்க.//

  புதுசா இருக்கே! எப்படியெல்லாம் யோசிச்சு பேர் வைக்கிறாங்க.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 50. வாங்க ஏஞ்சலின்,

  கடல் பாசியுடன் சேர்த்து ஜெல்லி செய்வீங்களா....நல்லது.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 51. வாங்க கே.பி.ஜனா சார்,

  இனிமே வேஸ்ட் பண்ணாதீங்க சார்....:)

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 52. வாங்க சீனு,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 53. வாங்க சென்னை பித்தன் சார்,

  இரண்டுமே குடித்திருக்கிறீர்களா.....DABUR உடையதும் நன்றாகவே இருக்கும்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 54. வாங்க ராமலஷ்மி,

  உங்க வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமானதா.......சிலருக்கு இந்த சர்பத் பிடிப்பதில்லை. நண்பர் ஒருவருக்கு இதை கண்டாலே அலர்ஜி. நான் அதை வைத்தே ஓட்டிக் கொண்டிருப்பேன். அவர் எனக்கு அலர்ஜியான மாகாளிக்கிழங்கு பெயரை சொல்லி கிண்டல் செய்வார்....:)

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 55. ஆஹா ரூ ஆப்ஷா பார்த்ததும் ரோஸ் மில்க் உடனே குடிக்கனும் போல் இருக்கு

  ReplyDelete
 56. வாங்க வல்லிம்மா,

  உங்களுக்கும் ROO HAFZA பிடிக்குமா.....

  ஆல்மண்டாவா இந்த பெயரும் நல்லாயிருக்கே.....துளசி டீச்சர் இது பாதிரிப்பூ என்கிறார்கள். எப்படியோ இந்த பூவை பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்த எனக்கு இந்த பெயர்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 57. வாங்க வல்லிம்மா,

  உங்க மகளும் என்னைப் போல் தான் சொல்வாங்களா!

  தன்னம்பிக்கை, தைரியம் போன்றவற்றிலும், சமையலை பொறுத்தவரையிலும் என என் அம்மா மாதிரி வர மாட்டேங்குதே என பல நாட்கள் வருத்தப்படுவது உண்டு..... அம்மா அம்மா தான்.....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 58. வாங்க ஜலீலாக்கா,

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 59. http://en.wikipedia.org/wiki/File:Bunga_kemboja_%28Plumeria%29_merah.JPG

  ReplyDelete
 60. கதம்பம் மணம் கமழ்கின்றது.
  ரோஷ்ணி ரொம்ப புத்திசாலி.

  ReplyDelete
 61. கதம்பம் சூப்பர்

  ReplyDelete
 62. வாங்க டீச்சர்,

  தகவல்களுக்கு நன்றி டீச்சர்.

  ReplyDelete
 63. வாங்க மாதேவி,

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 64. வாங்க டி.என்.முரளிதரன்,

  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 65. நீங்க எழுதியதை வீட்டில் சொல்லியிருந்தேன். இன்னிக்கு வீட்டில் உருளை கிழங்கு தோல் உரிக்காம செஞ்சிருந்தாங்க. வித்யாசமா இருந்தது.

  ReplyDelete
 66. வாங்க மோகன்குமார் சார்,

  ஓ! செஞ்சு பார்த்திட்டாங்களா......சாப்பிட்டு விட்டு வித்தியாசமா இருந்தது என்று கருத்தும் சொன்னதற்கு மிகவும் நன்றி சார்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…