Monday, March 26, 2012

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு

தலைப்பைப் பார்த்ததுமே யாரைக் காணோம், எதைக் காணோம் என்று எல்லோரும் பயந்துட்டீங்களா? பதட்டப்பட வேண்டாம். பல வருடங்களுக்கு முன்னால் நிஜமாகவே என் பெயர் இப்படி காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பில் வந்திருக்க வேண்டியது. அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் மனதில் பயத்தை உண்டு பண்ணுகிறது.என்னுடைய கோடை விடுமுறை என்ற பதிவில் என் சிறு வயதில் அத்தை வீட்டிற்கு சென்றிருந்ததைப்  பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். சின்ன அத்தை வீடு இராமநாதபுரம்  மாவட்டத்தில் உள்ளது. இவர்கள்  கூட்டுக்  குடும்ப வாழ்கையை பல வருடங்களாக அனுபவித்து வருகின்றனர். தினமும் சாப்பாடே மூன்று நான்கு பந்திகளுக்கு நடக்கும். இப்போது அவர்களின் குழந்தைகள் வளர்ந்து படிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் வெளியூர்/வெளிமாநிலங்களுக்கு என்று சென்றுவிட்டாலும் பெரியவர்கள் ஒன்றாகத் தான் இருக்கிறார்கள்.விடுமுறையில் இந்த அத்தை வீட்டில் 15 நாட்கள் இருப்பதற்காக அப்பா என்னையும், தம்பியையும் கொண்டு வந்து விட்டு விட்டுச் சென்றார். அப்பா-அம்மாவை பிரிந்திருப்பது எனக்கு ஏக்கமாக இருந்தாலும், அங்கிருந்த குழந்தைகளுடன் எப்போதும் விளையாட்டு, தினமும் ஒரு சினிமா, விதவிதமான ஐஸ்கிரீம், அவர்கள் நடத்தும் ஹோட்டலிலிருந்து தினமும் ஒரு டிபன் என்று சந்தோஷமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் அருகில் உள்ள ஊரில் கோவில் திருவிழா என்றும் அங்கு மயில்கள் நிறைய இருப்பதாகவும் அதற்குப் போகலாம் என்றும் என்னை அத்தையின் புகுந்த வீட்டு மனிதர்கள் சிலர் அழைத்துச் சென்றனர்.அந்த ஊரின் பெயரை இப்போது நினைத்தாலும் ஞாபகம் வரவில்லை. கோவில் தரிசனம் முடிந்ததும் அங்கேயே கையில் கொண்டு சென்றிருந்த உணவையும் சாப்பிட்டு விட்டு பேருந்து நிலையத்தை சென்றடைந்தோம். பல ஊர்களுக்கும் செல்ல அங்கு மாறி மாறி பேருந்துகள் வந்து கொண்டிருந்தன. மக்கள் கூட்டமோ அலை மோதியது. கைக்குட்டை, பை, இவற்றையெல்லாம் போட்டு இடம் பிடித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் ஒரு பத்து பேராவது இருந்திருப்போம். எல்லோருக்கும் இடம் வேண்டுமே என்று காத்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்திற்குப் பிறகு எல்லோரும் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்துக்கு அருகில் சென்றோம். சரி இந்த பேருந்தில் தான் ஏற வேண்டும் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.திடீரென்று கூட்டத்திலிருந்த மக்கள் திபுதிபுவென்று பேருந்தில் ஏறினர். எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் சடாரென திரும்பிப் பார்க்க என்னருகில் இருந்த உறவினர்களைக்  காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாலும் தெரியவில்லை. சரி பேருந்தில் ஏறி விட்டார்கள் என்று நினைத்து நானும் பேருந்தில் ஏறிவிட்டேன். கும்பல் அதிகமாக இருந்ததால் ஓட்டுநரின் அருகில் நின்று கொண்டு பின்னால் திரும்பி பேருந்தின் உள்ளே அவர்களை தேடிக் கொண்டே இருக்கிறேன்… ஆனால்…யாருமே தென்படவில்லை…. பயம் வந்து விட்டது. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. கீழே இறங்கலாம் என்றால் நகரவே முடியவில்லை. வண்டியை வேறு எடுக்கப் போகிறார்கள். கடவுளே…பேருந்து நகர ஆரம்பிக்க… ஓட்டுநர் இருக்கும் பக்கத்தின் வெளியே என் உறவினர் கத்திக் கூப்பிடுகிறார். ஏய், வண்டியை விட்டு சீக்கிரம் இறங்குடி என்று… நான் அப்போது தான் கவனித்தேன். பின்பு அவர் ஓட்டுநரிடம் சொல்லி நிறுத்தச் சொல்ல  நான் இறங்கினேன். அப்பாடா… எனக்கு உயிர் வந்தது. கூடவே அழுகையும்.அப்போது தான் அந்த அண்ணா சொன்னார் "இப்படியே விட்டிருந்தா, நீ இராமேஸ்வரம் போயிருப்ப!" என்று. ஆமாங்க அந்த பேருந்து இராமேஸ்வரம் செல்வதாம். பின்பு எல்லோருடனும் சேர்ந்து வீட்டிற்குப்  போய் சேர்ந்ததும், அத்தையிடம் சொல்லி அழுதேன். எல்லோரும் மிகவும் ஆறுதலாக பேசினார்கள். இருந்தும் அன்றே எனக்கு ஜுரம் வந்து விட்டது. அப்பா, அம்மாவிடம் செல்ல வேண்டும் என்று ஒரே அழுகை. ஒரு வாரம் ஜுரத்துடனேயே இருந்தேன். எங்க ஊருக்கு வந்து அப்பாவையும், அம்மாவையும் பார்த்ததும்தான் நிம்மதி வந்தது என்றும் சொல்லலாம்.இந்த சம்பவத்திற்குப்  பிறகு என் பயம் மிகவும் அதிகமாகி விட்டது. அப்பா-அம்மாவுடன் எங்கு போனாலும் என்னை விட்டுட்டு எங்கேயும் போயிடாதம்மா என்று சொல்லிக் கொண்டேயிருப்பேன். கையையும் இறுக்கிப் பிடித்துக் கொள்வேன்.திருமணமான பிறகும் என்ன, இப்பவும் இப்படித்தான். யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. அதை பற்றி எனக்குக் கவலையுமில்லை. என் பயம் எனக்கு. கூட்டம் என்றால் கணவரின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்வேன். திருமணமான புதிதில் கோவையிலிருந்து திருச்சிக்கு பேருந்தில் செல்லும் போது வாந்தியின் காரணத்தால் நான் மாத்திரை போட்டு தூங்கி விட காங்கேயத்தில் வண்டி நின்றிருக்கிறது. கணவர் இறங்கி போன் பேசப் போய்விட தீடீரென முழித்தவள் அருகில் கணவர் இல்லாததையும், அக்கம் பக்கம் தேடியும் காணாததால் எனக்கு அழுகையே வந்து விட்டது. சிறிது நேரத்திற்கு பின் அவர் சிரித்துக் கொண்டே வருகிறார்.இப்படி பலநேரம் என்னை பயமுறுத்துவதுண்டு. ஏதாவது ஒரு ஸ்டேஷனில் இறங்கி விட்டு வண்டி கிளம்பி நான் பயந்து அழ ஆரம்பிக்கும் முன்னர் வந்து விடுவார்.உண்மையிலேயே என்  சிறுவயதில் அன்று காணாமல் போயிருந்தால்?... நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்ன நடந்திருக்குமென்று?மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்

54 comments:

 1. இன்னமும் பயமா...?

  ReplyDelete
 2. உண்மையிலேயே என் சிறுவயதில் அன்று காணாமல் போயிருந்தால்?...

  ப..பயமே காணாமல் போகட்டும் இனிமேல்..

  ReplyDelete
 3. nallavelai ninga siruvayathil kanamapokle. appuram ippati pathivellaam engalukku eppadi padikka kitassirukkum?

  ReplyDelete
 4. // உண்மையிலேயே என் சிறுவயதில் அன்று காணாமல் போயிருந்தால்?... //

  எங்களுக்கு ஒரு நல்ல பிளாகரும், நல்ல வலைப் பதிவும் கிடைத்திருக்காது... !!

  ReplyDelete
 5. //உண்மையிலேயே என் சிறுவயதில் அன்று காணாமல் போயிருந்தால்?... நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்ன நடந்திருக்குமென்று?//

  அதானே! எங்களாலும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, வெங்கட் இன்னொரு நாரீமணியின் கைபிடித்து செல்வதை.

  ReplyDelete
 6. நல்ல சுவாரஸ்யமான பதிவு.

  //உண்மையிலேயே என் சிறுவயதில் அன்று காணாமல் போயிருந்தால்?...//

  வெங்கட்ஜீ உங்களைக் கண்டெடுத்து கன்னிகாதானமாக ஏற்றுக்கொண்டிருப்பாரோ ... என்னவோ! ;)

  ReplyDelete
 7. உங்கள் அனுபவங்களைப் படித்ததும் மனம் சற்று கலங்கியது என்னவோ உண்மைதான். எப்போதுமே சற்று கவனமாகவே இருங்கள் ஆதி வெங்கட். மேலும் தாங்கள் எனக்குத் தந்த விருதிற்கு மிக்க நன்றி ஆதி.

  ReplyDelete
 8. சிறுவயது பயம் என்றைக்குமே நினைவில் இருக்கும். அதிலும் காணாமற்போயிருந்தால் என்று நினைக்கும்போதே பகீரென்கிறதே. கூடுமானவரை எல்லா இடங்களிலும் எச்சரிக்கையாய் இருப்பது மிகவும் நல்லது. மலரும் நினைவுகளில் மனம் பதைக்கும் நினைவு.

  ReplyDelete
 9. இதைப் பற்றி ’காங்கேய’ காளை என்ன சொல்கிறார்?

  ReplyDelete
 10. என்னது?இன்னமும் உங்களை தவிக்க விட்டு அப்பறம் சிரிச்சுக்கிட்டே வருவாரா? இருக்கட்டும்.அவர் பதிவுல போய் அவரை உண்டு இல்லைன்னு செஞ்சுடறேன்

  ReplyDelete
 11. காணாமல் போயிருந்தால் என்கிற பதட்டமே இனி வேண்டாம்.
  அதே படபடப்பு குறையாமல் எழுதி இருப்பதைப் பார்த்தால் இன்னுமே அந்த ‘பயம்’ உங்களிடம் கொஞ்சூண்டு ஒட்டியிருக்கிறது என்று புரிந்தது.

  ReplyDelete
 12. நல்ல பதிவு. பயமே காணமல் போகட்டும்.

  ReplyDelete
 13. Super 'missing' story...:) naanum ippadi thaan irundhen marriage varaikkum... inga vandhu palagi poiduchu Adhi...;)

  ReplyDelete
 14. அன்னிக்கு ராமேஸ்வரம் போயிருக்கலாம் என சண்டையின் போது வெங்கட் சொல்வாரா? :))

  (கோச்சுக்காதீங்க சும்மா கலாய்க்க தான் சொன்னேன் )

  ReplyDelete
 15. இப்போது படிக்க ரஸமான அனுபவமாக இருந்தாலும், அப்போது எப்படி பயந்திருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது. அதுசரி... இப்பக்கூட பயமுறுத்துவாரா அவர்? (வீட்டுக்கு வந்து உதை வாங்குவாரா இல்லையாங்கறதச் சொல்லவே இல்லியே? ஹி... ஹி...)

  ReplyDelete
 16. சுவாரசியமாக பகிர்வு.எனக்கு பக்குன்னு ஆகிப் போச்சு. ஆதி பத்திரம், சகோ.வெங்கட் உங்க பொறுப்பு.

  ReplyDelete
 17. யோசிக்க யோசிக்க சில கேள்விகள் வாழ்வின் அர்த்தத்தை எளிதாக புரிய வைத்துவிடும்.. இது அப்படிப்பட்ட ஒரு கேள்விதான்..

  நட்புடன்
  கவிதை காதலன்

  ReplyDelete
 18. மனதை விட்டு அகலாத அனுபவம் அதன் தாக்கங்களை அவ்வப்போது ஏற்படுத்துகிறது. மறக்க முயலுங்கள்.

  ReplyDelete
 19. த்ர்லிங்கான பகிர்வு.இதனை தொடராக அழைத்திருந்தால் இன்னும் பலருடைய அனுபவங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

  ReplyDelete
 20. ம்ம்ம்ம்ம் நானும் இப்படி ஐந்து வயசிலே காணாமல் போயிருக்கேன்; ஆனால் அது நடந்தது வீட்டுக்குள்ளேயே! சிருங்கேரி ஸ்வாமிகள் வந்து ஒரே கூட்டம்; எல்லாரும் அவரைப் பார்க்க ஒரே வீட்டிற்குள் சென்றபோது அம்மா கையை விட்டு நான் எப்படியோ விலக அப்புறமா எங்க உறவினர் யாரோ நான் அழுதுகொண்டு நிற்பதைப்பார்த்துவிட்டு அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த மாதிரி பஸ்ஸில் என்றால் இப்போ சமீபத்தில் மாயவரம் போனப்போ அவர் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம்னு போகக் கூட்டத்தில் நான் பஸ்ஸில் ஏறிவிட, நான் எங்கேனு அவர் தேடி அலைய, ரெண்டு பேருக்கும் அப்போத் தான் செல்போனின் அவசியம் உறைக்க அதுக்கப்புறமா செல்போன் வாங்கிக் கொண்டோம்.

  ReplyDelete
 21. உங்க பதிவுக்கு வரணும், வரணும்னு நினைச்சு இன்னிக்குத் தான் முடிஞ்சது. தாமதமா வந்ததுக்கு மன்னிக்கவும். :))))

  ReplyDelete
 22. கேட்க மறந்துட்டேன், மயில்கள் நிறைந்த அந்த ஊர் விராலிமலையோ???

  ReplyDelete
 23. வாங்க கோவை நேரம்,

  பயம் என்பது என் கூடவே பிறந்த ஒன்று....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 24. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  பயம் என்பது காணாமல் போகட்டும் என்று தான் நினைக்கிறேன்...ஆனாலும்....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 25. வாங்க லஷ்மிம்மா,

  அன்று நடந்த நினைவுகளை இப்படி பதிவா எழுதித் தள்ளத் தான் அன்று போகலையோ....:))

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 26. வாங்க மாதவன் சார்,

  என்ன சார்...கிண்டல் பண்றீங்களா.....:)))

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 27. வாங்க ஈஸ்வரன் சார்,

  //வெங்கட் இன்னொரு நாரீமணியின் கைபிடித்து செல்வதை.//

  போய் விடுவாரா என்ன.....:))

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 28. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  //வெங்கட்ஜீ உங்களைக் கண்டெடுத்து கன்னிகாதானமாக ஏற்றுக்கொண்டிருப்பாரோ ... என்னவோ! ;)//

  அதென்னவோ உண்மை. எங்கிட்ட மாட்டிட்டு முழிக்கணும்னு இருக்கும் போது யாரால் மாற்றியிருக்க முடியும்....:)))

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 29. வாங்க புவனேஸ்வரி மேடம்,

  அந்த சம்பவத்திற்கு பிறகிலிருந்து மிகுந்த கவனமுடன் தான் இருக்கிறேன். மகளிடமும் அதே கவனம் எடுத்துக் கொள்கிறேன். விருதினை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 30. வாங்க கீதமஞ்சரி,

  சிறுவயதில் என்பதால் பயம் இன்னும் நினைவில் இருக்கு.. எச்சரிக்கையுடன் தான் இருக்கிறேன்...இருப்பேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 31. வாங்க சீனு அண்ணா,

  //இதைப் பற்றி ’காங்கேய’ காளை என்ன சொல்கிறார்?//

  ச்சே! தப்பிச்சிருப்பேனே....ஜாலியாக இருந்திருக்கலாம். இப்படி ஆயிடுச்சேன்னு கவலைப்படறார்....:)))

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 32. வாங்க ராஜி,

  ஆமாம். இன்னமும் தான்... தொலைபேசியில் குரலை மாற்றி இந்திக்காரன் போலவே பேசி என்னை குழப்புவது என்று தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது......:))))

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 33. வாங்க ரிஷபன் சார்,

  ஆமாம் சார். சிறு வயதில் ஏற்பட்ட அதே பயம் இன்னும் இருக்கிறது தான். அகற்ற வேண்டும்.

  சாதாரணமாவே எல்லாவற்றுக்கும் பயப்படுகிற கேஸ்....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 34. வாங்க Vijiskitchencreations,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 35. வாங்க புவனா,

  நானும் முயற்சி செய்யணும்....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 36. வாங்க மோகன்குமார் சார்,

  //அன்னிக்கு ராமேஸ்வரம் போயிருக்கலாம் என சண்டையின் போது வெங்கட் சொல்வாரா? :))

  (கோச்சுக்காதீங்க சும்மா கலாய்க்க தான் சொன்னேன் )//
  ஹா...ஹா...ஹா...

  அப்படியெல்லாம் கோபமாக இருக்கும் போது ஒருநாளும் ஒன்றும் சொன்னதில்லை.... அந்த உர்ரென்ற முகம் போதுமே....கோபமாய் இருப்பதை தெரிந்து கொள்ள...

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 37. வாங்க கணேஷ் சார்,

  இன்னமும் நிறைய பயப்படுவேன். ராஜிக்கு சொல்லியிருக்கிறேன் பாருங்க..

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 38. வாங்க ஆசியா உமர்,

  நிச்சயம் பாதுகாப்பை உணருகிறேன்.அவருடைய பொறுப்பு என்றாகி பத்து வருடங்கள் ஆகி விட்டது. அதனால தானே அப்பாவும் அம்மாவும் நிம்மதியா மேலே இருந்து பார்க்கறாங்க...

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 39. வாங்க கவிதை காதலன்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 40. வாங்க பழனி.கந்தசாமி ஐயா,

  மறக்க முயற்சி செய்கிறேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 41. வாங்க ஸாதிகா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 42. வாங்க கீதாம்மா,

  உங்க அனுபவம் வித்தியாசமாக இருக்கு. வீட்டுக்குள்ளேயே காணாமல் போனது....
  பேருந்தில் நானும் இப்படித்தான் கூட வரவங்க இருக்கறாங்களான்னு அடிக்கடி பார்த்துக் கொள்வேன்.

  விராலி மலை திருச்சிக்கு பக்கத்தில் தானே இருக்கும்மா. இது என்ன ஊருனு தெரியலை. ஆராய்ந்து பார்க்கணும்.

  என்னுடைய பதிவுக்கு நீங்க வருகை தந்ததில் சந்தோசம்மா.

  ReplyDelete
 43. உண்மையில் தங்கள் நிலையில் இருந்து
  இப்போது நினைத்துப்பார்த்தாலும்
  உடல் நடுக்கம் எடுக்கத்தான் செய்கிறது
  இதுபோல் நடந்து உண்மையில் தவறியவர்கள் கதை
  நிறையக் கேள்விப்பட்டு அதிர்சியடைந்திருக்கிறேன்
  பாதிப்பை ஏற்படுத்திப் போகும் பதிவு

  ReplyDelete
 44. வாங்க ரமணி சார்,

  நானும் அந்த மாதிரியான நிலையை நினைத்து தான் கடைசி வரிகளை எழுதியிருந்தேன். எல்லாம் கடவுள் அருள்....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 45. நினைத்துப் பார்த்தால் பயமாய்த்தான் இருக்கும்.

  ReplyDelete
 46. வாங்க சென்னை பித்தன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 47. இப்படிலாமா பயப்படுறது? பாரதி கண்ட புதுமைப் பெண் போலதானே இருக்கனும்.

  ReplyDelete
 48. வாங்க ராஜி,

  ஆமாங்க. புதுமைப் பெண் போல் தான் இருக்கணும். முயற்சி செய்கிறேன்.

  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 49. //என் பயம் எனக்கு.// என்ன ஒரு அருமையான கொள்கை.

  சில விசயங்களை காலம் கடந்து நினைத்துப் பார்த்தால் சிரிப்பாகத் தான் இருக்கும். ஏன் என்றால் அந்நேரத்தில் நாமும் ஒரு குழந்தை தானே. உங்கள் பதிவுகளை படிக்கும் பொழுது நான் கடந்து வந்த பல பாதைகள் நியாபகம் வருகிறது. அதற்காகவே தொடர்ந்து padikindren

  ReplyDelete
 50. வாங்க சீனு,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 51. Andha koil nainar koil endru ninaivu

  ReplyDelete
 52. வாங்க லதா அக்கா,

  அப்படியா! எனக்கு நினைவில்லை... தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 53. நீங்க கொடுத்த லிங்க்கை வைத்து வந்துவிட்டேன். தெரியாத ஊரில், தெரியாதவர்களுக்கு மத்தியில்.....நினைத்துப் பார்க்கவே பயமாத்தான் இருக்கு.

  அதனாலதாங்க நம்ம வீக்னஸை இவங்களிடம் சொல்லக்கூடாது. அதை வைத்தே காலம் முழுவதும் ஓட்டிடுவாங்க.

  "யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. அதை பற்றி எனக்குக் கவலையுமில்லை. என் பயம் எனக்கு. கூட்டம் என்றால் கணவரின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்வேன்"_______ இங்கே அந்த நாலு பேருக்கு பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவரவர் உண்டு, அவர் பிரச்சினை உண்டு. யாரையும் பார்த்து யாரும் 'இவங்க ஏன் இப்படி இருக்காங்க, அவங்க ஏன் அத செய்றாங்க" என்பதெல்லாம் இல்லை.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…