Saturday, March 24, 2012

நல்வாழ்விற்கு சில விதிகள்சில சமயங்களில் கடையிலிருந்து பொருட்கள் கட்டி வரும் சின்னச் சின்ன  காகிதங்களில் கூட நல்ல பல கருத்துக்களும், கதைகளும் இருக்கும். அது போலவே என் அப்பாவிடமிருந்த புத்தகங்கள் சிலவற்றைக்  கொண்டு வந்ததில் அதில் ஏதோ ஒரு விழாவில் தந்த சிறிய புத்தகம் ஒன்றும் இருந்தது. பல நல்ல விஷயங்கள் அதில் இருந்தன. அப்பா சில இடங்களில் அடிக்கோடிட்டும் வைத்திருந்தார். அவற்றில் ஒரு சிறிய பகுதி தான் இது. இதை பதிந்தும் வைத்துக் கொள்கிறேன்.

உணவைக் குறை, அதிகமாகக் கடித்துண்
சவாரியைக் குறை, அதிகமாக நட
கவலையைக் குறை, அதிகமாய் வேலை செய்
சோம்பலைக் குறை, அதிகமாய் விளையாடு
பேசுவதைக் குறை, அதிகமாய் சிந்தி
திரிவதைக் குறை, அதிகமாய்த் தூங்கு
வீண்செலவைக் குறை, அதிகமாய் தானம் செய்
திட்டுவதைக் குறை, அதிகமாய்ச் சிரி
சத்தத்தைக் குறை, செயலை அதிகரி
 
ஆரோக்கியமான வாழ்விற்கு ஏற்ற உணவு முறைகள்
 
1)   பசித்துப் புசிப்போம். ருசிக்காக மட்டும் உண்பது வீண் வம்பு. வாய்க்கு பிடித்தது வயிற்றுக்குப் பிடிக்காது என்பது ஆயுர்வேத வாக்கு.
2)   உணவில் கால் பங்கு காய்கறி, கீரைகளையும், பழங்களையும் உபயோகிப்போம். இது உணவுச்சமன் செய்யும்.

3)   அதிகமான காரம், மசாலா எண்ணெய்ப் பொருள்களைத் தவிர்ப்போம்.
4)
   பச்சைக்  காய்கறிகள், முளைவிடச் செய்த பயறுகள், உடலுக்கு மிகுந்த போஷாக்கு அளிப்பதால் அவற்றை திட்டமிட்டு உணவில் சேர்த்துக் கொள்வோம்.
5)   இஞ்சி, சுக்கு, மிளகு, கடுக்காய் இவற்றை திட்டமிட்டு உண்பதால், உடலிற்கு டானிக் போன்ற ஆற்றலும் நோய் எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கின்றன.
6)
   அறுசுவைகளான இனிப்பு, காரம், உப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு இவற்றில் கசப்பும், துவர்ப்பும் ஆரோக்கியத்தை வளர்ப்பன. அளவான இனிப்பும், உப்பும் நன்மையோ தீமையோ செய்யாது. புளிப்பும், காரமும் ஆரோக்கியத்தைக் கெடுப்பன. இந்த ரகசியத்தை உணர்ந்து தேர்ந்த உணவுப் பழக்கத்தை மேற்கொள்வோம்.
7)   மிதமிஞ்சி உண்ணல், உழைக்காது உண்ணல், பெருத்த சிந்தனை செய்தல், இரவில் கண்விழித்தல், காலம் தவறி உண்ணுதல், அளவின்றி காபி, டீ அருந்துதல் இவற்றால் வியாதிகள் ஏற்படுவதால் இவற்றைத்  தவிர்ப்போம்.
8)   மாதம் ஒரு நாள் உபவாசம் இருந்து அல்லது வாரமொரு முறை ஒரே வேளை மட்டும் உண்டு ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்துவோம்.

திட்டமிட்டு உண்போம் திடமாக வாழ்வோம்…

மீண்டும் சந்திப்போம்,


ஆதி வெங்கட்.

37 comments:

 1. இஞ்சி, சுக்கு, மிளகு, கடுக்காய் இவற்றை திட்டமிட்டு உண்பதால், உடலிற்கு டானிக் போன்ற ஆற்றலும் நோய் எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கின்றன.


  Useful Tips.

  ReplyDelete
 2. மாதம் ஒரு நாள் உபவாசம் இருந்து அல்லது வாரமொரு முறை ஒரே வேளை மட்டும் உண்டு ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்துவோம்.

  Good suggestion !

  ReplyDelete
 3. திட்டமிட்டு உண்போம் திடமாக வாழ்வோம்…

  ReplyDelete
 4. \\மிதமிஞ்சி உண்ணல், உழைக்காது உண்ணல், பெருத்த சிந்தனை செய்தல், இரவில் கண்விழித்தல், காலம் தவறி உண்ணுதல், அளவின்றி காபி, டீ அருந்துதல் இவற்றால் வியாதிகள் ஏற்படுவதால் இவற்றைத் தவிர்ப்போம்.\\

  நோயற்ற வாழ்வை வேண்டுபவர் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள். பகிர்வுக்கு நன்றி ஆதி.

  ReplyDelete
 5. அனைவரும் கடைபிடிக்க வேண்டிய விசயங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. அருமையான தகவல்கள்...

  அப்பா அடிக்கோடிட்டு தாங்கள் பதிந்து வைத்தவை என் மனதிற்குள்ளும்...

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. //பேசுவதைக் குறை, அதிகமாய் சிந்தி//

  என்னால முடியாத காரியத்தை செய்யச் சொல்றீங்க சகோ! ரொம்ப கஷ்டம்....

  பயனுள்ள தகவல்கள்... கடைபிடித்தால் தேக ஆரோக்கியம் பாதுகாக்கலாம். ஆனால் கடையைப் பார்த்தால் நாக்கில் ஜலம் ஊற வயிற்றுக்குத் தள்ளவேண்டியதாகிவிடுகிறது.. :-)

  ReplyDelete
 8. வாங்க ரிஷபன் சார்,

  தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 9. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 10. வாங்க கீதமஞ்சரி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 11. வாங்க தேவராஜ் விட்டலன்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 12. வாங்க சே.குமார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 13. உணவைக் குறை, அதிகமாகக் கடித்துண்
  சவாரியைக் குறை, அதிகமாக நட
  கவலையைக் குறை, அதிகமாய் வேலை செய்
  சோம்பலைக் குறை, அதிகமாய் விளையாடு
  பேசுவதைக் குறை, அதிகமாய் சிந்தி
  திரிவதைக் குறை, அதிகமாய்த் தூங்கு
  வீண்செலவைக் குறை, அதிகமாய் தானம் செய்
  திட்டுவதைக் குறை, அதிகமாய்ச் சிரி
  சத்தத்தைக் குறை, செயலை அதிகரி//

  ஆஹா..பொன்னெழுத்தில் பொரிக்கப்படவேண்டிய வரிகளல்லவா இது!

  ReplyDelete
 14. வாங்க ஆர்.வீ.எஸ்,

  ஒருகாலத்துல நான் பேசவே மாட்டேன். கேட்டால் கேட்ட கேள்விக்கு பதில். இப்போ பேசிண்டே இருக்கேன்ன்னு பேர் வாங்கியிருக்கேன்.

  உங்களாலயும் முடியும். முயற்சி செய்யுங்க..... பேசாம இருக்கறதுக்கு...:)))

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 15. வாங்க ஸாதிகா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 16. அனைத்துமே கடைப்பிடிக்க வேண்டிய விஷயம்.

  இதுல எனக்கு எட்டாவது பாயிண்ட்தான் கொஞ்சம் கஷ்டமான விசயம்.பாக்கலாம்.ட்ரை பண்றேன்.

  ReplyDelete
 17. ஆர் வி எஸ் சார் பேசாம இருந்தார்னா அவரோட ரசிகர்கள் ரொம்ப வருத்தப் படுவாங்க ஆதி!

  அவருக்குமே அது முடியாத காரியம்.பாவம்.கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கிடுவார் :)

  ReplyDelete
 18. ஆரோக்யமான உணவு முறையும், உடற்பயிற்சிகளும் சொல்லியுள்ள பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 19. அனைவரும் கடைபிடிக்க வேண்டிய விசயங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. வெ.நாகிட்ட கேளுங்க... என்னால குறைக்க முடியுமான்னு... அவர் ஒரு மணி நேரம் என்கிட்ட தாக்குப்பிடிச்ச ஆள்!! :-)

  ReplyDelete
 21. அப்பாடி.... அத்தனையும் நல்முத்துக்கள்! உங்களப்பாவின் ரசனைக்கும் சிந்தனைக்கும் ஒரு சல்யூட்! பகிர்ந்ததற்கு நன்றி!

  ReplyDelete
 22. மிக நல்ல பகிர்வு.திட்டமிட்டு உண்போம் திடமாக வாழ்வோம்.

  ReplyDelete
 23. வாங்க ராஜி,

  எனக்குமே இப்போ கஷ்டம் தான்....:)) ஆனா ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 24. வாங்க ராஜி,

  //ஆர் வி எஸ் சார் பேசாம இருந்தார்னா அவரோட ரசிகர்கள் ரொம்ப வருத்தப் படுவாங்க ஆதி!

  அவருக்குமே அது முடியாத காரியம்.பாவம்.கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கிடுவார் :)//

  ஆமாம்ப்பா. அது என்னவோ வாஸ்தவம் தான்.....:)

  ReplyDelete
 25. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 26. வாங்க லஷ்மிம்மா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 27. வாங்க ஆர்.வீ.எஸ்,

  //வெ.நாகிட்ட கேளுங்க... என்னால குறைக்க முடியுமான்னு... அவர் ஒரு மணி நேரம் என்கிட்ட தாக்குப்பிடிச்ச ஆள்!! :-)//

  சொன்னாரே....
  அன்று நீங்கள்லாம் பேசினீங்களேன்னு கேட்டா...”நான் எங்க பேசினேன்” என்கிறார்.:)))

  ReplyDelete
 28. வாங்க கணேஷ் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களும் நன்றி.

  ReplyDelete
 29. வாங்க ஆசியா உமர்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களும் நன்றிங்க.

  ReplyDelete
 30. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 31. அப்பாவின் புத்தகத்திலிருந்து எமக்கு அரிய தகவல்கள் கிடைத்தன.

  ReplyDelete
 32. வாங்க ரத்னவேல் ஐயா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களும் நன்றி.

  ReplyDelete
 33. வாங்க மாதேவி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களும் நன்றிங்க.

  ReplyDelete
 34. வாங்க மோகன்குமார் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களும் நன்றி.

  ReplyDelete
 35. வாங்க சீனு,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…