Thursday, March 22, 2012

தண்ணீரில்லா வாழ்க்கை....


காடுகளையும், மரங்களையும் அழித்துக் கொண்டே வருவதால் மழை பொய்த்துக் கொண்டே வருகிறது. இல்லையென்றால் ஒரேடியாக மழை பெய்து வெள்ளக்காடாக மாறி விடுகிறது. மின்சாரத்தையும், தண்ணீரையும் எவ்வளவு சிக்கனமாக உபயோக்கிறோமோ அவ்வளவு நமக்கு நல்லது. நமக்கு பின்வரும் தலைமுறைக்கும் நாம் வைத்து விட்டு செல்லலாம். தண்ணீரின் தேவை எவ்வளவு அவசியம் என்று உங்களுக்கு தெரியாததல்ல…. தண்ணீர் விநியோகம் இல்லாத நாளில் தான் அதன் அருமையை நாம் சிறிது உணர்வோம். இன்று உலக நீர்நாள். இன்று முதலாவது தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கனத்தை கடைபிடிப்போம்.

தில்லியை பொறுத்தவரை மின்சாரம் எப்படி, எப்ப வேண்டுமானாலும் போகுமோ, அதே போல் தான் தண்ணீரும். கோடையில் அவ்வப்போது தண்ணீர் விநியோகம் இருக்காது. பராமரிப்புப் பணி, குழாயில் பிரச்சினை என்று ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணம். சில நேரங்களில் சாக்கடை நீரும் அங்கங்கே கலந்து விடும். அதனால் கவனமாக இருக்க வேண்டும். இதனால் நோய் நொடிகள் பரவுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன்பு எங்கள் கட்டிடத்தில் கீழேயிருந்து தண்ணீர் வரும் ஏதோ குழாயில் பிரச்சினை. அதனால் எல்லா வீட்டின் குழாயையும் பூமிக்குள் தோண்டி மாற்ற வேண்டும். கட்டிடத்தில் உள்ள எல்லோரும் கூடி பேசி முடிவெடுத்து வேலைகள் ஆரம்பமாயின. அன்றிலிருந்து நான்கு-ஐந்து நாட்களுக்கு தண்ணீர் வரவில்லை. கங்கை நீர் தான் எங்களுக்கு எல்லாமும். முதல் இரண்டு நாட்களுக்கு பக்கத்து வீடு காலியாக இருந்ததால், அவர்கள் வீட்டு மேல்நிலைத் தொட்டியில் இருந்த தண்ணீரில் சிக்கனமாக குளித்து, பாத்திரங்கள் கழுவி என்று வேலைகள் ஆயிற்று.
கிடைக்கும் இடத்திலெல்லாம் FLATS வந்து விடுகிறது. அடி பம்பிற்கோ, கிணறுக்கோ வழியில்லை. தண்ணீர் லாரி வந்தாலும் தண்ணீரை தூக்கிக் கொண்டு மூன்று மாடி ஏறுவதெல்லாமும் கடினம் தான். குடம் கூட கிடையாது. பக்கெட் தான்.  கோவையில் இருந்த வரை கீழேயிருந்து பெரிய குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு இரண்டு மாடி வரை ஏறி பழக்கமுண்டு. 40 குடம் தண்ணீர் கூட சுமந்து விடுவேன்.

அடுத்த நாளிலிருந்து காலை உணவு ஜாம் தடவிய ப்ரெட்டும், பாலும் தான். மதியம் கிர்ணிபழ ஜூஸ், இரவு DHABAA ஜிந்தாபாத் தான். அப்பொழுது நானும் அவரும் தான். அதனால் சமாளிக்க முடிந்தது. ஊரிலிருந்தும் யாரும் அந்த சமயம் வரவில்லை. வெய்யிலும் கொன்று எடுக்கிறதே. குழந்தைகள் இருக்கும் இடங்களில் தண்ணீரின் தேவை கூடுதலாக இருக்கும்.

மூன்று தெரு தாண்டி இருந்த நண்பர் காலையில் அலுவலகம் செல்லும் போது 10 லிட்டர் அளவு கொள்ளும் Jug-ல் குடி தண்ணீர் கொடுத்து விடுவார். எங்கள் கட்டிடத்தில் கீழ் வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் ஒன்று, இரண்டு நாட்கள் பத்து நிமிஷம் போல தண்ணீர் வந்திருக்கிறது. மூன்றாம் மாடியில் இருந்த எங்களுக்கு ஒரு நாள் கூட வரவில்லை. கீழ்வீட்டு மாமி வீட்டில் ஒருநாள் குளித்தோம்.

அடுத்த இரண்டு, மூன்று நாட்கள். ஆடு மாடெல்லாம் குளிக்குதா…. கணக்காக ஆகிவிட்டது. ஒருநாள் மூன்றாம் தெரு நண்பர் வீட்டுக்கு அவசியமான துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு போய் குளித்து துவைத்து வந்தோம். இப்படியாக அந்த நாட்களை வெற்றிகரமாக கடந்து விட்டோம். அப்புறம் குழாய்கள் சரியாகி விட்டது.

இப்படி அவ்வப்போது தண்ணீர் வராமல், இல்லையென்றால் சாக்கடைத் தண்ணீர் மேல்நிலைத்தொடியில் ஏறி பின்பு காலி செய்து விட்டு காய்ந்து கிடக்க வேண்டும். இதனால் எப்போதும் இரண்டு வாளித் தண்ணீராவது பிடித்து வைத்திருப்பேன். ஊருக்கு சென்றாலும் கூட பிடித்து வைத்து விட்டு செல்வேன்.

தண்ணீரை சிக்கனமாக செலவழிப்போம். திண்டாட்டமில்லாமல் இருப்போம்.

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

டிஸ்கி:-
தண்ணீர் கலங்கலாகவும், பழையதாகவும் இருந்து அப்போது உடனடியாக தேவைப்பட்டால் சிறிது படிகாரத்தை தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் வைத்து விட்டு மேலாக தெளிந்த தண்ணீரை தாராளமாக உபயோகப்படுத்தலாம்.

19 comments:

 1. நல்ல பகிர்வு. பின்குறிப்பு ரொம்பவும் உபயோகமானது. இன்றைய வாழ்வில் மிகத் தேவையான ஒன்று!!

  ReplyDelete
 2. ஆதி, நல்ல பகிர்வு.
  தண்ணீர் சிக்கனம் ,பழைய தண்ணீரை பயன்படுத்தும் முறை எல்லாம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 3. எனக்கும் கூட இதுபோல அனுபவங்கள் நிறையா உண்டு சமயத்ல சாக்கடை தண்ணியும் குடி தண்ணியும் கலந்து தண்ணிலாம் காபி கலர்லதான் வரும் படிகாரம்தான் துணை பெரிய பெரிய நகரங்களில் தான் இந்தப்பிரச்சினைகளோ?

  ReplyDelete
 4. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம். வட சென்னையில் இவ்வருடம் அதற்குள் தண்ணீர் பிரச்சனையை ஆரம்பமாகி விட்டதாக இன்று செய்தி தாளில் படிதேன் இன்னும் நான்கைந்து மாதம் எப்படி ஓட்டுவார்களோ?

  ReplyDelete
 5. ஹா... தண்ணீர்ப் பஞ்சத்தால் பட்ட கஷ்டத்தை சொல்லி விட்டு அழகாய் டிப்ஸ் வேற கொடுத்திருக்கீங்க. நீர்நாள் பதிவு நன்று.

  ReplyDelete
 6. மிகவும் நல்ல பயனுள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. நல்ல குறிப்புகள் மனதில் இறுத்திக்கொள்ள வேண்டிய பகிர்வு!

  ReplyDelete
 8. டிஸ்கி நல்ல பயனுள்ள குறிப்பு.

  ReplyDelete
 9. Let's use water only the level/degree/extent of requirement & SAVE the rest.

  ReplyDelete
 10. நீரின்றி அமையாது உலகு என்கிற
  வள்ளுவனின் வாக்கு எத்தனை உண்மையானது
  சிறப்புப் பதிவு மிக மிக அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. விழிப்புணர்வூட்டும் பதிவு.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 12. தண்ணீரை சிக்கனமாக செலவழிப்போம். திண்டாட்டமில்லாமல் இருப்போம்.

  ReplyDelete
 13. தண்ணீரை வீணாக்கினால் அப்புறம் கண்ணீர்தான் என்பதை அழகாய் சொல்லிவிட்டீர்கள்.

  ReplyDelete
 14. அவசியமான விழிப்புணர்வு பதிவு.ஆடு மாடு எல்லாம் குளிக்குதான்னு நடுவுல ஒரு வார்த்தை சொன்னீங்க பாத்தீங்களா?அங்கதான் நிக்கறீங்க.படிக்கும் போது சிரிக்காம இருக்க முடியல :)

  பின் குறிப்பு பயனுள்ளதாக இருக்கிறது.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 15. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கனம்.

  ReplyDelete
 16. பின்னூட்டமளித்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 17. // தில்லியை பொறுத்தவரை மின்சாரம் எப்படி, எப்ப வேண்டுமானாலும் போகுமோ, அதே போல் தான் தண்ணீரும். //
  தலை நகரிலும் அதே நிலை தானா ?

  தண்ணீர் மிக மிக அவசியமா ஒன்று. அவசியமான பதிவு

  ReplyDelete
 18. வாங்க சீனு,

  ஆமாங்க. தலைநகரிலும் பல வருடங்களாக இப்படித்தான்....:(

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…