Monday, March 19, 2012

மீண்டும் பள்ளிக்கு போகலாம் -தொடர்பதிவுஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமாம். என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும் நான் பத்தாவது முடித்து விட்டு நேரிடையாக பாலிடெக்னிக்கில் DIPLOMA IN MECHANICAL ENGINEERING படித்தவள் என்று. அதனால் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு கிடையாது. அதற்குப் பதிலாக என் L.K.G மற்றும் U.K.G நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன். என்ன கணக்கு சரியாப் போச்சா?


L.K.G யில்

1986ல் அப்பாவும், அம்மாவும் என்னை கோவையில் அவினாசி சாலையில் உள்ள Y.W.C.A மெட்ரிகுலேஷன் பள்ளியில் L.K.G சேர்த்து விட்டனர். என் அப்பாவிடம் தினமும் உடனே என்னை அழைத்துச் செல்லும் படி அழுவேனாம். இப்படியே பல மாதங்கள் வரையில் காலையில் விடும் போது தொடர்ந்ததாம். என் ஆசிரியர் ஒரு வயதான ANGLO INDIAN. பாப் செய்யப்பட்ட தலை பூரா பஞ்சு மிட்டாய் தான். இவர்களை நாங்கள் ”பாட்டி மிஸ்” என்று அழைப்போம். அழும் குழந்தைகளை ஒரே சமயத்தில் இடுப்பிலும், தோளிலும், தலையிலும் வைத்துக் கொண்டு பாட்டுப் பாடி நடனமாடுவார். சிறிது நேரத்தில் குழந்தைகளும் விளையாட ஆரம்பித்து விடுவர். நான் பெரியவளான பின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் என் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டதும், நினைவுபடுத்திக் கொண்டு என்னைக் கொஞ்சினார். அருமையான ஆசிரியை.

U.K.Gயில்


இந்த வகுப்பில் நான் மிகவும் மிரண்டு போயிருப்பேன். காரணம் கண்டிப்பான ஆசிரியை FRACSY மிஸ். இவரும் ஒரு ANGLO INDIAN. எல்லோருக்குமே இவரைக் கண்டாலே பயம் தான். அங்கும் இனிமையாகவே நாட்கள் கழிந்தன. மதியம் எல்லா குழந்தைகளும் பாய் போட்டு தூங்க வைக்கப்படுவார்கள். எழுந்ததும் இரண்டு பிஸ்கெட்டுகளுடன் ஒரு தம்ளர் பால். அப்புறம் பாட்டு, விளையாட்டு…. ச்சே குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு ஜாலி… இங்கு என் தோழிகள் அம்பிகா, ஷ்யாமளா, அங்குலட்சுமி ஆகியோர்.


ஒன்றாம் வகுப்பில்


படிப்பு, பாட்டு, கை வேலை, ஓவியம் என பள்ளி நாட்கள் உற்சாகமாக கழிந்தன. அப்போது என் தலைமுடி பெரியோர்களுக்கு இருக்கும் அளவு இருந்ததாக என் ஆசிரியர் சொல்லிக் கொண்டே இருப்பார். (அதன் பிறகு வந்ததே… வினை) விளையாட்டில் அவ்வளவாக ஆர்வமில்லாத என்னை ஆசிரியர் கட்டாயப்படுத்தி ஊசியில் நூல் கோர்க்கும் போட்டியில் சேர்த்து விட்டார். ஊசியில் நூலை கோர்த்த பின் ஓடிச் சென்று கயிறைத் தாண்டி குதிக்க வேண்டும். நானே எதிர்பார்க்கவில்லை முதலிடம் வாங்குவேன் என்று... பரிசாக சிவப்பு நிறத்தில் அழகான ஒரு LUNCH BOX கிடைத்தது. மூடியின் மீது ஒரு ஸ்கேல் இருக்கும். அதை இழுத்தால் உள்ளே ஒரு ஸ்பூன் இருக்கும். நான் அதை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

இரண்டாம் வகுப்பில்

எனக்கும் தம்பிக்கும் ஒரே சமயத்தில் அம்மை போட்டு ஒரு மாதம் வரை பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தோம். இதனால் படிக்க வேண்டிய பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் போனதால், அந்த முறை வந்த காலாண்டு தேர்வில் நான் கணக்கு பரீட்சையில் தோற்றுப் போக, என் ஆசிரியரோ என் நிலையை தெரிந்து (புரிந்து) கொள்ளாமல் என் சீருடையின் பின்பக்கம் என் தேர்வுத்தாளை பின் செய்து எல்லா வகுப்புகளுக்கும் சென்று காட்டி வரச் சொன்னார். நானும் அப்படியே செய்தேன்.  அடுத்து வந்த அரையாண்டுத் தேர்வில் நான் தான் வகுப்பிலேயே முதலிடம்.

மூன்றாம் வகுப்பில்

என் ஆசிரியர் பெயர் JAYANTHI ROSE அமைதியானவர். வகுப்புகளும் நன்றாகவே சென்றது. இந்த வகுப்பில் தான் என் தலை முழுவதும் புண்கள் வந்து நீளமான தலைமுடியை மொத்தமாக எடுத்து விட்டு தினமும் மருந்து தடவி ஸ்கார்ஃப் கட்டிக் கொண்டு பள்ளி செல்லும் நிலை வந்தது.

நான்காம் வகுப்பில்

நான் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் அப்போதிருந்த  மாதக் கட்டணமான 40 ரூபாயை 100 ரூபாயாக ஏற்றி விட இரண்டு குழந்தைகளையும் படிக்க வைப்பது சிரமமென்று யோசித்த அப்பா. அருகிலிருந்த மற்றொரு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் எங்களை சேர்த்து விட்டார். மூன்றாம் வகுப்பில் COMPUTER SCIENCE வரை படித்த நான் இங்கு நான்காவதில் தான் ஆங்கிலமே ஆரம்பித்திருந்தபடியால் திரும்பவும் அடித்தளத்திலிருந்து படித்துக் கொண்டு வந்தேன். இங்கு என் ஆசிரியை மணிமேகலை. மிகவும் பிடித்தவர். இவரின் வகுப்புகள் பலநாட்கள் மரத்தடியில் நடக்கும். இவரின் சமூக சேவையைப் பாராட்டிய ஒரு பத்திரிக்கையில் இவருக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதைப் பற்றியும் எழுதியிருந்ததை படித்து மிகவும் வருந்தினேன். பின்னர் கல்லூரியில் படிக்கும் போது ஒருமுறை இவரை பேருந்தில் பார்த்து பேசியிருக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பில்

இவ்வகுப்பில் நான் தான் கிளாஸ் லீடர். மற்றும் SCHOOL PUPIL LEADER. மொத்த பள்ளியையும் பிரார்த்தனை கூடத்திற்கு அழைத்து வரவும் அவர்களை ஒழுங்காக நிற்க வைப்பது, ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மணி அடிப்பதும் என ”ஆல் இன் ஆல்” ஆக இருந்தேன். இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்போடு சரி என்பதால் வேறு பள்ளிக்கு மாற வேண்டும். நிர்மலா தேவி, கனிதா ஆகியோர் தோழிகள்.

ஆறாம் வகுப்பில்

அதே சாலையில் உள்ள R.K.SHREE RANGAMMAL மேல்நிலைப்பள்ளிக்கு மாறினேன். அப்போது கோவை மாவட்டத்திலேயே இரண்டாம் இடத்தை பெற்ற சிறந்த பள்ளியாக இருந்தது. இங்கு தேர்வெழுதி தான் இடம் கிடைத்தது. அதுவும் 400 பேர் எழுதியதில் நான் முதலிடம். இந்த நேரத்தில்தான் எனக்கு பிடிக்காத ஹிந்தியைப்  படிக்க பிரச்சார் சபாவில் சேர்த்து விட்டார்கள் என் பெற்றோர். (அந்த சோகக் கதையைப்  பற்றி பிறிதொரு பகிர்வில் சொல்கிறேன்) ஆறுமாதத்துக்கு ஒரு பரீட்சை என ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் 6 பரீட்சை எழுதித் தேறினேன்.


ஏழாம் வகுப்பில்

மாணவ மணிகளின் சிறுசேமிப்பான சஞ்சய்காவில் மூன்று வருடம் பொறுப்பான பதவியில் இருந்தேன். மதிய உணவை முடித்துக் கொண்டு கவுண்ட்டரில் அமர வேண்டும். எப்போதுமே படிப்பு படிப்பு என்று இருந்ததாலோ என்னவோ என்னுடைய நட்பு வட்டம் மிகவும் சிறியது. முந்திரிக்கொட்டை, தயிர்சாதம், படிப்ஸ் என்று பல பெயர்களை வாங்கியிருக்கிறேன்.

எட்டாம் வகுப்பில்

வகுப்புகள் நன்றாகவே சென்றது. ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை என்னை வழிநடத்தி என்னை செதுக்கிய என் ஆசிரியர்களான  தனலஷ்மி டீச்சர், நடராஜன் சார், சரஸ்வதி டீச்சர், சாந்த சுந்தரி டீச்சர், திருஞானசம்பந்தம் சார், புலவர் இலட்சுமணன் ஐயா, விஜயலஷ்மி டீச்சர், ஞானாம்பாள் டீச்சர் ஆகியோர். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பாடம் எடுத்திருக்கிறார்கள். கணக்கு ஆசிரியை செல்வி மேடமை நினைத்தால் இப்போதும் அடிவயிற்றை கலக்கி விடும். ஸ்கேலை குறுகலான பக்கமாக பிடித்துக் கொண்டு கையை முட்டி பக்கம் காட்டச் சொல்லி விளாசி விடுவார். போதாக்குறைக்கு பெஞ்ச்சின் மீதும் ஏற வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பில்

இந்த ஆண்டு பள்ளி நேரத்தை ஷிப்ட் முறையாக்கி விட்டார்கள். அதனால் காலை 7.40 முதல் மதியம் 12.30 மணி வரை தான். அதே போல் ஸ்கர்ட்டும் ஷர்ட்டும் போட்டுக் கொண்டிருந்த சீருடையையும் சுடிதாராக மாற்றி இருந்தனர். மதியமே வீட்டுக்கு வந்ததும் ஒரு புது அனுபவமாக அப்போது இருந்தது. ஆனால் எப்போதுமே கணக்கு பரீட்சையென்றாலே எனக்கு தவறாமல் ஜுரம் வந்து விடும். புரிந்து விட்டால் ஜாலியாக நானே விதவிதமாக போட்டு பார்ப்பேன். புரியாமல் போனால் அதோ கதி தான்…

பத்தாம் வகுப்பில்

வகுப்பு ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே விழுந்து விழுந்து படிக்க ஆரம்பித்தேன். என் வகுப்பில் ஜோதிமணி என்ற பெண்ணுக்கும் எனக்கும் போட்டியோ போட்டி… ஆரோக்கியமான போட்டி தான். கடைசி மூன்று மாதம் தான் கணக்கிற்கும், அறிவியலுக்கும் டியூஷன். என் டியூசன் ஆசிரியை தான் நான் டிப்ளமோ தேர்ந்தெடுக்க காரணமானவர். கணக்குகளை அருமையாக சொல்லித் தந்து புரிய வைத்தார். ஏதோ என்னால் முடிந்த அளவு மார்க் வாங்கினேன். 500க்கு 437. கணக்கில் 99. அந்த ஒரு மார்க்கும் விடையை எடுத்து எழுதாததால் குறைந்தது. இறுதியிலும் என்னை விட ஒரு மார்க் கூடுதலாக எடுத்து ஜோதிமணி வென்று விட்டாள். இப்படியாக 1997ல் என்னுடைய பத்தாம் வகுப்பை முடித்தேன்.  

இருங்க… இருங்க நம்ம வாழ்க்கை வரலாற்றில் கொஞ்சூண்டு தான் பாக்கி இருக்கு. அதனால அதையும் கேட்டுட்டுப்  போங்க.

பத்தாம் வகுப்பிற்கு பின் D.M.E.  AUTOCAD, சென்னையில் CNC MACHINE TRAINING. பின்பு இரண்டு வருடம் சில இடங்களில் வேலை. இடையில் இந்திய விமானப் படையில் பொறியியல் பிரிவில் சேர்வதற்குக் கூட சில நாட்கள் படித்துக் கொண்டிருந்தேன். டிப்ளமோ தேர்ந்தெடுக்க காரணமே முடித்து விட்டு நேரிடையாக இரண்டாம் ஆண்டு B.E பண்ணலாம் என்று தான். ஆனால் என் அப்பா விடவில்லை. படித்தது போதும் என்று சொல்லிவிட்டார்.  அடுத்து என்ன… திருமணம் செய்து தில்லிக்கு பேக் செய்து அனுப்பி விட்டனர்.

இந்த நினைவலைகளை நானும் நினைவு கூற நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.  

59 comments:

 1. பள்ளி அனுபவம் அருமை ஆதி.

  நல்ல பட்டப் பெயர்கள் ரசித்தேன்.

  ReplyDelete
 2. அடேங்கப்பா வகுப்பு வாரியாக பிரித்து மேய்ந்து விட்டீர்கள். படிப்பில் நீங்க ரொம்ப ஸ்ட்ராங் தான் போலருக்கு. டெண்தில் மார்க் எடுத்துட்டு ஒரு மார்க் போனதுக்கும் வருதப்படுறீங்கலே !

  ReplyDelete
 3. நல்ல நினைவாற்றல் உங்களுக்கு.ஆசிரியர்கள் பெயர் கூட நினைவில் வைத்து எழுதியது பாராட்டத்த்க்கது.நல்ல பகிர்வு.

  ReplyDelete
 4. //இந்த நேரத்தில்தான் எனக்கு பிடிக்காத ஹிந்தியைப் படிக்க பிரச்சார் சபாவில் சேர்த்து விட்டார்கள் என் பெற்றோர். //
  பெற்றோர் எது செஞ்சாலும் அது பிள்ளைகளின் எதிர்கால நன்மையை குறித்தே இருக்கும்.

  //திருமணம் செய்து தில்லிக்கு பேக் செய்து அனுப்பி விட்டனர்.//
  அட... இப்ப புரிஞ்சுதா..?

  பெற்றோர் சொல்லும் ஒவ்வொரு சொல்லிற்கும் சரியான அர்த்தம் இருக்கும்.. காலம் புரிய வைக்கும்.

  நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. சர்வர் பிரச்சனையால் இப்போது தான் திரட்டிகளில் இணைத்து இரண்டு படங்களையும் (என் யூ.கே.ஜி படம், மற்றும் பரிசு)இணைத்துள்ளேன். மீண்டும் ஒரு முறை என் பதிவுக்கு வரலாமே.......

  ReplyDelete
 6. அருமையாய் மலர்ந்து மணம் வீசிய மலரும் நினைவுகள் பகிர்விற்கு இனிய பாராட்டுகள்..

  ReplyDelete
 7. ஞாபக சக்தி பிரமிப்பூட்டுகிறது
  படங்களுடன் விளக்கிச் சென்ற விதம் அருமை
  மனம் கவர்ந்த பதிவு

  ReplyDelete
 8. உஙக 2ம் வகுப்பு டீச்சரை எனக்குப் பிடிக்கலை. என்ன கொடுமையான தண்டணை கொடுத்திருக்காங்க. அட... தயிர்சாதம் என்ற பட்டப் பெயரும் சின்ஸியராகப் படித்தலும் எனக்கும் பொதுவான விஷயம். அறிந்ததில் மகிழ்வு. அனுபவப் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 9. உங்க யு.கே.ஜி போட்டோவும் பரிசும் சூப்பர்.ஆமா நீங்க எங்கே இருக்கீங்க.

  ReplyDelete
 10. வாங்க கோமதிம்மா,

  பட்டப்பெயர்களை ரசித்ததற்கு நன்றிம்மா.

  ReplyDelete
 11. வாங்க மோகன்குமார் சார்,

  அந்த ஒரு மார்க்கில் தான் பள்ளியில் என் தோழி மூன்றாம் இடமும், நான் நான்காம் இடமும் பெற்றேன்.

  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 12. வாங்க ஆசியா உமர்,

  இதுவே அவர்கள் எந்த வருடம் என்ன வகுப்பு எடுத்தார்கள் என்பது தான் நினைவுக்கு வரவில்லை.இல்லையென்றால் அதையும் எழுதியிருக்கலாம்.

  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 13. வாங்க மாதவன்,

  நீங்க சொல்வது சரிதான். அவர்கள் என் நன்மைக்கே செய்தார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் எனக்கு தான் பிடிக்கவேயில்லையே.....விருப்பம் இல்லாமலேயே ஆறு தேர்வுகள் எழுதினேன்.

  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 14. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 15. வாங்க ரமணி சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 16. வாங்க கணேஷ் சார்,

  அந்த டீச்சருக்கு அன்று என்ன கோபமோ.....:)

  உங்களுக்கும் தயிர்சாதம், படிப்ஸ் போன்ற நாமகரணங்கள் கிடைத்ததா!

  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 17. வாங்க ஆசியா உமர்,

  மீண்டும் வருகை தந்து ரசித்ததற்கு நன்றிங்க. போட்டோவில் அம்புகுறியிட்டு காட்டியிருக்குங்க. பெரிது செய்தும் பார்க்க்லாம்.கீழ் வரிசையில் இடமிருந்து முதல்.

  ReplyDelete
 18. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 19. வாங்க மாலதி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 20. //மதியம் எல்லா குழந்தைகளும் பாய் போட்டு தூங்க வைக்கப்படுவார்கள். எழுந்ததும் இரண்டு பிஸ்கெட்டுகளுடன் ஒரு தம்ளர் பால். அப்புறம் பாட்டு, விளையாட்டு…. ச்சே குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு ஜாலி… //

  அந்தப் பருவம் ஜாலியோ ஜாலி தான். சந்தேகமே இல்லை.

  தொடரும்....

  ReplyDelete
 21. //நானே எதிர்பார்க்கவில்லை முதலிடம் வாங்குவேன் என்று... பரிசாக சிவப்பு நிறத்தில் அழகான ஒரு LUNCH BOX கிடைத்தது. மூடியின் மீது ஒரு ஸ்கேல் இருக்கும். அதை இழுத்தால் உள்ளே ஒரு ஸ்பூன் இருக்கும். நான் அதை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.//

  இன்னுமா! நம்பவே முடியவில்லை.

  [”நம்ப முடியவில்லை” என்பதை

  அவளா சொன்னால் ..... இருக்காது ....
  அப்படி எதுவும் நடக்காது ... நம்ப முடியவில்லை


  என்ற பாட்டுப்பணியில்
  பாடிப்படிக்கவும்]

  தொடரும்....

  ReplyDelete
 22. //நான் கணக்கு பரீட்சையில் தோற்றுப் போக, என் ஆசிரியரோ என் நிலையை தெரிந்து (புரிந்து) கொள்ளாமல் என் சீருடையின் பின்பக்கம் என் தேர்வுத்தாளை பின் செய்து எல்லா வகுப்புகளுக்கும் சென்று காட்டி வரச் சொன்னார். நானும் அப்படியே செய்தேன். //

  அடப்பாவமே !

  தொடரும்.....

  ReplyDelete
 23. //”ஆல் இன் ஆல்” ஆக இருந்தேன்.//

  இப்போது வீட்டில் மட்டும் என்ன? வெங்கட் ஜீயைக் கேட்டால் தான் தெரியவரும்.  தொடரும்.......

  ReplyDelete
 24. //இங்கு தேர்வெழுதி தான் இடம் கிடைத்தது. அதுவும் 400 பேர் எழுதியதில் நான் முதலிடம்.//

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  //இந்த நேரத்தில்தான் எனக்கு பிடிக்காத ஹிந்தியைப் படிக்க பிரச்சார் சபாவில் சேர்த்து விட்டார்கள் என் பெற்றோர்.//

  ஒழுங்காக ஹிந்தியை ஆர்வமாகக் கற்றிருந்தால் இன்று டெல்லியையே விலைக்கு வாங்கியிருக்கலாமே! மேடம்.

  எனக்கு இதுபோல ஹிந்தி படிக்க சிறுவயதில் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் உண்டு.


  தொடரும்.......

  ReplyDelete
 25. //முந்திரிக்கொட்டை, தயிர்சாதம், படிப்ஸ் என்று பல பெயர்களை வாங்கியிருக்கிறேன்.//

  அருமையான அழகான பெயர்களே!

  அடிக்கும் வெயிலுக்கு தயிர்சாதம் மட்டும் இல்லாவிட்டால் போச்சே!

  தொடரும்.....

  ReplyDelete
 26. // கணக்கு ஆசிரியை செல்வி மேடமை நினைத்தால் இப்போதும் அடிவயிற்றை கலக்கி விடும். ஸ்கேலை குறுகலான பக்கமாக பிடித்துக் கொண்டு கையை முட்டி பக்கம் காட்டச் சொல்லி விளாசி விடுவார். போதாக்குறைக்கு பெஞ்ச்சின் மீதும் ஏற வேண்டும்.//

  நீங்கள் படித்த காலத்திலும் கூட, அதுவும் பெண்குழந்தகளுக்கு, அதுவும் பெண் ஆசிரியைகளால், தண்டனை உண்டா?
  வருத்தமான விஷயம் தான். ;(

  தொடரும்......

  ReplyDelete
 27. //நான் டிப்ளமோ தேர்ந்தெடுக்க காரணமானவர். கணக்குகளை அருமையாக சொல்லித் தந்து புரிய வைத்தார். ஏதோ என்னால் முடிந்த அளவு மார்க் வாங்கினேன். 500க்கு 437. கணக்கில் 99. அந்த ஒரு மார்க்கும் விடையை எடுத்து எழுதாததால் குறைந்தது.//

  இது மிகவும் குறையாக்வே தான் இருக்கும்.
  என் பெரிய பிள்ளை 99%
  இரண்டாவது பிள்ளை 98%
  கடைக்குட்டி மட்டுமே 100/100 செண்டம்.

  இறுதியிலும் என்னை விட ஒரு மார்க் கூடுதலாக எடுத்து ஜோதிமணி வென்று விட்டாள். //

  ஜோதிமணிக்கும் வாழ்த்துகள்.


  தொடரும்......

  ReplyDelete
 28. ஏதேதோ நடுவில் கணக்கில் வீக் என்று சொன்ன நீங்கள் அப்படியும் இப்படியும் டியூஷன் படித்தாவது நன்கு கணக்குப்போட்டு அழகாக இந்த்ப் பதிவை கணக்காக எழுதி 10th வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளதை இதுவரை பவர்-கட்டிலும் கூட இன்வெட்டர் உதவியால் படித்து முடித்து விட்டேன். அருமையாகவே உள்ளது!

  தொடரும்......

  ReplyDelete
 29. //டிப்ளமோ தேர்ந்தெடுக்க காரணமே முடித்து விட்டு நேரிடையாக இரண்டாம் ஆண்டு B.E பண்ணலாம் என்று தான். ஆனால் என் அப்பா விடவில்லை. படித்தது போதும் என்று சொல்லிவிட்டார். அடுத்து என்ன… திருமணம் செய்து தில்லிக்கு பேக் செய்து அனுப்பி விட்டனர்.//

  இப்போ என்ன குறைந்து போய் விட்டீர்கள்?

  அன்பான் கணவர். அவர் அன்பின் அடையாளமாக நம் ரோஷ்ணி. இதைவிட B.E., பட்டமா பெரியது?

  இல்லத்தரசி என்ற பட்டத்தையே உரிய வயதில் உங்களுக்கு வாங்கித்தந்துள்ள உங்கள் தந்தையை நினைத்து மானஸீகமாக நன்றி கூறுங்கள்.

  With Very Best Wishes .......... vgk

  ReplyDelete
 30. சுவாரஸ்யமான அனுபவங்கள் ஆதி! அதையும் விட உங்கள் ஞாபகசக்தியைப் பாராட்டியே ஆக வேன்டும்!!

  ReplyDelete
 31. அருமையான நினைவு கூரல்

  ReplyDelete
 32. வாவ்! ஆதி! மலரும் நினைவுகளை அருமையா தந்திருக்கீங்க.சூப்பர் :)

  அந்த யுகேஜி ஃபோட்டோல கீழ் வரிசைல இடமிருந்து வலமா முதல்ல உக்காந்திருக்கறதுதான நீங்க?

  கணக்குல 99 ஆ? வாழ்த்துக்கள். ஹிந்தி படிக்கறது என்ன, இப்ப பேசவே நல்லா வந்தாச்சுதான? அப்பறம் என்ன?டெல்லி போன புதுசுல மௌன ராகம்
  ரேவதி மாதிரி யாருக்காச்சும் தமிழ் சொல்லித் தந்தீங்களா? :)

  ReplyDelete
 33. ஆஹா.... அருமையான நினைவுத் தொகுப்பு. பிரமாதமா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள் ஆதி.

  ReplyDelete
 34. ஞாபக சக்தி பிரமிப்பூட்டுகிறது!

  ReplyDelete
 35. //டிப்ளமோ தேர்ந்தெடுக்க காரணமே முடித்து விட்டு நேரிடையாக இரண்டாம் ஆண்டு B.E பண்ணலாம் என்று தான்.//

  B.E. படித்திருந்தால் பத்தோடு பதினொண்ணா ஒரு பொறியாளர்தான் ஆகியிருப்பீர்கள். எங்களுக்கு ஒரு நல்ல பதிவர் கிடைத்திருப்பாரா?

  (இப்போதும் நீங்கள் பொறியாளர்தான். Bacheler of Ezhuthing. நல்ல எழுத்துக்களால் எல்லோரையும் பொறி வைத்து பிடித்து விட்டீர்கள்.)

  ReplyDelete
 36. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  பதினோரு பின்னூட்டங்களை தந்து என்னை மகிழ வைத்து விட்டீர்கள் சார் நன்றி.

  ReplyDelete
 37. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  //இப்போது வீட்டில் மட்டும் என்ன? வெங்கட் ஜீயைக் கேட்டால் தான் தெரியவரும்.// ஹா..ஹா..ஹா..
  சார்... நான் பாவம் சார்....

  ஹிந்தி படிக்க எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஏனோ பிடிக்கவில்லை.

  //இல்லத்தரசி என்ற பட்டத்தையே உரிய வயதில் உங்களுக்கு வாங்கித்தந்துள்ள உங்கள் தந்தையை நினைத்து மானஸீகமாக நன்றி கூறுங்கள்.//

  ஆமாம் சார். உண்மையிலேயே திருமணத்துக்கு நான் அன்று காலம் தாழ்த்தியிருந்தால் அப்பா, அம்மா இருவரும் மறைந்த பிறகு நான் எப்படியிருந்திருப்பேன் என்றே எனக்கே தெரியாது.

  என் கணவர் தன் பள்ளி நினைவுகளை எழுதும் போதே எனக்கும் ஆசையாக இருந்ததால் எழுதி வைத்து நெடுநாட்களாக வைத்திருந்தது. தங்களுடைய பதிவில் தாங்கள் யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று போட்டிருந்ததை வைத்து பதிவிட்டு விட்டேன். இந்த நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்த தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி சார்.

  ReplyDelete
 38. வாங்க மனோம்மா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 39. வாங்க சென்னை பித்தன் ஐயா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 40. வாங்க ராஜி,

  ஆமாம். கீழ்வரிசையில் இடமிருந்து முதலில் இருப்பது நான் தான்.
  கணக்குன்னாலே எப்பவும் பயம் தான். புரியும் படி சொல்லித் தந்தா நல்லாவே வரும். பப்ளிக் எக்ஸாம்லயும் கணக்கு பரீட்சையின் போது தவறாமல் ஜுரம் வந்து விட்டது. அதோடவே தான் எழுதினேன்...

  நான் திக்கித் திணறி போடும் கணக்கை ஐந்தாவது வரை தான் படித்தாலும் எங்க அம்மா போடும் வாய் கணக்கு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

  தமிழ் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கலை. காரணம் என்னை சுற்றி தமிழர்கள் தான் இருந்தார்கள். கேரளக் கடைகளும், தமிழ் கடைகளும் இருந்தது.
  ஸ்வெட்டர் பின்ன சொல்லிக் கொடுத்த ஆண்ட்டிக்கு பக்கத்து வீட்டு ஆண்ட்டிக்கு என்று சாம்பாரும், ரசமும், இட்லியும் செய்ய ஹிந்தியிலேயே சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 41. வாங்க கீதமஞ்சரி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 42. வாங்க ரிஷபன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 43. வாங்க ஈஸ்வரன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 44. பரிசுப் பொருளோடு நினைவுகளையும் பாதுகாத்து அதை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டது மகிழ்ச்சியே!

  ReplyDelete
 45. அடிவாங்கின சம்பவங்களைத் தவிர மற்ற விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யம்.

  நானும் தலையில் புண் வந்து சிரமப்பட்டிருக்கிறேன். அம்மா பூண்டு வெங்காயம் அரைத்து மருந்து போட்டு சரிப் படுத்தினார்.
  இவ்வளவு மார்க் வாங்கினீர்களா. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நல்ல பகிர்வு மா.

  ReplyDelete
 46. நம் பழைய நாட்களை பின்னோக்கி செல்வதே ஒரு இனிமை தான்.

  அருமையாக பகிர்ந்து இருக்கீங்க

  ReplyDelete
 47. ஏன் உங்கள் டேஷ் போர்டில் வரலன்னு தெரியல்

  நேரம் இருந்தால் நீங்க என் பிலாக்கில் பாலோவராக ஆட் ஆகியதை நீக்கி விட்டு புதுசா ஆட் பண்ணி பாருங்கள்,

  ReplyDelete
 48. பரவாயில்ல போட்டோ எல்லாம் பத்திரமா வைத்து இருக்கீங்க

  ReplyDelete
 49. Nice Blog. Thanks for remembering the Sweet Memories. Still you have the Photos. Really Nice.

  ReplyDelete
 50. வாங்க அமைதி அப்பா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 51. வாங்க வல்லிம்மா,

  என்னுடைய புண்ணிற்கு தலை முடியை மொத்தமும் எடுத்தால் தான் ஆச்சு என்று சொல்லி விட்டார் டாக்டர். மருந்து அப்போது தான் முழுவதும் போட முடியும் என்று. பூண்டும், வெங்காயமும் இதற்கு மருந்து என்ற தகவலுக்கு நன்றிம்மா.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 52. வாங்க ஜலீலாக்கா,

  ஏற்கனவே ஒருமுறை பாலோயரில் இருந்து விலகிப் பார்த்தேன். இப்போது மூன்று முறை நான் உங்க பதிவில் பாலோயர் ஆகியிருக்கேன். ஆனாலும் டாஷ்போர்டில் வருவதில்லை.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 53. வாங்க சந்துரு,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 54. நல்ல பதிவு அதிலும் நல்ல ஞாபகமாக எல்லா டீச்சர்களின் பெயரும் மறக்காமல் சான்ஸே இல்லை. சூப்பர்.

  ReplyDelete
 55. வாங்க Vijiskitchencreations,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 56. பள்ளி நாட்கள் அருமையான நாட்கள். அனைத்தயும் மறக்காமல் ஏன் ஆசிரியர்கள் பெயர் கூட மறக்காமல் கூறுவது ஆச்சரியம் தான். என் அம்மாவிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம். காரணம் காரணமில்லாமல் இருக்குமா. என் குறும்புத்தனத்தை அடக்க என் அம்மா ஒருவரால் தான் முடியும்.

  ReplyDelete
 57. வாங்க சீனு,

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…