Thursday, March 8, 2012

கல்கியின் ஒற்றை ரோஜா


கல்கி அவர்களின்ஒற்றை ரோஜாபுத்தகத்தை சென்ற வாரம் வாசித்தேன். நான்கு சிறுகதைகள் அடங்கிய சிறிய புத்தகம். இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1952 ல் வெளியாகியுள்ளது. நாங்கள் வைத்திருக்கும் புத்தகம் ஆறாம் பதிப்புகல்கியின் ஆசிரியர் திரு கி.ராஜேந்திரன் அவர்கள் எழுதியுள்ள முன்னுரையில் முதல் கதையாக இடம்பெற்றுள்ளஒற்றை ரோஜாதீபாவளி மலரில் பிரசுரமானதெனவும் ”ஏட்டிக்கு போட்டி”  என்ற புத்தகத்திலிருந்து மூன்று கதைகள் பிரிந்தெடுக்கப்பட்டு இந்த ஒற்றை ரோஜா நூலில் சேர்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவையாவன

1)       தீப்பிடித்த குடிசைகள்
2)       புது ஓவர்சியர்
3)       வஸ்தாது வேணு

முதல் கதை ஒற்றை ரோஜாவில் கதா நாயகன் பாபநாசத்துக்கு சென்று சாகப் போகிறார். எதற்கு? பி. பரீட்சையில் மூன்று முறை தோற்றுவிட்டதால். அங்கு சென்ற பின் மனம் மாறி சென்னைக்கு செல்ல முடிவெடுக்கிறார். ரயில் பயணத்தில் அடுத்த பெட்டியில் உள்ள பெண்ணின் தலையில் இருந்த ஒற்றை ரோஜா அவரை கவர்ந்திழுக்கிறது. அந்த பெண்ணிடம் சென்று பேச நினைக்கிறார். அதற்குள் அந்த பெண்ணைச் சுற்றி ஏதோ மர்மம் இருப்பது தெரிகிறது. ஒருவன் கதாநாயகனின் அருகில் வந்து அமர்ந்து அந்த பெண் வைத்திருக்கும் அந்த ரோஜாவில் தான் தன்னுடைய உயிர் இருப்பதாகச் சொல்லுகிறார். இப்படி மர்மக் கதையாக சென்று இறுதியில் சந்தோஷத்தில் முடிகிறது கதை.

அந்த பெண்ணைப் பற்றிய மர்மம் என்ன? அந்த ரோஜாவில் என்ன தான் இருக்கிறது? கதாநாயகன் என்ன ஆனார்? போன்ற உங்களின் கேள்விகளை புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள். மற்ற கதைகளும் நன்றாக உள்ளன. எனக்கு முதல் கதையானஒற்றை ரோஜாவும்கடைசி கதையான வஸ்தாது வேணுவும் மிகவும் பிடித்திருந்தது.

புத்தகத்தை வாங்க:


வானதி பதிப்பகம்
13, தீனதயாளு தெரு
தியாகராய நகர்
சென்னை – 17
விலை – 18 ரூபாய்.மீண்டும் சந்திப்போம்,


ஆதி வெங்கட்.தொடர்புள்ள இடுகைககள்:படித்ததில் பிடித்ததுபுத்தக விமர்சனங்கள்கல்கியின்கமலாவும் சுண்டுவும்
அத்தியாவசியமான வைட்டமின்கள் 

37 comments:

 1. நீங்க ஒற்றை ரோஜாவைப்பற்றி சொல்லி இருக்கும் விதமே உடனே வங்கி படிக்கனும் என்று தோனுது

  ReplyDelete
 2. நல்ல நூலை அரிமௌகப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 3. நல்ல நூல் ஒன்றை அழகாக அறிமுகம் செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. நான் இன்னும் இதை படிக்கவில்லை. முடிந்தால் படித்து விடுகிறேன்.

  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 4. நூல் அறிமுகம் சிறப்பு..நல்ல விசயம்..

  ReplyDelete
 5. படித்ததில் பிடித்தது .. பிடித்தது

  ReplyDelete
 6. // அந்த பெண்ணைப் பற்றிய மர்மம் என்ன? அந்த ரோஜாவில் என்ன தான் இருக்கிறது? கதாநாயகன் என்ன ஆனார்? போன்ற உங்களின் கேள்விகளை புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள். //

  விளம்பரப் பகுதி போல இருக்கு..
  :-)

  ReplyDelete
 7. முடிந்தால் படிக்கிறேன்.நன்றி

  ReplyDelete
 8. கல்கியின் எழுத்தோட்டம் தனியானது.. சிறந்த கதைகளை அடையாளம் காட்டியதற்கு நன்றி....

  ReplyDelete
 9. கல்கியின் கதைகள் அனைத்தும் அழகுதான்.
  ஆனாலும் நீங்கள் கூறியதிலேயே பிடித்தது, அந்த புத்தகத்தின் விலை வெறும் 18 ரூபாய் என்பதுதான்.
  இதுபோல் நல்ல கதைகள் மற்றும் புத்தகங்களின் அறிமுகம் தொடரட்டும்.

  ReplyDelete
 10. நல்ல நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 11. கல்கி அவர்களின் இயல்பான கதை சொல்லும் உத்தி அவரது வாசகர்களுக்கு மிகப் பிடித்தமானது..

  ReplyDelete
 12. ஒற்றை ரோஜா கதையினூடாக இழையோடியிருக்கும் நகைச்சுவை ரஸத்தைப் பற்றி நீங்க சொல்லலியே மேடம்... காதலும் நகைச்சுவையும் பின்னிப் பிணைந்த இந்தக் கதை எனக்கு மிகமிகப் பிடி்த்தமானது. உங்களுக்கு நான் சஜஸ்ட் செய்யும் கல்கியின் மற்றொரு ரசனையான கதை: மோகினித் தீவு! கிடைத்தால் அவசியம் படியுங்கள்! எழுத்து நடை மயக்கி விடும்!

  ReplyDelete
 13. பயனுள்ள அறிமுகம்
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. என்னங்க இது..இப்படி த்ராட்டல விட்டுட்டீங்களே!
  உடனே படிக்கணூம்ங்கற ஆவலைத் தூண்டற நடை பிரமாதம்!
  கணையாழியின் கனவும் நல்லா இருக்கும்..

  ReplyDelete
 15. பதினெட்டு ரூபாய்க்கு ஒரு புத்தகமா!!!!! பதிப்பகம் வாழ்ந்தமாதிரிதான்!!!!!!

  வானதிக்குப்போயே ரொம்ப வருசமாச்சு. அப்பெல்லாம் சென்னை விசிட்டுலே மறக்காமப்போய் வருவேன். இப்ப பரவலா எல்லாப் புத்தகங்களும் நியூ புக் லேண்டில் கிடைப்பதால் பழக்கம் விட்டுப்போச்சு:(

  ரோஷ்ணிம்மா, படிக்கத்தூண்டும் ஆவலைக் கிளப்பும் விமரிசனம். நன்றி.

  ReplyDelete
 16. வாங்க லஷ்மிம்மா,

  நன்றி. வாங்கி படித்துப் பாருங்கள்.

  ReplyDelete
 17. வாங்க ஸாதிகா,

  நன்றிங்க.

  ReplyDelete
 18. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  நன்றி சார். முடிந்த போது வாங்கிப் படியுங்கள்.

  ReplyDelete
 19. வாங்க மதுமதி சார்,

  நன்றி.

  ReplyDelete
 20. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  நன்றி.

  ReplyDelete
 21. வாங்க மாதவன் சார்,

  //விளம்பரப் பகுதி போல இருக்கு..
  :-)//

  சிறிய புத்தகம், விலையும் குறைவு தான். கதையை நானே சொல்லி விட்டால்....அதனால் தான்.

  நன்றி.

  ReplyDelete
 22. வாங்க சென்னை பித்தன் ஐயா,

  நன்றி.

  ReplyDelete
 23. வாங்க பத்மநாபன் சார்,

  ஆமாம். அவரின் எழுத்து வெகு சுவாரசியமானது.

  நன்றி.

  ReplyDelete
 24. வாங்க ஈஸ்வரன் சார்,

  ஆமாம் சார். 18 ரூபாய் என்பது ஆச்சரியம் தான்.

  நன்றி.

  ReplyDelete
 25. வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன்,

  நன்றிங்க.

  ReplyDelete
 26. வாங்க ரிஷபன் சார்,

  அவரின் வாசகர்களுக்கு இந்த கதை நிச்சயம் பிடித்து இருக்கும். நன்றி.

  ReplyDelete
 27. வாங்க கணேஷ் சார்,

  சுட்டிக் காட்டியதற்கு நன்றி சார். நகைச்சுவையை பற்றி சொல்லாமல் விட்டு விட்டேன்.
  மோகினித் தீவு கிடைத்தால் அவசியம் படிக்கிறேன் சார்.

  ReplyDelete
 28. வாங்க ரமணி சார்,

  நன்றி.

  ReplyDelete
 29. வாங்க ஸாதிகா,

  வலைச்சர அறிமுகத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 30. வாங்க ஆர்.ஆர்.ஆர் சார்,

  கணையாழியின் கனவு எங்கள் வீட்டில் உள்ளது. ஆனா நான் இன்னும் படித்ததில்லை. அவசியம் படிக்கிறேன்.

  நன்றி சார்.

  ReplyDelete
 31. வாங்க டீச்சர்,

  18 ரூபாய் எனக்கும் ஆச்சரியம் தான்....

  விமர்சனத்தை ரசித்ததற்கு நன்றி.

  ReplyDelete
 32. கல்கியின் ஒற்றை ரோஜா படித்து இருக்கிறேன், இப்போது மீண்டும் படிக்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்.

  ReplyDelete
 33. வாங்க கோமதிம்மா,

  தங்களின் ரசிப்பிற்கு நன்றிம்மா.

  ReplyDelete
 34. // அந்த பெண்ணைப் பற்றிய மர்மம் என்ன? அந்த ரோஜாவில் என்ன தான் இருக்கிறது? கதாநாயகன் என்ன ஆனார்? போன்ற உங்களின் கேள்விகளை புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள். //

  ஒரு கதையின் விமர்சனம் என்பது இப்படிதான் இருக்க வேண்டும். அதிலுள மர்மத்தை ஒற்றை வரியில் போட்டு உடைத்து விட்டால் படிக்கும் சுவாரசியம் குறைந்து விடும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 35. வாங்க சீனு,

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…