Wednesday, March 7, 2012

ஹோலிப் பண்டிகை நினைவுகள்


[பட உதவி: கூகிள்] 

[பட உதவி: கூகிள்] 

"ஹோலி" என்று  வட இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகை குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் ஆரம்பிக்கப் போகிறது என்ற அறிவிப்புடன் மார்ச் மாதத்தில் வரும் [இந்த வருடம் மார்ச் எட்டாம் தேதி]. நரகாசுரனை  கொன்ற நாளை எப்படி தீபாவளியாக கொண்டாடுகிறோமோ அதே மாதிரி ”ஹோலிகா” என்ற அரக்கியை வதம் செய்த நாளைத்தான் அந்த அரக்கியின் பெயரிலேயே பண்டிகையாக சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள். இப்போதும் ஹோலிக்கு முதல் நாளான சோட்டீ ஹோலி அன்று மாலை முச்சந்தியில் காய்ந்த சருகுகள், விராட்டி, விறகுகள் எல்லாவற்றையும் கோபுரமாக அமைத்து நூலால் கட்டி வெளியில் விளக்குகள் ஏற்றி வைத்து வணங்குவார்கள்.  பின்பு அதை எரித்து விடுவார்கள்.

[பட உதவி: கூகிள்]  

[பட உதவி: கூகிள்]

இந்த பண்டிகையின் சிறப்பாக ”குஜியா” என்ற இனிப்பை எல்லோரும் சாப்பிடுவார்கள். நம்ம ஊர் சோமாசி மாதிரி தான். உள்ளே பூரணமாக பால்கோவாவுடன் முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, சோம்பு முதலியவற்றை சேர்த்திருப்பார்கள். அதே போல் ”பாங்க்” என்ற ஒருவகை கீரையை பாலிலோ, அல்லது பக்கோடா போன்றோ ஏதோ ஒரு வகையில் அன்றைய தினம் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இந்தக் கீரையின் சிறப்பு என்னவென்றால் அதைச்  சாப்பிட்டவுடன் ஒன்று சிரித்துக் கொண்டே இருப்போம், அல்லது அழுது கொண்டே இருப்போம். இதை பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதே போல் ”பாப்பட்” என்று சொல்லப்படும் மசாலா அப்பளத்தை சுட்டும் சாப்பிடுவார்கள்.

[பட உதவி: கூகிள்]

வர்ணங்களை ஒருவர் மீது ஒருவர் பூசியும், குழந்தைகள் பலூனில் கலர் தண்ணீரை நிரப்பி அதை மற்றவர்கள் மீது வீசியும், ”பிச்காரி” என்று சொல்லப்படும் ஒரு கருவி மூலம் வர்ணம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விளையாடுவர். இந்த வர்ணங்களிலும் நிறைய வகைகள் உள்ளன. இயற்கை வர்ணங்கள், ஸ்பிரேக்கள், ஆயில், மற்றும் புதிதாக கலர் கேப்சூல் என்று பலவகைகள்  உபயோகத்தில் உள்ளன. ஆனால் இயற்கை வர்ணங்களுக்குத் தான் இப்போது ஆதரவு. செயற்கை வர்ணங்களில் உள்ள ரசாயனங்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. நான் தில்லி வந்த நாளிலிருந்து பார்க்கிறேன்… கிட்டதட்ட ஒரு மாதம் வரைக்கும் அந்த வர்ணங்கள் இருக்கும்.

அதே போல் அன்றைய தினம் யார் வேண்டுமானாலும் 4யார் மீதும் வர்ணத்தை ”(B)புரா நா மானோ, ஹோலி ஹே” எனச் சொல்லி பூசுகிறார்கள். ஆனால் விருப்பமில்லாதவர்கள் மீது வர்ணம் பூசுவது தவறு தானே.

நான் தில்லி வந்ததிலிருந்து கொண்டாடிய ஹோலி பற்றிய சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

எங்கள் நண்பர்கள் கூட்டத்தில் மாறன் என்ற நண்பர் தான் எனக்கு ஹோலி பற்றிய நினைவுகளில் முதலில் வருகிறார். நண்பர்களின் குழந்தைகள் வந்து இழுத்துக் கொண்டு சென்றார்கள். ஏழு, எட்டு பேர் சேர்ந்து மொட்டை மாடியில் வர்ணங்களை பூசுவதையும், தொட்டியில் இருந்து தண்ணீரை மொண்டு பக்கெட்டோடு ஊற்றுவதையும் பார்த்தவுடன் எனக்குள்ளும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. நானும், கணவரும் நண்பர்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டோம். அங்கிருந்து வேறொரு நண்பர் வீட்டுக்கு சென்று வர்ணத்தை பூசி விட்டு, அங்கிருந்து வேறொருவர் வீடு என்று அன்று மதியம் வரை தெருத்தெருவாக கலர் பூசிய முகங்களுடன் சுற்றியதை இன்று நினைத்து பார்க்கும் போது வேடிக்கையாகத் தான் இருக்கிறது. அப்போ ரோஷ்ணி பிறக்கவில்லை…
குழந்தை சிறிதாக இருந்த போது இந்த ஆட்டங்களுக்கு நான் செல்லவில்லை. அவளுக்கு  இரண்டு வயதிருக்கும் போது சிறிது  தூரத்தில் இருந்து காண்பித்தேன். சற்று பயந்தாள். ப்ளே ஸ்கூல் சேர்ந்தவுடன் பள்ளியிலேயே ஹோலிக்கு முதல் நாள் வர்ணங்களையும், குஜியாக்களையும் அனுப்பும்படி கேட்டிருந்தார்கள். அன்று மதியம் திரும்ப வீட்டுக்கு அழைத்து வரச்  சென்றால் கலர்ஃபுல்லாக இருந்தாள். குளிப்பாட்டுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.


அடுத்த நாள் காலையிலேயே சீக்கிரமாக எழுந்து அப்பாவிடம் வர்ணங்கள் வாங்கி வரச்சொல்லி HAPPY HOLI AMMA, HAPPY HOLI APPA என்று எங்கள் கன்னங்களில் பூசி மழலை மொழியில் சொன்னது இன்னும் எனக்கு அப்படியே கண்ணில் உள்ளது. மழலைப்பருவம் திரும்ப வரவே வராது. அவ்வளவு இனிமை…

அதற்கடுத்த வருடங்களில் நண்பர்கள் வட்டத்தை எங்கள் வீட்டுக்கு வரச்சொல்லி மாடியில் வர்ணப்பூச்சு விளையாட்டுகள். முடிந்து கீழே வீட்டுக்கு வந்து குளித்து விட்டு [இந்த நாளில் மட்டும் மதியம் கூட தண்ணீர் திறந்து விடுவார்கள்] நாங்கள் தோழிகள் அனைவரும் முதலிலேயே திட்டமிட்டபடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாப்பாடு ஐட்டம் செய்து கொண்டு வருவார்கள். முதலில் குழந்தைகள் பந்தி, பின்பு ஆண்கள், இறுதியில் பெண்களான நாங்கள் ஆண்கள் பரிமாற அரட்டை கச்சேரியுடன் உணவை முடித்துக் கொண்டு, சற்றே இளைப்பாறல். மாலையில் தேநீரோடு அவரவர் வீட்டை சென்றடைவர். இப்படி அன்றைய தினம் இனிதாகக் கழியும்.

இது போல் GET TOGETHER நிறைய இருக்கும். அவற்றை பற்றி சுவாரசியமான நினைவுகளை பிறிதொரு பகிர்வில் பகிர்கிறேன்.


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

48 comments:

 1. ஹோலி பற்றிய தகவல்களுடன் பகிர்ந்து கொண்ட இனிய நினைவுகள் அருமை.

  ReplyDelete
 2. //அன்று மதியம் திரும்ப வீட்டுக்கு அழைத்து வரச் சென்றால் கலர்ஃபுல்லாக இருந்தாள். குளிப்பாட்டுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது//

  VERY VERY COLOURFUL POST. GOOD. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. குஜியா எனக்கு ரொம்ப பிடிக்கும்..

  நான் மட்டும் வீட்டுக்குள்ளயே இருந்துக்கிட்டு பிள்ளைகளை மட்டும் அனுப்பிவிடுவேன்..
  போகும் போது எண்ணெய் தடவி அனுப்பிட்டு வந்தவுடன் க்டலை மாவு போட்டு குளீப்பாட்டுவேன்..:)

  ReplyDelete
 4. நிஜமா உங்களோட இந்த அனுபவங்களைப் படிச்சதும் நான ஒரு தடவைகூட ஹோலி கொண்டாடினதில்லையேன்னு ஏக்கமே வந்துட்டுது. மிக இயல்பான நடையில சொல்லியிருந்ததை ரசிச்சுப் படிச்சேன்.

  ReplyDelete
 5. ரோஷினி இன்னும் மழலை தான். இந்த காலமும் மிக மகிழ்ச்சியான காலமே !

  ஹோலி பற்றி கணவர்- மனைவி ரெண்டு பேரும் எழுதிட்டீங்க ! Happy holi to your family.

  ReplyDelete
 6. ஆமா நீங்கசொல்வது போலத்தான் ஹோலியை மும்பையிலும் அமர்க்களமா கொண்டாடுவாங்க. நம்ம உடம்பிலும் உடைகளிலும் உள்ள கலர் நீங்கவே மாதக்கணக்ககிடும் பொதுவா அன்று எல்லாரும் ஒயிட் கலர் ட்ரெச்தான் போடுவாங்க.

  ReplyDelete
 7. இங்க மும்பயிலும் ஹோலியை அமர்க்களமா கொண்டாடுவாங்க. நம்ம உடம்பிலும் உடையிலும் ஏர்பட்டகலர் போகவே ஒருமாசத்துக்கும் மேல ஆகிடும் பொதுவா அன்று எல்லாருமே ஒயிட் அண்ட் ஒயிட்டில்தான் இருப்பாங்க

  ReplyDelete
 8. அருமையான கலர்புல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 9. அருமையான நினைவுகள் ரோஷ்ணிம்மா!

  போன ஹோலிக்கு நாங்க சண்டிகரில் இருந்தோம். இந்த வருசம் சைலண்ட் ஹோலிதான் நமக்கு!

  ReplyDelete
 10. கலர்களைக் கழுவி எடுப்பது மிகச் சிரமமாக இருக்குமே என்று நினைத்தேன். நானாக இருந்தால், இதற்குப் பயந்தே வெளியே போகமாட்டேன். ஆனா,
  //போகும் போது எண்ணெய் தடவி அனுப்பிட்டு வந்தவுடன் க்டலை மாவு போட்டு குளீப்பாட்டுவேன்//
  முத்தக்காவின் இந்த ஐடியா சூப்பர்.

  ReplyDelete
 11. ஹோலி ஹை!!...

  எங்கூர்லயும் எண்ணெய் தேய்ச்சுக்கிட்டுத்தான் வெளியே இறங்குவோம். விளையாடுறதுக்கு தொட்டித்தண்ணியெல்லாம் ஆவறதில்லை. தரைத்தளத்துல இருக்கும் வீடுகளின் பாத்ரூம்லேருந்து ட்யூப் மூலமா ஆட்டையப் போட்டு தண்ணி சப்ளை ஆகும். அவங்க வீடுகள்ல இருக்கற ம்யூசிக் சிஸ்டத்தையும் சேர்ந்து அலற விட்டுட்டு ஒரே ரெயின் டான்ஸ்தான்.. கும்மாளந்தான். சமயங்கள்ல பெத்த புள்ளையக் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது :-))

  நினைவலைகளைக் கிளப்பியதுக்கு நன்றிப்பா.

  ReplyDelete
 12. விஷ் யூ ஹாப்பி ஹோலி! :-)

  ReplyDelete
 13. நல்ல பகிர்வு.

  ஹோலி வாழ்த்துகள்

  ReplyDelete
 14. ஹோலிப் பண்டிகை கொண்டாட்டம், மிக அருமை.
  உங்கள் எல்லோருக்கும் ஹோலிப் பண்டிகை வாழ்த்துக்கள்.
  ரோஷ்ணியின் ஹோலி படங்கள் அழகு.

  ஹோலி முடிந்தவுடன் சீஸன் மாறுமே!
  வெயில் வந்து விடும் அல்லவா!

  ReplyDelete
 15. வாங்க ராமலஷ்மி,

  தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 16. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 17. வாங்க முத்துலெட்சுமி,

  நான் ஒரு இனிப்பு பிரியை. அதனால் எல்லா இனிப்புகளுமே பிடிக்கும். எங்க வீட்டில் சென்ற வாரமே குஜியா வாங்கி சாப்பிட்டாச்சு.

  நீங்க சொல்ற ஐடியா நல்லா இருக்குங்க. ஆனா நேற்றே பள்ளியில் இருந்து வேனில் வரும் போதே பூசிக் கொண்டு இறங்கி வருகிறாள்....:)

  ReplyDelete
 18. வாங்க கணேஷ் சார்,

  ஏக்கம் எதற்கு....ஹோலி சமயத்துல தில்லிக்கு வாங்க சார். நல்லா எஞ்சாய் பண்ணலாம்.

  ReplyDelete
 19. வாங்க மோகன்குமார் சார்,

  ரோஷ்ணி இப்பவும் மழலைப் பருவத்தில் தான் இருக்கிறாள். ஆனாலும் இன்னமும் சின்னது என்கிற போது அது ஒரு அழகு இல்லையா....:)

  வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 20. வாங்க லஷ்மிம்மா,

  இங்கயும் அப்படித் தான் வெள்ளை உடையில் பெரும்பாலும் இருப்பாங்க. அப்புறம் தூக்கி போட்டுவாங்க என்று நினைக்கிறேன். இந்த ஊர்க்காரர்கள் எங்க உடம்பு வணங்கி துவைக்கப் போகிறார்கள்....

  ReplyDelete
 21. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  தங்களின் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 22. வாங்க டீச்சர்,

  நாங்களும் சென்ற வருடம் வரை நண்பர்கள் கூட்டத்துடன் ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தோம். இந்த வருடம் தான் வேறு ஏரியா வந்தாச்சே. நண்பர்களும் வேறு ஊர்களுக்கு மாற்றலாகி போய்ட்டாங்க....:(
  இந்த வருடம் எப்படின்னு தெரியாது.

  ReplyDelete
 23. அருமையான அறியாத தகவல்கள் அடங்கிய பதிவு
  படங்களுடன் ப்கிர்ந்த விதம் அருமை
  தொடர வாழ்த்துக்கள்
  இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. வாங்க ஹுசைனம்மா,

  முத்துலெட்சுமியின் ஐடியா பிரமாதம். இவ்வளவு நாளாத் தெரியலை. இந்த வருடம் விளையாடினால் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

  ஆனா பாருங்க ...பள்ளியிலிருந்தே பூசிக் கொண்டு வந்தா என்னங்க பண்றது...:)))

  ReplyDelete
 25. வாங்க அமைதிச்சாரல்,

  நாங்களும் மியூசிக் சிஸ்டமெல்லாம் வச்சு ஆட்டம் போட்டிருக்கோம்..... தண்ணி பக்கத்து வீடு மாடியிலிருந்தும் எடுத்திருக்கோம்...

  //சமயங்கள்ல பெத்த புள்ளையக் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது :-))//

  ஹா...ஹா...ஹா...

  ReplyDelete
 26. வாங்க ஆர்.வீ.எஸ்,

  வாழ்த்துக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 27. வாங்க சீனு அண்ணா,

  வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 28. வாங்க கோமதிம்மா,

  வாழ்த்துக்கு நன்றிம்மா.

  ஆமாம்மா. வெய்யிலை நினைத்தாலே பயமா இருக்கு....:(

  ReplyDelete
 29. வாங்க ரமணி சார்,

  வாழ்த்துக்கு நன்றி சார்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும், தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 30. எங்கள் கன்னங்களில் பூசி மழலை மொழியில் சொன்னது இன்னும் எனக்கு அப்படியே கண்ணில் உள்ளது. மழலைப்பருவம் திரும்ப வரவே வராது. அவ்வளவு இனிமை…

  ஹோலி கொண்டாடிய திருப்தி

  ReplyDelete
 31. ஹோலி நினைவுகளை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.இந்த கொண்டாட்டத்தை டிவியில் பார்த்ததோடு சரி.நேரில் உங்கள் அனுபவம் பகிரக் கேட்கும் பொழுது அந்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது.தொடர்ந்து எழுதுங்க.

  ReplyDelete
 32. மழலைப்பருவம் திரும்ப வரவே வராது. அவ்வளவு இனிமை//

  சமயங்கள்ல பெத்த புள்ளையக் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது :-))//

  ர‌சனையான‌ ப‌திவு!

  ReplyDelete
 33. ஹோலி கொண்டாட்டங்களையெல்லாம் இந்தித் திரைப்படங்களில் பார்த்ததோடு சரி. முழு விவரங்களையும் உங்கள் பதிவின் மூலம்தான் அறிகிறேன். ஹோலிப்பாப்பா கொள்ளை அழகு. இனிய ஹோலி தின வாழ்த்துக்கள் ஆதி.

  ReplyDelete
 34. இந்தப் பக்கம் வந்து ராக்கி பண்டிகை கொண்டாடுறோமோ இல்லையோ இந்த ஹோலியை கொண்டாட வச்சுடுறாங்க.

  ReplyDelete
 35. வண்ணமய அருமையான பகிர்வுகள். பாராட்டுக்கள்..

  ReplyDelete
 36. அப்படியே என் நினைவுகள் மாதிரி இருந்துது!!!!

  ReplyDelete
 37. வாங்க மாதவன்,

  வாழ்த்துக்கு நன்றி சார்.

  ReplyDelete
 38. வாங்க ரிஷபன் சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 39. வாங்க ஆசியா உமர்,

  நானும் இங்கு வந்து விளையாடிய பின் தான் அந்த நிகழ்வை உணர முடிந்தது.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 40. வாங்க நிலாமகள்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 41. வாங்க கீதமஞ்சரி,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 42. வாங்க ஆச்சி,

  ஆமாம்ப்பா. இங்கு ஹோலி எல்லா மாநிலத்தவர்களுமே கொண்டாடுகிறார்கள்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 43. வாங்க சீனிவாச ராமகிருஷ்ணன்,

  தங்களது முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 44. வாங்க அருணா,

  உங்களையும் கொசுவத்தி சுத்த வச்சதுல சந்தோஷம்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 45. // ”ஹோலிகா” என்ற அரக்கியை வதம் செய்த // புதிய தகவல்

  //மழலைப்பருவம் திரும்ப வரவே வராது. அவ்வளவு இனிமை…// உண்மைதான் நம் இல்லாமை காலங்களை யாரவது சொன்னால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  ReplyDelete
 46. வாங்க சீனு,

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…