Monday, March 12, 2012

கதம்பம்- 7

அன்றைய தில்லி:-  

[பட உதவி: கூகிள்]


[பட உதவி: கூகிள்]

தினமணியில் வாரா வாரம் ”அன்றைய தில்லி” என்ற தொடர் வந்து கொண்டிருந்தது. இதை தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருந்தேன். இந்தத் தொடரில் 50 வருடங்களுக்கும் மேலாக தில்லியில் வாசம் செய்து கொண்டிருக்கிற மூத்த தமிழர்களின் பேட்டி இடம் பெற்றிருக்கும். இதில் அவர்கள் வேலை வாய்ப்புக்காக தில்லி வந்த நாளிலிருந்து தங்கிய இடங்கள், தில்லியில் இருந்த/கிடைத்த தென்னிந்திய உணவகங்கள்/உணவுகள், ரசித்த கர்நாடக சங்கீத கச்சேரிகள் முதலியவற்றை பகிர்ந்திருந்தனர். அன்றைய தில்லியில் உள்ள குறைவான மக்கள் தொகை, மாசில்லாத காற்று, நெரிசல் இல்லாத போக்குவரத்து, வீட்டில் தாய்மொழியில் பேசும் மக்கள், திருட்டுப்பயம் என்பதே இல்லாதது (கோடையில் வெளியில் கயிற்றுக் கட்டிலில்தான் படுப்பார்களாம், வைரம் அணிந்து சென்றாலும் பயம் இல்லையாம்) போன்றவற்றை பற்றி கூறுயிருந்தனர். இப்போது எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டு மேலே கூறியுள்ளவை எல்லாமே இப்போது தலைகீழாய் மாறியுள்ளதை கூறி வருந்தினாலும் யாருக்குமே ஓய்வு பெற்ற பின்னரும் ஊருக்குச் செல்வதில் விருப்பமில்லையாம். தில்லியை அவ்வளவு பிடித்திருக்கிறதாம்.  எனக்குத்தான் பிடிக்கவில்லை…
 

 அங்கே இரண்டரை இங்கே முப்பது!!!!


[பட உதவி: கூகிள்]

மாமியாரிடம் தொலைபேசியில் ஊர்க்கதைகளை  பேசிக் கொண்டிருக்கும் போது அதில் ஒன்றாக   “அம்மா வாழைப்பூ இப்போ 20 லிருந்து 30 ரூபா ஆயிடுத்தும்மா!” என்றேன். ஸ்ரீரங்கத்திலிருந்த அவரோ “இங்கே இரண்டரை ரூபாய்க்கு விற்கும் வாழைப்பூவையே விலை ஜாஸ்தி என்கிறார்கள்” என்றார். தில்லியில் வாழைப்பூ கிடைப்பதே பெரிசு. இதில் விலை ஜாஸ்தி பற்றியெல்லாம் என்ன பேச்சு என்கிறீர்களா. கொஞ்சம் இருங்க. இந்த பூவெல்லாம் தென்னிந்தியாவிலிருந்து வரலை….  குஜராத்திலிருந்துதான் வருகிறது. என்னதான் 30 ரூபாய்க்கு இங்கு விற்றாலும், இதை விளைவித்த விவசாயிக்கு என்ன பெரிதாகக் கிடைத்திருக்கும் என்று தோன்றியது…

ரோஷ்ணி கார்னர்:-


இந்த மாதத்தோடு இந்த ஆண்டுக்கான வகுப்புகள் முடிவடைவதால் ரோஷ்ணியின் வகுப்பில் க்ரூப் போட்டோ எடுத்து அதை எல்லா குழந்தைகளிடமும் கொடுத்து விட்டிருந்தார்கள் பள்ளியில். அதை வீட்டுக்கு எடுத்து வந்ததும் என்னிடம் எல்லா குழந்தைகளின் பெயரையும் சொன்னாள். மாலையில் அப்பா வந்ததும் அவரிடம் ”அப்பா எல்லா பாப்பாவுக்கும் போட்டோ குடுத்தாங்க டீச்சர். எல்லா போட்டோவிலும் நானும் இருக்கறேன் அப்பா” என்றதும் எனக்கும் அவருக்கும் சிரிப்பு வந்து விட்டது. என்னே குழந்தையின் வெள்ளந்தியான குணம்… பின்பு அவளிடம் எல்லா போட்டோவும் ஒரு முறை எடுத்ததுதான் பிரிண்ட் மட்டும் நிறைய போட்டுக்கலாம் என்று சொல்லி புரிய வைத்தேன்.
 

தில்லியில் புத்தகக் கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்:


[பட உதவி: கூகிள்]

தில்லியில் 25.02.2012 முதல் 04.03.2012 வரை உலகப் புத்தகக் கண்காட்சி நடந்தது.  முதல் ஞாயிறன்றே நாங்கள் சென்று வந்தோம்.  அங்கேயே தில்லி தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பும் நடந்தது.  என்னவர் மற்றும் முத்துலெட்சுமி ஆகியோர் இது பற்றி ஏற்கனவே எழுதி விட்டதால் கதம்பத்தில் ஒரு பூவாய் மட்டுமே எழுதியிருக்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்,


ஆதி வெங்கட்.
புது தில்லி.

53 comments:

 1. நல்ல மணம் உள்ள கதம்பம்.

  பழைய டெல்லி: சுவையான தகவல் ஆச்சர்யம் தான்.

  ரோஷ்ணி கார்னர்: பிரமாதம்.

  புத்தகக்கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்: வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. கதம்ப மணம் அருமை
  குறிப்பாக குழ்ந்தையின் கூற்று
  அப்படி அவர்களால்மட்டுமே பேசமுடியும்
  அதை ரசித்தறியும் பக்குவமே இலக்கிய ஞானம்
  மனம் கவர்ந்தபதிவு
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. அட, தில்லியில ஒட்டகங்களா.. ஆச்சர்யம்தான்...

  ரோஷ்ணி கார்னர் - ஆமாப்பா, பசங்க பேச்சு கேட்டாலே ஒரு ஆனந்தம்...

  வாழைப்பூ இவ்ளோ இஷ்டமா? விக்கிற விலைவாசியில் 30ரூ என்பது ரொம்ப காஸ்ட்லியாத் தெரியலை!! :-))))))

  ReplyDelete
 4. நல்ல வேளை! வாழைப்பூ படம் போட்டீங்க! இல்லேன்னா வாழைப்பூ எப்படி இருக்கும்னே மறந்து போயிருக்கும்.

  ReplyDelete
 5. கதம்பம் அழ்காக மணம் ப்ரப்புகிறது.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. நல்ல மணம் உள்ள கதம்பம்.

  பழைய டெல்லி: சுவையான தகவல் ஆச்சர்யம் தான்.

  ரோஷ்ணி கார்னர்: பிரமாதம்.

  ReplyDelete
 7. குழந்தைகளின் மழலையும் அறியாமையும் என்றுமே ரசிக்கத் தக்கவை. அந்த குரூப் போட்டோல ரோஷ்ணி எங்க இருக்கான்னு வட்டம் போட்டு காட்டிருக்கலாம்ல... பெரிசாக்கி பாக்கறதுக்குள்ள கஷ்டமாய்டுச்சுங்க.. வாழைப்பூ வாங்கறது இவ்வளவு உசத்தியான விஷயமா டெல்லிலன்றதுல ஆச்சரியம். மணம் வீசிய கதம்பம் அருமை.

  ReplyDelete
 8. ஒரு உண்மை சொல்லட்டுமா!!

  ஒரு முறை வந்து சென்றதற்கே எனக்கு தில்லி சுத்தமாக பிடிக்கவில்லை. அங்கேயே எப்படித்தான் இருக்கீங்களோ :((

  ரோஷ்ணி கார்னர் சூப்பர்.

  வாழைப்பூ இங்கே 20 ரூவா. விலை கம்மிதானோ!!!!!!!

  ReplyDelete
 9. நல்ல கதம்பம்.. நன்று..
  குழந்தைகளின் யோசனை... ஈடு வேறு உண்டோ ?

  ReplyDelete
 10. கதம்பம் வாழைப்பூ மனமுடன் கமக்கிறது.குழந்தைகள் இப்படி பேசுவது தனி அழகுதான்.எங்க விட்டிற்கு மெடல் வந்துள்ளது,இன்னும் போட்டோ வரவில்லை.வாங்குற காசுக்கு பள்ளியில் இப்படி ஏதாவது செய்றாங்கன்னு நினைக்க வேண்டியுள்ளது.

  ReplyDelete
 11. /எல்லா போட்டோவிலும் நானும் இருக்கறேன் அப்பா”/

  அழகு:)!

  ReplyDelete
 12. எல்லா போட்டோவிலும் நானும் இருக்கறேன் அப்பா”//குழந்தையின் மழலையை ரசித்தேன்.

  அப்பா,அம்மா,மகள் என்று குடும்பமே பிளாக் எழுதுவது கண்டு மிக்க சந்தோஷமாக உள்ளது ஆதிவெங்கட்.இன்று உங்களின் இந்த இடுகை மூலம்தான் அறிந்து கொண்டேன்.

  ReplyDelete
 13. Roshini face is similar to her father. She looks taller now. We have seen her photo in the blog, in which she is small.

  Vazhai thandu Chennaiyil Ainthu robaai thaan.

  ReplyDelete
 14. ரோஷ்ணி :))

  எனக்கும் அப்படித்தான் தோணுது நான் கூட தில்லி விட்டுப்போகமாட்டேன்னு :)

  ReplyDelete
 15. எல்லா போட்டோவிலும் நானும் இருக்கறேன் அப்பா”//

  kuzawhtaikaLil kurumpu rasikka thakakthu

  ReplyDelete
 16. மணாம் நிறைந்த பூக்களால் தொடுக்கப்பட்ட கதம்பம்

  ReplyDelete
 17. குட்டிப் பதிவரின் எதார்த்தம் அழகு...மழலையர் தெரிந்து பேசுவதும் அழகு, தெரியாமல் பேசுவதும் அழகு...

  ReplyDelete
 18. //யாருக்குமே ஓய்வு பெற்ற பின்னரும் ஊருக்குச் செல்வதில் விருப்பமில்லையாம்//

  பத்திரிக்கைப் பேட்டிக்காகச் சொல்லியிருக்கலாம். பொதுவாக, எனக்கும் என் நண்பர்களுக்கும் (கேள்விபட்டது வரை) தமிழகம் திரும்புவதுதான் விருப்பமாக இருக்கிறது.

  ReplyDelete
 19. ரோஷ்ணிம்மா,

  கதம்ப வாசனை தூக்குது. அதிலும் அந்த வாழப்பூ வாசம்...... பலே பலே:-))))))

  குழந்தை குழந்தைதான்!!!!!!!

  ReplyDelete
 20. வாங்க எல்.கே,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 21. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  கதம்பத்தில் உள்ள எல்லா மலர்களையும் ரசித்து பின்னூட்டத்தில் சொன்னதற்கு நன்றி சார்.

  ReplyDelete
 22. வாங்க ரமணி சார்,

  தங்களின் கவிதை போன்ற அழகான பின்னூட்டத்திற்கு நன்றி சார்.

  ReplyDelete
 23. வாங்க ஹுசைனம்மா,

  //வாழைப்பூ இவ்ளோ இஷ்டமா? விக்கிற விலைவாசியில் 30ரூ என்பது ரொம்ப காஸ்ட்லியாத் தெரியலை!!//

  இஷ்டம் என்பது ஒருபுறம் இருந்தாலும், கடந்த ஒரு வருடமாக நான் படும் அவஸ்தைக்கு வாழைப்பூவை தொடர்ந்து எடுத்துக் கொள்வது கட்டாயமாகி விட்டது. ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை...

  எங்க பழைய வீட்டுக்கருகில் எப்போதுமே கிடைத்து கொண்டிருந்தது. இங்கு இந்த ஒரு வருடத்தில் ஒருமுறை தான் கிடைத்தது. தோழியிடம் சொல்லி பழைய ஏரியாவிலிருந்து வரவழைத்து சாப்பிட்டேன்...

  இங்கு விக்கற விலை வாசில ஜாஸ்தி என்பதற்காக சொல்லவில்லை. 20லிருந்து நேரிடையாக 30 அதான்..

  ReplyDelete
 24. வாங்க ஈஸ்வரன் சார்,

  ஆமாம். நிறைய பேருக்கு மறந்து கொண்டு தான் வருகிறது.....

  நன்றி.

  ReplyDelete
 25. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 26. வாங்க லஷ்மிம்மா,

  எல்லாவற்றையும் ரசித்ததற்கு நன்றிமா.

  ReplyDelete
 27. வாங்க கணேஷ் சார்,

  ஆமாம் சார். வட்டம் போட்டு சொல்லியிருக்கலாம். மேல் வரிசையில் இடமிருந்து மூன்றாவதில் நிற்கிறாள்.

  கருத்துக்களுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 28. வாங்க புதுகைத் தென்றல்,

  எனக்கு வந்த நாளிலிருந்தே பிடிக்கவில்லை....பத்து வருடங்கள் ஓடி விட்டது. கணவரிடம் அவ்வப்போது புலம்பல். மாற்றலாக வாய்ப்பே இல்லை என்று சொன்னதிலிருந்து ஏக்கமாகவே மாறி விட்டது.

  தினசரி கடவுளிடம் வேண்டுவதே எப்படியாவது ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி எங்களை தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு மூலைக்காவது மாற்றி விடு என்பது தான்....

  பார்க்கலாம். ....

  ReplyDelete
 29. வாங்க மாதவன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 30. வாங்க ஆச்சி,

  பள்ளியில் கொள்ளையடிக்கும் காசுக்கு இப்படி ஏதாவதாவது செய்கிறார்களே.....அதே பெரிய விஷயம் தான்.

  கருத்துக்களுக்கு நன்றிப்பா.

  ReplyDelete
 31. வாங்க ராமலஷ்மி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 32. வாங்க ஸாதிகா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 33. வாங்க மோகன்குமார் சார்,

  அவள் வகுப்பிலேயே அவள் தான் உயரம் என்று நினைக்கிறேன்.... நான் ஜெராக்ஸ் காப்பி என்று தான் ரோஷ்ணியைக் சமயத்தில் கூப்பிடுவேன். அப்பா மற்றும் பாட்டியின் சாயல்.

  சார். நான் வாழைப்பூ பத்தி சொல்லியிருக்கிறேன். வாழைத்தண்டு 5 ரூபாய் தானா!!!!!!!!

  ReplyDelete
 34. வாங்க முத்துலெட்சுமி,

  நீங்களும் தில்லிவாலா வா .......சரி... சரி

  நிறைய பேருக்கு பிடிச்சிருக்கு....எனக்கு.....ஊஹூம்ம்ம்ம்ம்.

  ReplyDelete
 35. வாங்க ஜலீலாக்கா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 36. வாங்க சென்னை பித்தன் ஐயா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 37. வாங்க பத்மநாபன் சார்,

  குழந்தைகள் எது செய்தாலும் அழகு தான்....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 38. வாங்க சீனு அண்ணா,

  //பத்திரிக்கைப் பேட்டிக்காகச் சொல்லியிருக்கலாம்//
  நிச்சயமாக இருக்காது. இல்லைன்னா ஓய்வு பெற்ற பின் ஏன் போகலை..90 வயது ஆனாலும் குளிரிலும், வெயிலிலும் ஏன் கஷ்டப்படறாங்க...

  //பொதுவாக, எனக்கும் என் நண்பர்களுக்கும் (கேள்விபட்டது வரை) தமிழகம் திரும்புவதுதான் விருப்பமாக இருக்கிறது.//

  எப்போது? ஓய்வு பெற்ற பின்னாலா? இல்லை பெற்றோர்கள் நலமுடன் இருக்கும் போதே அவர்களுடன் சேர்ந்து இருப்பதற்காக வேலை பார்க்கும் போதேவா?

  பெற்றோரின் காலத்துக்கு பின் நாமும் வயதாகி செல்வதற்கு பதிலாக இருக்கும் போதே அவர்களின் அருகில் இருந்தால் அவர்களும் சந்தோஷமடைவார்கள் அல்லவா.....

  ReplyDelete
 39. வாங்க டீச்சர்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் எல்லாவற்றையும் ரசித்ததற்கு நன்றி.

  ReplyDelete
 40. //வாழைப்பூவை தொடர்ந்து எடுத்துக் கொள்வது கட்டாயமாகி விட்டது//

  வாழைப்பூ ரொம்பக் குளிர்ச்சி என்று நினைக்கிறேன். பார்த்துச் சேத்துக்கோங்க. எனக்கு வாழைப்பூ ரொம்பப் பிடிக்கும். இங்கே எப்போதும் கிடைக்கும்தான் என்றாலும் முற்றல் அல்லது கருப்புகலரில் பழையதாக இருக்கும் என்பதால் அடிக்கடி வாங்குவதில்லை.

  பொதுவா காய்கறிகள் நான் போய் வாங்குவதில்லை என்பதால் விலை எனக்குத் தெரியாது. என்னவர்தான் புலம்பிக் கொண்டிருப்பார். வெங்காயம் இவ்வளவு, தக்காளி அவ்வளவு என்று. நான் காதிலேயே வாங்குவதில்லை. அதனால்தானோ என்னவோ 30 என்பது அதிகமாகப் படவில்லை. தப்பா நினைச்சுக்காதீங்க.

  ReplyDelete
 41. வாங்க ஹுசைனம்மா,

  தப்பா நினைக்க ஒண்ணுமே இல்லங்க. நீங்க உங்க கருத்தை சொல்றீங்க. நான் என் கருத்தை சொல்றேன். இதுல எதுவுமே தப்பு இல்லை.

  பின்னூட்டத்தையும் தொடர்ந்து படிப்பதற்கு நன்றிங்க.

  ReplyDelete
 42. பழைய தில்லி காணக் கிடைத்தது நன்றி.

  ரோஷ்ணியின் மழலை அமுதம் மகிழ்ச்சியைத் தருகின்றது.

  ReplyDelete
 43. வாங்க மாதேவி,

  எல்லாவற்றையும் ரசித்து உங்க கருத்தை சொன்னதற்கு நன்றிங்க.

  ReplyDelete
 44. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

  ReplyDelete
 45. சென்னையிலேயே விலை ஜாஸ்திதான் ஆதி.12 ரூபாய்.
  குழந்தையின் படம் ரொம்ப அழகாக இருக்கிறது.அதன் மனம் அதைவிட அழகு. லீவு விட்டால் சென்னை வருவீர்களா. எங்கள் வீட்டிற்கும் வரவேண்டும்.

  ReplyDelete
 46. வாங்க கீதமஞ்சரி,

  வலைச்சர அறிமுகத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 47. வாங்க வல்லிம்மா,

  தங்களின் அன்பான அழைப்பிற்கு நன்றிம்மா. மே மாதத்தில் ஊருக்கு வரலாம் என்று இருக்கிறோம். வந்தால் அவசியம் வர முயற்சி செய்கிறோம்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 48. ”அப்பா எல்லா பாப்பாவுக்கும் போட்டோ குடுத்தாங்க டீச்சர். எல்லா போட்டோவிலும் நானும் இருக்கறேன் அப்பா” என்றதும் எனக்கும் அவருக்கும் சிரிப்பு வந்து விட்டது. என்னே குழந்தையின் வெள்ளந்தியான குணம்…//


  ரோஷ்ணியின் வெள்ளந்தியானம் வாழ்க!

  உங்கள் டெல்லி பகிர்வு அருமை.
  நிறைய வருடங்கள் ஒரு ஊரில் இருந்து விட்டால், பின் அந்த ஊர் பிடித்து விடும்.

  ReplyDelete
 49. வாங்க கோமதிம்மா,

  நிறைய பேருக்கு பிடித்து விடுகிறது.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 50. // எனக்குத்தான் பிடிக்கவில்லை… // ஏனோ ?

  //”அப்பா எல்லா பாப்பாவுக்கும் போட்டோ குடுத்தாங்க டீச்சர். எல்லா போட்டோவிலும் நானும் இருக்கறேன் அப்பா” என்றதும் எனக்கும் அவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.// குழந்தயின் மழலைப் பேச்சில் மயங்கார் தான் உண்டோ ?

  ReplyDelete
 51. வாங்க சீனு,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…