Monday, February 27, 2012

எங்க வீட்டு புலாவ்சாம்பார், ரசம் என்று சாப்பிட்டு அலுத்துப் போன நாளிலோ அல்லது வார இறுதி நாளிலோ, அதுவும் இல்லையெனில் நண்பர்களை வீட்டுக்கு சாப்பிட அழைக்கும் போது இரண்டு மூன்று வகையான உணவுகள் செய்ய வேண்டும் என்கிற போதோ நான் இது போன்ற புலாவ் செய்வதுண்டு. புலாவ் எல்லோர் வீட்டிலும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள். எங்க வீட்டில் மசாலா குறைவாக ரொம்ப எளிதான முறையில் செய்வேன்.

தேவையான பொருட்கள் :-

அரிசி – 1 டம்ளர்
காய்கறிகள்தேவையான அளவு
வெங்காயம் – 2
பூண்டு – 2 () 3 பற்கள்
இஞ்சிசின்ன துண்டு
தேங்காய்த் துருவல் – 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4 () 5
சீரகம்சிறிதளவு
உப்புதேவையான அளவு
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
எண்ணெய்தேவையான அளவு
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை :-அரிசியை சிறிது நேரம் வாணலியில் வறுத்து விட்டு தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.  தேங்காய், பச்சைமிளகாய், சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளவும்இஞ்சி-பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்பீன்ஸ், கேரட், பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் ஆகிய காய்கறிகளைத் தேவையான அளவு நறுக்கி எடுத்துக் கொள்ளவும்


ஒரு குக்கரில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினை போட்டு வதக்கவும். வதங்கிய பின் இஞ்சி-பூண்டு விழுதினை போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்பிறகு நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் போட்டு சிறிது நேரம் வதக்கவும். கூடவே புதினா, கொத்தமல்லி ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்பிறகு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும்சற்றே வதங்கியபின், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினையும் சேர்த்துக்கொள்ளவும்
புலாவிற்குத் தேவையான அளவு தண்ணீர் [ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர்] சேர்க்கவும்கொதிவந்தவுடன், ஊற வைத்த அரிசியை களைந்து குக்கரில் போடவும்குக்கரை மூடி மூன்று விசில் வந்தவுடன் நிறுத்தவும்சுவையான புலாவ் தயார்!
மீண்டும் சந்திப்போம்….
நட்புடன்
ஆதி வெங்கட்.
புது தில்லி.


 டிஸ்கி – 1:  கரம் மசாலாவிற்குப் பதிலாக, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம்

 டிஸ்கி – 2: அரிசி சேர்ப்பதற்கு முன் வரை சொன்னது போல் செய்வதை சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள சப்ஜியாகவும் பயன்படுத்தலாம்…..


இந்த ரெசிபியை ஜலீலாக்காவின் இந்த ஈவன்ட்டிற்கு அனுப்பி உள்ளேன்.


33 comments:

 1. சமையலிலும் அசத்த ரீங்க.இந்த வாரம் சமைத்து பார்க்கலாம்

  ReplyDelete
 2. மிகவும் எளிதான புலாவ்.நானும் இதேபோல தான் செய்வேன். இதனுடன் சோயா உருண்டைகளையும் வேக வைத்துப் போட்டால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 3. எங்கூட்லயும் கிட்டத்தட்ட இதேமாதிரிதான்,.. ஆனா தேங்காய்க்கு பதிலா தேங்காய்ப் பாலெடுத்துச் சேர்ப்பேன். வாசனையும் ருசியும் கூடும்.

  ReplyDelete
 4. ருசியான புலாவின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

  ReplyDelete
 5. பதிவு மிகவும் ருசியாக இருந்தது. பாராட்டுக்கள்.

  காய்கறிகள் கலந்த கதம்ப சாதம் என்று சொல்லலாமே!

  [இந்த தலைப்பில் உள்ள பெயர் ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை]

  ReplyDelete
 6. எனக்குத் தெரியாத ஏரியா... படிச்சுப் பார்த்ததை வெச்சு சாப்பிட்டா சுவையா இருக்கும்னு தெரியுது. (உங்க ஊட்டுக்காரரை ரொம்ப குண்டாக்கிடுவீங்க போலருக்கே...) வீட்ல செய்யச் சொல்லி பாக்கறேன். நன்றி.

  ReplyDelete
 7. Enga veettilum seyvaanga. Aana vera per solvanaga. (Maranthuduchchu)

  ReplyDelete
 8. உங்க வீட்டு புலாவ் சூப்பர்.ஆஹா அதிலே கொஞ்சம் சப்ஜி எடுத்து சப்பாத்திக்கும் தொட்டுக்கலாமா?அருமை.டூ இன் ஒன்.

  ReplyDelete
 9. வாங்க கோவை நேரம்,

  செய்து பாருங்கள். தங்கள் வரவிற்கும், கருத்திற்கும் நன்றிங்க.

  ReplyDelete
 10. வாங்க ஜிஜி,

  அடுத்த முறை சோயா உருண்டைகளை சேர்த்து பார்க்கிறேன். தகவலுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 11. வாங்க அமைதிச்சாரல்,

  தேங்காய்ப்பால் சேர்ப்பது நல்ல ருசியைத் தரும். ஆனா இங்கு ஒரு தேங்காய் 20 ரூபாய்க்கு விற்பதால் நான் தேங்காய்ப் பாலெல்லாம் எடுப்பதில்லைங்க. சிறிது துருவலை அரைத்து சேர்ப்பதோடு சரி. உங்க தகவலுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 12. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  தங்களின் வரவிற்கும், கருத்திற்கும் நன்றிங்க.

  ReplyDelete
 13. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  இந்த தலைப்பில் உள்ள பெயர் பிடிக்கவில்லையா உங்களுக்கு..... ஆனா இப்படித் தான் சொல்வாங்க சார்.

  கதம்ப சாதம் என்பது வேறு. புளி கரைத்து விட்டு செய்வது.

  உங்க கருத்துக்களுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 14. வாங்க கணேஷ் சார்,

  உங்க வீட்ல செய்து பார்க்கச் சொல்லுங்க சார். நன்றாக இருக்கும்.

  (உங்க ஊட்டுக்காரரை ரொம்ப குண்டாக்கிடுவீங்க போலருக்கே...)

  அவர் நிஜமாகவே பெரிய தொப்பையுடன் சற்று குண்டு தான்....:))))

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 15. வாங்க மோகன்குமார் சார்,

  இந்த புலாவை ”பிரிஞ்சி சாதம்” என்றும் சொல்வாங்க.

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 16. வாங்க ஆசியா உமர்,

  ஆமாங்க. தேங்காய், பச்சைமிளகாய், மசாலா எல்லாம் சேர்த்திருப்பதால் சப்ஜியாகவும் பயன்படுத்தலாம். நன்றாகவே இருந்தது.

  தங்களின் கருத்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 17. மசாலா எல்லாம் மிதமாக சேர்த்து அருமையான புலாவ் செய்து காட்டி இருக்கின்றீர்கள்.

  ReplyDelete
 18. ஆஹா!இப்பதான் கோபாலகிருஷ்ணன் சார் பதிவில் இட்லிகளை பாத்துட்டு வந்தேன்,இங்கே புலாவ்.ஆமாம் பெயர்கள் நாம் வைத்துக்கொள்வதுதான்.சரி நான் சாப்பிட்டு வந்துடுறேன்.

  ReplyDelete
 19. அருமை அருமை
  போன பதிவு
  கண்ணதற்கு விருந்து
  அடுத்த பதிவு
  நாவினுக்கு விருந்தா ?
  ஜமாயுங்கள்
  பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 20. பதிவே மணமாகவும் ருசியாகவும் இருக்கிறதே,சாப்பிட்டால் எப்படி இருக்கும்!

  ReplyDelete
 21. வாங்க ஸாதிகா,

  நிறைய மசாலா சேர்ப்பது எங்கள் வீட்டில் யாருக்கும் பிடிக்காது. அதனால் மிதமானது தான்...

  தங்களின் வரவிற்கும், கருத்திற்கும் நன்றிங்க.

  ReplyDelete
 22. வாங்க ஆச்சி,

  செய்து பாருங்க. நன்றாக இருக்கும்.

  தங்களின் வரவிற்கும், கருத்திற்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 23. வாங்க ரமணி சார்,

  நாவினுக்கு விருந்து படைத்து நெடுநாட்களாகி விட்டது. அதனால் தான்....

  தங்களின் வரவிற்கும், கருத்திற்கும் தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 24. வாங்க சென்னை பித்தன் ஐயா,

  இந்த புலாவ் சுவையாகவே இருக்கும்.

  தங்களின் வரவிற்கும், கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 25. அன்பின் கோவை2தில்லி,

  உங்க பேரைச் சொல்லி ஆசையா கூப்பிடலாமுன்னு நெனச்சேனுங்க.... ஆனா கண்டுபுடிக்க முடியல..... இன்னைக்குத்தான் உங்க ஊட்டுக்கு (சாரி.. பிளாகுக்கு) வந்தேனுங்க... நல்லா இருக்குங்க.. இன்னைக்கு சமையல்தான்... எனக்குத் தெரிஞ்ச அயிட்டம் தான்.. ஆனாலும் அந்த டிஸ்கி பாருங்க அது தெரியாதுங்க.. அதுக்கு ஒரு நன்றிங்கோவ்......

  அன்புடன்

  பவள சங்கரி.

  ReplyDelete
 26. கரம் மசாலா சேர்ப்பதால் புலாவ் கமகம்க்குமே, சிம்பிள் ளா ஈசியாகவும் இருக்கு.

  ReplyDelete
 27. //இந்த தலைப்பில் உள்ள பெயர் பிடிக்கவில்லையா உங்களுக்கு..... ஆனா இப்படித் தான் சொல்வாங்க சார்.//

  கடைசி எழுத்து ‘வ்’ எனக்கென்னவோ ‘ல்’ போலத் தோன்றுவதால் பிடிப்பதில்லை, மேடம். வேறொன்றும் இல்லை.

  ReplyDelete
 28. எங்கம்மா இப்படிதான் கொஞ்சமா மசாலா சேர்த்து சமைப்பாங்க .
  சப்ஜி ஐடியா நல்லா இருக்கே !!!!!!!.தினம் தினம் சப்பாத்தி சாப்பிடும் என் வீட்டு குட்டிக்கு பயன்படும்

  ReplyDelete
 29. வாங்க பவள சங்கரி,

  என்னுடைய பதிவின் இறுதியில் என் பெயர் இடம் பெற்றிருக்கும்.

  தங்களின் முதல் வரவிற்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 30. வாங்க ஜலீலாக்கா,

  தங்களின் வரவிற்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 31. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  //கடைசி எழுத்து ‘வ்’ எனக்கென்னவோ ‘ல்’ போலத் தோன்றுவதால் பிடிப்பதில்லை//

  நானும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன்.

  மீண்டும் வருகை தந்ததற்கு நன்றி சார்.

  ReplyDelete
 32. வாங்க ஏஞ்சலின்,

  தங்களின் வரவிற்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…