Wednesday, February 15, 2012

பூக்கள் பூக்கும் தருணம்……..பூக்களை பார்த்தாலே எல்லோருக்கும் மனதில் ஒருவித சந்தோஷம், உற்சாகம், புத்துணர்ச்சி எல்லாம் பொங்கி வரும். இங்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தான் அதாவது கடுங்குளிர் சற்றே குறைந்து மிதமான சூழலில் மலர்கள் அணிவகுத்து நிற்கும். சென்ற வாரத்திலிருந்தே என்னவர் அலுவலகத்திலிருந்து வரும் வழியெங்கும் மலர்கள் பூத்து கிடப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். காண வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். இந்த மாதம் தான் ஜனாதிபதி மாளிகையின் உள்ளே இருக்கும் முகல் கார்டனிலும் மலர்களைக் காண அனுமதி வழங்குவார்கள். அங்கு சென்று வந்த பின் அந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.சென்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-க்கு வீட்டிலிருந்து புறப்பட்டு ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சென்றடைந்தோம். அப்போது குளிர் அவ்வளவாகத் தெரியவில்லை… சுற்றுலாவாசிகளின் கூட்டம் சிறிதே இருந்தது. மாளிகையின் கேட் வழியே உள்ளே பார்த்த போது வல்லூறுகள் கும்பலாக அமர்ந்திருந்தது. கிளிகள் பறந்து கொண்டிருந்தன… (எங்க வீட்டின் பின் பக்கத்திலும் வல்லூறுகளின் நடமாட்டம் இருக்கிறது. புகைப்படமெடுப்பதற்குத் தான் சிக்க மாட்டேங்கிறது…)


அப்படியே நார்த் ப்ளாக், செளத் ப்ளாக் எல்லாம் பார்வையிட்டபடி மலர்களின் அழகை ரசித்துக் கொண்டே வந்தோம். செக்யூரிட்டிகளின் பார்வை பார்வையிடும் மக்களின் மீதும் சாலையின் மீதும் என மும்முரமாக இருந்தது. மலர்களை கணவரும், மகளும் மாறி மாறி புகைப்படமெடுத்த படியே வந்தனர். (ஒரே ஒரு மலரை தான் நான் படமெடுப்பதற்குத் கொடுத்தாங்க…. அப்புறம் வேறு சில படமெடுத்தோம்ல…)
அப்படியே காலாற நடந்து பாராளுமன்றத்திற்கு அருகில் சென்று விட்டு அங்கு சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு இந்தியா கேட்டின் அருகில் புல்வெளியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். மணியும் 6.30 ஆகி இருட்டத் துவங்கி விட்டது. இரண்டு மணி நேரத்தில் குளிரும்  கூடிவிட்டது. ஆகவே கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். அன்று எங்களுக்கு ஒரு இனிமையான மாலைப் பொழுதாக கழிந்தது..

தில்லியில் டிசம்பர் மாதத்திலிருந்து குளிர் வாட்டி எடுக்கிறது. மிதமாக இருக்கும் வரை சமாளிக்கலாம். ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் நண்பர்களை பார்க்கும் போது சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிகம் என்பார்கள்… ஆனால் 21 வருடமாக தில்லியில் இருக்கும் என் கணவர் அப்போதெல்லாம் இருந்த குளிரில் பாதி கூட இப்போது இல்லை என்பார்….

ஆனா…குளிர் குளிர் தான், நடுங்குவது நடுங்குவது தான்… ஊரிலிருந்து யாராவது தொலைபேசியில் பேசும் போது ”என்ன குளிர் அதிகமா… குரலே நடுங்குது!” என்று கேட்பார்கள்.

இப்போ பரவாயில்லை…மழை ஒருநாள் சிறிதளவு தூறியது… இது குளிரை அதிகபடுத்தும். சிம்லாவிலும் பனிப்பொழிவு இருப்பதால் குளிர் மார்ச் வரை தொடரும் என்கிறார்கள்.  பார்க்கலாம்…

இந்த மாதம் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் உலக புத்தக கண்காட்சி இருபத்தி ஐந்தாம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கிறது.  தமிழகத்திலிருந்து இரண்டு மூன்று பதிப்பகங்களாவது வந்தால் நன்றாக இருக்கும்.  அப்ப தானே நாங்க தமிழ்ப் புத்தகங்களை வாங்க முடியும். பார்க்கலாம் யார் வருகிறார்கள் என்று! 

மீண்டும் சந்திப்போம்,


ஆதி வெங்கட்
புது தில்லி.

48 comments:

 1. இனிமையான அழகான பூக்களின் பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. குழந்தைகள் பூக்கள் இவைகளையெல்லாம்
  எப்போது பார்த்தாலும் நம்மில்ஒரு உற்சாகம் பூப்பதை
  நிச்சயம் யாராலும் தவிர்க்க இயலாது
  மனம் கவர்ந்த படங்கள் பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. ப்பூகள் எல்லாமே அழகு. குளிர்காலம் நல்லா இருக்குமே நாங்கல்லாம் மத்யப்பிரதேசத்தில் இருந்தப்போ குளிர் வாட்டி எடுக்கும் வாயைத்திறந்தாலே புகையா வரும் விடும் மூச்சு காத்துக்கூட புகையா தன் வரும் சாய் , காபில்லாம் அடுப்பிலிருந்து கீழ இறக்கினதுமே ஆறிவிடும் ஆனாகூட குளிர் நல்லா இருக்கும்.

  ReplyDelete
 4. படங்களும் பகிர்வும் மிக அருமை.

  குறிப்பாக சாமரங்களை அடுக்கி வைத்த மாதிரி நிற்கிற மரம் ரொம்ப அழகு:)! [பெயர் என்னவோ?]

  புத்தகக் கண்காட்சி குறித்தும் பகிர்ந்திடுங்கள்.

  ReplyDelete
 5. அது என்ன மரம்? வித்தியாசமாவும், புதுசாவும் இருக்கு?

  ReplyDelete
 6. //பூக்களை பார்த்தாலே எல்லோருக்கும் மனதில் ஒருவித சந்தோஷம், உற்சாகம், புத்துணர்ச்சி எல்லாம் பொங்கி வரும். //

  ஆமாம் ஆதி.

  படங்கள் மிக அழகாக இருக்கு.ரோஷிணி குட்டி படம் எல்லாம் எடுக்க ஆரம்பிச்சுட்டாளா?

  ReplyDelete
 7. அருமையான புகைப்படங்கள். CM-க்கும் CG-க்கும் வாழ்த்துக்கள்.

  //21 வருடமாக தில்லியில் இருக்கும் என் கணவர் அப்போதெல்லாம் இருந்த குளிரில் பாதி கூட இப்போது இல்லை என்பார்….//

  குளிர்விட்டுப் போயிருக்கும். இடை இடையே கொஞ்சம் மிரட்டி வையுங்கள். அப்படியாவது நடுங்குகிறாரா பார்ப்போம்.

  ReplyDelete
 8. பூத்துக்குலுங்கும் பூக்கள் போன்ற அழகிய பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. பூக்களின் பகிர்வு அருமை.குளிர் கால அனுபவ பகிர்வு.
  அங்கு நடக்கும் புத்தக கண்காட்சிக்கு கட்டாயம் தமிழகத்தின் பெரிய பதிப்பகங்கள் கலந்து கொள்ளும் என்பதில் ஐயமில்லை சகோதரி.வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. அழகழகான மலர்கள் மனதைப் பறித்தன. (எனக்குத் தான் போட்டோ எடுக்கவே தெரியல...) குளிர் அதிகமா அங்கே... இங்கே சென்னையில் வெயில் காய்ந்து கொண்டல்லவா இருக்கிறோம். மனதிற்கு ரம்யமாய் அமைந்திருந்தது இப்பகிர்வு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. Photos are nice. Hope all of you had a good time.

  If you want good books, whenever you come to Chennai, you can buy good books.

  ReplyDelete
 12. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 13. வாங்க ரமணி சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாக்குகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 14. வாங்க லஷ்மிம்மா,

  மிதமா இருக்கும் வரை நல்லா இருக்கு. ரொம்ப ஜாஸ்தியானா கொஞ்சம் கஷ்டமா இருக்கு. இங்கயும் புகை தான். எல்லாம் ஆறிதான் போய் விடும்...

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிமா.

  ReplyDelete
 15. வாங்க ராமலஷ்மி,

  அந்த மரத்தின் பெயர் என்னவென்று தெரியவில்லை. அழகா இருந்தது. அதில் உள்ள காய்கள் ப்ரவுன் கலரில் கொத்து கொத்தாக இருந்தது.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 16. வாங்க ஹுசைனம்மா,

  பெயர் தெரியலைங்க...வித்தியாசமா இருந்தது....

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 17. வாங்க ராம்வி,

  நாங்கள் எங்கு சென்றாலும் இப்போது ரோஷ்ணி தான் எங்கள் இருவரையும் நிற்க வைத்து எடுக்கிறாள். அன்று கூட பாராளுமன்றத்திற்கு முன்னும், நார்த் ப்ளாக்கின் முன்னும் நிற்க வைத்து அழகாக எடுத்தாள். ஆர்வம் இருக்கிறது....

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 18. வாங்க ஈஸ்வரன் சார்,

  புகைப்படங்களுக்கான வாழ்த்துகளை உங்கள் நண்பருக்கும், ரோஷ்ணிக்கும் தான் சொல்ல வேண்டும்.....

  //குளிர்விட்டுப் போயிருக்கும். இடை இடையே கொஞ்சம் மிரட்டி வையுங்கள். அப்படியாவது நடுங்குகிறாரா பார்ப்போம்.//

  ஓ! இந்த வம்புக்கு நான் வரலை....

  ReplyDelete
 19. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 20. வாங்க மதுமதி சார்,

  சென்ற முறை கிழக்கு பதிப்பகம், நியூ செஞ்சுரி ஆகியவை வந்திருந்தன.... இந்த முறையும் வந்தால் நன்றாக இருக்கும்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 21. வாங்க கணேஷ் சார்,

  என்னை விட என் ஏழு வயது மகள் நன்றாக எடுப்பாள்.... தங்களுக்கும் விரைவில் நன்றாக எடுக்க வந்து விடும்.
  இப்போ குளிர் பரவாயில்லை. நடுக்கம் இல்லை...

  தங்களது முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 22. வாங்க மோகன்குமார் சார்,

  எப்பொழுதுமே ஊருக்கு வரும் போதெல்லாம் சென்னையிலும், திருச்சியிலும் அவ்வப்போது புத்தகங்கள் வாங்குவதுண்டு. இருந்தாலும் இருக்கும் லக்கேஜ்களுடன் .....எடுத்து வருவதை நினைத்தால்...

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 23. அழகான படங்கள்,நான் டில்லியில் இருந்தபோது ஒரு முறை போன நினைவு வந்தது

  ReplyDelete
 24. பூக்கள் ரொம்ப அழகாருக்கு. அந்த சடாமுடி மரத்தோட பேரு என்னங்க?..
  பைன் குடும்பத்தைச் சேர்ந்தது போலிருக்கு.

  ReplyDelete
 25. படங்கள் அருமை.பகிர்வும் அருமை.

  ReplyDelete
 26. வண்ண மயமாக பூத்துக்குலுங்கும் மலர்கொத்துக்களுடன் டெல்லியை வெகு அழகாய் சுற்றி காட்டி இருப்பது அருமை.

  ReplyDelete
 27. பூக்கள் பூக்கும் தருணமுன்னு அழகா தலைப்புக் கொடுத்திருக்கீங்க. கூடவே கண்ணில் ஒத்திக்கொள்ளும் அளவு அழகழகான மலர்களைத் தூவி பிரமாதப்படுத்தியிருக்கீங்க. மொத்தத்தில் மனம் மலரச் செய்த பதிவு. பாராட்டுகள்.

  ReplyDelete
 28. ஆனால் 21 வருடமாக தில்லியில் இருக்கும் என் கணவர் அப்போதெல்லாம் இருந்த குளிரில் பாதி கூட இப்போது இல்லை என்பார்….//
  அவருக்கு இப்ப குளிர் விட்டுப் போச்சு போல இருக்கே?

  ReplyDelete
 29. அந்த மரம் அழகா இருக்கு.பனிக்காலத்தில் இந்த இடங்கள் மேலும் அழகாக எனக்கு தெரியும்.புத்தக கண்காட்சி எப்போது,எங்கே?

  ReplyDelete
 30. வாங்க சென்னை பித்தன் சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 31. வாங்க அமைதிச்சாரல்,

  மரத்தின் பெயர் தெரியலைங்க. பைன் குடும்பத்தை சேர்ந்ததா.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 32. வாங்க ஆசியா உமர்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 33. வாங்க ஸாதிகா,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 34. வாங்க கீதமஞ்சரி,

  மதராசப்பட்டிணம் படத்தில் வரும் ”பூக்கள் பூக்கும் தருணம்” பாடல் எனக்கு பிடிக்கும். இந்த இடுகைக்கும் அது ஒத்து வந்தது. புகைப்படங்கள் கணவர் மற்றும் மகளின் கைவண்ணம்...
  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 35. வாங்க கே.பி.ஜே சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 36. வாங்க ஆச்சி,

  புத்தக கண்காட்சி பற்றி பதிவில் போட்டிருக்கிறேனே.... 25ஆம் தேதி முதல் ஆரம்பிக்கிறது....
  எப்பொழுதும் போல் பிரகதி மைதானம் தான்....

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 37. பூக்களை பார்த்தாலே எல்லோருக்கும் மனதில் ஒருவித சந்தோஷம், உற்சாகம், புத்துணர்ச்சி எல்லாம் பொங்கி வரும்.//

  ஆம் ஆதி நீங்கள் சொல்வது உண்மை.
  மலர்கள் மனதுக்கு புத்தணர்ச்சியும் தரும், மலர் மருத்துவம் என்று மருந்தும் தருகிறது.

  பூக்கள் படங்கள் அருமை.

  புத்தக கண்காட்சியில் நல்ல புத்தங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 38. அழகாய் மலர்ந்த மலர்களைபோன்ற பதிவு .நேற்றே வந்தேன் .நெட் முழுதும் தேடினேன் அந்த மரத்தின் பெயரை .

  பெயரை கேள்விபட்டிருக்கிறேன் நினைவுக்கு வந்ததும் சொல்கிறேன்

  ReplyDelete
 39. chinese pony tail palmtree or mexican weeping pine tree இந்த இரண்டில் ஏதோ ஒன்று என்று நினைக்கிறேன் .but i am not sure .

  ReplyDelete
 40. விருதுபெற விரைந்து வாருங்கள்!
  www.kanakkayan.blogspot.in

  கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

  ReplyDelete
 41. அழகான பூக்களின் பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 42. வாங்க கோமதிம்மா,

  மலர் மருத்துவம்....ஆமாம். படித்திருக்கிறேன்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 43. வாங்க ஏஞ்சலின்,

  மெனக்கேட்டு நெட்டில் தேடி தகவல்களை சேகரித்து சொன்னதற்கு நன்றிங்க.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 44. வாங்க இராமன். இ.சே ஐயா,

  தாங்கள் எனக்களித்த விருதுக்கு மிக்க நன்றி .

  ReplyDelete
 45. வாங்க ரிஷபன் சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 46. புது டில்லி நான் பார்க்க விரும்பும் இடம். டில்லியை பற்றி விளக்கமாக ஒரு பதிவு எழுதுங்கள். இதற்க்கு முன் எழுதி இருந்தால் லிங்க் தாருங்கள். இந்தப் பதிவு அருமை

  ReplyDelete
 47. வாங்க சீனு,

  தில்லி பற்றி நான் எழுதிய பதிவுகளின் சுட்டி இதோ,

  http://kovai2delhi.blogspot.in/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF

  மற்றும் என் கணவரின் தலைநகரிலிருந்து என்ற தொடரின் சுட்டி இதோ,

  http://www.venkatnagaraj.blogspot.in/search/label/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81...

  இங்கு உங்களுக்கு தில்லி பற்றிய முழு தகவல்களும் கிடைக்கும். முடிந்த போது படித்துப் பாருங்கள்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…