Monday, February 13, 2012

விருது – பெற்றதும் – தருவதும்….


வலைப்பூவில் எழுத ஆரம்பித்த பிறகு எனக்கு இப்போது மூன்றாம் விருது கிடைத்திருக்கிறது – சக பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி  அவர்கள் எனக்கு “The Versatile Blogger Award” தந்திருக்கிறார்.  நமது படைப்புகளைப் படித்து ரசிப்பவர்கள், நமக்கும் விருது கொடுத்ததால், அதை பெற்ற பிறகு மேலும் நல்ல பயனுள்ள பதிவுகளைத் தொடர்ந்து தர வேண்டும் என்ற உந்துதலும், உற்சாகமும் கிடைக்கும் இல்லையா…இந்த விருதை எனக்களித்த திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. 

விருது தரும்போது, இதை நாம் ஏற்றுக் கொள்வதற்கு அர்த்தமாக நமக்கு பிடித்த ஏழு விஷயங்களை பற்றி எழுதவும், மேலும் ஐந்து சக பதிவர்களுக்கு இவ்விருதினை அளிக்கவும் வேண்டுமாம்.

முதலில் எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களை பார்க்கலாம்... 

1)   நல்ல இசையை கேட்க மிகவும் பிடிக்கும். இளையராஜாவின் பாடல்கள் என்றால் ஆஹா…

2)   நாளிதழ்கள், வார, மாத பத்திரிக்கைகள், நாவல்கள் என்று வாசிக்க மிகவும் பிடிக்கும். அதுவும் அமைதியான சூழலில்...

3)   சமையல் செய்வது பிடித்தது. தொலைக்காட்சியில் பார்த்ததில், பத்திரிக்கைகளில் படித்ததில் நல்ல ரெசிபியாக தோன்றினால் உடனே அதை செய்து பார்க்கத் தோன்றும். 

4)   கை வேலைகள் செய்வது, ஓவியங்கள் வரைவது…

5)   வெட்டு, குத்து இல்லாத நல்ல திரைப்படங்களைப் பார்க்கப் பிடிக்கும்.

6)   சில்லென்ற காற்றுடன் பெய்யும் மழையில் நனைவது மிகவும் பிடித்தமான ஒன்று.

7)   சாதா மல்லிகைக்கே வழியில்லாத தில்லியில் இருந்து கொண்டு ‘ஜாதி மல்லி’ மொட்டினை மலர மலரத் தொடுத்து தலையில் சூடிக்கொள்ள ஆசை….

ஆசைகளுக்கு அளவே இல்லை – அடுக்கிக் கொண்டே போகலாம்…  ஆனால் “ஆசையே துன்பத்திற்குக் காரணம்” அப்படின்னு புத்தர் சொல்லிட்டதால் அளவோடு ஆசைப்படுவோம்….

இந்த விருதை கீழ்க்கண்ட ஐவருக்கும் வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.

1.   அக்கம் பக்கம் – சகோ அமுதா கிருஷ்ணா
2.   என் இனிய இல்லம் – சகோ ஸ்நேகிதி
3.   சமைத்து அசத்தலாம் – சகோ ஆசியா உமர்
4.   வீடு திரும்பல் – மோகன்குமார் சார்
5.   கையளவு மண் – வேங்கட ஸ்ரீனிவாசன் அண்ணாஇந்த விருது கிடைத்ததையே பகிர்ந்து கொள்ளாமல் இருந்த எனக்கு இன்னுமொரு சந்தோஷ அதிர்ச்சி.  சகோதரி ரமா ரவி அவர்கள் எனக்கு நான்காவது விருதாக Leibster Blog என்ற விருதினை அளித்துள்ளார். இந்த விருதினை அளித்த ரமா ரவி அவர்களுக்கு நன்றி. 

இவ்விருதினை கீழ்க்கண்ட ஐவருடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1.   சமையல் அட்டகாசங்கள் – ஜலீலா கமல் அவர்கள்.
2.   பாட்டி சொல்லும் கதைகள் – ருக்மணி சேஷசாயி அவர்கள்.
3.   சிறுமுயற்சி – முத்துலெட்சுமி அவர்கள்.
4.   வார்த்தைச் சித்திரங்கள் – காயத்ரி ஞானம் அவர்கள்.
5.   மரகதம் – புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள்.

விருது வழங்குதலை தொடருங்களேன்… 

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

32 comments:

 1. வாழ்த்துகள்,மேலும் பல விருதுகள் வெல்ல வாழ்த்துகள்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள், ஆதி.

  ReplyDelete
 3. விருது பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. உங்களுக்கு விருது அளித்தோருக்கும் வாழ்த்துகள்.
  உங்களால் விருது அளிக்கப்பட்டோருக்கும் வாழ்த்துகள்.
  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. ஓ எஞ்சாய்ப்ப்பா....:)
  தேங்க்ஸ் எனக்கும் ஷேர் செய்ததுக்கு..

  சாதா மல்லிகை கிடைக்காத ஊருல ஜாதி மல்லி பேராசையே தான்.. எனக்கும் அதை ரெண்டு பக்கமும் தெரிய அள்ளி வச்சிக்கனும்..:)

  ReplyDelete
 6. நிறைவான வாழ்த்துகள்..

  ReplyDelete
 7. மிக்க நன்றி.ஆதி.விருது பெற்ற அனைவருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் ஆசைகள் நியாயமானவைகள் தான்.அருமை.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் ஆதி :-))

  ReplyDelete
 9. Thank you so much.

  Congrats to you for getting awards !

  ReplyDelete
 10. வாழ்த்துகள் பெற்றதற்கும், விருது வழங்கியதற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. வாழ்த்துகள் ஆதி. இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.
  இருவருக்கும் இரண்டு விருதுகள். கண்ணு படப் போகுதையா கவுண்டரேன்னு பாடப் போறேன்;)

  ReplyDelete
 12. வாழ்த்துக‌ள் ஆதி! பெறுவ‌தும் த‌ருவ‌தும் தான் எத்துணை இன்ப‌ம‌ய‌மாய் இருக்கிற‌து!!

  ReplyDelete
 13. நன்றிகளுடன் வாழ்த்துகள் ஆதி.

  விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. எங்கப் பாத்தாலும் ஒரே “விருது”கோலம்தான் போல!! வாழ்த்துகள் -வாங்கியவர், வழங்கியவர் - எல்லாருக்கும்!! :-)))))

  ReplyDelete
 15. விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடமிருந்து பெறும் அன்பர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துகள்.உங்களால் விருத்டு வழங்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. இந்த இடுகைக்கு கருத்துரையிட்டு வாழ்த்துகளை தெரிவித்த,

  @ஆச்சி
  @ராம்வி
  @விச்சு
  @வை.கோபாலகிருஷ்ணன்
  @முத்துலெட்சுமி
  @இராஜராஜேஸ்வரி
  @ஆசியா உமர்
  @ராஜி
  @மோகன்குமார்
  @லஷ்மி
  @வல்லிசிம்ஹன்
  @நிலாமகள்
  @சமுத்ரா
  @சீனு
  @ஹுசைனம்மா
  @மதுமதி
  @சென்னை பித்தன்
  @சந்துரு

  அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 18. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. விருது பெருமை கொள்கிறது
  தாங்கள் விருது பெற்றமைக்கும்
  தங்களிடம் இருந்து அதனை பகிர்ந்து கொள்பவர்களுக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. விருதுக்கு வாழ்த்துகள்.. பெற்றவர்களுக்கும் அளித்தவருக்கும் :-)

  ReplyDelete
 21. விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.
  எனக்கு விருது வழங்கியதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 22. வாழ்த்துகளை தெரிவித்த,

  @ஏஞ்சலின்
  @ரமணி சார்
  @அமைதிச்சாரல்
  @ஜிஜி

  அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 23. உங்கள் அன்பான விருதுக்கு மிக்க நன்றி
  ரொம்ப நாட்களுக்கு பிற்கு இப்ப எல்லோருடைய பிலாக்கிலும் விருதுகள்.

  ReplyDelete
 24. @ஜலீலா கமல்: நன்றி.

  ReplyDelete
 25. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்., நீங்கள் விருது கொடுத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. நிங்கள் தந்த அன்பான விருதுக்கு மிக்க நன்றி.. விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. வாங்க கோமதிம்மா,

  நன்றி.

  வாங்க சிநேகிதி,

  நன்றிங்க.

  ReplyDelete
 28. ஆஹா எனக்கு விருது..இன்றைக்கு தான் பார்க்கிறேன் ஆதி.இரண்டு மாதங்களாக நெட் வீட்டில் இல்லை.இந்த விருதினை எப்படி என் ப்ளாக்கில் போட்டு கொள்வது!!!!நன்றி ஆதி

  ReplyDelete
 29. உங்களுடைய விருதுகளுக்கும் இன்னும் பல விருது பெறப் போவதற்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…