Wednesday, February 22, 2012

மாளிகை தோட்டத்தில் - 3 [நிறைவுப் பகுதி]

சென்ற பகுதியில் CIRCULAR GARDENல் இருந்தோமல்லவா? அங்கு மலர்களோடு நாமும் மலர்களாய் வெளியே வரவே விருப்பமின்றி இருந்திருப்போம். முக்கிய தோட்டத்தை விட்டு வெளியே வந்த பின்னர் அங்கு ஜனாதிபதி மாளிகையின் கூட்டுறவு சுய தொழில் முன்னேற்ற குழுவினரால் நடத்தப்படும் மூன்று ஸ்டால்கள் இருந்தன. உரங்கள், காகித பைகள், புக் மார்க்குகள், ஜனாதிபதி மாளிகையின் படத்தை பிரிண்ட் செய்துள்ள டீ சர்ட்கள், மரப் பேனாக்கள், டைரிகள், மாளிகையின் படமிடப்பட்ட WALL HANGING என பலதரப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.அடுத்த ஸ்டாலில் இருந்த காய்கறிகள் இயற்கை உரத்தால் வளர்க்கப்பட்டவை. இவை இங்கேயே பயிரிடப்பட்டவை. காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், லெட்யூஸ், முள்ளங்கி, நூல்கோல், கேரட், செலரி, பேசில், பச்சை பட்டாணி, போன்ற பலவகையானவை. ஒரு காலிஃப்ளவர் நிச்சயம் 3 கிலோவுக்கு மேலே இருக்கும். அது போல் முள்ளங்கி ஒன்று குண்டாக இரண்டு அடி அளவுக்கு இருந்திருக்கும்.

அடுத்து நாம் செல்லப் போவது SPIRITUAL GARDENக்கு. வேதபுராணங்களில் இருக்கும் சில மரங்களை இங்கு பார்க்க முடியும் என அறிவிப்புப் பலகை சொல்கிறது. நுழைவிலேயே ருத்ராட்ச மரம் இருக்கிறது. வேப்ப மரம், சந்தனம், எலுமிச்சை, பேரீச்சை, மருதாணி, வில்வம், மாதுளை, மா, நெல்லி போன்ற பல. இந்த தோட்டச் சுற்று முடிந்து வெளியே வந்தவுடன் பொது மக்களுக்கென ஒரு பெரிய மேஜையில் குடிதண்ணீர் DISPENSERS. அருகில் டிஸ்போஸபிள் டம்ளர்கள். மேஜைக்கு கீழே உபயோகித்த டம்ளர்களை போடுவதற்கு குப்பைக் கூடைகள்.

நாங்களும் தண்ணீரை குடித்து விட்டு நடந்து சிறிது தூரம் வந்ததும் ஓய்வெடுப்பதற்கு என அமைத்திருந்த LOUNGEல் அமர்ந்தோம். ஒன்றரை மணிநேரம் தோட்டத்தை சுற்றி பார்த்திருக்கிறோமே!  சற்று தூரத்திலேயே ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனித்தனியாக நடமாடும் கழிப்பறைகள்.

கிளம்பி வெளியே வருவதற்கான பாதையில் வரும் போது ஜனாதிபதி மாளிகையின் உள்ளேயே வேலை செய்பவர்களுக்கென கட்டியுள்ள குடியிருப்புகள் தெரிந்தது. அலுவலகங்களும் உள்ளது. வழியெங்கும் சூரிய சக்தியால் எரியக்கூடிய விளக்குகள். ஒரு வயதான பாட்டியை வீல் சேரில் வைத்து அழைத்து வந்து கொண்டிருந்தார்கள். இந்த மாதிரியான அமைதியான சூழலும், மலர்களும் அவருக்குள் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தலாம் அல்லவா?


முதலுதவி செய்வதற்கென சில அறைகளும், ஒரு ஆம்புலன்சும் இருந்தது. வெளியே வந்த பின்னர் பார்த்தால் பயங்கரமான கூட்டமாக இருந்தது. தோட்டத்தின் உள்ளே எங்கேயுமே அமரக்கூடாது. அதனால் மக்கள் பார்த்துக் கொண்டே போய்க் கொண்டிருப்பார்கள். நான் இந்த கார்டனுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும். சென்ற முறை வந்த போது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இருந்த போது அவர் மாலை வேளையில் உட்கார்ந்து ஏதேனும் எழுதுவதற்காக ஒரு குடில் போல அமைத்திருந்தனர். அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் மரத்தாலானவையாக இருந்தது. இப்போது அந்தக் குடில் இல்லை.

அங்கிருந்தபடியே என்னவர் அலுவலகம் (ஞாயிற்றுக்கிழமை கூட) செல்ல வேண்டி இருந்ததால், ஒரு ஆட்டோவை பிடித்து நானும் ரோஷ்ணியும் வீடு வந்து சேர்ந்தோம். இன்றைய நாள் இனிதாக அமைந்தது.

இந்த தோட்டத்தின் மூன்று பகுதிகளும் உங்க எல்லாருக்கும் மிகவும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்…..


மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்


ஆதி வெங்கட்.

தொடர்புடைய பதிவுகள்:23 comments:

 1. இந்த மூன்று பதிவுகளையும் வெகுவாக ரசித்தேன் என்று சொல்லிக்கறேன்.

  இப்படிக்கு நியூஸியின் தோட்ட நகரில் இருந்து 'துளஸி'

  ReplyDelete
 2. இந்த தோட்டத்தின் மூன்று பகுதிகளும் உங்க எல்லாருக்கும் மிகவும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்…../

  very nice.. Interesting ..

  ReplyDelete
 3. மன நிறைவு தந்து மகிழ்வளித்த நல்ல பதிவு.

  இருந்தால் ஜனாதிபதி மாளிகையில் இருக்க வேண்டுமோ! என நினைக்க வைத்தது.

  பிறகு, அதெல்லாம் வேண்டாம், இப்போது போலவே நிம்மதியாக இருப்போமே என்றும் தோன்றியது.

  ReplyDelete
 4. நல்லா சுத்துனதுல கால் வலிக்குது எங்களுக்கும் :-)

  ReplyDelete
 5. மனமகிழ்ச்சி தந்த பதிவு.

  ReplyDelete
 6. 3 பகுதிகளும் பிடித்திருந்தது.

  கோபாலகிருஷ்ணன் சார் அவர்களின் கடைசி வரிகளில் மனதார சிரித்துவிட்டேன்.

  ReplyDelete
 7. வாங்க டீச்சர்,

  நீங்க மூன்று பதிவுகளையும் ரசித்ததற்கு மிக்க நன்றி டீச்சர்.

  ReplyDelete
 8. வாங்க இராஜராஜேஸ்வரி,

  ரசித்ததற்கு மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 9. வாங்க வை.கோபாககிருஷ்ணன் சார்,

  உங்க பின்னூட்டத்தை ரசித்தேன் சார். ஆனா அங்கிருந்தால் கடும் கட்டுப்பாடுகளுக்கு நடுவில் தான் நாம் இருப்போம். நிம்மதியாக இருக்க முடியாது. ...

  ReplyDelete
 10. வாங்க அமைதிச்சாரல்,

  கால் வலிக்குதா...சற்று ஓய்வு எடுத்துக்கோங்க இந்த LOUNGE il...

  ReplyDelete
 11. வெகு அருமையாக எழுதி இருக்கிறீர்கள் ஆதி. ஒரு பகுதி விடாமல் நன்றாக விவரித்தீர்கள். எனக்கு ஸ்பிரிச்சுவல் கார்டன் ரொம்பப் பிடித்தது. ஒரு நாள் நானும் வந்து பார்க்கிறேன்:)

  ReplyDelete
 12. வாங்க சென்னைபித்தன் ஐயா,

  மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 13. வாங்க ஆச்சி,

  மிக்க நன்றிப்பா.

  ReplyDelete
 14. வாங்க வல்லிம்மா,

  அவசியம் இந்த சீசனில் வந்து பாருங்க.... மனதுக்கு இதம் தரும் இடம் இது.....

  ReplyDelete
 15. மனம் ஒரு திமிரெடுத்த கிடா
  அது வளர்ந்த்தவன் மேல் பாய்வதிலேயே
  மூன்று பதிவுகளும் மிக மிக அருமை
  படங்களும் விளக்கங்களும் நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற
  உணர்வைக் கொடுத்தன
  நீங்கள் டெல்லியில் இருப்பதும்
  தான் பெற்ற இன்பம் இவ்வையமும் பெறட்டும் என்கிற
  உயரிய எண்ணம் கொண்டிருப்பதும் உங்களைத் தொடர்கிற
  எங்க்களுக்குத்தான் அதிக பயன் தருகிறது
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. வாங்க ரமணி சார்,

  தங்களின் அழகான பின்னூட்டம் என்னை மகிழ்வித்தது....

  சென்ற இடத்தை பற்றி சொல்லிக் கொள்வதில் எனக்கு ஒரு வித சந்தோஷம்.

  ReplyDelete
 17. உங்களுடன் நடந்து நாங்களும் எல்லாவற்றையும் ரசித்த உணர்வு. படங்களுடன் சிறு விவரங்களையும் பதிவிட்டது மிகவும் சிறப்பு. பாராட்டுகள் ஆதி.

  ReplyDelete
 18. பெரிய தோட்டத்தில் காலாற நடந்து நல்ல காற்றை சுவாசித்த உணர்வு. வாழ்க! வாழ்க!

  //ஒரு காலிஃப்ளவர் நிச்சயம் 3 கிலோவுக்கு மேலே இருக்கும். அது போல் முள்ளங்கி ஒன்று குண்டாக இரண்டு அடி அளவுக்கு இருந்திருக்கும்.//


  ஒருவேளை ‘Obesity’ ஆக இருக்குமோ! ராசா வீட்டுக் கன்னுக்குட்டிதான் குண்டா இருக்கணுமா? ராசாத்தி தோட்டத்து காலிப்பூக்குட்டியும் குண்டாத்தான் இருக்கும்.

  ReplyDelete
 19. வாங்க கீதமஞ்சரி,

  என்னுடன் தோட்டத்தை சுத்தி பார்த்ததுக்கு மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 20. வாங்க ஈஸ்வரன் சார்,

  //ஒருவேளை ‘Obesity’ ஆக இருக்குமோ! ராசா வீட்டுக் கன்னுக்குட்டிதான் குண்டா இருக்கணுமா? ராசாத்தி தோட்டத்து காலிப்பூக்குட்டியும் குண்டாத்தான் இருக்கும்.//

  சார் எப்படி சார். உட்கார்ந்து யோசிப்பீங்களோ......

  ReplyDelete
 21. // ஒரு வயதான பாட்டியை வீல் சேரில் வைத்து அழைத்து வந்து கொண்டிருந்தார்கள். //

  யார் அந்த வயது பாட்டி தெளிவாகப் பார்த்தீர்களா அது நம் ஜனாதிபதி பிரதீபா பாட்டியாக இறுகப் போகின்றது.

  அருமையான பதிவு பல புதிய விசயங்களையும் அந்த தோட்டத்தையும் பற்றி தெரிந்து கொண்டேன்

  ReplyDelete
 22. வாங்க சீனு,

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…