Monday, February 20, 2012

மாளிகை தோட்டத்தில் - 2


சென்ற பகுதியில் நாம் ஹெர்பல் கார்டனில் இருந்தோம் இல்லையா? இப்போ அடுத்த பாதை நம்மை MUSICAL FOUNTAINக்கு அழைத்துச் செல்கிறது. வழியெங்கும் காவல் துறையினர், HOME GUARD ஆகியோர்  புல்லில் நடக்கக் கூடாது, பூக்களையோ, செடிகளையோ தொடக்கூடாது என்று மக்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தனர். ஹிந்தி திரைப்பாடல்களுக்கு ஏற்றபடி நீரூற்றுகள் நடனமாடுவது போல் இருந்தது. இங்கும் ரோஜாக்களும் விதவிதமான மலர்களும் கண்களைக்  கவர்ந்தன. இந்த நீரூற்றுக்கு எதிரேயும் LOUNGE இருந்தது. இங்கு அமர்ந்து கொண்டு நீரூற்றுகளை கண்டுகளிக்கலாம்.அடுத்து போன்சாய் கார்டனுக்கு நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம். 1978ல் நடப்பட்ட மரங்களிலிருந்து, 20 வருடங்கள், 16 வருடங்கள் முன்பு நடப்பட்ட ஆலமரம், அரச மரம், ரப்பர் மரம், சீன ஆரஞ்சு மரங்கள், மாதுளை, போகன்வில்லா என்றழைக்கப்படுகிற காகிதப் பூக்கள் என்று பலவகையானவை இருந்தன. ஆனால் இந்த போன்சாய் மரங்களை பார்த்தால் ஏனோ பாவமாக இருக்கிறது. கை, கால்களை மடக்கி சுருட்டி வைத்திருப்பதாக தோன்றுகிறது. தாயின் கர்ப்பத்தில் பத்து மாதங்கள் கை, கால்களை சுருட்டிக் கொண்டு குழந்தை இருப்பதைப் போல் இவை வருடக் கணக்கில்.நாம் இப்போது முகல் கார்டனின் முக்கிய இடமான ஜனாதிபதி மாளிகையின் பின்னே இருக்கும் மிகப்பெரிய தோட்டத்திற்குச் செல்கிறோம். இந்த தோட்டத்தில் எங்கும் அமர அனுமதி கிடையாது. அமைதியை கடைப்பிடித்தால் அதன் உண்மையான அழகை ரசிக்கலாம். இந்த வருட சிறப்பான FLORAL CARPETS நம்மை இருபுறங்களிலும் வரவேற்கிறது. PANSY, டேலியா, ரோஜாக்கள், சாமந்தி, விதவிதமான நிறங்களில் TULIP மலர்கள் என எங்கேயும் எங்கும் மலர்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர். ஒரு ரோஜாவின் பெயர் FOURTH OF JULY, மற்றொன்றுக்கு FIRST PRIZE, ICE BURG, SUPER STAR, DR.BHARAT RAM, TREASURE OF FLOWER, PARADISE,TAJMAHAL, MRINALINI, ARJUN, MODERN ART என விதவிதமான பெயர்கள். பெரிய புல்வெளி, நடுநடுவே FLORAL CARPETS, நீரூற்றுகள் என தோட்டத்தின் அழகு பார்ப்பவர்களை மயக்குகிறது. சீன ஆரஞ்சு காய்த்து குலுங்கியுள்ளது. வெளிநாட்டவர்கள், பள்ளிச் சிறார்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் போன்றோரும் பார்வையிட வந்திருந்தனர்.  இங்கிருந்து அடுத்த தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ”கேக்டஸ்” வகையைச் சேர்ந்த செடிகளும் இருந்தன.இப்போ நாம் ரோஜா தோட்டத்திற்கே செல்லப் போகிறோம். ”ரோஜா…..ரோஜா…..ரோஜா……” என பாடலாம். எங்கெங்கு காணினும் ரோஜா தான். சிவப்பு, பிங்க், வெள்ளை, வெள்ளையில் அங்கங்கே தெளித்தாற் போல பிங்க், மஞ்சள், பிங்கில் தெளித்தாற் போல வெள்ளை. அடடடா… விட்டுவிட்டு வரவே மனம் இல்லை. அடுத்து CIRCULAR GARDEN-க்கு செல்ல வேண்டுமே என்று அரை மனதோடு வெளியேறினோம்.இங்கு ஒரு பெரிய வட்ட வடிவ பாதையெங்கும் மலர்கள். ஒவ்வொரு பூவிலும் வண்டுகள் தேனை பருகிக் கொண்டிருந்தன. இங்கும் டேலியாக்கள் பல வண்ண நிறங்களில், PANSY, சாமந்தி, ரோஜா மற்றும் கொடி போல ஆள் உயரத்தை விட பெரிய கொடியில் மலர்களோ மலர்கள்.  இதே மாதிரி கொடியில் ஆரஞ்சு வண்ணத்தில் மலர்கள், மற்றும் இனிப்பு பட்டாணி [Sweet Peas] செடிகள்.அடுத்து நாம் செல்லப் போகும் இடங்களுக்கு முன் சற்றே இளைப்பாறலாம். ஆகவே அடுத்த பகுதியில் சந்திப்போம்.


 
மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

படங்கள்:  கூகிள் இணையதளத்துக்கு நன்றி.

33 comments:

 1. பாட்டி(ல்)க்கு பதில் வேற எதாவது இளம் மாடல்கள் போட்டோவை போட்டீங்க என்றால் ரசிக்கலாம்.

  ReplyDelete
 2. நல்ல படங்கள்..பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 3. இந்த போன்சாய் மரங்களை பார்த்தால் ஏனோ பாவமாக இருக்கிறது. கை, கால்களை மடக்கி சுருட்டி வைத்திருப்பதாக தோன்றுகிறது.


  எனக்கும் அப்படித்தான பாவமாக இருக்கும்..

  பகிர்வுக்கும் படங்களுக்கும் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. தோட்டம் அழகாயிருக்கு. பராமரிக்க எவ்வளவு உழைச்சிருப்பாங்க என்பது பூக்கள் பூத்துக் குலுங்கறதுலேர்ந்து தெரியுது.

  ReplyDelete
 5. படங்களைப் பாக்கறப்பவே சந்தோஷமா இருக்கு. ஹிந்திப் பாடலுக்கு நடனமாடும் நீரூற்றை மிக ரசித்தேன். உங்க பக்கத்துலயே நடந்து நானும் சுத்திப் பாக்கற ஒரு ஃபீலிங் இருக்கு. தொடருங்க... தொடர்கிறேன்!

  ReplyDelete
 6. பூத்துக்குலுங்கும் பூக்கள் போன்ற அழகான பதிவு.

  தலைநகருக்கே நேரில் வந்து பார்த்தது போல ஓர் மகிழ்ச்சியைத்தந்தது.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 7. படங்கள் மிக அழகாக இருக்கு.ரோஜாக்கு வித்யாசமான பெயர்களை வைத்திருக்கிறார்கள். குறிப்புகள் எடுத்து கொள்வதற்கு தேவையான சாதனங்கள் எடுத்துச்செல்ல இயலவிட்டாலும்,நீங்கள் எல்லாவற்றையும் நினைவு வைத்து எழுதியிருக்கீங்களே. மிகவும் சந்தோஷம்.வாழ்த்துக்கள் ஆதி.

  ReplyDelete
 8. தோட்டம் அழகாயிருக்கு. பராமரிக்க எவ்வளவு உழைச்சிருப்பாங்க என்பது பூக்கள் பூத்துக் குலுங்கறதுலேர்ந்து தெரியுது.
  பதிவு சுவாரசியமா இருக்கு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. உவமைகளுடன் கூடிய எழுத்தும் புகைப்படங்களும் அருமை!!

  ReplyDelete
 10. நேரில் பார்க்க வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் பதிவின் மூலம் அதன் அழகை உணர முடிகிறது.

  ReplyDelete
 11. நல்ல பகிர்வு,தொடருகிறேன்.

  ReplyDelete
 12. போன்ஸாயை என்னாலே கலையாவே ரசிக்க முடியறதில்லைங்க. கொடுமைன்னு இருக்கும்:(

  நான் இங்கே தோட்டத்துலே சுத்துனா நீங்க அங்கே தோட்டத்திலா!!!!!

  ReplyDelete
 13. வாங்க செந்தழல் ரவி,

  தங்களின் வருகைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 14. வாங்க பாச மலர்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 15. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 16. வாங்க அமைதிச்சாரல்,

  ஆமாங்க. அதுனாலத் தான் இத்தனை கட்டுப்பாடு...

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 17. வாங்க கணேஷ் சார்,

  தொடர்வதற்கு நன்றி...

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 18. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 19. வாங்க ராம்வி,

  சென்று வந்தவுடனேயே எழுதி வைத்து விட்டேன். இல்லையென்றால் மறந்து விடுமல்லவா....

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 20. வாங்க லஷ்மிம்மா,

  இங்கிருக்கும் பணியாளர்களின் கடும் உழைப்பு தான் காரணம். வருடம் முழுவதுமே வேலை இருக்கும்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 21. வாங்க மனோம்மா,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 22. வாங்க விச்சு,

  //நேரில் பார்க்க வாய்ப்பில்லை//
  அப்படியெல்லாம் ஒன்றும் தூரம் இல்லை சார். இந்த சீசனில் வந்தால் நீங்க தாரளாமா கண்டு களிக்கலாம்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 23. வாங்க ஆச்சி,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 24. வாங்க டீச்சர்,

  போன்சாய் ரொம்ப பாவம்....
  உங்கத் தோட்டம் படங்களுடன் வெகு அழகு....

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 25. வாங்க சென்னை பித்தன் ஐயா,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 26. //இந்த போன்சாய் மரங்களை பார்த்தால் ஏனோ பாவமாக இருக்கிறது. கை, கால்களை மடக்கி சுருட்டி வைத்திருப்பதாக தோன்றுகிறது.//

  உண்மைதான். பாவமாய்த்தான் இருக்கும்.

  (எங்கள் சிறுவயது சுதந்திரமான கிராமத்து நினைவுகளை எண்ணும் போது, இப்போதைய குழந்தைகளின் உணர்வுகளும் ஒருவித போன்சாய் மரங்களைப் போல்தான்)

  ReplyDelete
 27. வாங்க ஈஸ்வரன் சார்,

  இன்றைய குழந்தைகளுடன் ஒப்பிட்டிருப்பது மிகச்சரியே.....

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 28. படங்களோடு பகிர்ந்தது சிறப்பு..என்னை அழைத்துச் செல்வதைப் போலவே இருந்தது.

  ReplyDelete
 29. வாங்க மதுமதி சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 30. இந்த மாளிகை தோட்டத்தின் நிறைவுப் பகுதி 22ந்தேதியே வெளியிட்டாச்சு. ஆனால் அப்டேட் ஆகவில்லை.

  ReplyDelete
 31. // இந்த போன்சாய் மரங்களை பார்த்தால் ஏனோ பாவமாக இருக்கிறது. // ஆம் எனக்கும் அதே போல் தான் தோன்றும். இந்த மனிதப் பதருகளிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்று கூறுவது போல் அப்பாவியாக இருக்கும். அழகுக்க அவற்றின் கம்பீரத்தைக் குறைத்தது எனக்கு என்னவோ பிடிக்கவில்லை.

  ReplyDelete
 32. வாங்க சீனு,

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…