Friday, February 17, 2012

மாளிகை தோட்டத்தில்-1பூக்கள் பூக்கும் தருணம் என்ற பதிவில்  சொன்னது போல மலர்களைக் காண்பதென்றாலே மனதில் ஒரு உற்சாகம் சந்தோஷம். அதுவும் சின்னச் சின்ன பூக்கள் முதல் பெரிய பெரிய பூக்கள் வரை எங்கு பார்த்தாலும் மலர்கள் என்றால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்? ஒவ்வொரு வருடமும் ஃபிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஜனாதிபதி மாளிகையின் உள்ளே உள்ள தோட்டமான ”முகல் கார்டன்” பொது மக்களின் பார்வைக்கென திறக்கப்படும். இந்த வருடம், ஃபிப்ரவரி பத்தாம் தேதியன்று துவங்கி அடுத்த மாதம் 15-ஆம் தேதி [திங்கள் கிழமைகள் பராமரிப்பிற்கென மூடி இருக்கும்] வரை பொதுமக்கள் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்போது தானே மலர்கள் இங்கு பூத்துக் கிடக்கும். 12-ஆம் தேதி நாங்கள் சென்று வந்தோம். இங்கே உள்ளே செல்ல நுழைவுச் சீட்டெல்லாம் கிடையாது.

இந்த முகல் கார்டன் 15 ஏக்கர் பரப்பளவுடையது. மூன்று வகையான தோட்டங்களைக் கொண்டது. எங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் தான் முகல் கார்டன். காலையில் பத்து மணி வாக்கில் அங்கு சென்று சேர்ந்தோம். ஓரளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது. உள்ளே காமிரா, செல்ஃபோன், பேனா, ஹேண்ட் பேக், உணவுப் பொருட்கள் போன்ற எதையுமே பாதுகாப்பு காரணத்துக்காக எடுத்துச் செல்ல அனுமதியில்லை. முன்பே தெரிந்திருந்ததால் நாங்கள் எதையும் எடுத்துச் செல்லவில்லை.   

தவறிப்போய் நாம் கொண்டு சென்றால் அவைகளை நுழைவு வாயிலுக்கு முன் இருக்கும் நடமாடும் ஸ்கேனிங் மிஷினில் போட்டு எடுத்த பின்னர், தற்காலிகமாக ஏற்பாடு செய்திருக்கும் CLOAK ROOM ல் வைத்து விட்டுச் செல்லலாம். இங்கு நிறைய கூட்டம் இருந்தது.


அடுத்து ஆண்களுக்கெனவும், பெண்களுக்கெனவும் தனித்தனியாக வழிகள் அமைத்திருக்கிறார்கள். அங்கு காவல்துறையினரால் இரண்டு மூன்று இடங்களில் சோதனை செய்யப்படுகிறது. தில்லியில் இந்த மாதிரி சோதனையும், ஸ்கேனிங்கும் மெட்ரோ ரயில் நிலையம், சுற்றுலாத் தலங்கள் போன்ற எல்லா இடங்களிலுமே செய்யப்படுகின்றன.என்னுடைய ஸ்வெட்டரின் இரண்டு பாக்கெட்டுகளில் ஒன்றில் வீட்டுச் சாவியும், மற்றொன்றில் திரும்பி வீட்டுக்குச் செல்ல பணமும் வைத்திருந்தேன். சோதனை செய்யும் போது என்ன இது? என்று காண்பிக்கச் சொன்னார்கள். அதைப் போலவே குழந்தைகளிடமும் சாக்லேட் கொண்டு வந்திருக்கிறார்களா என்று கேட்டும், சோதனை செய்தும் பார்த்தனர். ”சாக்லேட்டினால் என்ன ஆகிவிடப்போகிறது? அதைக் கூட ஏன் இப்படி அனுமதிக்க மறுக்கிறார்கள்?” என்று என்னவரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன பிறகு தான் உண்மையான காரணம் தெரிந்தது.  நம் மக்கள் உள்ளே சென்று சாப்பிட்டு விட்டு அதன் காகித குப்பைகளை போட்டு விட்டால்? பராமரிப்புக்காகத் தான் அனுமதியில்லையென்று. அதுவும் சரி தானே. பாக்கு, பான் பராக் போன்றவற்றுக்கும் அனுமதி கிடையாது. இருந்தால், சோதனையின்போதே வாங்கி தூக்கிப் போட்டு விடுவார்கள்.


உள்ளே நுழையும் போதே சற்று அமர்ந்து ஓய்வெடுப்பதற்கு நாற்காலிகளுடன் LOUNGE அமைத்திருக்கிறார்கள். இதைப் போன்றே நான்கைந்து இடங்களில் இருக்கிறது.  முதலில் நம்மை வரவேற்பது. ஹெர்பல் கார்டன்.  இதன் இடது புறமாக சற்றே தொலைவில் கூட்டமாக மான்களையும், வெள்ளை வெளேரென வாத்துக் கூட்டங்களையும் காண முடிந்தது. மூலிகைத் தோட்டத்தில் துளசி, அஷ்வகந்தா, வெட்டிவேர், கற்றாழை போன்ற 33 வகையான மூலிகைகள் உள்ளன. அதன் தாவரவியல் பெயரும், அதன் சிறப்புத் தன்மையும் பலகையில் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது. மூலிகைகளுக்கு நடுவே ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகிறது. அத்தனை மூலிகைகளின் பெயரையும் ஞாபகம் வைத்துக் கொள்வது கடினமாயிற்றே.  கையில் ஒரு பேனாவும், பேப்பரும் இருந்தா எழுதியாவது வைத்துக் கொள்ளலாமே என்றால் அதற்கும் அனுமதி இல்லையே என்று நினைத்தேன்.அடுத்தது என்ன என்று ஆர்வமாகக் கேட்பவர்களுக்கு, சற்றே பொறுங்கள்.  இன்னும் நிறைய விஷயங்கள் இருப்பதால், அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்…

ஆதி வெங்கட்.
புது தில்லி.
 
டிஸ்கி:  புகைப்படக்கருவிக்கு அனுமதி இல்லாததால் புகைப்படங்களை கூகிளில் இருந்து எடுத்திருக்கிறேன்...   

33 comments:

 1. மலர்ந்து மணம் வீசும் அழகான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. நல்ல நறுமணம் வீசும் அழகிய பதிவு. பாராட்டுகள்.

  ReplyDelete
 3. ஏனுங்கோ... சாக்லேட்‌டையே கொண்டு போகக் கூடாதுன்னு சொல்றாங்கன்னா பான் பராக்கெல்லாம் விடுவாங்களாங்காட்டியும்? நல்ல கெரகம் போங்க... பேப்பர், பேனா கூடவா கொண்டு போவக் கூடாது? ஆனா பூ‌வல்லாம் பாத்தா ரொம்ப சந்தோஷமாயிடுதில்லீங்கோ... அதுக்காக பொறுத்துக்கிட வேண்டியதுதான். என்ன நாஞ் சொல்றது?

  ReplyDelete
 4. மூலிகைகளுக்கு நடுவே ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகிறது.

  உங்கள் பதிவின் நடுவே பூத்துக் குலுங்கும் படங்களைப் போல.

  ReplyDelete
 5. தெரியாத விவரங்கள்...
  தகவலுக்கு நன்றி..
  தொடர்ந்து புதுப் புதுசாக எழுதவும்..

  ReplyDelete
 6. வரும் வழியில் ஹைப்ரிட் காய்கரிகளும்,பெரிய சல்கம்,முட்டைக்கோஸ்,மற்ற சிலவைகளும் இருந்ததே,இந்த வருடம் இடம்பெற்றதா?

  ReplyDelete
 7. அழகானப் படங்களும் பதிவும். பேப்பர் பேனா கூடக் கொண்டுபோகமுடியாவிட்டால் மிகவும் சிரமம்தான். அடுத்துவரும் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 8. அருமையான புகைப்படங்கள்
  அருமையான விளக்கங்கள்
  நல்லார் ஒருவர் இருந்தால் எல்லோருக்கும் பெய்யும் மழை
  என்பதனை மாற்றி நல்ல பதிவர் ஒருவர் இருந்தால் எல்லோருக்கும்
  கிடைக்கும் எல்லா இடங்களையும் பார்க்கும் பாக்கியம்
  எனச் சொல்லலாமோ எனத் தோன்றுகிறது
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. நீங்க பார்த்ததை மிகவும் அழகாக வர்ணித்து இருக்கீங்க,ஆதி.தொடருங்கள்..மற்றவை பற்றியும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 10. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 11. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 12. வாங்க கணேஷ் சார்,

  கொங்குத் தமிழில் பின்னறீங்க...... பூவப் பாத்தா சந்தோசம் தான்...

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 13. வாங்க ரிஷபன் சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 14. வாங்க மாதவன் சார்,

  புதுப்புது தகவல்களைக் கொண்ட பதிவுகளைத் தர முயற்சிக்கிறேன்.
  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 15. வாங்க ஆச்சி,

  காய்கறிகள் இருந்தது. அதைப் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்த பகிர்வுகளில் வரும்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 16. வாங்க கீதமஞ்சரி,

  எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்வது கஷ்டம் தான். ஆனா பேப்பர், பேனாவுக்கு அனுமதியில்லைங்க.
  அங்கிருந்த மூலிகைகளில் சர்க்கரை நோய்க்கு, உடல் பருமனை குறைக்க, புற்றுநோய்க்கு என்று சில மூலிகைகள் பயிரிட்டிருந்தனர். பெயர் நினைவில் இல்லை.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 17. வாங்க ரமணி சார்,

  தாங்கள் சொல்லும் அளவுக்கு ஒன்றும் பெரிதாக எழுதவில்லை. நல்ல பதிவுகளைத் தர முயற்சிக்கிறேன் சார்.
  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் வாக்குகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 18. வாங்க ராம்வி,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 19. பகிர்வு மிக அருமை.இதெல்லாம் புது இடம் எங்களுக்கு.சுற்றி காட்டி,விளக்கம் கொடுத்தது சூப்பர்.

  ReplyDelete
 20. பேப்பர் பேனா கூட அனுமதிக்கவில்லை என்றால் கஷ்டம்தான். எல்லாத்தையும் நினைவில் வைத்துக் கொள்வதென்பதும் சிரமம்தான்.

  ஆனாலும், யோசிச்சு நிறைய எழுதிட்டீங்க - அதுவும் தொடர் பதிவாக!!

  ReplyDelete
 21. மொபைல் போன் அனுமதிச்சாலாவது .க்ளோசப் இல் பெயருடன் படம் எடுக்க வசதியா இருந்திருக்கும் . பரவாயில்லை நீங்க போட்டிருக்கும் அந்த ரோசா படம் அழகோ அழகு .இந்தியாவில் பிறந்தும் எவ்ளோ இடங்களை பார்க்காமல் விட்டிருக்கிறேன் .பகிர்வுக்கு நன்றிங்க .

  ReplyDelete
 22. தெரியாத விவரங்கள். பகிர்வுக்கு நன்றி.
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 23. இது ரொம்பப் புதிது. உங்களுக்குக் காமிரா கையில் இருந்தால் நிறைய படங்கள் எங்களுக்கும் கிடைத்திருக்கும்.
  ஆனால் விவரங்கள் அதை ஈடுகட்டிவிடுகின்றன. பகிர்வுக்கு மிக நன்றி ஆதி.

  ReplyDelete
 24. மூலிகைத் தோட்டத்தில் 'என்னை' சந்தித்ததுக்கு நன்றி:-)

  கையில் கெமெரா இல்லைன்னா கை ஒடிஞ்சதுபோல் இருக்குமே:-))))

  ReplyDelete
 25. வாங்க ஆசியா உமர்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 26. வாங்க ஹுசைனம்மா,

  முகல் கார்டன் சென்று வந்த அன்றைக்கே நினைவில் இருந்தவை எல்லாவற்றையும் எழுதி வைத்து விட்டேன்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 27. வாங்க ஏஞ்சலின்,

  எதற்குமே அனுமதியில்லைங்க.... தில்லியில் 10 வருடங்களாக இருந்தாலும் நான் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்குங்க....

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 28. வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 29. வாங்க வல்லிம்மா,

  காமிராவை அனுமதித்திருந்தால் அப்பாவாலும், மகளாலும் என் பதிவுக்கும் நிறைய படங்கள் கிடைச்சிருக்கும்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 30. வாங்க டீச்சர்,

  மூலிகைத் தோட்டத்தில் உங்களை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம். (நேரில் பார்க்க முடியா விட்டாலும்)

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 31. // பூக்கள் பூக்கும் தருணம் // இந்தப் பதிவில் முகல் கார்டன் பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்று தோன்றியது, அடுத்த பதிவிலேயே அதை பற்றி கூறியது அருமை

  ReplyDelete
 32. வாங்க சீனு,

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…