Monday, January 30, 2012

கரப்பான் பூச்சிக் கொல்லியும் அதனால் விளைந்த ஆபத்தும்
கரப்பான் பூச்சியை பார்த்தவுடன் அலறி பூச்சிக் கொல்லி மருந்தினைத் தெளிக்கும் உபகரணத்தினை கையில் எடுப்பவரா நீங்கள்? அப்படியென்றால்  உங்களுக்குத் தான் இந்த செய்தி.

சொல்லப்போகும் பயங்கர தகவலுக்கு முன்னால் மனதைக் கொஞ்சம் சந்தோஷப் படுத்திக் கொள்வோம் – ஒரு கரப்பான் பூச்சி பற்றிய நகைச்சுவையைப் படித்து.

இரண்டு கரப்பான்பூச்சிகள் ஐ.சி.யூவில் அட்மிட் செய்யப்பட்டு இருந்தனவாம்.  அவற்றுக்கிடையே நடந்த சம்பாஷனை:.

க.பூ – 1:  உன்னை யாரு அடிச்சா?

 க.பூ – 2: அட அடிக்கல்லாம் இல்லை – என்னைப் பார்த்தவுடன் ஒரு அம்மணி போட்ட காட்டுக் கூச்சல்ல எனக்கு மாரடைப்பு வந்து இங்கே அட்மிட் பண்ணிட்டாங்க!


சரி விஷயத்துக்கு வருகிறேன்.  சமீபத்தில் புனே நகரத்தில் ஒரு பெண்மணி கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது பாத்திரம் கழுவுவதற்காக  Sink பக்கம் போனவர் அங்கே கரப்பான் பூச்சியைப் பார்த்தவுடன் அலறியடித்து கீழே வைத்திருந்த கரப்பான்பூச்சிக் கொல்லியை எடுத்து அதன் மேல் Spray செய்ய, அது ஓட, தொடர்ந்து அதன் மேல்  ஸ்ப்ரே செய்திருக்கிறார். பக்கத்தில்  எரிந்து கொண்டு இருந்த கேஸ் அடுப்பு ஜுவாலையில்  இந்த ஸ்ப்ரே பட்டதும் "டமால்" என்ற  பெரிய சப்தத்துடன் வெடித்து, சில நொடிகளில் அந்தப் பெண்மணியின் உடல் முழுவதும் தீப்பற்றிக் கொண்டது.  

வீட்டின் உள்ளே இருந்த கணவர்  உடனே வந்து தீயை அணைக்க முற்பட, அவருக்கும் தீக்காயங்கள்.  அக்காயங்களுடன் இரண்டு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட, கணவர் இன்னமும் தீக்காயங்களுடன் போராடிக் கொண்டு இருக்கிறார் – தன் மனைவி இறந்தது கூடத்  தெரியாமல்.

பெரும்பாலான கரப்பான் கொல்லிகளில் இருப்பவை எளிதில் தீப்பிடிக்கக் கூடியவை.  அதனால் அவைகளை  சமையல் அறையிலோ, தீ இருக்கும்  இடங்களிலோ நிச்சயம் பயன்படுத்தக் கூடாது.   அவைகளில் அச்சிடப்பட்டிருக்கும் பயன்படுத்துவதற்கு முன் கவனிக்க வேண்டிய வழிமுறைகளை கவனமாகப்  படித்து அதன்படி நடக்க வேண்டும்.  அப்படி நடந்துகொண்டிருந்தால் இந்த விபத்தினை நிச்சயம் தடுத்திருக்க முடியும்.

கரப்பினைக்  கண்டு அலற வேண்டாம்.  அப்படியே ஹிட், மார்ட்டீன் போன்றவற்றை உபயோகிக்க வேண்டுமெனில் முதலில் கேஸ் அடுப்பினை அனைத்திருக்கிறதா எனப் பார்த்த பின்னரே உபயோகியுங்கள்.

மீண்டும் சந்திப்போம்.

ஆதி வெங்கட்.
புது தில்லி.


டிஸ்கி:  கரப்பு தவிர பல்லி, பூரான், எலி – அதுவும் இந்த சுண்டெலி, போன்ற எல்லாமே எனக்கு எதிரிகள் தான். வருகிறார்கள் எனத் தெரிந்தாலே புறமுதுகு காட்டி ஓடிவிடுவேன்.  கரப்பு மட்டும் என்னவோ, சுலபமாக அடித்து விடுவேன். :)

பட உதவி:  கூகிள்.

64 comments:

 1. உண்மைதான். அதில் இருக்கும் வேதி பொருட்கள் அப்படி பட்டவை. கவனமாக இருக்க வேண்டும்

  ReplyDelete
 2. இந்த செய்தியை சமீபத்தில் பத்திரிகை வாயிலாகப் படித்து தெரிந்து கொண்டேன். என் மருமகள்கள் மூவருக்கும், மனைவிக்கும், இன்னும் மற்ற ஒருசில உறவினர்களுக்கும் மெயில் மூலம் உடனே தகவல் தெரிவித்தேன்.

  அருமையான பயனுள்ள எச்சரிக்கையூட்டும் பதிவு இது. ஜோக்கும் நன்றாக உள்ளது. நன்றி.

  ReplyDelete
 3. மிக உபயோகமான தகவல்

  ReplyDelete
 4. விழிப்புணர்வு பகிர்வு.நன்றி.

  //க.பூ – 1: உன்னை யாரு அடிச்சா?

  க.பூ – 2: அட அடிக்கல்லாம் இல்லை – என்னைப் பார்த்தவுடன் ஒரு அம்மணி போட்ட காட்டுக் கூச்சல்ல எனக்கு மாரடைப்பு வந்து இங்கே அட்மிட் பண்ணிட்டாங்க!//

  நல்ல நகைச்சுவை.

  ReplyDelete
 5. கரப்பு மட்டும் என்னவோ, சுலபமாக அடித்து விடுவேன்…. :)

  Aiyo paavam!

  Good information!

  ReplyDelete
 6. எப்படியும் தேடிப்பிடிச்சு வாசிச்சிருவாங்கங்கற நம்பிக்கையிலோ என்னவோ ஸ்ப்ரேக்களில் எளிதில் தீப்பற்றக்கூடியதுன்னு பொடி எழுத்துகளில் அச்சடிச்சிருப்பாங்க..

  வெளியே போனா மட்டுமல்ல வீட்லயும், அதுவும் அடுக்களையில் ரொம்பவே கவனமா இருக்கணும்.

  ReplyDelete
 7. ஹிட், மார்ட்டீன் போன்றவற்றை உபயோகிக்க வேண்டுமெனில் முதலில் கேஸ் அடுப்பினை அனைத்திருக்கிறதா எனப் பார்த்த பின்னரே உபயோகியுங்கள்.
  விழிப்புணர்வுப்பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 8. நல்ல செய்தி. நிறையப் பேருக்கு இந்த ஆபத்து தெரியாது. அல்லது நிறையப் பேர் பதற்றத்தில் இந்த மாதிரி தவறு செய்வார்கள்.

  ReplyDelete
 9. எச்சரிக்கை தரும் நல்ல பகிர்வு.

  ReplyDelete
 10. மிகவும் உபயோகமான தகவல் நாம் ஜாக்கிரதையுடந்தான் இருக்கனும்.

  ReplyDelete
 11. ம் பயனுள்ள செய்தி பகிர்ந்திருக்கீங்க நன்றி..

  ReplyDelete
 12. :( கரப்புன்னு சொல்றதுக்குள்ளயே நான் ஓடிடுவேன்..

  ReplyDelete
 13. பயனுள்ள எச்சரிக்கையூட்டும் பதிவு... நன்றி சகோதரி...

  ReplyDelete
 14. நல்ல பயனுள்ள பகிர்வு ஆதி. மிகவும் தேவையான பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 15. ந‌ல்ல‌ எச்ச‌ரிக்கை தான். நானும் க‌ர‌ப்பானுக்கு ம‌ட்டும் க‌ருணை காட்டுவ‌தேயில்லை. ப‌ழைய‌ ஜீ.வி. புத்த‌க‌த்தை ம‌ட‌க்கி ஒரே போடு!ச‌ந்தேக‌ம‌ற‌ இன்னொரு போடு! பிற‌கு மீசையை (செத்த‌ க‌ர‌ப்பானின்) பிடித்து வீர‌மாக‌ குப்பைக் கூடையில் போட்டுவிடுவேன்.இத‌ற்கென‌வே ஒரு ப‌ழைய‌ ஜீனிய‌ர் விக‌ட‌ன் அடுக்க‌ளையிலிருக்குமாக்கும்!!

  ReplyDelete
 16. அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள்வேண்டிய தகவல்
  பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. வாங்க எல்.கே,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 18. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 19. வாங்க லாவண்யா,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 20. வாங்க ஆசியா உமர்,

  என் பெரிய நாத்தனார் அவ்வப்போது எனக்கு அலைபேசியில் நல்ல நகைச்சுவையான குறுஞ்செய்திகள் அனுப்புவார். அதில் ஒன்று தான் இது...

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 21. வாங்க ரிஷபன் சார்,

  யார் பாவம்..... :)

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 22. வாங்க மாதவன்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 23. வாங்க அமைதிச்சாரல்,

  ஆமாங்க. சிறு எழுத்துக்களில் தான் எச்சரிக்கை செய்திருப்பார்கள். அதை யார் படிக்கறாங்க.....:(

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 24. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 25. வாங்க ஈஸ்வரன் சார்,

  பதற்றம் தான் ஆபத்துக்கு காரணமாகவும் இருக்கலாம்....

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 26. வாங்க மோகன்குமார் சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 27. வாங்க ராமலஷ்மி,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 28. வாங்க லஷ்மிம்மா,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 29. வாங்க முத்துலெட்சுமி,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 30. வாங்க பொற்கொடி,

  கரப்புக்கு மட்டும் தான் எனக்கு பயம் இல்லை.... :)

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 31. வாங்க ரெவெரி,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 32. வாங்க கோமதிம்மா,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 33. வாங்க நிலாமகள்,

  நானும் உங்களை மாதிரி தான்.... ஆனா செருப்பு இல்லையென்றால் துடைப்பம் தான்... செத்த பின் மீசையை பிடித்து வீராங்கனை போல் குப்பையில் போடுவேன்.
  இந்த கடுங்குளிரில் செருப்பு, துடைப்பம் எல்லாம் தேவையேயில்லை... ஐஸ் மாதிரி இருக்கற தண்ணீர் பட்டாலே அது உயிர் விட்டு விடுகிறது...

  ஜூ.வி புத்தகம் கரப்பு அடிக்க அடுக்களையில்...:))

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 34. வாங்க ரமணி சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 35. பயனுள்ள தகவல் ஆதி.பூனா சம்பவம் பயங்கரமாக இருக்கே? பாவம் அந்த தம்பதி.

  ReplyDelete
 36. பாவம்! மனம் வேதனை படுகிறது.

  இந்த பூச்சிகள் வராமல் இருக்க,,,,, சமையல் அறை உலர்ந்து இருத்தல் நல்லது இல்லையா? ஒரு சீலிங் பேன் இதற்குஉதவி.

  சமையல் மேடையை வினிகர் போட்டோ, சமையல் சோடா போட்டோ துடைத்தால், பூச்சி நடமாட்டம் மிகவும் குறைகிறது.

  போரிக் பவுடர் தூவினாலும் பூச்சி நடமாட்டம் மட்டு படுகிறது.

  ReplyDelete
 37. வருத்தமான செய்தி.இனி பெண்கள் பத்திரமாக அதைக் கையாளட்டும்..

  ReplyDelete
 38. தங்கள் தளத்திற்கு முதல் வருகை.தொடர்வதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 39. விழிப்புணர்வு பகிர்வு.

  ஜோக் செம சிரிப்பு.

  வாக்குப்பெட்டிகளில் எண்ணிக்கை காட்டமாட்டிங்குதே.

  ReplyDelete
 40. வாங்க ரமா,

  பயங்கரம் தாங்க....:(
  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 41. வாங்க வெற்றிமகள்,

  தங்களது முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பயனுள்ள தகவல்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 42. வாங்க மதுமதி,

  தங்களது முதல் வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி சார்.

  ReplyDelete
 43. வாங்க ஆச்சி,

  வாக்களிப்பதில் அப்படித்தான் பிரச்சனையாகிறது..பதிவுகளை இணைக்கும் போது பட்டியலிலேயே இந்த வலைப்பூ இல்லை என்று சொல்கிறது. சிலநேரம் இணைத்து வாக்களித்த பின்பு வாக்குகளை காட்டுவதில்லை. சரியாகுமா என்றும் தெரியவில்லை....

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா...

  ReplyDelete
 44. ஜோக் + பயனுள்ள தகவல் + விழிப்புணர்வு அருமை

  ReplyDelete
 45. வாங்க ஜலீலாக்கா,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 46. கரப்பான்பூச்சி மேலே வந்து விழுந்தால் அலறுபவர்கள் தான் அதிகம்.
  உபயோகமான குறிப்பை பதிவாய்த்தந்ததற்கு அன்பு நன்றி!!

  ReplyDelete
 47. அடுப்புக்குப் பக்கத்தில் எந்த ஸ்ப்ரேவும் உபயோகப்படுத்தக்கூடாது என்பது பலருக்கும் தெரிவதே இல்லை. அல்லது தெரிந்திருந்தும் கரப்பான் பூச்சியைப் பார்த்த மாத்திரத்தில் பதட்டத்தில் மறந்துவிடுகிறார்களா என்பது தெரியவில்லை. மிகவும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய செய்தியைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
 48. எமது பதிவில் விருது காத்திருக்கிறது தங்களுக்கு.

  ReplyDelete
 49. விருது காத்திருக்கும் பதிவின் முகவரி..

  http://jaghamani.blogspot.in/2012/02/blog-post_3382.html

  ReplyDelete
 50. "ஹிட், மார்ட்டீன் போன்றவற்றை உபயோகிக்க வேண்டுமெனில் முதலில் கேஸ் அடுப்பினை அனைத்திருக்கிறதா எனப் பார்த்த பின்னரே உபயோகியுங்கள்".

  அரிய தகவல் அனைவரும் அறிய வேண்டியதும் கூட

  ReplyDelete
 51. வாங்க மனோம்மா,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 52. வாங்க கீதமஞ்சரி,

  பதட்டம் தான் விபத்துக்கு காரணமாக இருக்கும்...

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 53. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தாங்கள் எனக்களித்த விருதுக்கு நன்றிங்க....

  ReplyDelete
 54. வாங்க வியபதி,

  தங்களது முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 55. உலகத்திலியே நான் அருவருப்புக் கொள்வது கரப்பான் பூச்சியைப் பார்த்துதான்.
  வீட்ல ஒரு ஹிட் என்ன ஒரு பேகான் ஸ்ப்ரே என்ன என்று ஆயுதங்களோடவே இருப்பேன்.
  உங்கள் பதிவு என்னைச் சில்லிட வைத்துவிட்டது.
  இனி வெகு ஜாக்கிரதையா இருப்பேன். நன்றிமா.

  ReplyDelete
 56. வாங்க வல்லிம்மா,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிமா.

  ReplyDelete
 57. நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு.

  ReplyDelete
 58. வாங்க மாதேவி,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 59. நல்ல விழிப்புணர்வு .இல்லத்தரசிகள் கவனத்தில் வைக்க வேண்டும் /பாத்ரூம் TILES/BATH TUB/KITCHEN கழுவும் மற்றும் உடலுக்கு போடும் எந்த ஸ்ப்ரே ஆக இருந்தாலும் எரிகிற நெருப்பு அருகில் உபயோகிக்க கூடாது.

  ReplyDelete
 60. வாங்க ஏஞ்சலின்,

  தங்களது வருகைக்கும், தகவல்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 61. அருமையான தகவல். செய்தி என்னைப் பாதித்தது. அதனால் இது உபயோகமான பதிவே

  ReplyDelete
 62. வாங்க சீனு,

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…