Sunday, January 8, 2012

கதம்பம் – 6

இந்த முறை கதம்பத்தில் சில சுவாரசியமான நிகழ்வுகளை பார்க்கலாம்.

சட்டுன்னு ஒரு கல்யாணம்:-


வீட்டின் பின் பக்கத்தில் மரங்களின் நடுவில் யாருமே உபயோகப்படுத்தாத இடம் இருந்தது. சென்ற வாரம் ஒருநாள் காலையில் சில கம்பங்களை நட்டு பந்தல் போட்டு இருக்கைகளை கொண்டு வந்து வைத்தனர். சமையல் செய்வதற்காக சிறிது இடத்தை ஒதுக்கி அங்கு பெரிய பெரிய பாத்திரங்களைக் கொண்டு வந்து வைத்து சப்பாத்தி இட்டு, பூரி பொரித்து உருளைக்கிழங்கை வேக வைத்து என்று ஒரு பக்கமும் இன்னொரு பக்கம் இனிப்புகள் தயாரிப்பு பணி என விதவிதமான வாசனைகள் வந்தன. பந்தல் போட்ட இடத்தில் அரண்மனை போல தூணெல்லாம் வைத்து பிரமாண்டமான அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் குதிரையில் மாப்பிள்ளை ஊர்வலமும், பேண்ட் வாத்தியங்களும், நடனங்களும் நடைபெற்று  உணவும் பரிமாறப்பட்டது. திருமணமும் நடந்தேறி மறுநாள் பந்தலையும் பிரித்தெடுத்துச் சென்றுவிட்டார்கள். நேற்று பிரமாண்டமான இடமாக இருந்ததே அதுவா இது என ஆச்சரியப்பட வைத்தது. நம்ம ஊரில் ஒரு கல்யாணம் நடத்த எத்தனை முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். மண்டபம் காலியாக இருக்கும் நாளில் தான் திருமணத்தையே வைக்க வேண்டும்… இங்கோ!

அழகோவியம்……நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தோம். அவர்களின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளுக்கு சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வமாம். நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறாள். ரோஷ்ணியை பத்தே நிமிடத்தில் வரைந்து கொடுத்து விட்டாள். வெறும் பென்சில் மட்டுமே பயன்படுத்தி இந்த அழகோவியத்தினை வரைந்தது விட்டாள்.

ரோஷ்ணி கார்னர்:


ரோஷ்ணி ஒருநாள் பேசும் போது "அம்மா தாத்தா, பாட்டி சென்ற முறை ஊரிலிருந்து வந்த போது போலியோ சொட்டு மருந்து சாப்பிட்டு வந்தா" என்றாள். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. தாத்தா பாட்டிக்கெல்லாம் சொட்டு மருந்து கொடுக்க மாட்டார்கள் என்று சொன்னேன். "இல்லம்மா! தாத்தா பாட்டி கைகளில் நான் குழந்தையாக இருந்த போது மருந்து குடித்தவுடன் கை விரலில் பேனாவால் மார்க் பண்ணுவாங்கல்ல அந்த மாதிரி மார்க் பண்ணி இருந்தது!" என்றாள். அதற்கு பிறகு தான் விஷயம் என்னவென்றே எங்களுக்குப் புரிந்தது….

சென்ற முறை அவர்கள் வருவதற்கு முன்பு தான் தேர்தல்  நடந்திருந்தது. ஓட்டு போட்டதற்கு அடையாளமாக மை வைத்திருந்ததை தான் அவள் அப்படி புரிந்து கொண்டிருக்கிறாள் என்று.

என்ற ஊருங்கோ!

ஆனந்த வாசிப்பு பத்மநாபன் அவர்கள் அவரது முகப்புத்தகத்தில் என் சொந்த ஊரான கோவையைப் பற்றிய ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார்.  மிகவும் நன்றாக இருந்தது [சொந்த ஊர் பற்றிய பாட்டு என்பதால் சொல்லவில்லை!].  பாட்டின் நடுவே 7-ஆம் நம்பர் பஸ் என்று வந்தவுடன் ‘எனக்கு மட்டும் காணொளி உள்ளே செல்லும் திறன் இருந்தால், உள்ளே புகுந்து ஒரு ஆட்டமே போட்டுவிடுவேன்” எனத் தோன்றியது.  காணொளியை நீங்களும் ரசியுங்களேன்….
Wall Hanging!

உபயோகப்படுத்த முடியாத குறுந்தகடுகள் நம்மிடம் இருந்தால் அவற்றினை வைத்து இப்படி அலங்காரப் பொருளாகச் செய்யலாம்.  சில தகடுகளை வைத்து நான் செய்த ஒரு Wall Hanging கீழே…..மீண்டும் சந்திப்போம்

நட்புடன்


ஆதி வெங்கட்.62 comments:

 1. காணொளியை கண்டவுடன் சொர்க்கமே என்றாலும் நம்மூர போலாகுமா '' என உரக்க பாடத் தோணியது ... நம்ம மாநகரம் சுற்றும் ஏழாம் நம்பர் மாதிரி ரௌண்டிங் எந்த நகரத்திலும் இல்லை .....பகிர்வுக்கு நன்றி சகோ ....

  ReplyDelete
 2. கதம்பம் நல்ல அழகும் மணமும். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. கதம்பம் மிக நன்றாக மணக்குது ஆதி.

  ReplyDelete
 4. கதம்பத்தில் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே -
  நாங்கள் அழகும் மனமும் நிரம்பியவர்கள் என்று!

  பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 5. எந்த ஊரானா என்னங்க நம்ம கோவை போல வருமா?

  சிறுவாணித் தண்ணீரின் சுவை தருமா??

  ReplyDelete
 6. சுவையான கதம்பம்..

  ReplyDelete
 7. மண்டபம் காலியாக இருக்கும் நாளில் தான் திருமணத்தையே வைக்க வேண்டும்… இங்கோ!

  ஆமா.. அவங்களப் பார்த்தா கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு.. ஈசியா முடிச்சுட்டாங்க.. கதம்பம் எல்லாமே சுவை.. காணொளி உள்பட.

  ஓவியத்தை விட்டுர வேணாம்னு நண்பர் மகளுக்கு சொல்லிடுங்க.

  ReplyDelete
 8. கதம்பம் மிக மிக சுவாரஸ்யம்
  அருமையான பதிவு
  வாழ்த்துக்கள்
  த.ம 3

  ReplyDelete
 9. நல்ல தோரணங்கள்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. கதம்பம் மூலம் பகிர்ந்தவைகள் அருமை.

  ReplyDelete
 11. மனதையும் மதியையும் மகிழவைத்த கதம்பம் அருமை.

  ReplyDelete
 12. சொல்லியிருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றும் ஒரு சுவை.

  திருமணம் பற்றிச் சொன்னது நிறையவே யோசிக்கவைத்துள்ளது. அவர்கள் எந்த அளவுக்கு முன்னேற்பாட்டுடன் இருந்திருந்தால் ஒரு திருமணத்தை இத்தனை விரைவாகவும் எளிதாகவும் முடித்திருக்க முடியும். பெரும் சாதனைதான்.

  ரோஷ்ணியின் கேள்வியிலிருந்து குழந்தைகள் எந்த அளவுக்கு தன் சுற்றுப்புறங்களையும் மனிதர்களையும் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று தெரிகிறது.

  ரோஷ்ணியைப் படம் வரைந்த கரங்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவியுங்கள்.

  பிறந்த ஊர் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஊரின் பேரைக் கேட்டாலே பெண்களுக்கு எல்லாக் கவலையும் பறந்துபோய்விடும். அதிலும் காணொளியில் காண்பித்தால்?

  கைவேலை ரொம்ப அழகா இருக்கு. பாராட்டுகள்.

  ReplyDelete
 13. ஓவியம் மிக அழகு.பத்து நிமிசம்ன்னா ரொம்ப வேகம் தான்..
  போலியோ சொட்டுமருந்து:))

  ReplyDelete
 14. அருமையான கதம்பம் சொல்லிய விதம் அருமை.. கிராப்ட் ஓர்க் அழகு..

  ReplyDelete
 15. நம்மூரில் எதாவது நிகழ்ச்சிகள் எனில் வீட்டின் முன் மட்டும் பந்தலிடம் பழக்கம் உள்ளது.இப்படி முழு நிகழ்ச்சிக்கும் அதுவும் சில கலை நுணுக்கங்களுடன் வடிவமைப்பது இவர்களுக்கு ஈடாக வர பல வருடம் ஆகலாம்.ரோஷ்ணியின் வடிவம் வரைந்த பெண்ணிற்கு வாழ்த்துகள் சொல்லிடுங்க.பிரமிக்க வைக்கிறது.அனைத்தும் அருமை.

  ReplyDelete
 16. ரசிக்கும் படியான நல்ல கதம்பம், அருமை.

  ReplyDelete
 17. கதம்பம் கலர்கலராக மணம் வீசுகிரது.

  ReplyDelete
 18. சுவாரஸ்யம். எங்க சென்னை பத்தியும் இப்போ இது மாதிரி ஒரு பாட்டு வந்துருக்கு

  ReplyDelete
 19. கதம்பம் மணக்குதுப்பா :-)

  கல்யாண மண்டபம் விஷயம் ரொம்பச் சரி. பகல்ல ரொம்ப சாதாரணமா இருக்கும் மைதானம் கல்யாண சமயத்துல அரண்மனை மாதிரி ஜொலிக்கும். ஆனா, இதுக்கே ஒரு பெரிய தொகையும் ஒதுக்கப்படும் அவங்க கல்யாண பட்ஜெட்டுல..

  ReplyDelete
 20. கதம்பத்தின் அத்தனை மலர்களிலிருந்தும் நறுமணம் வீசுகிற‌து!
  கைவேலை அழகு!
  அந்த ஓவியம் திருத்தமான ஸ்ட்ரோக்குகளுடன் மிக அழகு!

  ReplyDelete
 21. இங்கயும் அப்படித்தான் ஆதி,

  பார்க்கில் கூட அழகா கல்யாணம் செஞ்சிடறாங்க. வாடகையும் சொர்ப்பம்தான். எனக்கு ஆரம்பத்தில்
  ஆச்சரியமா இருந்தது. ரோஷ்ணி கார்னர் ரசித்தேன் :))

  ReplyDelete
 22. //நம்ம ஊரில் ஒரு கல்யாணம் நடத்த எத்தனை முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். மண்டபம் காலியாக இருக்கும் நாளில் தான் திருமணத்தையே வைக்க வேண்டும்…//

  தில்லியிலும் நல்ல முஹூர்த்த தினங்களில் காலி மைதானம் கிடைப்பது மிகவும் கடினம். எனது நண்பர் தனது மகள் திருமணத்திற்கு சமுதாயக்கூடம் கிடைக்காமல் காலி மைதானம் தேடி அலைந்திருக்கிறார். அதற்கும் MCD-க்கு கட்டணம் கட்டி முன்பதிவு செய்ய வேண்டும்.

  அந்த பென்சில் ஓவியம் - கொள்ளாம்! கொள்ளாம்! ரொம்ப நல்லாயிருக்கு.

  ReplyDelete
 23. கதம்பம் சுவையாக சுவாரசியமாக இருக்கு.

  அங்க கல்யாணம் எல்லாம் ஒரு வேளைதான்.நம்ம பக்கமோ இரண்டு மூன்று நாட்களுக்கு நடக்குமே.எவ்வளவு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்?

  ரோஷணி கார்னர் சிறப்பு.

  ReplyDelete
 24. எங்க ஊர்லயும் இன்று வரை கல்யாணங்கள் வீடுகளில்தான்; ஆனால், வீடு என்னவோ சிறிசாத்தான் இருக்கும். வாசல்ல அக்கம்பக்கத்து வீட்டு வாசல்களையும் சேர்த்து, பந்தல் போட்டுத்தான் கல்யாணம், சமையல் எல்லாம். அக்கம்பக்கத்து வீடுகளின் உள்ளே வைத்து பந்தி!! மண்டப கல்யாணங்கள் மிகமிக அரிது!!

  மண்டபம் கிடைக்கலைன்னு பலரும் சொல்லும்போதுதான் எங்க ஊர் அருமை புரிஞ்சுது!!

  ரோஷ்ணி கார்னர் ரசித்தேன்!!

  ReplyDelete
 25. இங்கு கடும் குளிர் வாட்டி எடுப்பதால் கணினி முன் அமரவே முடியவில்லை. தாமதமான பதில்களுக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 26. வாங்க பத்மநாபன் சார்,

  அருமையான காணொளியை பகிர்ந்ததற்கு நன்றி சார். 7ம் நம்பர் பேருந்துக்கு ஈடு இணையே இல்லை.அடுத்த முறை சென்றால் ஒரு ரவுண்ட் அடிக்க வேண்டும்.
  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 27. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 28. வாங்க கோமதிம்மா,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 29. வாங்க இராஜராஜேஸ்வரி,

  கோவைப் போல வரவே வராது. உலகிலேயே இரண்டாம் இடத்தை பெற்ற சுவை மிகுந்த நீர் என்றால் அது சிறுவாணித் தண்ணீர் தான். என் அப்பா சொல்லிக் கொண்டேயிருப்பார்.
  நல்ல கோடைக் காலத்தில் கூட வியர்வை வழிந்தது என்பது இல்லவே இல்லை.
  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 30. வாங்க Madhavan Srinivasagopalan சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 31. வாங்க ரிஷபன் சார்,

  மைதானத்திற்கும் தட்டுபாடு வருமாம்.:(
  நண்பர் மகளுக்கு நல்ல ஆர்வம்.சொல்லி விடுகிறேன்.
  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 32. வாங்க ரமணி சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 33. வாங்க ரத்னவேல் ஐயா,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 34. வாங்க கடம்பவன குயில்,

  தங்களது முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 35. வாங்க ஆசியா உமர்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 36. வாங்க ஏ.ஆர்.ராஜகோபாலன் சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 37. வாங்க சீனுவாசன்.கு,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 38. வாங்க கீதா,

  இந்த திருமணங்களுக்கும் முன்னேற்பாடுகள் இருக்கும். ஆனால் ஒரே இரவில் திருமணத்தை முடித்து விடுகிறார்கள்.
  கதம்பத்தில் சொல்லியுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து அனைத்திற்கும் கருத்து தெரிவித்ததற்கு நன்றிங்க.

  ReplyDelete
 39. வாங்க முத்துலெட்சுமி,

  உடனே வரைந்து கொடுத்து விட்டாள். வேகம் தான்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 40. வாங்க சிநேகிதி,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 41. வாங்க ஆச்சி,

  பந்தலில் இருக்கும் பிரமாண்டமான அலங்காரங்கள் அசத்தலாக இருக்கும். ஆனால் ஒவ்வொருவரும் செய்து கொண்டு சிகை அலங்காரங்களும் முகமும் பார்த்தாலே படு பயங்கரமாக இருக்கும்.:)))

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 42. வாங்க சீனு அண்ணா,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 43. வாங்க லஷ்மிம்மா,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 44. வாங்க மோகன்குமார் சார்,

  சென்னை பத்தியும் பாட்டு வந்திருக்கா...தங்கள் பதிவில் பகிருங்கள்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 45. வாங்க அமைதிச்சாரல்,

  செலவுக்கு அஞ்சறவங்களா இவங்க.....அரண்மனைகளில் இருக்கற மாதிரி தூணெல்லாம் வெச்சு அசத்திடுவாங்க.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 46. வாங்க மனோம்மா,

  நண்பரின் மகளிடம் அனைவரது பாராட்டுக்களையும் தெரிவித்து விடுகிறேன்.
  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 47. வாங்க புதுகைத் தென்றல்,

  அங்கயும் அப்படித்தானா....ஆச்சரியம் தான்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 48. வாங்க ஈஸ்வரன் சார்,

  காலி மைதானத்திற்கும் தட்டுபாடு வரும் என்று தங்கள் கருத்து மூலம் தெரிந்து கொண்டேன்.
  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 49. வாங்க ரமா,

  இங்கு ஒருநாள் தான் திருமணம். அதுவும் மாப்பிள்ளை அழைப்பு தான் விமர்சையாக நடக்கும். திருமணம் சொந்தபந்தங்கள் சிலர் முன்னிலையில் நடு இரவில் நடக்கும்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 50. வாங்க ஹுசைனம்மா,

  உங்க ஊரை நினைத்தால் பெருமையாக உள்ளது. இன்று வரையும் மண்டபங்களைத் தேடாமல் வீட்டை அடைத்து பந்தல் போட்டு திருமணம். ஆச்சரியம்.முற்காலத்தில் கிராமங்களில் இருந்தவர்கள் இப்படித்தான் அக்கம் பக்கம் வீடுகளை அடைத்து பந்தல் போட்டு நடத்தியிருப்பார்கள். ஆனால் இன்று நாகரீகம் ,ஆடம்பரம் ஆகியவை காரணமாக மண்டபங்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை செலவிடுகிறோம்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 51. சட்டுன்னு ஒரு கல்யாணம் ..அருமையான விஷயம் .
  பென்சில் ஓவியம் அழகோ அழகு .ஊர் நினைவுகள் அழியாத கோலங்கள் .
  அந்த சுவர் அலங்காரம் சூப்பர் .உங்க பதிவுகள் என் டேஷ் போர்டில் தெரியவில்லை தாமத வருகைக்கு மன்னிக்கவும் .இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 52. வாங்க ஏஞ்சலின்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
  டாஷ்போர்டில் ஏன் தெரியவில்லை என்று புரியவில்லை.

  ReplyDelete
 53. நாங்களும் முன்பு அப்ப்டி தான் அக்கம் பந்தல் போட்டு, ஆனால் இப்ப சத்திரம் தான்... எல்லாத்துக்குமே

  ஆதி உங்கள் கொத்துமல்லி சாதம் செய்தேன் சூப்பர், போட்டோ எடுத்து வைத்துள்ளேன், பிறகு பகிர்ந்து கொள்கிறேன்


  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 54. கதம்பம் மணக்குது,
  படித்த பின்னும்!


  பொங்கல் வாழ்த்துக்களுடன்,

  ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete
 55. வாங்க ஜலீலாக்கா,

  கொத்தமல்லி சாதம் செய்து பார்த்து சொன்னதற்கு நன்றி. போட்டோவை பின்பு பகிருங்கள்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 56. வாங்க ஆர்.ஆர்.ஆர். சார்,

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 57. என்ன அருமையா எழுதறீங்க ஆதி.. சூப்பரோ சூப்பர். pencil sketch is just great! :O

  ReplyDelete
 58. வாங்க பொற்கொடி,

  நண்பரின் மகளிடம் சொல்லி விடுகிறேன்.
  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 59. சொல்ல மறந்துட்டேன்

  ஓவியம் ரொம்ப ரொம்ப அருமை

  ReplyDelete
 60. வாங்க ஜலீலாக்கா,

  ஓவியத்தை வரைந்த பெண்ணிடம் சொல்லி விடுகிறேன்.

  தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…