இந்த குளிர்காலத்தில் வட இந்தியாவில், காய்கறிகளும், பழங்களும் நன்றாகக்
கிடைக்கும் என்று முந்தைய பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். அதிலும் குறிப்பாக இங்கே
கிடைக்கும் காரட் சிவப்புக் கலரில் பிரமாதமாக இருக்கும். ஹிந்தியில் காரட்டை
[G]காஜர் என்று சொல்வார்கள். அதைக் கொண்டு செய்யப்படும் இந்த ”காஜர் ஹல்வா” இங்கு
மிகவும் பிரபலம். இனிப்புக் கடைகளில் சுடச்சுட தொன்னையில் போட்டுத் தருவார்கள்.
நடுங்கும் குளிரில் சுடச்சுட காஜர் ஹல்வா சாப்பிட்டால் ஆஹா! தான்.…. நீங்களும்
இதைச் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம். அதன் செய்முறை இங்கே….
தேவையான பொருட்கள்:-
காரட் – 3 கப் [துருவியது]
சர்க்கரை – 1½ கப்
பால் – 1½ கப்
நெய் – 1½ மேஜைக்கரண்டி
ஏலக்காய் பொடி – ¼ தேக்கரண்டி
முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா - சுவைக்கேற்ப
செய்முறை:-
காரட்டை நன்கு கழுவி, தோல் சீவி பின் அதை காரட் துருவியில் துருவி
கொடுக்கப்பட்ட பாலுடன் சேர்த்து குக்கரில் நேரிடையாக பாத்திரம் இல்லாமல் போட்டு
இரண்டு விசில் வந்தவுடன் நிறுத்தி விடவும். குக்கரை திறந்த பின் காரட்டுடன்
சர்க்கரை சேர்த்து நன்கு கிளற வேண்டும். சர்க்கரை கரைந்து காரட்டுடன் சேர்ந்து
கொதிக்கும் போது ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிது கெட்டியானவுடன்
நெய் சேர்த்துக் கிளறி இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடலாம். வாணலியில்
முந்திரி, திராட்சை, பாதாம் போன்றவற்றை நெய் விட்டு வறுத்து ஹல்வாவில்
சேர்க்கவும்.
சுவையான ”காஜர் ஹல்வா” தயார்.
பின்குறிப்பு:-
இங்கு கிடைக்கும் ஹல்வாவில் இனிப்பில்லாத கோவா உதிர்த்து
சேர்த்திருப்பார்கள். விருப்பப்பட்டால் சேர்த்துச் செய்யலாம்.
மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.
டிஸ்கி: உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு
வாழ்த்துகள்…. [G]காஜர் ஹல்வாவைப் போலவே உங்கள் வாழ்விலும்
இனியவையே நடக்கட்டும்!

40 comments :
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்…. [G]காஜர் ஹல்வாவைப் போலவே தங்கள் வாழ்விலும் இனியவையே நடக்கட்டும்!
வாழ்த்துகள்.
Gகாஜர் ஹல்வா தின்ன நான் ஆஜர்ங்கோ!
இங்கேயும் மழையும் குளிருமா இருக்கு. ஒரு தொன்னை ஹல்வா பார்ஸேல் ப்ளீஸ்!
கோவா கிடைக்கலைன்னா ரெண்டு டேபிள் ஸ்பூன் மில்க் பவுடர் சேர்த்துக்கிளறலாம்.
ஹல்வா போன்ற இனிமையான பதிவு. பாராட்டுக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள். [தமிழ்மணம்: 3]
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
எனது சமீப பதிவு: http://kbjana.blogspot.com/2011/12/2012-gaiety-and-happiness-new-day.html
G காஜர் ஹல்வா சுவைத்தேன். அதன் இனிமையோடு உங்கள் வாழ்விலும் இனியவையே நடக்கட்டும்!
என வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.
ஆமாம்.. நான் குஜராத்தில் இருந்த பொது குளிர் காலத்தில் காஜர் ஹல்வா வீட்டிலேயே செய்து சுடச்சுட சாப்பிடுவோம்.
படிக்கும் போதே சாப்பிட ஆசையை தூண்டுகிறது.
புதுவருடம் காஜர்கா ஹல்வாவுடன் ஆரம்பமா? இப்பதான் அமைதிச்சாரல்பக்கம் போயிட்டுவந்தேன் அங்கியும் இதேதான். ஹேப்பி நியூ இயர் வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. இனிமையான காஜர் அல்வாவைப் போல்
உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .thanks for the yummy recipe
நம்ம ஊர் காரட்டை வச்சும் செய்யலாமா? பார்க்கவே அழகா இருக்கு.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாங்க இராஜராஜேஸ்வரி,
நன்றிங்க.
வாங்க டீச்சர்,
பார்சல் அனுப்பிட்டேன். பெற்றுக் கொள்ளுங்கள்.மில்க் பவுடர் தகவலுக்கு நன்றி.
வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,
நன்றி.
வாங்க கே.பி.ஜே சார்,
நன்றி.
வாங்க கோமதிம்மா,
நன்றி.
வாங்க மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் சார்,
நானும் இந்த குளிர்காலத்தில் இரண்டு, மூன்று முறையாவது செய்து விடுவதுண்டு.
வாங்க அமுதா கிருஷ்ணா,
நன்றிங்க.
வாங்க லஷ்மிம்மா,
நன்றி.
வாங்க ரிஷபன் சார்,
நன்றி.
வாங்க ஏஞ்சலின்,
நன்றிங்க.
வாங்க விச்சு,
தாராளமா நம்ம ஊர் காரட் வைத்தும் செய்யலாம்.நன்றிங்க.
கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இது நல்ல வழிமுறை. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
காஜர் ஹல்வா சுவைத்துக்கொண்டேன்.
குடும்பத்தினர் அனைவருக்கும் இனித்திடும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாங்க கீதா,
நன்றிங்க.
வாங்க மாதேவி,
நன்றிங்க.
இந்த சீசனில் யார் வீட்டுக்குபோனாலும் இது கிடைக்குமே..:)
ஆஹா.. நீங்களும் அல்வா செஞ்சு வெச்சிருக்கீங்களா :-))
கொடுங்க. எவ்ளோன்னாலும் சாப்பிடுவேனே :-)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்.
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
வாங்க முத்துலெட்சுமி,
ஆமாங்க. நன்றி.
வாங்க அமைதிச்சாரல்,
எடுத்துக்கோங்க. நன்றி.
வாங்க என்றும் இனியவன்,
நன்றிங்க.
நீங்கள் சொல்லியிருக்கும் அளவுகளை தோராயமாக போட்டு எப்படியோ டேஸ்ட்டாக செய்துவிடுவேன்.வாழ்த்துகள்.
புத்தாண்டின் தொடக்கமே இனிப்பான தொடக்கம் ... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
புத்தாண்டு இனிப்புடன் இனிமையாக ஆரம்பித்திருக்கிறது!! காஜர் அல்வா குறிப்பும் புகைப்படமும் அருமை!!
புத்தாண்டு சுவையாகவும் இனிப்பாகவும் ஆரம்பித்துள்ளது ஆதி உங்க அல்வாவை போலவே.நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாங்க ஆச்சி,
நன்றிப்பா.
வாங்க பத்மநாபன் சார்,
நன்றிங்க.
வாங்க மனோம்மா,
நன்றிம்மா.
வாங்க ரமா,
நன்றிங்க.
Post a Comment
படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…