Wednesday, December 7, 2011

ஸ்தம்பித்துப் போகுமா தில்லி?

தில்லி ஏன் ஸ்தம்பித்து போகும் அல்லது எது இல்லாமல் ஸ்தம்பித்து போகும் என்று  கேட்பவர்களுக்கான பதில் பாலும், ப்ரெட்டும் கிடைக்காம இருந்தா தான். இது என்ன பெரிய விஷயம் என்றா கேட்கிறீர்கள்? ஆமாங்க. அது இரண்டுமே இங்க பெரிய விஷயம் தான். காரணம் அந்தளவுக்கு அதன் உபயோகம் இருப்பது.

பொதுவாக வட மாநிலங்களில் பாலின் உபயோகம் அதிகமாக இருக்கும். தரமும் அதற்குத் தகுந்தாற்ப் போல் நன்றாக இருக்கும். எருமைப் பால் தான் இங்குள்ளவர்கள் உபயோகிப்பார்கள். பசும்பால் சில இடங்களில் தான் கிடைக்கும். எருமைப்பாலை விட பசும்பாலின் விலை அதிகம். ஏனென்றால் இந்த குளிரில் பசுமாடுகளால் இருக்க முடியாது.

 நான்கு பேர் கொண்ட ஒரு வீட்டில் ஒரு நாளைக்கு 4-லிருந்து 5 லிட்டர் வரை பால் வாங்குவார்கள். எல்லோருமே அவ்வப்போது பால் எடுத்துக் கொள்வார்கள். இல்லையென்றால் டீ போட்டுக் குடிப்பார்கள். நம்மூரில் ஆவின் போல இங்கு மதர் டைரி, தில்லி அரசாங்கத்தின் டி.எம்.எஸ், மற்றும் நேரிடையாக நம் கண் முன்னேயே கறந்து தரப்படும் எருமைப் பால் என்று விதவிதமாக கிடைக்கும். கொழுப்புச் சத்துள்ள பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால், இரண்டு முறை கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பால் மற்றும் டோக்கன் போட்டால் மிஷினிலிருந்து வரும் பால் என்று பாலிலும் தரம்  பிரிக்கப்பட்டிருக்கின்றன.பால் பொருட்களான பனீர், வெண்ணெய், தயிர், நெய், ஃப்ரெஷ் க்ரீம், சீஸ் என்று இந்த பொருட்களின் தேவையும் இங்கு அதிகம். இங்குள்ள பெரும்பாலான இனிப்புகள் பாலிருந்து தான் செய்யப்படுகிறது. கறந்த பாலை வாங்குவதற்கோ அல்லது டோக்கன் பால் வாங்குவதற்கோ ”டோலி” எனப்படும் தூக்கு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு எல்லோரும் செல்வதை இங்கு காலையிலும், மாலையிலும் காணலாம். இது எல்லோர் வீடுகளிலும் கண்டிப்பாக இருக்கும். விரத நாட்களில் கூட பாலும், பாலால் செய்யப்பட்ட இனிப்புகளும் எடுத்துக் கொள்ளலாம் என்று நன்றாகவே சாப்பிடுவார்கள்.
இதே போல ப்ரெட்டின் தேவையும் அதிகம். ப்ரெட்டை நம்மூரில் ரொட்டி என்று சொல்வதுண்டு. இங்கு ரொட்டி (ROTI) என்றால் சப்பாத்தி. நம்மூரில் இப்போது எப்படியோ! நான் அங்கிருந்த வரை அதாவது 9 வருடங்களுக்கு முன்பு வரை கூட ஜுரம் வந்தால் அல்லது என்றாவது ஒருநாள் தான் ப்ரெட்டை வேண்டா வெறுப்பாக சாப்பிடுவோம். ஆனால் கோதுமை உணவுகளே சாப்பிடும் இம் மக்கள், தவறாமல் காலை வேளைகளில் ப்ரெட்டும் பால்/டீ தான் எடுத்துக் கொள்வார்கள். ப்ரெட்டிலும் வொயிட் ப்ரெட், பிரவுன் ப்ரெட் என்று விதவிதமாக ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும். ப்ரெட்டை அவர்கள் ”டபுள் ரொட்டி” என்று அழைப்பார்கள். விதவிதமான சாண்ட்விச் செய்தும் சாப்பிடுவதுண்டு. நம்மூர் போண்டா, பஜ்ஜி மாதிரி இங்கு ப்ரெட் பக்கோடா மிகவும் பிரபலம்.
சின்னச் சின்ன கடைகளில் கூட ப்ரெட் ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும். உடனேயே தீர்ந்து விடுவதால் பழசே இருக்காது.

 ஊரில் சைக்கிளில் பால்காரர் கொண்டு வந்து தரும் கறந்த பாலையே வாங்கி பயன்படுத்தி பழக்கமானதால் இங்கும் பால்காரர் கொண்டு வந்து தரும் எருமைப்பாலையே உபயோகப் படுத்துகிறோம். என்றாவது தேவையென்றால் பாக்கெட் பால் வாங்குவதுண்டு.
 
வாங்கும் கறந்த பாலில் நன்றாக ஏடு படியும். அதை தயிர் உறைய வைக்கும் போது போட்டு தயிர் ஏடாக எடுத்து பாட்டிலில் வைத்து கொண்டு 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை குலுக்கி வெண்ணெய் எடுத்து காய்ச்சி நெய் தயாரிக்கலாம். மாதம் அரை கிலோவுக்கு மேலேயே நெய் வந்து விடும். சுகாதாரமானதும் கூடவே நல்ல வாசனையும் இருக்கும்.  வீட்டில் செய்யும் இனிப்புகளுக்கும், அன்றாட தேவைகளுக்கும் பயன்படுமே இந்த நெய்.

நாங்கள் வாங்கும் கறந்த பாலின் விலை ஒரு லிட்டர் 32 ரூபாய். மதர் டைரியின் கொழுப்புச்சத்துள்ள பால் ஒரு லிட்டருக்கு ரூபாய் 38, கொழுப்பு நீக்கப்பட்ட பால் ரூபாய் 29.

இப்ப சொல்லுங்க தலைப்பில் சொன்னது சரி தானே….

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


53 comments:

 1. ஸ்தம்பித்துப் போகுமா தில்லி?

  ஸ்தம்பிக்கவைத்த பகிர்வு..

  ReplyDelete
 2. //வாங்கும் கறந்த பாலில் நன்றாக ஏடு படியும். அதை தயிர் உறைய வைக்கும் போது போட்டு தயிர் ஏடாக எடுத்து பாட்டிலில் வைத்து கொண்டு 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை குலுக்கி வெண்ணெய் எடுத்து காய்ச்சி நெய் தயாரிக்கலாம். //

  பாலாடை சேர்த்து வெண்ணெய் டெல்லிக்குளிரில் பாட்டிலில் போட்டு சும்மா குலுக்கினாலே வந்துவிடும்.எங்க ஊரில் ஐஸ்க்யூப் சேர்த்து குலுக்குவோம்,அல்லது மிக்சியில் அடிப்போம்.உருக்கினால் நெய் எவ்வளவு சேரும்.

  ஊரில் நாங்களும் எருமைப்பால் தான் வாங்குவோம்.திக்காக இருக்கும்,டீ,த்யிர்,நெய் எல்லாமே சூப்பராக இருக்கும்.சென்ற ஜூலை ஆகஸ்ட்டில் போகும் பொழுது வீடு தேடி வந்து தரும் பாலிற்கு லிட்டருக்கு ரூ.18 தான் கொடுத்தோம்,இப்ப எப்படியோ!

  ReplyDelete
 3. பால் போன்ற ருசியான பதிவு.
  ஸ்தம்பித்தாலும் ஆச்சர்யமில்லை தான். vgk

  ReplyDelete
 4. இங்க மும்பையிலும் அதேதான் முன்னெல்லாம் அமுல் எருமைப்பால் வாங்கி தயிர் ஏடு எடுத்துகுலுக்கி வெண்ணை உருக்கி நெய்யெல்லாம் வீட்லயேதான் பண்ணிண்டு இருந்தேன். எல்லாரும் தனித்தனியா போனபின் நான் மஹா நந்தான்னு பசும்பால்தான். நோ வெண்ணை நோ நெய். பசும்பாலில் வெண்ணையே வராது.

  ReplyDelete
 5. அட.. இப்படியும் பதிவு எதுதலாமா ?
  நீங்க ரெண்டு பேர தொடர அழைத்திருந்தால் .. தொடர் பதிவாகி இருக்குமே..
  நாலு பேரு பொளப்பு (ப்ளாக் போஸ்ட்தான்) நல்லா ஓடி இருக்குமே.

  ReplyDelete
 6. விரத நாட்களில் கூட பாலும், பாலால் செய்யப்பட்ட இனிப்புகளும் எடுத்துக் கொள்ளலாம் என்று நன்றாகவே சாப்பிடுவார்கள்.

  தில்லிக்கு சீக்கிரம் வரணும்னு விரதம் எடுத்துட்டேன்..

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு. நான் ஏதோ மாயவதி தான் வர போறாங்க போல நினைட்டேன்

  ReplyDelete
 8. ”டோலி” எனப்படும் தூக்கு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு எல்லோரும் செல்வதை இங்கு காலையிலும், மாலையிலும் காணலாம்.//

  ஆம் ஆதி, இந்த காட்சியை முதல் தடவை டெல்லிக்கு போனபோது பார்த்து எல்லோரும் எங்கு போகிறார்கள் ஒரே மாதிரி தூக்கை தூக்கிக் கொண்டு என்று என் மகளிடம் கேட்டு இருக்கிறேன்.

  ReplyDelete
 9. திக்கான எருமை பால் ஹைதராபாத்தில் குடித்தது...

  ReplyDelete
 10. தலைப்ப பார்த்ததும் பயந்துட்டேங்க...

  பால் ரொட்டியப் பத்தி கெட்டியான பதிவு. நன்று. :-)

  ReplyDelete
 11. வணக்கம்..

  பல புதிய ஃபேஷன் நகைகள் அறிமுகம் செய்து இருக்கிறோம்.. பார்க்க வாருங்கள்.. மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்

  அன்புடன்
  http://newjanatha-fancyjewellery.blogspot.com/

  ReplyDelete
 12. நல்ல பால் போன்ற சுவையான பதிவு ஆதி.
  இப்பெல்லாம் கறந்த மாட்டுப்பால் எங்க கிடைக்கிறது?எல்லாம் கவர் பால்தான்.படங்கள் அழகாக இருக்கு.முதலாவதாக உள்ள அந்த இனிப்புகளின் படம் அருமை.

  ReplyDelete
 13. டில்லி எருமை என்றால் சும்மாவா.இங்கே தண்ணிபால் தான்.

  ReplyDelete
 14. நல்ல பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. பால் இல்லேன்னா அப்டிங்கறது ஓக்கே.ப்ரட்டுக்குமா?
  நிறைய பேர் ப்ரட்னா ஓடுவாங்க நம்மூர்ல.


  இந்த ப்ரட் பாக்கிங் ல ஒரு சமாசாரம் இருக்கு தெரியுமோ?

  அதுல கலர் டை ஒண்ணுல முடிச்சு போட்டு பாக் பண்ணி இருப்பாங்க.ஒவ்வொரு கலருக்கும் ஒரு அர்த்தம் இருக்கு.நீலம் திங்கள் கிழமை தயாரிக்கப் பட்ட ப்ரட்.சிவப்பு செவ்வாய்க்கிழமை.மஞ்சள் புதன்.பச்சை வியாழன்.வெள்ளை வெள்ளி.கறுப்பு சனி.ஞாயிறு தயாரிப்புக்கு விடுமுறை.
  அப்டின்னா திங்கள்கிழமை கறுப்பு இல்லேன்னா நீலம் போட்டதா இருந்தாதான் வாங்கலாம்.ஓக்கே?

  ReplyDelete
 16. பெங்களூரில் ப்ரெட் வேகமாக விற்பதில்லை. சூப்பர் மார்க்கெட்டில் சாமர்த்தியமாய் [தேதி காலாவதியாகாத ஆனால்] ஒருசில நாள் பழசாகி விட்ட பாக்கெட்களை முன்னால் அடுக்கியிருப்பார்கள். கையை உள்ளே வரை விட்டு கடைசி வரிசையிலிருந்து எடுத்தால் அன்றைய தயாரிப்பு கிடைக்கும்:)!

  பாக்கெட் பால்தான். ஏடு சேர்த்தால் ஓரளவு வெண்ணெய் தருகிறது.

  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 17. இந்த ப்ரட் பகோடாவை வந்த புதிதில் பாத்து எதோ வித்யாசமான உணவுனு ஏமாந்திருக்கேன்.

  பாக்கெட் பாலை அப்படியே ஸ்ட்ரா போட்டு குடிக்கும் மனிதர்களை இங்கதான் பாத்திருக்கிறேன்.

  ராஜி அவர்கள் சொல்லியிருக்கும் தகவல் புதிதாக இருக்கிறது,இனி கவனிக்கிறேன்.

  ReplyDelete
 18. //பால்காரர் கொண்டு வந்து தரும் எருமைப்பாலையே உபயோகப் படுத்துகிறோம்//

  நாங்களும் சிறிது காலம் வரை அப்படிதான். ஆனால், முதலில் கெட்டியாக இருந்த பால் போகப்போக நீர்த்துப் போக ஆரம்பித்தது. பின்னர், அதிலுள்ள தூசி போன்ற அசுத்தந்களும், கலப்படச் செய்திகளாலும் இப்பொழுதெல்லாம் “மதர் டைரி” பால் தான்.

  ReplyDelete
 19. பேச்சு மூச்சே வரலேங்க ...
  பகிர்விற்கு நன்றி சகோ!
  இதையும் படிக்கலாமே :
  "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

  ReplyDelete
 20. பல வகை
  பால் வகைகளை
  பல்சுவையாக தந்த விதம் அருமை சகோ....

  ReplyDelete
 21. நான் நான்கு மாதங்களுக்கு முன்பு
  டெல்லிவந்திருந்த போது என்னை மிகவும் கவர்ந்தது
  பாலும் தயிரும் தான்
  நம்மூர் பக்கம் அவ்வளவு சுத்தமாகக் கிடைப்பது கஷ்டமே
  படங்களுடன் பதிவு அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 23. வாங்க ஆசியா உமர்,

  நான் தில்லி வந்ததிலிருந்து இப்படித்தான் வெண்ணெய் எடுக்கிறேன்.இப்ப இருக்கற நடுங்கும் குளிரில் கொஞ்சம் வெந்நீர் விட்டு குலுக்கினால் தான் சட்டுனு வெண்ணெய் வரும்.
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 24. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 25. வாங்க லஷ்மிம்மா,

  ஸ்ரீரங்கத்தில் இருக்கும் என் மாமியார், வாங்கும் பசும்பாலிலிருந்து சிறிதளவாவது வெண்ணெய் எடுப்பார்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 26. வாங்க Madhavan Srinivasagopalan சார்,

  நீங்க விருப்பப்பட்டால் தொடரலாமே சார்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 27. வாங்க ரிஷபன் சார்,

  தில்லிக்கு வரும் போது சென்ற முறை போலில்லாமல் அவசியம் வீட்டுக்கு வாருங்கள் சார்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 28. வாங்க லாவண்யா,

  நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் வருகையில் மகிழ்ச்சி.

  நோ அரசியல்....
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 29. வாங்க கோமதிம்மா,

  நம்ம ஊர்ல கூட இப்ப யாரும் தூக்கு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வெளியில் அவ்வளவாக செல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.இங்கு எல்லோருமே பால் வாங்குவது இதில் தான்.
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 30. வாங்க சிநேகிதி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 31. வாங்க ஆர்.வீ.எஸ்,

  தலைப்பை பார்த்ததும் பயந்துட்டீங்களா... இங்கு நண்பர்கள் எல்லோரும் கூடி பேசும் போது இப்படித்தான் சொல்வார்கள்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 32. வாங்க moosa shahib ,

  நன்றிங்க.

  ReplyDelete
 33. வாங்க ரமா,

  படங்கள் எல்லாமே நெட்டில் சுட்டது தான்...
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 34. வாங்க அமுதா கிருஷ்ணா,

  ஆமாங்க. வெயில் காலத்தில் ஏசியும், குளிர் காலத்தில் ஹீட்டர் வசதிகளும் எருமைகளுக்கு செய்து தருகிறார்கள். ஒரு எருமை வைத்திருந்தாலே பணக்காரர் தான்...:)))
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 35. வாங்க ரத்னவேல் ஐயா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 36. வாங்க ராஜி,

  ப்ரட் இல்லன்னா அவ்வளவு தான் அப்படிங்கற அளவுல இங்க இருக்கு. நீங்க சொன்ன டை சமாச்சாரம் நானும் ஒரு புத்தகத்தில் படித்தேன்.இங்க டை கட்டி வராது..
  பேக்கிங்கில், தயாரிக்கப்பட்ட தேதியும், காலாவதி தேதியும் அச்சிடப்பட்டிருக்கும்.
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 37. வாங்க ராமலஷ்மி,

  நீங்க சொன்ன படி தேடி புதிய ப்ரட்டை வாங்குவது புதிய தகவல். எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 38. வாங்க ஆச்சி.

  இங்க இருப்பவர்கள் வித்தியாசமான மனிதர்கள் தான்... வாழைப்பழத்தில் கூட மசாலா சேர்த்து சாப்பிடுவார்கள்.

  ப்ரட் பக்கோடா நடுவில் பனீர் வைத்தும் இல்லாமலும் சுவை தான்.
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 39. வாங்க சீனு அண்ணா,

  சில நேரம் தூசி இருக்கும் காரணத்தால் நான் எப்போதுமே வடிகட்டி தான் பால் வாங்குவேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 40. வாங்க திண்டுக்கல் தனபாலன்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 41. வாங்க A.R.ராஜகோபாலன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 42. வாங்க ரமணி சார்,

  கட்டி தயிரும், திக்கான பாலும் தில்லியின் சிறப்புக்களுள் ஒன்று.
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 43. // வாங்க Madhavan Srinivasagopalan சார்,

  நீங்க விருப்பப்பட்டால் தொடரலாமே சார். //

  Clever reply..
  This is called Boomeraang, I think.

  :-)

  ReplyDelete
 44. பால் மனம் மாறாத பதிவுக்கு நன்றி ...!

  ReplyDelete
 45. தகவல்கள் பால் போல சுவை!

  ReplyDelete
 46. 'ஸ்த‌ம்பித்தா போய் விடும் தில்லி?'- பால் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் உப‌யோக‌மாக‌ இருந்த‌து.

  ReplyDelete
 47. வாங்க மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் சார்,

  நன்றி தங்கள் கருத்துக்கு.

  ReplyDelete
 48. வாங்க ananthu,

  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 49. வாங்க கே.பி.ஜே சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 50. வாங்க நிலாமகள்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 51. பால் இல்லாவிட்டாலும் மில்க் பவுடருடன் சமாளித்து விடுவார்கள் எங்கள் மக்கள்.

  ஆனால் ப்ரெட் இல்லாவிட்டால் பலவீடுகளில் அதோ கதிதான்.

  ReplyDelete
 52. வாங்க மாதேவி,

  இங்கேயும் அதே நிலைமை தான். அதனால் தான் பாலும், ப்ரெட்டும் இல்லாமப் போனா தில்லியே ஸ்தம்பித்து போனாலும் போகலாம் என்பார்கள்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…