Sunday, December 4, 2011

அன்புள்ள அப்பாபொதுவாகவே பெண் குழந்தைகள் என்றாலே அப்பாவிடம் தான் அதிகம் ஒட்டுதலாய் இருப்பார்கள். ஆண் குழந்தைகள் அம்மாவிடம் நெருக்கமாய் இருப்பதை விட பெண் குழந்தைகள் ரொம்பவே அப்பாவிடம் ஒட்டுதலாய் இருப்பார்கள் இல்லையா… அதற்கு நானும் விதிவிலக்கல்ல.

அம்மாவை விட அப்பாவிடம் தான் எனக்கு அதிக செல்லம்.  கல்லூரியில் படிக்கும் போது கூட அப்பாவின் சின்ன தொப்பையில் குத்து விட்டு விளையாடுவேன். குழந்தையாக இருந்தபோது எல்லா விஷயத்திற்கும் அப்பாவைத்தான் அதிகம் எதிர்பார்ப்பேன். சைக்கிளில் பள்ளிக்கு  கொண்டுவிட, நோட்டு-புத்தகங்களுக்கு அட்டை போட, பேனாவிற்கு இங்க் போட, நகம் வெட்டி விட, தேவையானவற்றை வாங்கித் தர என்று சகலத்திற்கும் நான் அப்பாவிடம் தான் ஓடுவேன்.

ஒரு குறிப்பிட்ட வயது வரை என்னுடைய மற்றும் என் தம்பியுடைய பள்ளிச் சீருடைகளை பளிச்சென்று தோய்த்து, உதறி காயப்போட்டு, அதை அவ்வப்போது திருப்பிப் போட்டு பின்பு அதை நன்கு நீவி அயர்ன் செய்தது போல கையால் மடித்துத் தருவது என்று எங்களுக்காக மெனக்கெட்டு அவர் செய்த வேலைகள் எண்ணிலடங்கா!  எல்லாவற்றிலும் அப்படி ஒரு சுத்தமும், நேர்த்தியும் இருக்கும். இவை இரண்டையும் நான் அப்பாவிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன்.

நாங்கள் செய்யும் தவறுகளுக்கு அம்மா எங்களை கோபித்தாலும், அடித்தாலும், அப்பா ஒரு முறை கூட எங்களை திட்டியதோ அடித்ததோ கிடையாது.  ரொம்பவே தவறு செய்ததால் ஒன்றிரண்டு முறை தலையில் குட்டியிருக்கிறார்.  அவ்வளவு மென்மையானவர். 

பழைய பாடல்களை கேட்க நேரிட்டாலோ அல்லது டி.வி.யில் பார்த்தாலோ ரசிக்க ஆரம்பித்து கண்களில் கண்ணீர் வழிந்தோடும் அளவுக்கு உணர்ச்சிவசப்படுவார்.

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் கடை நிலை ஊழியராக சேர்ந்து படிப்படியாக முன்னேறி எங்களை மட்டுமல்லாது, தனது சகோதர, சகோதரிகள் வாழ்விலும் முன்னேற்றம் ஏற்படுத்தியவர். உழைப்பின் பெருமையை அடிக்கடி எங்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். அவரால் முடிந்த அளவுக்கு என்னையும் என் தம்பியையும் D.M.E (DIPLOMA IN MECHANICAL ENGINEERING) வரை படிக்க வைத்தார். நான் டிப்ளமாதான் படித்த போதும், எனக்கு கடிதம் எழுதும்போது முகவரியில் ”Engineer” என்று எப்போதும் பெருமையோடு எழுதுவார்! 

யார் எதைக் கேட்டாலும், தனக்கென வைத்துக் கொள்ளாது கொடுத்து விடுவார்!  தினமும் இரவில் படுத்துக் கொள்ளும் முன்பு மஞ்சள் அம்ருதாஞ்சன் தடவிக் கொள்ளும் பழக்கமுண்டுஅவருக்கு. அதனால் எப்போது நான் அம்ருதாஞ்சன் எடுத்தாலும் எனக்கு அப்பாவின் வாசம் தான் வருகிறது.

எந்த சமயத்திலும் தனக்கென்று நான்கு-ஐந்து செட் துணிமணிகள் தான் வைத்திருப்பார். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் தீபாவளி சமயத்தில் அம்மாவுக்கும், எனக்கும், தம்பிக்கும் நிச்சயம் புதிய துணிகளை வாங்கிக் கொடுப்பவர் தான் மட்டும் பழசையே போட்டுக் கொள்வார்.

அப்பாவைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்! அவ்வளவு விஷயம் இருக்கிறது… 

நான்கு வருடங்களுக்கு முன் எங்களை விட்டு பிரியாமல் இருந்திருந்தால் இன்று அப்பாவுக்கு  61-வது பிறந்த நாள்.  சந்தோஷமாக பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருப்பேன். ஆனாலும்...

பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா!

உங்கள் ஆசீர்வாதம் என்றைக்கும் எங்களுக்குத் தேவை.

ஆதி வெங்கட்.


62 comments:

 1. பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா!

  உங்கள் ஆசீர்வாதம் என்றைக்கும் எங்களுக்குத் தேவை.

  அப்பா உணர்வால் உங்களுடனே கலந்திருந்து
  இனிமை தரும் பிறந்தநாள் நினைவுகளுக்கு
  நிறைந்த வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. உங்களது உணர்வுகளை என்னால் மிக நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது. அப்பாவுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளையும் கூறவும்.

  ReplyDelete
 3. அப்பாவைப்பற்றிய நினைவுகூறல் எங்க அப்பாவையும் நினைக்கவச்சது.

  ReplyDelete
 4. என்ன சொல்வதென்று தெரிய வில்லை. பதிவின் மூலமாவது உங்கள் துக்கம் சற்று குறைந்தால் சரி

  ReplyDelete
 5. //முகவரியில் ”Engineer” என்று எப்போதும் பெருமையோடு எழுதுவார்//

  ஆமாப்பா, எல்லா மகள்களும் பெருமைப்படுத்தப்படுவது தந்தையரால்தான்!!

  சிறுவயதில் நீங்கள் ரோஷிணி ஜாடையில் இருந்தீங்க போல!! ;-))))))

  ReplyDelete
 6. அன்பான அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது ஆசிகள் என்றென்றும் உங்களுடன் இருக்கட்டும்

  ReplyDelete
 7. அழகான நினைவுகள் ஆதி.. நாங்களும் சொல்லிக்கிறோம் பிறந்தநாள்வாழ்த்துக்கள் அப்பா..

  ReplyDelete
 8. தினமும் இரவில் படுத்துக் கொள்ளும் முன்பு மஞ்சள் அம்ருதாஞ்சன் தடவிக் கொள்ளும் பழக்கமுண்டுஅவருக்கு. அதனால் எப்போது நான் அம்ருதாஞ்சன் எடுத்தாலும் எனக்கு அப்பாவின் வாசம் தான் வருகிறது.

  அப்பவின் வாசம் அடிக்கும் அருமையான பதிவு.

  ReplyDelete
 9. ஒரு பெண்னை பெற்றவன் என்ற முறையில் என்னையும் பெருமை படுத்திய பதிவு இது.

  அப்பா எத்தனை பலவீனமான வார்த்தை என்பது என் மகள் என்னை கூப்பிடும் போதுதான் தெரிந்தது.

  அருமையான பதிவு

  ReplyDelete
 10. உங்கள் சிறு வயது போட்டோவும் ப்ளாகில் இருக்கும் உங்கள் பெண்ணின் போட்டோவும் face resemblance நன்கு தெரிகிறது.

  ReplyDelete
 11. உங்கள் தந்தையின் ஆசிர்வாதம் என்றும் உங்களுடன் இருக்கும் ஆதி.

  ReplyDelete
 12. @A.R.ராஜகோபாலன்


  //அப்பா எத்தனை பலவீனமான வார்த்தை என்பது என் மகள் என்னை கூப்பிடும் போதுதான் தெரிந்தது.//

  ஆனால் மகள்களுக்கு அப்பா எத்தனை பலமான வார்த்தை என்பது எங்களைப் போன்ற மகள்கள் அறிவார்கள் சார்(நாளை உங்கள் மகளும் இதை உங்களிடம் கூறுவாள் பாருங்களேன்.அப்பொழுது உங்களுக்கு பெருமையாக இருக்கும்)

  ReplyDelete
 13. Nice Post Sister. I am very proud to have a sister like you. I am so happy. Thanks for sharing about our father in the blog.

  ReplyDelete
 14. பாசமிகு தந்தையின் பெருமைகளை இப்பூவுலக மாந்தர் உணரும் வண்ணம் தங்கள் எழுத்தோவியம் மூலம் பறைசாற்றிட்ட மாதரசியே, கோவையரசியே, நீவீர் வாழ்க!! தாங்கள் கூறுவதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன். பெண்ணை பெற்றிட்ட ஒரு தந்தையே அதை உணர முடியும். ஒன்றோ அல்லது பல பெண்மக்களை பெற்றிட்ட தந்தையும் தங்கள் எல்லா மகளகளிடமும் ஒருமித்த பாசத்தோடு தங்கள் கடமைகளை ஒன்றுபோல ஆற்றியும், திருமணத்தினை செய்து முடித்த பிறகும் ஒரு மாற்று குறையாமல் , பாச உணர்வுகளை மழையாய் பொழிந்திடலையும், நான் எனது இல்லத்தரசியின் இல்லத்தில் , கண்டு, உணர்ந்து அனுபவித்து, வியந்து போற்றியவன் என்ற உணர்வோடு தங்களிடம், இத்தருணத்தில் இதை இயம்புவதில் , பெருமை அடைகிறேன். எந்த நிலையிலும் அப்பாவுக்கு பெண்ணும், பெண்ணுக்கு அப்பாவும் உயிரூட்டும் ஒரு மாமருந்தாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தங்கள் பாசமிகு தந்தையின் பிறந்தநாளில் பழைய நினைவலைகளை எம்முடன் பகிர்ந்திட்டமைக்கு நன்றி கூறி தங்கள் தந்தையாரின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தி, தாங்கள் சோர்வுற்ற போதெல்லாம் தங்களுக்கு பலத்தை கொடுத்து காத்திடல் வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும்,

  வெகு நாட்களுக்குப்பிறகு, டொராண்டோவிலிருந்து,
  மந்தவெளி நடராஜன்.04 -12 -2011

  ReplyDelete
 15. ஒரு பாசமான தந்தைக்கு ஒரு அருமைப்பெண்ணின் அன்பான சமர்ப்பணம்!! உங்கள் அப்பாவிற்கு என் சார்பிலும் நினைவஞ்சலிகளைத்தெரிவிக்கிறேன் ஆதி!!

  ReplyDelete
 16. ஆதி உங்கள் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  என் அப்பாவை எனக்கு நினைக்க வைத்து நெகிழவைத்துவிட்டது உங்கள் பதிவு.
  என அப்பவிற்கும் நவம்பர் மாதம் தான் பிறந்த நாள், நினைவு நாள் எல்லாம்.

  அப்பாவின் ஆசி நிச்சியம் உங்களுக்கு உண்டு.

  ReplyDelete
 17. //உங்கள் சிறு வயது போட்டோவும் ப்ளாகில் இருக்கும் உங்கள் பெண்ணின் போட்டோவும் face resemblance நன்கு தெரிகிறது. //

  Of course, கொஞ்சம் resemblance இருக்கிறது. ஆனால், ரோஷ்ணி-யிடம் அவள் பாட்டியின் (வெங்கட்டின் தாயார்) ஜாடை தான் அதிகம் தெரிகிறது.

  ReplyDelete
 18. அருமை... அருமை... பலமுறை படித்தேன். நன்றி சகோ!
  நம்ம தளத்தில்:
  "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

  ReplyDelete
 19. அருமையாக எழுதியிருக்கீங்க ஆதி உங்க அப்பாவை பற்றி.மனதை நெகிழவைக்கும் பதிவு.

  ReplyDelete
 20. எவ்வளவு எளிமையா சொல்லிடீங்க.
  மனம் கனத்துப் போனேன்.நம்முடன் இருக்கிறார்கள் என்று நம்பித்தான் நம்மை ஆறுதல் படுத்திக்கவேண்டியுள்ளது..

  ReplyDelete
 21. வாங்க இராஜராஜேஸ்வரி,

  நன்றிங்க.

  ReplyDelete
 22. வாங்க வே.சுப்ரமணியன்,

  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 23. வாங்க லஷ்மிம்மா,

  நன்றிம்மா.

  ReplyDelete
 24. வாங்க மோகன்குமார் சார்,

  நன்றி.

  ReplyDelete
 25. வாங்க ஹுஸைனம்மா,

  ஆமாங்க. தந்தையால் தான் பெருமைப்படுத்தப் படுகிறோம்.

  இப்போ ரோஷ்ணியிடம் என்னுடைய சிறு வயது ஜாடை கொஞ்சம் இருக்கிறது.ஆனால் அவளிடம் அவளுடைய அப்பா மற்றும் பாட்டியின் ஜாடை தான் அதிகம்.

  நன்றிங்க.

  ReplyDelete
 26. வாங்க கீதா,

  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 27. வாங்க முத்துலெட்சுமி,

  நன்றிங்க.

  ReplyDelete
 28. வாங்க ரிஷபன் சார்,

  நன்றி.

  ReplyDelete
 29. வாங்க A.R.ராஜகோபாலன் சார்,

  பெண்களுக்கு அப்பா தான் ரோல் மாடல், ஹீரோ எல்லாமே.
  எங்களுக்கு அப்பா தான் பலமான வார்த்தை.எப்பேர்பட்டவராக இருந்தாலும் அப்பா மாதிரி வருமா....
  நன்றி சார்.

  ReplyDelete
 30. வாங்க மோகன்குமார் சார்,

  ஹுஸைனம்மாவுக்கு எழுதியிருக்கிறேன். பாருங்கள் சார்.

  ReplyDelete
 31. வாங்க ராஜி,
  நீங்க சொல்லியிருப்பது மிகவும் சரி.

  நன்றிப்பா.

  ReplyDelete
 32. வாங்க V.K.நடராஜன்,

  தங்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 33. வாங்க மனோம்மா,

  நன்றிம்மா.

  ReplyDelete
 34. வாங்க கோமதிம்மா,

  என் அப்பாவின் நினைவு நாள் அடுத்த மாதம் 10 ஆம் தேதி.
  நன்றிம்மா.

  ReplyDelete
 35. வாங்க சீனு அண்ணா,

  ஆமாம். நீங்க சொல்றது தான் சரி.

  நன்றி.

  ReplyDelete
 36. வாங்க திண்டுக்கல் தனபாலன்,

  நன்றிங்க.

  ReplyDelete
 37. வாங்க ரமா,

  நன்றிங்க.

  ReplyDelete
 38. வாங்க ஆச்சி,

  ஆமாம்பா. இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

  நன்றிப்பா.

  ReplyDelete
 39. உங்கள் பகிர்வு கண்களில் நீரை வரவழைத்து விட்டது.இந்த பகிர்வு என் கண்ணில் இத்தனை நேரம் படாமல் எப்படி போனது?எனக்கு அடிக்கடி ரீடர்ஸ் லிஸ்ட் தெரிவதில்லை.என் பெற்றோர்களை சிறுவயதிலேயே நானும் இழந்ததால் உங்களின் அந்த வலி எனக்கும் தெரிகிறது.

  ReplyDelete
 40. தமிழ்மணம்: 8

  மிகவும் அழகான பதிவு. கல்லூரில் படிக்கும் போது கூட அப்பாவின் சின்னத் தொப்பையில் குத்து விட்டு விளையாடுவேன், மஞ்சள் அமிர்தாஞ்சன் பாட்டிலைத் திறந்தாலே இன்றும் அப்பாவின் வாசம் ... ஆஹா! என்னை மிகவும் மகிழ்வித்தன.

  என் அருமைப்பேத்தியும் என் சின்னத்தொப்பையில் இது போல இப்போது குத்திக்கொண்டு இருக்கிறாள்.
  பேரனுக்கு தலையணையே என் தொப்பை தான். இதை கூட ஒரு பதிவாகப்போட்டிருந்தேன்.

  http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_28.html#comments

  அதில் தங்கள் கணவர் தன் மகளைப்பற்றி எழுதியிருந்தார் ... இதோ:

  வெங்கட் நாகராஜ் said...
  தொந்தி கவிதை நன்றாக இருக்கிறது! சிறு வயதில் என் பெரியப்பாவின் பெரிய தொந்தியில் குத்தி விளையாடுவது தான் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு! இப்போது என் பெண் என்னிடம் விளையாடுகிறாள் :) நல்ல கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பகிர்வுக்கு நன்றிகள். உங்கள் தந்தையின் பாசத்துடன் கூடிய ஆசிகள் தங்களுக்கு என்றுமே கிட்டிடும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 41. வாங்க ஆசியா உமர்,

  நன்றிங்க. தங்களின் பின்னூட்டம் என்னை நெகிழ வைத்தது.

  ReplyDelete
 42. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களின் பின்னூட்டம் வந்த பின் தான் சபை நிறைந்தது போல் மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது.

  பேரன் ,பேத்தியுடனான சந்தோஷங்கள் தொடரட்டும்.
  நன்றி சார்.

  ReplyDelete
 43. என் அப்பாவை எனக்கு நினைக்க வைத்து நெகிழவைத்துவிட்டது உங்கள் பதிவு.
  என அப்பவிற்கும் நவம்பர் மாதம் தான் நினைவு நாள்.

  ReplyDelete
 44. நெகிழ்வான பகிர்வு. உங்கள் தந்தைக்கு எனது வணக்கங்களும். அவர் ஆசி எப்போதும் உங்களை வழிநடத்தும்.

  ReplyDelete
 45. நெகிழ்வான பகிர்வு...... please read my blog www.rishvan.com and leave your comments.

  ReplyDelete
 46. என் அப்பா குறித்த நினைவுகளைத் தூண்டி
  சிறிது நேரம் கண் கலங்கவைத்துப் போனது தங்கள் பதிவு
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  வாழ்த்துக்கள்
  த.ம 9

  ReplyDelete
 47. பல நேரங்களில் நான் நினைத்திருக்கிறேன் ஏன் அப்பா இவ்வளவு சீக்கிரம் இறந்தார் என்று .
  ஏனோ தெரியவில்லை தோழி மனம் கனத்துப்போனது .என் பிறந்தநாளை அவர் இந்தியாவில் கொண்டாடுவார் .மூன்று வருடங்களாக அந்த கொண்டாட்டம் இல்லை அப்பா என்பவர் திருமணம் முடித்து பெற்றோர் ஆனாலும் மகள்களுக்கு எத்துனை பெரிய பலம் தெரியுமா .
  அப்பாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும் .

  ReplyDelete
 48. அப்பா பற்றிய பதிவு வெகு உருக்கம். இப்படியாக அப்பாவை சுமந்தலையும் பெண் மனசு தான் வாழ்க்கைத் துணையிடம் அப்பாவின் அடையாளத்தை தேடித் தவிக்கிறது. கிடைத்தால் பயணம் சுகமாகவும், தவறினால் சுமையாகவும் ஆகி விடுகிறது அநேகருக்கு. மஞ்சள் அமிர்தாஞ்சனில் அப்பாவின் வாசம், வாசிக்கும் எங்களுக்கும் நெடி ஏறி கண்களை உறுத்தி கசியச் செய்தது. இன்றில்லாமல் போனாலும் மரபணுக்கள் மூலம் என்றும் உயிர்த்திருப்பார்கள் நம் வழி. இழப்பின் வலியை கண் நீரிட்டு ஆற்றுவோம்.

  ReplyDelete
 49. வாங்க "என் ராஜபாட்டை"- ராஜா ,

  நன்றிங்க.

  ReplyDelete
 50. வாங்க சந்திர வம்சம்,

  நன்றிங்க.

  ReplyDelete
 51. வாங்க ராமலஷ்மி,

  நன்றிங்க.

  ReplyDelete
 52. வாங்க ரிஷவன்,

  நன்றிங்க.

  ReplyDelete
 53. வாங்க ரமணி சார்,

  நன்றி சார்.

  ReplyDelete
 54. வாங்க ஏஞ்சலின்,

  ஆமாங்க. நீங்க நினைத்தது போல் தான் நானும் நினைத்ததுண்டு. ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டு செல்ல வேண்டும் என்று...
  அப்பா என்பவர் மகள்களுக்கு பெரிய பலம் தான். நன்றிங்க.

  ReplyDelete
 55. வாங்க நிலாமகள்,

  //இப்படியாக அப்பாவை சுமந்தலையும் பெண் மனசு தான் வாழ்க்கைத் துணையிடம் அப்பாவின் அடையாளத்தை தேடித் தவிக்கிறது.//

  இது மிகவும் சரியான கருத்து. தங்கள் கருத்துகள் என்னை நெகிழ வைத்தது.நன்றிங்க.

  ReplyDelete
 56. அன்பான பகிர்வு. அப்பாவின் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்குக் கிடைக்கும்.

  ReplyDelete
 57. வாங்க மாதேவி,

  நன்றிங்க.

  ReplyDelete
 58. அன்பு ஆதி, எத்தனை அப்பாக்கள் இந்தப் பதிவில் வந்துவிட்டார்கள் கவனித்தீர்களா.

  என் அப்பாவை நினைத்தால் வெற்றிலை வாசம் வரும்.
  என் வேலை முடிந்து பாதிநேரம் அப்பாவைப் பார்க்க மதியம்தான் போவேன். நல்ல உறக்கத்தில் இருப்பார்.
  அம்மா கதவைத் திறந்ததும் உடனே எழுந்து உட்கார்ந்து மோர் ஏதாவது சாப்பிடுமா. வெய்யிலில் வந்திருக்கிறாயே என்பார்.
  இந்த பரிவு வேறேங்கு கிடைக்கும்.
  உங்களோடு அப்பாவின் ஆசிகள்.

  ReplyDelete
 59. வாங்க வல்லிம்மா,

  ஆமாம். தங்கள் அப்பா-அம்மாவை பற்றியும் இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…