Thursday, December 1, 2011

தக்காளி தோசைகுளிர்காலம் வந்து விட்டாலே எங்கள் வீட்டில் ”பாட்டிம்மா பலகாரம்” தான். அதாங்க தினமும் இரவு டிபன் தான். அதுவும் செய்த உடனே சாப்பிட வேண்டும். குளிர்ல சீக்கிரம் ஆறிடுமே… இட்லிக்கு மாவு அரைத்தால் புளிப்பதில்லை. அதனால அரைத்த உடனே வார்க்கும் தோசைகள் சுலபம் இல்லையா! அப்படிப்பட்ட தோசை தான் இந்த தக்காளி தோசை. எப்படி செய்வது என்று பார்க்கலாமா…

தேவையானப் பொருட்கள்:-

புழுங்கலரிசி – 1 ½ தம்ளர்

பச்சரிசி – ½  தம்ளர்

துவரம்பருப்பு – 2 மேஜைக்கரண்டி

தக்காளி – நடுத்தர அளவில் 4 (அ) 5

வரமிளகாய் – காரத்திற்கு தகுந்தாற் போல 4 (அ) 5

இஞ்சி – 1 சின்ன துண்டு

பெருங்காயம் – ¼ தேக்கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை:-

அரிசியையும், துவரம்பருப்பையும் தண்ணீரில் அலசிவிட்டு பின் ஊற வைக்க வேண்டும். இவைகள் நன்கு ஊறிய பின் இத்துடன் தக்காளி, வரமிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொண்டு இத்துடன் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் அடை மாதிரி ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு வார்த்து எடுத்து பரிமாறலாம்.

தேங்காய் சட்டினி அரைக்கும் போது பொட்டுக்கடலைக்குப் பதிலாக வேர்க்கடலையை சேர்த்து அரைத்து இந்த தோசைக்குத் தொட்டுச் சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.

என்ன உங்கள் வீட்டில் தக்காளி தோசைக்கு அரிசி ஊற வைத்து விட்டீர்களா!

இந்த ரெசிபியை ஜலீலாக்காவின் இந்த ஈவன்ட்டிற்குஅனுப்பி உள்ளேன்.
மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

34 comments:

 1. அருமையான குறிப்பு மிக்க நன்றி.புக் மார்க்ட்.

  ReplyDelete
 2. இதற்கு வெஜிடபிள் ஆம்லட் என்று பெயர் வைத்து சாப்பிடுகிறார்கள்.

  சுவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. இதை ப்ரின்ட் அவுட் எடுத்து லதாள் கிட்டக் குடுத்திருக்கன். பாப்பம். நம்மூருப் புள்ள சொன்ன பண்டுதம் எப்பிடி இருக்குதுனு!

  ReplyDelete
 4. பயனுள்ள சமையல் குறிப்பு
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  த.ம 2

  ReplyDelete
 5. வணக்கம், புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...

  மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
  நீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
  உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
  உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..

  ReplyDelete
 6. படத்தில் காட்டப்பட்டுள்ள தோசை நல்ல பொன்நிறமாக முறுகலாக் கெட்டிச்ச்ட்னியுடன் இருந்தது என் பசியைக் கிளப்பிவிட்டது. இப்போது உடனே டிபன் சாப்பிடப் போகிறேன்.

  ReplyDelete
 7. பெங்களூரு குளிருக்கும் ஏற்ற டிபன்.நன்றி ஆதி பகிர்வுக்கு.

  ReplyDelete
 8. நன்றி
  சுவையான பகிர்வுக்கு

  ReplyDelete
 9. வித்யாசமான பகிர்விற்கு நன்றி .

  ReplyDelete
 10. ருசியான குறிப்பு , பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 11. சுவையான குறிப்பு. நன்றி

  ReplyDelete
 12. வாங்க ஆசியா உமர்,

  நன்றிங்க.

  ReplyDelete
 13. வாங்க இராஜராஜேஸ்வரி,

  ஆம்லட்டுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லையே? வெஜிடபிள் என்று பார்த்தாலும் தக்காளி மட்டும் தான் இருக்குது.

  நன்றிங்க.

  ReplyDelete
 14. வாங்க லதானந்த்,

  முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 15. வாங்க ரமணி சார்,

  நன்றி.

  ReplyDelete
 16. வாங்க மங்கையர் உலகம்,

  முதல் வருகைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 17. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  நன்றி.

  ReplyDelete
 18. வாங்க ரமா,

  நன்றிங்க.

  ReplyDelete
 19. வாங்க ரிஷபன் சார்,

  நன்றி.

  ReplyDelete
 20. வாங்க ஆச்சி,

  நன்றிப்பா.

  ReplyDelete
 21. வாங்க அமைதிச்சாரல்,

  நன்றிங்க.

  ReplyDelete
 22. வாங்க லக்ஷ்மிம்மா,

  நன்றி.

  ReplyDelete
 23. பேப்பர் போஸ்ட் போல் உள்ளது. (படத்தில்) மனைவியை செய்ய சொல்கிறேன். பகிர்விற்கு நன்றி சகோதரி!
  நம்ம தளத்தில்:
  "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

  ReplyDelete
 24. வாங்க திண்டுக்கல் தனபாலன்,

  நன்றிங்க.

  ReplyDelete
 25. படத்தைப் பார்த்த உடன் சாப்பிட வேண்டும் போல் உள்ளது.

  ReplyDelete
 26. முதலாம் திகதியை தக்காளி தோசையுடன் ஆரம்பித்து விட்டீர்களா :))) அசத்துங்கள்.

  அருமை.

  ReplyDelete
 27. தோசை ரொம்ப நல்லா இருக்குங்க!!

  ReplyDelete
 28. வாங்க சிநேகிதி,

  நன்றிங்க.

  ReplyDelete
 29. வாங்க மாதேவி,

  நன்றிங்க.

  ReplyDelete
 30. வாங்க தெய்வசுகந்தி,

  முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 31. வித்யாசமா பார்க்க மொரு மொறுன்னு இருக்கே .
  எங்களுக்கும் மாவு புளிக்காமல் போகும் பிரச்சினை ரொம்பவே உண்டு .இம்முறையில் செய்து பார்க்கிறேன்

  ReplyDelete
 32. வாங்க ஏஞ்சலின்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 33. நன்றி, மிகவும் சத்தான தோசை

  ReplyDelete
 34. இதுவும் நல்லாவே இருக்கும். ஆனால் சூடாய்த் தான் சாப்பிடணும்.:)

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…