Friday, November 25, 2011

மழலை உலகம்… (தொடர்பதிவு)”மழலை உலகம் மகத்தானது” என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு எழுதச் சொல்லி ஆச்சியும், ராஜியும் அன்புடன் அழைத்திருந்தார்கள். அதற்க்கிணங்க என் மனதில் தோன்றும் சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். இத் தொடர் பதிவை பலர் அருமையாய் பதிந்துள்ளார்கள். அந்த அளவிற்கு இல்லையாயினும் எனக்கு தெரிந்த அளவு எழுதுகிறேன்.

குழந்தைகளைப் பார்த்தால் தூக்கிக் கொஞ்ச எண்ணாதவர் எவரேனும் உண்டோ! ஒவ்வொரு குழந்தையும் தனி அழகு தான். அவர்களின் தளிர்நடை, மழலைப்பேச்சு, இளங்குறும்பு இவைகளை ரசிக்காமல் இருக்க முடியுமா! அவர்களின் செல்லமான கோபம் கூட அழகு தான். நாம் குழந்தைகளாக இருந்த போது என்ன செய்திருப்போம் என்பதை நம் மனக் கண் முன்னே விரிய குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பங்கு கொள்வது அழகு.


 
நாம் குழந்தைகளாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பலநேரங்களில் நினைப்போம், காரணம் கவலைகளற்ற உலகம் அவர்களுடையது. நமக்குத் தான் எதிர்காலத்தைப் பற்றிய யோசனைகள், எதிர்பார்ப்பு, பயம், பொறுப்பு, வெறுப்பு ஆகியவை இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு அதைப் பற்றிய எதுவும் கிடையாது. அந்த கால குழந்தைகளை விட இந்த காலக் குழந்தைகள் மிகவும் தெளிவாக பெற்றோருக்கே ஆலோசனை சொல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள். தைரியசாலிகளாகவும், கல்வி மற்றும் இன்ன பிற கலைகளிலும் தேர்ந்தவர்களாக திகழ்கின்றனர். சில நேரங்களில் அவர்களின் செயல்கள் பிரமிக்க வைக்கின்றன.

நாளைய சந்ததிகள் நல்ல மனிதர்களாகத் திகழ நாம் அவர்களை சிறந்த முறையில் வழிநடத்த வேண்டும். அனைவரிடத்திலும் மரியாதை காட்ட சொல்லித் தர வேண்டும். தன்னிடம் சிறிதளவே இருந்தாலும் பகிர்ந்துண்ணும் குணத்தை கற்றுத் தர வேண்டும். வீட்டுக்கு வருபவர்களை ”வாங்க” என்று அழைக்க பழக வைக்க வேண்டும். இன்று பெரியவர்களே மறந்து கொண்டு வரும் பண்பு இது.


 
கேட்டதையெல்லாம் வாங்கித் தரக் கூடாது. வீட்டு நிலவரம் குழந்தைகளுக்கு தெரிந்திருத்தல் நலம். அப்போது தான் பொறுப்பு வரும் இல்லையா. துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவை அவற்றில் உள்ள சத்துக்களையும், பயன்களையும் கூறி தந்தால் நலம். அவரவர்களின் வேலைகளை செய்ய சிறு வயதிலிருந்தே பழக்க வேண்டும்.  பெண் குழந்தைகளுக்கு தாயானவள் நல்ல சிநேகிதி போல் நடந்து ஒவ்வொரு கட்டத்திலும் வழிநடத்த வேண்டும். எதையும் மறைக்காமல் நம்மிடம் பகிர்ந்து கொள்ள குழந்தைகளை தயார்ப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.


 
தோல்விகளை ஏற்கும் மனப்பாங்கை உருவாக்கினால் நல்லது. உறவுகளின் மகிமையை நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தந்தால் தான் நமக்குப் பின் அவர்கள் ஒட்டுதலோடு இருப்பார்கள். சேமிக்கும் பழக்கத்தையும் உண்டாக்க வேண்டும். தேவையற்ற ஆடம்பரத்தைத் தவிர்த்து எளிமையாய் வாழ  வருங்கால சந்ததிகளுக்கு சொல்லித் தருதல் நம் கடமை.

தங்கங்களே நாளை தலைவர்களே…. [பழைய பாடலாக இருந்தாலும் எனக்குப் பிடித்த பாடல்….] கவிஞர் கண்ணதாசனின் அருமையான வரிகள்... 

Thangangale Naalai Thalaivargale | Online Karaokeஒரு சுட்டி குட்டிப் பெண்ணுக்கு அம்மா என்ற முறையில் என் குழந்தையையும் இந்த மாதிரி தான் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வளர்த்துக் கொண்டும் வருகிறேன். கொஞ்ச வேண்டிய நேரத்தில் கொஞ்சியும், கண்டிப்பாக இருக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டியதும் அவசியம்.

நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும், பழக்கவழக்கங்களையும் நாளைய சந்ததிக்குச் சொல்லித் தந்து மகத்தான ஒரு உலகம் செய்ய வழிகாட்டுவோம்.

தொடர விரும்புவர்கள் தொடருங்களேன்... 
மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

38 comments:

 1. அந்த கால குழந்தைகளை விட இந்த காலக் குழந்தைகள் மிகவும் தெளிவாக பெற்றோருக்கே ஆலோசனை சொல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள். தைரியசாலிகளாகவும், கல்வி மற்றும் இன்ன பிற கலைகளிலும் தேர்ந்தவர்களாக திகழ்கின்றனர். சில நேரங்களில் அவர்களின் செயல்கள் பிரமிக்க வைக்கின்றன.

  நிதர்சனமான கண்கூடான பிரத்யட்ச உண்மை..

  ReplyDelete
 2. நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும், பழக்கவழக்கங்களையும் நாளைய சந்ததிக்குச் சொல்லித் தந்து மகத்தான ஒரு உலகம் செய்ய வழிகாட்டுவோம்./

  மிக அருமையான பகிர்வுக்கு மனம் நிரைந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்..

  ReplyDelete
 3. எல்லா விஷயங்களையும் தெளிவா எடுத்துச் சொல்லி இருக்கீங்க.
  அந்த பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும்.பகிர்விற்கு நன்றி.
  அதெப்பிடிங்க?உங்க பெட்டர் ஹாஃப் 200 ஆவது பதிவு எழுதி முடிச்சதும் நீங்க எழுதினீங்களா?அவர் பதிவு இப்பத்தான் படிச்சேன்.அதுக்குள்ள உங்க பதிவு வந்துடுச்சே!

  ReplyDelete
 4. படங்களும் பதிவும் பாடலும்
  குழந்தைளைச் செல்வங்களைப் போலவே
  மகிழ்வூட்டுவதாய் இருந்தது
  மனம் கவர்ந்த அருமையான பதிவு வாழ்த்துக்கள்
  த.ம 2

  ReplyDelete
 5. நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சொல்லித் தந்து பிள்ளைகளை வளர்க்க வேண்டும், வருபவரை வாங்க என்று வரவேற்கச் சொல்லித்தர வேண்டும் என்று பயனுள்ள பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். குழந்தைச் செல்வங்களைப் போலேவே பதிவும் இனிமையாக இருந்தது. வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 6. நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லியிருக்கீங்க.. வாழ்த்துகள்

  ReplyDelete
 7. //வீட்டுக்கு வருபவர்களை ”வாங்க” என்று அழைக்க பழக வைக்க வேண்டும். இன்று பெரியவர்களே மறந்து கொண்டு வரும் பண்பு இது.//
  இதை என் பதிவில் எழுதாமல் விட்டுடோமேனு நினைத்துக்கொண்டிருந்தேன்.

  எளிமையா சொல்லிடீங்க.நல்ல பகிர்வு.படங்களும் நல்லாயிருக்கு.

  ReplyDelete
 8. நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும், பழக்கவழக்கங்களையும் நாளைய சந்ததிக்குச் சொல்லித் தந்து மகத்தான ஒரு உலகம் செய்ய வழிகாட்டுவோம்.


  ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 9. //ஒரு சுட்டி குட்டிப் பெண்ணுக்கு அம்மா என்ற முறையில் என் குழந்தையையும் இந்த மாதிரி தான் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வளர்த்துக் கொண்டும் வருகிறேன்.//

  வாழ்த்துக்கள்..

  மிக அழகான கருத்துக்கள் கொண்ட அருமையான பதிவாக கொடுத்திருக்கீங்க ஆதி. வாழ்த்துஇக்கள்.

  ReplyDelete
 10. என் குழந்தை பருவ புகைப்படம் எப்படி கிடைத்தது ?
  வணக்கத்துடன் :
  ராஜா

  விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

  ReplyDelete
 11. அழகிய பதிவு. அருமையான செய்திகள். படங்களிலும் தனி அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
  தமிழ்மணம்: 5 vgk

  ReplyDelete
 12. //நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும், பழக்கவழக்கங்களையும் நாளைய சந்ததிக்குச் சொல்லித் தந்து மகத்தான ஒரு உலகம் செய்ய வழிகாட்டுவோம்.//
  மிக அருமையான இன்றைக்குத் தேவையான கருத்து.
  நல்ல சிறப்பான பதிவு.

  ReplyDelete
 13. நல்லா இருக்கு சகோ! ராஜி மேடம் என்னையும் எழுதச் சொல்லியிருக்காங்க. இன்னும் ரெண்டு நாளைக்குள்ள எழுதனும்னு இருக்கேன். :-)

  ReplyDelete
 14. ஒரு தாயாக ,உங்கள் கருத்துக்களை அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்

  ReplyDelete
 15. வீட்டுக்கு வருபவர்களை ”வாங்க” என்று அழைக்க பழக வைக்க வேண்டும். இன்று பெரியவர்களே மறந்து கொண்டு வரும் பண்பு இது.

  கல்யாண வீடுகளில் கூட இப்போது அந்தப் பழக்கம் போய்விட்டது. அருமையா எழுதியிருக்கீங்க.

  ReplyDelete
 16. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 17. வாங்க ராஜி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 18. வாங்க ரமணி சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 19. வாங்க கணேஷ் சார்,

  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 20. வாங்க அமைதிச்சாரல்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 21. வாங்க ஆச்சி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 22. வாங்க லக்ஷ்மிம்மா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 23. வாங்க ராம்வி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 24. வாங்க "என் ராஜபாட்டை"- ராஜா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 25. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 26. வாங்க சீனு அண்ணா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 27. வாங்க ஆர்.வீ.எஸ்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 28. வாங்க சென்னை பித்தன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 29. வாங்க ரிஷபன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 30. குழந்தையும் தெய்வமும் ஒன்று, இந்த பாடல் பகிர்வு சூப்பர்,[பாடல் கேட்க அத்தனை இனிமையும் கருத்துச்செறிவும் நிறைந்து இருக்கு.
  உங்கள் கருத்துக்களும் மகத்தானது..

  ReplyDelete
 31. மிகவும் அருமையான பதிவு .//பெண் குழந்தைகளுக்கு தாயானவள் நல்ல சிநேகிதி போல் நடந்து ஒவ்வொரு கட்டத்திலும் வழிநடத்த வேண்டும். எதையும் மறைக்காமல் நம்மிடம் பகிர்ந்து கொள்ள குழந்தைகளை தயார்ப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.//
  சரியாக சொல்லியிருக்கீங்க .எல்லா படங்களும் அருமை ஓரத்தில் பாஸ்கட்ல அமர்ந்திருக்கும் குட்டி தேவதைதான் ரொம்ப ரொம்ப cute
  உள்ளம் கவர்ந்த அருமையான பதிவு .

  ReplyDelete
 32. வாங்க ஆசியா உமர்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 33. வாங்க துரைடேனியல்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 34. வாங்க ஏஞ்சலின்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 35. நாளைய சந்ததிகள் நல்ல மனிதர்களாகத் திகழ நாம் அவர்களை சிறந்த முறையில் வழிநடத்த வேண்டும். அனைவரிடத்திலும் மரியாதை காட்ட சொல்லித் தர வேண்டும். தன்னிடம் சிறிதளவே இருந்தாலும் பகிர்ந்துண்ணும் குணத்தை கற்றுத் தர வேண்டும். வீட்டுக்கு வருபவர்களை ”வாங்க” என்று அழைக்க பழக வைக்க வேண்டும். இன்று பெரியவர்களே மறந்து கொண்டு வரும் பண்பு இது.//

  பதிவு அருமை. முக்கியமான நல்ல விஷயங்கள் எல்லாமே நன்றாக சொல்லி விட்டீர்கள் இந்த இடம் மிக அருமை.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. வாங்க கோமதிம்மா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிம்மா.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…