Saturday, November 19, 2011

கமலாவும் சுண்டுவும்

தலைப்பைப் பார்த்தவுடன் கமலாவும்  சுண்டு விரல் சைசே  உள்ள சிறுவனும் பற்றிய கதையாயிருக்குமோ என்று கற்பனையை ஓட விடாமல் மேலே படியுங்க.

சென்ற வாரம் எங்கள் வீட்டு புத்தக அலமாரியை ஆராய்ந்ததில் அமரர் கல்கியின் இரண்டு சிறுகதைத்  தொகுப்பு புத்தகங்கள் கிடைத்தது.  உடனே எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். என்னவருக்கு ஒரு வழக்கம் - புத்தகம் வாங்கிய தேதியையும், வாங்கிய ஊரையும் குறித்து வைப்பார்.  அதே வழக்கம் என் அப்பாவுக்கும் உண்டு! இரண்டு புத்தகங்களையும் கடந்த 2004-ஆம் வருடம் ஜூலை 11-ஆம் தேதி திருச்சிக்கு சென்ற போது மலைவாசல் அருகே உள்ள பி.ஆர்.என் புத்தகக் கடையில் வாங்கியிருக்கிறார்.


கமலாவின் கல்யாணம் என்ற புத்தகம் வித்தியாசமான ஏழு, சிறுகதைகளை உள்ளடக்கிய நல்லதொரு புத்தகமாக இருந்தது. இவையெல்லாம் அந்த கால மனிதர்களையும், அவர்களின் நடைமுறைகளையும் காட்டும் கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கதைகள். கல்யாணமென்றால் சும்மாவா? எவ்வளவு திருப்பங்கள், கப்பலில் தோன்றும் ஒரு காதல் கதை, தற்கொலைக்கு முயலும் போது நண்பர்களாகி அவர்கள் வாழ்வில் முன்னேறிய கதை போன்ற வேறுபட்ட கதைகள். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 7 சிறுகதைகளின் தலைப்புகள் கீழே:

1.  கமலாவின் கல்யாணம்
2.  தற்கொலை
3.  எஸ்.எஸ்.மேனகா
4.  சாரதையின் தந்திரம்
5.  கவர்னர் விஜயம்
6.  நம்பர் 888
7.  ஒன்பது குழி நிலம்

இந்த புத்தகத்தில் இருந்த கதைகளில், தொகுப்பின் தலைப்பான ”கமலாவின் கல்யாணம்” என்ற கதை எனக்கு மிகவும் பிடித்தது. இக்கதையின் தொடக்கமே இப்படி இருந்தது…

“ஆயிரம் பொய் சொல்லி ஒரு கலியாணம் செய்து வை!” என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களாம். பொய் சொல்லுவது ஏதோ அவ்வளவு சுலபமான காரியம் என்று எண்ணித்தான் அவர்கள் அவ்வளவு பேச்சுத் தாராளம் காட்டியிருக்கிறார்கள்! ஆனால் ஜூனியர் வக்கீலாகிய எனக்குத் தெரியும், பொய்யிலுள்ள சிரமம்.  நம்முடைய கட்சிச் சாட்சியை ஒரு பொய் சரியாகச் சொல்லி மீண்டு வரும்படி செய்வதற்குள் வாய்ப்பிராணன் தலைக்கு வந்துவிடுகிறது.  ஆயிரம் பொய் சொல்லுவதாம்! கல்யாணம் செய்து வைப்பதாம்? அந்த நிபந்தனையின் பேரில் தான் கல்யாணம் நடக்கும் என்றால் உலகத்தில் ஆண் பிள்ளைகள் எல்லாரும் விநாயகர்களாயிருக்க வேண்டியதுதான்.”


அடுத்து படித்த புத்தகம் - ”சுண்டுவின் சந்நியாசம்”.  இந்தப் புத்தகத்திலும் விதவிதமான கதைகள். அதுவும் சுதந்திர போராட்டத்துக்கு முன் நடந்த கதைகளாக இருக்கின்றன. விறுவிறுப்பாக இருக்கும் இக்கதைகள் தொடர்ந்து படிக்கும் சுவாரசியத்தைத்  தூண்டுகிறது.

இப்புத்தகத்தில் உள்ள சிறுகதைகளாவன:

1.  சுண்டுவின் சந்நியாசம்
2.  அமர வாழ்வு
3.  திருடன் மகன் திருடன்
4.  இமயமலை எங்கள் மலை
5.  பொங்குமாங்கடல்
6.  பிரபல நட்சத்திரங்கள்

இத்தொகுப்பில் உள்ள அமர வாழ்வு என்னும் கதை எனக்கு மிகவும் பிடித்தது.  ரசித்துப் படித்தேன்.

இப்புத்தகங்களை படித்துப் பார்த்து அதன் உண்மையான சுவையை அனுபவியுங்கள். வாங்க அணுக வேண்டிய முகவரி -

சாரதா பதிப்பகம்
ஜி-4, சாந்தி அபார்ட்மெண்ட்
3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, (அஜந்தா ஹோட்டல் அருகில்)
இராயப்பேட்டை,
சென்னை – 600014.

ஒவ்வொரு புத்தகமும் ரூபாய் முப்பது மட்டுமே.


மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

24 comments:

 1. கதைச் சுருக்கத்துட்ன் அட்டைப்படத்துடன்
  கிடைக்கும் விலாசத்துடன் விலையுடன்
  குறிப்பிட்டிருந்தது அருமை
  பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
  த.ம 2

  ReplyDelete
 2. சிறு கதைகள் படிப்பதில் கொஞ்சம் ஆர்வம் தான்.. நம்ம லைப்ரயில் கிடைக்குதானு பார்க்கிறேன்.. இல்லைனா திருச்சி போகும் பொழுது வாங்க முய்ற்சி செய்கிறேன்

  ReplyDelete
 3. நானும் இதில் சில கதைகள் படித்து ரசித்திருக்கேன். கல்கி எழுத்துக்கள் அவ்வளவு சுவாரசியம். பதிவுக்கு நன்றி

  ReplyDelete
 4. அட!புத்தக விமர்சனம்! தலைப்பைப் பார்த்து நான் ஏதோ கதைன்னு நினைச்சேன்.

  நீங்க சொல்லி இருக்கறதைப் பாத்தா படிக்கணும் போல இருக்கு.என் லைப்ரரில கிடைக்குதா பாக்கணும்.
  கிடைச்சதும் படிச்சிட்டு சொல்றேன்.நாம அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்.ஓக்கே?!

  ReplyDelete
 5. எழுத்தில் கல்கியை மிஞ்ச யார் இருக்கிறார்கள்.. பொன்னியின் செல்வன் ஒன்று போதுமே.. சிறுகதை, கட்டுரை என்று சகலமும் அவர் கைவண்ணத்தில் ஜொலிக்கும். நூல் அறிமுகம் ஜோர்.

  ReplyDelete
 6. பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 7. கல்கியின் பொன்னியின் செல்வன் கதை படித்திருக்கிறேன்.
  ஒரு சிறுகதையும் படித்திருக்கிறேன்.. (தலைப்பு ஞாபகம் இல்லை)

  //என்னவருக்கு ஒரு வழக்கம் - புத்தகம் வாங்கிய தேதியையும், வாங்கிய ஊரையும் குறித்து வைப்பார். //
  இதே வழக்கம் எனக்கும் உண்டு. எனது அன்னைடமிருந்து கற்றது.
  இதில் ஒரு விசேஷம். தேதியை திருப்பி எழுதுவேன். இப்படி '881228 (MS)' [ms means Madras ]

  ReplyDelete
 8. அன்னையிடமிருந்து = அண்ணனிடமிருந்து, in my earliear comment

  ReplyDelete
 9. மிக அருமையான அறிமுகம், வாங்கி படிக்க தோன்றுகிறது நன்றி.

  ReplyDelete
 10. ஆதி, புத்தக விமர்சனம் அருமை. கல்கியின் கதைகள் எல்லாம் பெரும்பாலும் படித்து இருப்பேன்.

  படித்துப் பார்த்தால் நினைவுக்கு வந்து விடும் முன்னேமே படித்தது என்று . புத்தகங்களை படித்துப் பார்க்க வேண்டும்.

  பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம், கள்வனின் காதலி, பார்த்திபன் கனவு , கல்கியில் வந்த சிறுகதை தொகுப்பு பொன்மான் கரடு எல்லாம் நன்றாக இருக்கும் என் அம்மா பயிண்ட் செய்து வைத்து இருந்தார்கள்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 11. நல்ல புத்தகங்களின் அறிமுகத்துக்கு நன்றி ஆதி.

  ReplyDelete
 12. ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி!

  பொங்குமாங்கடல் வித்யாசமான கதை!

  ReplyDelete
 13. கல்கி கதை என்றாலே விறுவிறுப்பு தான்! பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 14. கல்கியின் சிறுகதைகள் நம்ம சென்னை லைப்ரரில கொட்டிக்கிடக்குது..

  http://www.chennailibrary.com/kalki/kalki.html

  ReplyDelete
 15. குழந்தைகள் உலகம் மகத்தானது என்ற தொடர் பதிவிற்கு என் அழைப்பினை ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையில் அழைப்புவிடுத்துள்ளே.

  என் தற்போதைய பதிவிற்கு வருகை தரவும்

  ReplyDelete
 16. அமரர் கல்கியின் எழுத்து எனக்கும் பிடிக்கும்.தமிழ்மண புத்தகப்பரிசில் அவருடைய புத்தகங்களும் வாங்கினேன்.பகிர்விற்கு மகிழ்ச்சி.

  ReplyDelete
 17. தங்களை என் பதிவில் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்.வேண்டுகோளை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 18. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 19. கல்கியின் கதைகள் எனக்கும் பிடிக்கும். நன்றி. :-)

  ReplyDelete
 20. புத்தக அறிமுகத்துக்கு நன்றி.

  ReplyDelete
 21. அமரர் கல்கியின் எழுத்து எனக்கும் பிடிக்கும்...புத்தக விமர்சனம் அருமை...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. எல்லாம் எங்க வீட்டு கிட்ட உள்ள அட்ரஸ் தான்.
  நல்ல அறிமுகம்

  ReplyDelete
 23. இந்தப் புத்தகம் என்னிடமும் இருக்கிறது. இதி வேடிக்கை என்ன என்றால் என் மாமனார் பெயர் சுண்டு என்கிற சுந்தரராஜன்.மாமியா கம்லா,:)

  நினைவுக்குக் கொண்டுவந்ததற்கு மிகவும் நன்றீ ஆதி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…