Saturday, November 12, 2011

வந்தேன் வந்தேன் மீண்டும் வந்தேன்…………எல்லாரும் எப்படி இருக்கீங்க? தீபாவளியெல்லாம் நல்லபடியாக சென்றதா? நீண்ட இடைவெளிக்குப் பின் வலைப்பக்கம் இப்போது தான் வர முடிந்தது. வலைச்சர பொறுப்பின் இறுதி நாளன்று தான் ஸ்ரீரங்கத்திலிருந்து தீபாவளிக்காக மாமனார், மாமியார் தில்லிக்கு வந்திருந்தார்கள். குடும்பக் கதைகளையும், ஊர்க்கதைகளையும் பேசுவதற்கே நேரம் சரியாக போய்விட்டது.

அவர்கள் இருக்கும் போது கணினி முன்னால் உட்கார்ந்திருந்தால் நன்றாக இருக்காதே…. தீபாவளிக்காக செய்த பட்சணங்களை மட்டும் தீபாவளி முதல் நாள் வலையேற்றினேன். தில்லியில் குளிர்காலம் ஆரம்பித்து விட்ட படியால் சென்ற வாரம் ஊருக்கு கிளம்பி விட்டார்கள்.

இங்கே தில்லியில் ஒண்ணு சொல்லுவாங்க, தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்வெட்டர் போட்டுக் கொள்ள ஆரம்பித்தால் மார்ச் மாதத்தில் வரும் ஹோலியன்று கழட்டலாம் என்று. ஆனால் இன்னும் அவ்வளவாய்க் குளிர் ஆரம்பிக்கவில்லை. ரோஷ்ணிக்கு மட்டும் பள்ளியில் குளிர்கால ஆடைகள் சென்ற வாரத்திலிருந்தே ஆரம்பித்து விட்டார்கள்.

டிசம்பர் இறுதியிலிருந்து பொங்கல் வரை பதினைந்து நாட்களுக்கு ஒரு கடுங்குளிர் வாட்டும். அப்போது தான் பள்ளியிலும் விடுமுறை இருக்கும். மற்றபடி ஒரு ஸ்வெட்டர், சாக்ஸ், வீட்டிலும் செருப்பு, வெளியில் போகும் போது ஒரு ஸ்கார்ப் அல்லது மப்ளர் அணிந்து பாதுகாத்துக் கொண்டால் குளிர்காலம் ஆனந்தமானது தான். வியர்த்துக் கொட்டும் கோடையைக் காட்டிலும் குளிர் மேலானது என்பது என் கருத்து.

நேற்று புதியதாக வந்த இந்த இடத்தில் தோழி ஒருவர் கேட்டார். இது உங்களுக்கு தில்லியின் முதல் குளிர்காலமா என்று……. இது என்னுடைய பத்தாவது குளிர்காலம். கோடையை சமாளிக்கக் கூட ஊருக்கு போகலாமா என்று சொல்வேன். ஆனால் குளிர்காலத்தை மிஸ் பண்ணியதேயில்லை. இந்த குளிர்காலத்தை பற்றிய செய்திகளை வரும் பதிவுகளில் அவ்வப்போது தருகிறேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


32 comments:

 1. மீண்டும் உங்கள் ஜில் பதிவு படிக்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஹீட்டர் போட்டுக் கொண்டு டெல்லி கெஸ்ட் ஹவுசில் தூங்கியது ஞாபகம் வந்தது.

  ReplyDelete
 2. வாங்க சமத்துப்பொண்ணே..:)

  ம்.. குளிர் எஞ்சாய் செய்யவேண்டிய ஒன்று தான் முதுகு வலி மட்டும் எனக்குவராமல் இருந்தா :)

  ReplyDelete
 3. மீண்டும் தாங்கள் மீண்டு வந்ததில் மகிழ்ச்சி.

  குளிரை வரவேற்கத் தயாராக இருப்பதைக் கேட்க சந்தோஷமாக உள்ளது. நானும் ஒரு 4 நாட்கள் டெல்லிக் குளிரை அனுபவித்து வந்தேன்.

  இந்த வாரம் தமிழ்மணத்தில் அடியேன் நட்சத்திரப்பதிவர். நாளையுடன் முடிவடைகிறது.

  தினமும் ஒரு புதிய பதிவும் 3 மீள் பதிவுகளும் தந்து வருகிறேன். நாளை கடைசி நாள் மட்டும் ஒரு புதிய பதிவு + 2 மீள் பதிவுகள் மட்டுமே தர உள்ளேன்.

  நேரமிருந்தால் வருகை தாருங்கள். vgk

  ReplyDelete
 4. குளிரை நல்லா அனுபவியுங்க.. இங்கே இன்னும் குளிர் ஆரம்பிக்கலை :-))

  ReplyDelete
 5. வாழ்க குளிர்...அதனால்தான் நீங்கள் வந்துள்ளீர்கள். வருக வருக.

  ReplyDelete
 6. வரவுக்கு வாழ்த்துக்கள்
  தங்கள் பதிவை ஆவலுடன்
  எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்
  த.ம 3

  ReplyDelete
 7. டில்லி குளிர்பற்றி கேள்விபட்டிருக்கேன். ஜபல்பூரிலும் செமைக்குளிர் இருக்கும் இங்க மும்பையில் குளிரே இல்லே.

  ReplyDelete
 8. ஜில்லுன்னு கலக்குங்க..

  ReplyDelete
 9. வாங்க வாங்க ஆதி. தீபாவளியை கோவையில் நல்லபடியாக முடித்து உங்கள் ஊர் குளிரை அனுபவிக்க வந்து விட்டேன்.

  குளிர்க்கால செய்திகளை அறிய ஆவல்.

  ReplyDelete
 10. இன்றிலிருந்து உங்கள் வலைப்பூவை தொடர ஆரம்பித்துள்ளேன். நீங்களும் தங்களது கலைச் சேவையை தொடரவும் :-)

  ReplyDelete
 11. வருக ... வருக... மீண்டும் புது பொலிவுடன் உங்கள் வலைப்பூ தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. //ஸ்ரீரங்கத்திலிருந்து தீபாவளிக்காக மாமனார், மாமியார் தில்லிக்கு வந்திருந்தார்கள். குடும்பக் கதைகளையும், ஊர்க்கதைகளையும் பேசுவதற்கே நேரம் சரியாக போய்விட்டது.//

  பதிவெழுத நிறைய விஷயம் தேறியிருக்கும். படிக்க காத்திட்டிருக்கோம்லா!

  ReplyDelete
 13. வாங்க விக்னேஷ்வரி,

  நன்றி.

  ReplyDelete
 14. வாங்க ரிஷபன் சார்,

  நன்றி.

  ReplyDelete
 15. வாங்க முத்துலெட்சுமி,

  முதுகுவலி வந்தா கஷ்டம் தான். பாதுகாத்துக் கொள்ளுங்கள். எனக்கு துங்குவது தான் கஷ்டம். மூக்கு சுத்தமாக அடைத்துக் கொள்ளும்.

  ReplyDelete
 16. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்கள் பதிவுகளை படித்தேன் நன்றாக இருந்தது.
  நன்றி.

  ReplyDelete
 17. வாங்க அமைதிச்சாரல்,

  நன்றிங்க.

  ReplyDelete
 18. வாங்க விச்சு,

  நன்றிங்க.

  ReplyDelete
 19. வாங்க ரமணி சார்,

  நன்றி.

  ReplyDelete
 20. வாங்க ஆச்சி,

  நன்றிப்பா.

  ReplyDelete
 21. வாங்க லஷ்மிம்மா,

  நன்றி.

  ReplyDelete
 22. வாங்க ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சார்,

  நன்றி.

  ReplyDelete
 23. வாங்க அமுதா கிருஷ்ணா,

  நன்றிங்க.

  ReplyDelete
 24. வாங்க கோமதிம்மா,

  உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நன்றிம்மா.

  ReplyDelete
 25. வாங்க Madhavan Srinivasagopalan சார்,

  தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சார். நன்றி.

  ReplyDelete
 26. வாங்க சிநேகிதி,

  நன்றிங்க.

  ReplyDelete
 27. வாங்க ஈஸ்வரன் சார்,

  ஊர்வம்பு தான!!! சொல்லிட்டா போச்சு.

  நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…