Wednesday, November 16, 2011

கதம்பம் - 5


போன பகிர்வில் சொன்னது போல, நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவு எழுதுவதால், இடைப்பட்ட நாட்களில் நடந்த சின்னச் சின்ன விஷயங்கள் பற்றி இந்த முறை கதம்பத்தில் பார்க்கலாம்.

பிர்லா மந்திர்


தீபாவளி சமயத்தில் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட பிர்லா மந்திர் கண்ணைக்  கவர்ந்தது. எங்கள் வீட்டின் பின்புற சாலையில் தான் இருக்கிறது என்பதால் மாலை 06.00 மணிக்கு மேல் சென்று சரவிளக்குகளின் ஒளியில் ஜொலித்த கோவிலை பார்த்து வந்தோம். இன்னொரு விஷயம் இந்த கோவிலில் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் நம் எம்.எஸ் அம்மாவின் குரலில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒளிபரப்புகின்றனர். தலைநகரில், அதுவும் புகழ்பெற்ற கோவிலில் எம்.எஸ் அம்மாவின் குரலை கேட்கும் போது பெருமையாக இருக்கிறது.

அப்படிப் போடு… போடு… :


தில்லியில் குளிர் காலம் வந்து விட்டாலே வரிசையாக கல்யாணங்கள் நடைபெற ஆரம்பித்துவிடும். இந்த கல்யாணங்களில் ”[B]பராத்” எனப்படும் மாப்பிள்ளை அழைப்புதான் சிறப்பானது. தாலி கட்டுவது என்பது வெறும் உறவினர்கள் முன்னிலையில் மட்டும் தான்.   [B]பராத்தின் போது மாப்பிள்ளை அலங்கரிக்கப்பட்ட குதிரை மீது அமர்ந்து வருவார். வெளியூரிலிருந்து வந்தாலும் மண்டபத்திற்கு சிறிது தூரம் முன்னே அவர்கள் வந்த வண்டிகளை விட்டு, குதிரை மீது அமர்ந்து உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ வருவார். உடன் [B]பேண்ட் வாத்தியங்களும் வரும்.  எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு கம்யூனிட்டி ஹால் இருக்கிறது. இங்கே நடைபெறும் கல்யாணங்களில் இடம்பெறும் DJ-க்கள் போடும் பாடல்களில் நம் தமிழ்ப்  பாட்டுகள் சக்கைப் போடு போடுகின்றன. என்ன பாடல்கள் என்றா கேட்கிறீர்கள். அப்படி போடு... போடு...,  அட்ரா அட்ரா நாக்கு முக்கா… போன்ற குத்துப் பாடல்கள்தான்.  கஷ்டம்….

பஸ்ஸில் வாங்கிய பல்பு:


 
”தீபாவளி துணி எடுப்பதற்கு வீட்டுக்குப் பக்கத்திலேயே கனாட் ப்ளேசில் நம்ம ஊர் நல்லி இருக்கு போகலாமா?” என என்னவர் கேட்க, உடனே ”யெஸ்”ஸினேன்.  தான் அலுவலகத்திலிருந்து நேரே அங்கு வந்து விடுவதாகவும் என்னையும் பெண்ணையும் அங்கே வந்துவிடும்படியும் சொன்னார்…  நானும் மகளும் தில்லி மாநகரப் பேருந்தில் ஏறினோம்.  பேருந்தினுள் பார்த்தால் “நடத்துனர்” ஒருவரும் இல்லாதது போல இருந்தது – யாரைப் பார்த்தாலும் பயணி போலவே இருக்க, யாரிடம் பயணச்சீட்டு வாங்குவது எனத் தெரியவில்லை.  பின் பக்கத்தில் ஒரு சர்தார்ஜி அமர்ந்திருக்க, அவரைக் கேட்கலாமா என நான் பார்க்க, அவரும் என்னையே பார்த்துக் கொண்டு இருக்க, பிறகு இரண்டு நிறுத்தங்கள் போன பிறகு, அந்த சர்தாரைப் பார்த்து, “யார் இந்த பேருந்தில் நடத்துனர்?” எனக் கேட்டேன்… அந்த சர்தார் சொன்னார் – “நாந்தேன்… நீங்கள் பயணச்சீட்டு வாங்கவில்லையே, ஒரு வேளை பாஸ் வைத்து இருப்பீர்களோ என நினைத்தேன்" என்றார். நல்லா  பல்பு வாங்கினேன்.  நடத்துனர்-னா ஒரு சீருடை போட்டு இருக்க மாட்டாரோ!

முன்னேறிப்போச்சு:  

தீபாவளி அன்று, வீட்டில் குப்பை எடுத்துச் செல்லும் நபர், இஸ்திரி செய்பவர், தெரு பெருக்கும் துப்புரவு பணியாளர், காலனி காவலாளி என நிறைய பேர் வீட்டுக்கு வந்து தீபாவளி இனாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  அவரவர்களுக்கு ஒரு ரேட் வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு கொடுக்கவில்லையெனில் திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள்.  வீட்டில் குப்பை எடுத்துச் செல்லும் நபர் அப்படித் திருப்பிக் கொடுத்தவர்களில் ஒருவர். அவர் சென்ற பின் ஏதோ வேலையாகக் கீழே சென்றபோது அவர் தனது குடும்பத்தினரோடு எல்லா வீடுகளிலும் பணம் வாங்கிக் கொண்டு தனது சொந்த காரில் சென்று கொண்டிருந்தார். அது சரி… கார் செலவுக்கே நிறைய பணம் வேண்டுமே… நான் கொடுத்தது நிச்சயம் பத்தாது தான்.  வேறென்ன சொல்ல!

ரோஷ்னி கார்னர்:  

தீபாவளிக்கு இந்த முறை பட்டாசு வாங்க வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.  பள்ளியில் சொல்லி இருப்பார்கள் போல – சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்போம் என்று. சரி நல்லதாயிற்று என நானும் நினைத்தேன். அவர் வந்தவுடன் அவரிடமும் மகள் சொல்லி, ‘பட்டாசுக்கு பதிலாக காசு கொடுத்துடுப்பா! நான் சேத்து வச்சுக்கிறேன்” என வாங்கிக் கொண்டு விட்டாள்!! 

மீண்டும் சந்திப்போம்….


ஆதி வெங்கட்.

43 comments:

 1. டெல்லிக் கதம்பம் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது
  தொடர்ந்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
  வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
 2. ரசிக்கும்படியான பகிர்வு..அருமை.

  ReplyDelete
 3. // நல்லா பல்பு வாங்கினேன். நடத்துனர்-னா ஒரு சீருடை போட்டு இருக்க மாட்டாரோ! //

  இதே கேள்வியைத்தான் நான், சக பதிவர் @வெங்கட் நாகராஜிடம் கேட்டேன், அவருடன் பயணித்த பொது.

  ReplyDelete
 4. வாசனையான கதம்பம்..
  அப்டிப்போடு இங்கியும் ரொம்பவே ஃபேமஸ் :-)

  ReplyDelete
 5. டில்லி கதம்பம் சுவாரசியம் குப்பை அள்ளுபவர் கார் வச்சிருக்காரா? சூப்பர்தான்

  ReplyDelete
 6. தமிழ்மணம்: 5 vgk

  அருகிலேயே பிர்லா மந்திர் எம்.எஸ். அம்மா குரல்.
  கொடுத்து வைத்தவர்கள்.

  அருகிலேயே திருமண மண்டபம். குத்துப்பாட்டுக்கள்.
  நரக வேதனையாக இருக்குமே, பாவம்.

  பஸ் சர்தார்ஜி கண்டக்டர் சிரிப்பு தான்.

  வாழ்க்கைத்தரத்தில் முன்னேறியுள்ள குப்பை கூட்டும் தொழிலாளி, நம் நாடு எங்கேயே போய்க் கொண்டிருப்பதை உணர வைக்கிறது. வாழ்க! அவராவது.

  குழந்தையானாலும் ரோஷ்னியின் தீர்மானம் வியப்பளிக்கிறது. புலிக்கு (sorry) புலிகளுக்குப் பிறந்ததல்லவா! அதனால் தான் இவ்வளவு சிறிய வயதில் இப்படி ஒரு விவேகம்,

  அவளுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
 7. நேற்றுதான் நீங்கள் சொன்ன இரண்டு பாடல்களை இங்கு நடந்த திருமணத்தில் கேட்டேன். மகளிடம் அட தமிழ் பாட்டு பாடுகிறர்களே என்று வியந்து கேட்டேன்.
  நீங்களும் குறிப்பிட்டு விட்டீர்கள்.

  ரோஷ்னி சமத்து குழந்தை.

  கதமபம் மணக்குது.

  ReplyDelete
 8. டெல்லி பற்றிய செய்திக்கதம்பம் அருமை.
  // ‘பட்டாசுக்கு பதிலாக காசு கொடுத்துடுப்பா! நான் சேத்து வச்சுக்கிறேன்”//

  சேமிக்கும் பழக்கம் மிகவும் நல்லது. சின்ன வயதிலேயே அதனை ஆரம்பித்து விட்டாள் உங்க மகள். அதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. //தீபாவளிக்கு இந்த முறை பட்டாசு வாங்க வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.//

  இதற்காகவே ரோஷ்னிக்கு ஒரு ஷொட்டு!

  //பட்டாசுக்கு பதிலாக காசு கொடுத்துடுப்பா! நான் சேத்து வச்சுக்கிறேன்//

  இப்பவே சேமிப்பைக் கத்துக்கிட்டதுக்கு கொடுக்கலாம் ஒரு லட்டு!


  ஆனால் அப்பா பாக்கெட்டுல வச்சுட்டாளே வேட்டு.

  ReplyDelete
 10. ரசிக்க வைக்கிறது உங்கள் எழுத்துக்கள்

  ReplyDelete
 11. வாங்க ரமணி சார்,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 12. வாங்க ஆசியா உமர்,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 13. வாங்க Madhavan Srinivasagopalan சார்,

  //இதே கேள்வியைத்தான் நான், சக பதிவர் @வெங்கட் நாகராஜிடம் கேட்டேன், அவருடன் பயணித்த பொது.//

  ஆமாம் சார் சீருடையும் கிடையாது. இங்கு நம் இடத்திற்கு வந்து பயணச்சீட்டு தரவும் மாட்டார்கள். அது போக அந்த சர்தார்ஜியும் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பும் பயணி போலவே காணப்பட்டார். நல்ல பல்பு தான்....
  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 14. வாங்க அமைதிச்சாரல்,

  உங்க ஊர்லயும் இந்த பாட்டு பேமஸா!!!

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 15. தலைநகரில், அதுவும் புகழ்பெற்ற கோவிலில் எம்.எஸ் அம்மாவின் குரலை கேட்கும் போது பெருமையாக இருக்கிறது.

  டெல்லிக்கதம்பம் மணம் நிறைந்த பொன் மலர்களாக மலர்ந்திருக்கிறது.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. வாங்க லக்ஷ்மிம்மா,

  ஆமாம்மா. முன்னேற்றம் தான்.

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 17. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தினமும் ஏதாவது கல்யாணம். குத்துபாட்டுகளால் நள்ளிரவு வரை நரக வேதனை தான். மெயின் ரோடைத் தாண்டி மறுபக்கம் இருந்தாலும் சத்தம் பயங்கரம்.

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 18. வாங்க கோமதிம்மா,

  கீழே உள்ள பார்க்கிலா? சத்தம் காதைப் பிளக்கும் அளவு வைப்பார்கள்.

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 19. //வீட்டில் குப்பை எடுத்துச் செல்லும் நபர் அப்படித் திருப்பிக் கொடுத்தவர்களில் ஒருவர். அவர் சென்ற பின் ஏதோ வேலையாகக் கீழே சென்றபோது அவர் தனது குடும்பத்தினரோடு எல்லா வீடுகளிலும் பணம் வாங்கிக் கொண்டு தனது சொந்த காரில் சென்று கொண்டிருந்தார்.//
  சாதாரணமாக அவர்கள் அரசாங்கத்தால் (அல்லது corporationஆல்) நியமிக்கப் பட்டு அந்த வேளையை sub-contractஆக ஒருவரிடம் கொடுத்துவிடுவார்கள். அவர்கள் வேறு வேலை செய்து கொண்டு, இதற்கான சம்பளத்தில் ஒரு பாகம் தான் தினம் குப்பை எடுத்து செல்பவர்களுக்குத் தருவார்கள்.

  ReplyDelete
 20. வாங்க ரமா,

  ரோஷ்னியிடம் வாழ்த்தை தெரிவித்து விடுகிறேன்.

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 21. வாங்க ஈஸ்வரன் சார்,

  ஷொட்டு, லட்டு, வேட்டு எல்லாமே நல்லாயிருக்கு.
  உட்கார்ந்து யோசிப்பீங்களோ!!!!!!!!!!!!

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 22. வாங்க சிநேகிதி,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 23. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 24. கதம்பம் சுவைக்கிறது.

  ReplyDelete
 25. கதம்பம் கம கம வென்று மணக்குது சுவாரசியமான எழுத்தால்.

  ReplyDelete
 26. கதம்பம் - தில்லி உண்மைகளுடன் மணக்கிறது.ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 27. முழுக்கதம்பமும் வாசனையா இருக்குன்னாலும் கதம்பத்தின் கடைசிப் பகுதி ருசி கூடுதலாகவே உள்ளது.
  சூப்பர் :-))

  ReplyDelete
 28. ,,,,அவர் தனது குடும்பத்தினரோடு எல்லா வீடுகளிலும் பணம் வாங்கிக் கொண்டு தனது சொந்த காரில் சென்று கொண்டிருந்தார். அது சரி… கார் செலவுக்கே நிறைய பணம் வேண்டுமே… நான் கொடுத்தது நிச்சயம் பத்தாது தான். வேறென்ன சொல்ல!’’’’

  மனதார ரசித்தேன் சகோ
  மனம் லயித்த கதம்பம்

  ReplyDelete
 29. கதம்ப மணம் அருமை..

  நவம்பர் மாசம் தினம் ராத்திரி ஒரு கல்யாணம் நடக்குது.. நாக்கமுக்கவும் அப்படிபோடுவும் திரும்ப திரும்ப ஓடுது:))

  ReplyDelete
 30. தஞ்சாவூர்க் கதம்பம்தான் ஃபேமஸ்.டில்லிக் கதம்பம் அதுக்கும் மேல தூக்குதே!
  கெட்டிக்காரக் குழந்தை ரோஷ்னிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 31. வாங்க சீனு அண்ணா,

  தினந்தினம் எங்கள் வீட்டில் குப்பை எடுத்து செல்லும் நபர் தான். இவருக்கும் காண்ட்ராக்ட்டுக்கும், அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இல்லை.

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 32. வாங்க மாதேவி,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 33. வாங்க ரிஷபன் சார்,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 34. வாங்க கே.பி.ஜனா சார்,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 35. வாங்க ஆச்சி,

  ரோஷ்னிக்கு வாழ்த்தை சொல்லிடறேன்.

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 36. வாங்க ராஜி,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 37. வாங்க A.R.ராஜகோபாலன் சார்,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 38. வாங்க துரைடேனியல் சார்,

  தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 39. வாங்க முத்துலெட்சுமி,

  தினந்தினம் கல்யாணம் தான்...

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 40. வாங்க சென்னை பித்தன் சார்,

  ரோஷ்னியிடம் சொல்லி விடுகிறேன்.
  தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…