Sunday, September 25, 2011

நவராத்திரி தாம்பூலம்…


நவராத்திரி நாட்களில் ஒன்பது தினமும் நமது சொந்தங்களையோ, நண்பர்களையோ வீட்டுக்கு அழைத்து வெற்றிலை-பாக்கு வைத்துக் கொடுப்போம் அல்லவா? அப்படிக் கொடுக்கும்போது பெரும்பாலும் ரவிக்கைத் துணியும் அதில் முக்கிய இடம்பெற்றிற்கும். அவை ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி சுற்றிக் கொண்டு தான் இருக்கும். காரணம் பெரும்பாலும் யாரும் அவற்றை தைத்துக் கொள்வதில்லை. அந்த ரவிக்கைத் துணியில் இந்த மாதிரி பெயிண்டிங் செய்து அவர்களுக்கு வேண்டிய நிறத்தில் கேட்டுக் கொடுத்தால் இப்படி வேறு யாருக்காவது கொடுக்காமல் அவர்களே தைத்து அணிந்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

இதற்கு அந்த துணியில் எந்த இடம் கைப்பக்கம் என்பது தெரிந்திருக்க வேண்டும். தையல் தெரிந்தவர்களுக்கு கைப்பக்கம் எங்கு வரும் என்பது தெரியும். இல்லையென்றாலும் துணியில் அங்கங்கே சிறு சிறு பெயிண்டிங் செய்து தரலாம். நவராத்திரிக்கு தரும் துணியில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. நம்முடைய தைத்த பிளவுஸ்களில் கைப்பக்கத்திலும், முதுகுப்பக்கத்திலும் இது போல் பெயிண்டிங் செய்து கொள்ளலாம்.இந்த பெயிண்டிங் செய்வதற்கு உங்களுக்குத் தேவையானது ஃபேப்ரிகா கோன் லைனர்.  இவை எல்லா ஸ்டேஷனரி கடைகளிலும் கிடைக்கும்.  உங்களுக்குப் பிடித்த பூக்களையோ, டிசைன்களையோ பென்சிலால் வரைந்து கொண்டு அதன் மேல் இந்த ஃபேப்ரிகா கோன் லைனர் கொண்டு வரைந்து விட்டால் அது காய்ந்து விடும்.  உங்களுக்கு அழகான ஒரு பிரிண்ட் செய்யப்பட்ட பிளவுஸ் பிட் கிடைக்கும்.  மேலும் அலங்காரம் செய்ய விரும்பினால் சிறு கண்ணாடிகளோ அல்லது சம்கிகளோ வைக்கலாம். 

கைக்குட்டையிலும் பெயிண்டிங் செய்து தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்கலாம். இதற்கு ஃபேப்ரிக் பெயிண்ட் மூலம் பெயிண்ட் செய்திருக்கிறேன்.


கீழே உள்ள கைக்குட்டையில் உருளைக்கிழங்கினை கட் பண்ணி அதன் மூலம் பிரிண்ட் செய்திருக்கிறேன்.அனைவருக்கும் வரப்போகும் நவராத்திரிக்குச் சிறப்பு வாழ்த்துகள்.

மீண்டும் சந்திப்போம்,


ஆதி வெங்கட்.

35 comments:

 1. அந்த உருளைக்கிழங்கு ப்ரிண்ட் சூப்பர் ஆதி.
  நல்ல ஐடியாதான்.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 2. ரொட்டேஷனே போய்க்கொண்டிருக்கும் ரவிக்கைத்துணிக்கு நல்ல ஐடியா.....கைவேலைகள் அருமை.....

  நவராத்திரி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 3. ரொம்ப நல்லாருக்கு உங்க கைவண்ணம் :-))

  ReplyDelete
 4. கலைவாணியின் தலை மகளுக்கு,
  தங்களின் உபயோகமான குறிப்புகளுக்கு பாராட்டுகள். ரவிக்கை பிட்டுகளை கொடுப்பதே அதை மற்றவர்கள் தைத்துக்கொள்ள உகந்ததாக இருக்காது என்பது தெரிந்துததுதான். அப்படியிருக்க மேலும் செலவழித்து அதை உபயோகமாக செய்வார்கள், தங்கள் குறிப்பை படித்துவிட்டு என்று நம்புவோமாக.

  சரஸ்வதிபூஜை நல் வாழ்த்துக்கள்.

  மந்தவெளி நடராஜன்.
  24-09-2011.

  ReplyDelete
 5. காலத்திற்கேற்ற நல்ல ஆலோசனைப் பதிவு. நவராத்திரி நல் வாழ்த்துக்கள்.
  தமிழ்மணம் 2 to 3 vgk

  ReplyDelete
 6. நல்ல உபயோகமான பதிவு. அழகான கைவண்ணம். பாராட்டுக்கள்!

  (உருளைக்கிழங்கு கிலோ என்ன விலைன்னு வெங்கட் ரொம்ப அக்கறையா (கவலையா) கேட்டதன் ரகசியம் இப்போதுதான் புரிந்தது.)

  ReplyDelete
 7. நீங்கள் கொடுக்கும் ரவிக்கைத் துணி உங்களுக்கே வரக் கூடாது என்பதற்காக (கடை) seal-ஆ

  ReplyDelete
 8. மிகவும் உபயோகமான குறிப்பு ஆதி.

  நான் இப்பொழுது எல்லாம் ரவிக்கைக்கு பதிலாக சிறிய கைபை,தோடு வைக்கும் சிறு பெட்டி போன்றவற்றை கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்.வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் ரவிக்கை துணி.

  உங்க கைவேலைபாடுகள் அழாகாகவும்,வண்ணமயமாகவும் இருக்கு. வாழ்த்துக்கள்,ஆதி.

  ReplyDelete
 9. வாங்க ராஜி,

  அந்த உருளைக்கிழங்கு பெயிண்டிங் தொலைக்காட்சியில் பார்த்து நான் முதன்முதலில் செய்த பெயிண்டிங்.

  பலமுறை துவைத்தும் பெயிண்டிங் ஒன்றும் ஆகவில்லை.

  தங்கள் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 10. வாங்க பத்மநாபன்,

  ஆமாங்க. அந்த துணி திரும்ப நம்மையே கூட வந்தடையும். :)

  தங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 11. வாங்க அமைதிச்சாரல்,

  இது ரொம்ப சுலபமானது தாங்க. விரைவில் செய்யலாம்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 12. வாங்க வீ.கே நடராஜன் அவர்களே,

  தங்களின் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 13. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  சிலராவது செய்து பார்த்தால் மகிழ்ச்சி.

  தங்களின் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 14. வாங்க ஈஸ்வரன் சார்,

  ஒரே ஒரு உருளைக்கிழங்கு வாங்குவதற்கா விலை கேட்டார் உங்க நண்பர். :))))

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 15. நல்ல யோசனை.மிக்க நன்றி.
  நவராத்திரி வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 16. வாங்க சீனு அண்ணா,

  ஆமாமா! சரியா சொல்லிட்டீங்களே:)))))

  தைத்த பிளவுஸ்களிலும் இப்படி செய்து அலங்கரிக்கலாம்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 17. வாங்க ரமா,

  ஆமாங்க. பெரும்பாலானோர் வித்தியாசமான பரிசுப் பொருட்கள், பாத்திரங்கள், போன்றவற்றை தர ஆரம்பித்து விட்டார்கள்.
  சிலர் நம் சம்பிரதாயதப்படி பிளவுஸ் பிட் தான் தருவாங்க.
  நம்முடைய தைத்த பிளவுஸ்களிலும் இப்படி அலங்கரிக்கலாம் இல்லையா!

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 18. வாங்க ஜிஜி,

  தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்க்கும் நன்றிங்க.

  ReplyDelete
 19. வாவ்...சூப்பர்பாக இருக்கின்றது...ரொம்ப நல்லா இருக்கின்றது...

  ReplyDelete
 20. வாங்க கீதா ஆச்சல்,

  தங்களின் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 21. :)சீல்

  எனக்கும் கடைசி ஓவியம் மிகப்பிடிச்சிருக்கு.

  ReplyDelete
 22. டிசைன்ஸ் அழகு.. ஆலோசனையும் சூப்பர்..
  நவராத்திரி நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 23. நவராத்திரி சிறப்பு வாழ்த்துக்கு நன்றி ஆதி.

  உங்கள் கைவண்ணம் அழகு.

  ReplyDelete
 24. கைவண்ணத்திற்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 25. நவராத்திரி தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்
  த.ம 5

  ReplyDelete
 27. ரவிக்கைத்துணி வைத்துக்கொடுப்பவர்களுக்கு இந்த ஐடியா நல்ல்லா ஒர்க் அவுட் ஆகும். நல்ல யோசனைதான்

  ReplyDelete
 28. வாங்க முத்துலெட்சுமி,

  உருளையில் செய்வதும் சுலமானது தான்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 29. வாங்க ரிஷபன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 30. வாங்க கோமதிம்மா,

  கைலாஷ் யாத்திரை நல்லபடியாக முடிந்து வந்து விட்டீர்களா?

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 31. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 32. வாங்க புதுகைத்தென்றல்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 33. வாங்க ரமணி சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 34. வாங்க லக்ஷ்மிம்மா,

  ஆமாம்மா. இப்படி செய்தால் ரொட்டேஷன் ஆகாமல் பயன்படும்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…