Friday, September 23, 2011

”வண்ட்டூ” மாமாவண்ட்டூ மாமாவை எல்லோரும் ஞாபகம் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் என்னுடைய மூன்று தொடர்பதிவில் போய்ப் பாருங்கள். அதில் சிலரின் நேயர் விருப்பமாக மாமாவை பற்றி சில விஷயங்கள் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

வண்ட்டூஎன்றால் வேறொன்றுமில்லை. ”வந்துஅல்லதுவந்துட்டுஎன்று பேச்சுக்கிடையில் எப்போதாவது சொல்வோமே. மாமா அதை எப்போதுமே சொல்லிக் கொண்டிருப்பார். வந்துட்டு தான் மருவி வண்ட்டூ ஆகி விட்டது. மாமா ஒரு அலாதியான மனுஷர். எங்கள் வீட்டுக்கு அருகில் தான் அவர் வீடு இருந்தது. கைக்கெட்டும் உயரத்தில் உள்ள பல்ப் மாற்றுவது முதல் தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல் செட் செய்வது வரை  எல்லாவற்றிற்குமே அடுத்தவரின் உதவி அவருக்கு தேவை.

அவருக்கு இன்னுமொரு பிரச்சனையும் உண்டு.  கண்ணில் ஏதோ கோளாறு.  அதனால் அடிக்கடி கண்ணடித்துக் கொண்டே இருப்பார்.  புதிதாய் அவரைப் பார்ப்பவர்களுக்கு ஏதோ தம்மைப் பார்த்து தான் கண்ணடிப்பது போல இருக்கும்!   கீழ் வீட்டில் புதிதாய் வந்த ஒரு ஹிந்திக்கார பெண்மணி சண்டைக்கே வந்து விட்டாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!  இதில் இன்னுமொரு பிரச்சனை என்னவென்றால் நம்ம வண்ட்டூ மாமா ஹிந்தியில ரொம்பவே வீக்!  இவர் ஏதோ சொல்ல, அந்த பெண்மணி ஏதோ சொல்ல, அப்புறம் என்னவர் சென்று மத்யஸ்தம் செய்து பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்.  அதன் பிறகு வண்ட்டூ மாமா அந்த பெண்மணி வீடு தாண்டும் வரை எதுக்கு வம்பு என கண்ணை மூடிக்கொண்டே படிக்கட்டு இறங்கினார்!


அவர்கள் வீட்டுக்கு அருகில் இருந்தது பெரும் அவஸ்தையாக போய் விட்டது. எப்போதும் ஏதாவது உதவிக்கு அழைத்துக் கொண்டே இருப்பார். காலையில் எழுந்திருப்பதே அவரின் ஸ்லோகங்கள் சொல்லும் சத்தத்தில் தான். பின்பு மாமாவுக்கும், மாமிக்கும் இடையே பெரும் வாய்ச் சண்டை ஆரம்பமாகும். ஒருவழியாக மாமா அலுவலகம் கிளம்பிச் செல்வார். மாலையும் இதே போல் ஸ்லோகங்களும், சண்டையும் என தொடரும்.

இன்னுமொரு சம்பவம்:

சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் நான், என் தோழி, அந்த மாமி ஆக மூவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்றோம். ஸ்வாமியை தரிசித்து விட்டு வீடு வந்தடைந்தோம். மாமி தன் பர்ஸில் கையை விட்டு நெடுநேரம் துழாவிக் கொண்டிருந்தார். என்ன என்று கேட்டால் சாவியைக் காணோம் என்றார். சரி பரவாயில்லை எங்கள் வீட்டில் வந்து அமருங்கள் என்றேன். மாலை மாமா வந்து விடுவார். அவரிடம் ஒரு செட் சாவி இருக்கின்றதே அதனால் அவர் வரும் வரை இங்கேயே இருந்து  சாப்பிடலாம் என்றேன். மாமி டென்ஷன் ஆகி இல்லை அவர் வந்து கதவைத் திறக்கட்டும். நான் அவருக்கு போன் செய்கிறேன் என்று கால் செய்ய ஆரம்பித்து விட்டார். மாமாவின் அலுவலகம் வீட்டிலிருந்து ஒன்றரை மணிநேர பிரயாணத்தில்.


ஒரு பொறுப்பு வேண்டாம், அது எப்படி என் கிட்ட சாவி இருக்கா இல்லையான்னு கூட தெரியாம, வீட்டை பூட்டிட்டு போவீங்க. நீங்க உடனே கிளம்பி வாங்கஅதுவரை உட்காரக் கூட மாட்டேன்என்றுஉட்காரா விரதம்பூண்டார்.   

என்ன நடந்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? வேறென்ன ஒரு ஆட்டோவில் மாமா வீட்டிற்கு வந்து விட்டார். வரும்போதே கையில் ஒரு லிட்டர் மிரிண்டாவுடன் வந்து இறங்குகிறார். கதவைத் திறந்து உள்ளே சென்ற பின் மாமி தன் பர்ஸை மீண்டும் ஒரு முறை துழாவிப்பார்த்தால் சில்லறைகளுடன் வீட்டுச்சாவி பல்லை இளித்தது! மாமா பாவம் ஒன்றுமே சொல்லாமல் அலுவலகம் கிளம்பிச் சென்று விட்டார். இந்த சம்பவம் வெறும் சாம்பிள் தான், இது போல் இன்னும் நிறைய கூத்துகள் நடந்தது உண்டு.

இதே மாதிரி நிலை இன்னுமொருத்தருக்கும் நடந்ததுஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு செல்போன் எல்லோரிடமும் இல்லாத வேளையில் காலையில் கீழ் வீட்டிலிருக்கும் தன் நண்பனுடன் அலுவலகம் செல்வதற்காக சென்ற கணவனுடன் தானும் வழியனுப்ப கீழே இறங்கி சென்றாள் ஒருத்தி. பேச்சு வாக்கில் வீட்டைப் பூட்டி சாவியை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போய்விட்டார் கணவன் (திருமணத்துக்கு முன் இருந்த ஞாபகம்). கணவன் சென்ற பின் வீட்டுக்கு வந்து பார்த்தால் வீடு பூட்டியிருக்கிறது. சாவி கணவனிடம். பாவம் அவள் என்ன செய்வாள் ? கீழ் வீட்டுக்கு சென்று அமர்ந்திருந்தாள். கணவனின் அலுவலகம் வீட்டிலிருந்து இரண்டு மணிநேரப் பிரயாணத்தில். தகவல் சொல்லி பாதி வழியிலிருந்து வரச்  சொல்லவும் வழியில்லை.

இரண்டு மணி நேரம் கழித்து அலுவலக எண்ணிற்கு அழைத்தாள். நடந்தைச் சொன்னாள். கணவன்பூட்டுக் காரனை அழைத்து வந்து பூட்டை உடைத்துக் கொள் அல்லது தோழி வீட்டிலேயே இருஎன்று சொல்லி விடவே, அந்த அப்பாவி ஜீவன் மாலை கணவன் வரும்வரை அந்த தோழி வீட்டிலேயே இருந்து நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தாள்.

சரி இந்த சம்பவம் இப்ப எனக்கு ஏன் ஞாபகத்துக்கு வருது? ஏன்னா அந்த ஜீவன் வேறு யாருமில்லை - நாந்தேன்!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

36 comments:

 1. வெங்கட் இப்படி எல்லாம் செய்வான் என்று தெரிந்து தான் நாங்களெல்லாம் உஷாராகத் தனித்தனி சாவி வைத்திருந்தோம்.

  ReplyDelete
 2. ”மிராண்டா” போச்சா!! (வடை போச்சா மாதிரி)

  இல்லை அதை மாலையில் கழுத்தில் துண்டு போட்டு வாங்கியாச்சா?

  ReplyDelete
 3. //சரி இந்த சம்பவம் இப்ப எனக்கு ஏன் ஞாபகத்துக்கு வருது? ஏன்னா அந்த ஜீவன் வேறு யாருமில்லை - நாந்தேன்!//

  சபாஷ்! சூப்பர்! நாமே அனுபவித்து எழுதினால் அது எப்போதும் சூப்பராகத்தான் இருக்கும், மேடம். vgk

  Tamilmanam 0 to 1 & Indli 1 to 2

  ReplyDelete
 4. ஓ.. ’வந்துட்டு’ தான் வண்ட்டூவானதா? நானும் அது என்னவாருக்கும்னு (ஒன், டூ -வா என்று கூட) நினைச்சுகிட்டிருந்தேன். சுவாரஸ்யமான தம்பதியர். நல்லா நேரம் போகுமே.

  //கணவன் (திருமணத்துக்கு முன் இருந்த ஞாபகம்).//

  படிச்சுகிட்டு வரும்போதே, இந்த வரியப் படிச்சது உங்க ஆத்துக்காரரா இருக்குமோன்னு ஒரு சம்சயம். கரெக்டாத்தான் கெஸ் பண்ணிருக்கேன்!!

  நானும் ஒருக்கா சமையலறையில் மாட்டிகிட்டேன். எனக்கும் உங்க ஆத்துக்காரர் சொன்ன அதே பதில்தான் கிடைச்சுது “ஆஃபிஸ்லருந்து வர்றவரை அங்கேயே இரு!!” :-((((

  ReplyDelete
 5. வாண்டு மாமா மாதிரி வண்ட்டூ மாமா சூப்பர்.
  பாவம்ங்க நீங்க.எப்படித்தான் கணவர் ஆபீசிலிருந்து வர்ற வரை பொறுமையா இருந்தீங்களோ?கஷ்டம்தான்

  ReplyDelete
 6. வாங்க சீனு அண்ணா,

  உங்க பல வருட அறை நண்பரை சரியாகத் தான் புரிந்து வைத்துள்ளீர்கள்.

  ”மிராண்டா” போச்சா!! (வடை போச்சா மாதிரி)

  இல்லை அதை மாலையில் கழுத்தில் துண்டு போட்டு வாங்கியாச்சா?”

  சே!சே! என்னை பார்த்த அப்படியா தெரியறது? நான் தான் அப்பாவி ஜீவன் என்று எழுதியிருக்கறேனே.

  தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 7. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களது வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 8. வாங்க ஹுஸைனம்மா,

  ஆமாம். வந்துட்டு தான் வண்ட்டூ. ”ஒன் டூவா என்று கூட” அட ராமா இப்படியெல்லாம் யோசிச்சீங்களா!!
  அவங்க வீடு மாறிட்டாங்க.

  நீங்க சமையலறையிலா!!!!! சேம் ப்ளட்..

  தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 9. வாங்க ஜிஜி,

  தங்களது வருகைக்கும், இனிய கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 10. சரி இந்த சம்பவம் இப்ப எனக்கு ஏன் ஞாபகத்துக்கு வருது? ஏன்னா அந்த ஜீவன் வேறு யாருமில்லை - நாந்தேன்!

  மீண்டும் சந்திப்போம/

  ம்லரும் நினைவுகள்!!

  ReplyDelete
 11. //(திருமணத்துக்கு முன் இருந்த ஞாபகம்)//

  இப்டிப்போட்டு சஸ்பென்சை நீங்களே உடைச்சிட்டீங்களே.. இதப்படிச்சதுமே புரிஞ்சுக்கிட்டோமில்ல.

  இந்தப்பிரச்சினையெல்லாம் வேணாம்ன்னுதான் ஆளுக்கொரு செட் சாவி வெச்சிருக்கோமாக்கும் :-))

  ReplyDelete
 12. நல்ல நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 13. வண்டூ மாமா பாவம் அப்படின்னு நினைச்சேன்.
  கடைசில பார்த்தா உங்க நிலைமைதான் ரொம்ப பாவமா ஆயிடுத்து.
  நல்ல வேடிக்கையான பதிவு.

  ReplyDelete
 14. ஹா ஹா ஹா... லாஸ்ட் லைன்ல அப்படி ஒரு ட்விஸ்ட் நான் எதிர்பாக்கவே இல்ல ஆதி... அதெப்படி தோழி வீட்ல இருக்க சொல்லலாம்... சரியில்ல... கேக்க ஆள் இல்லையா? நாங்க இருக்கோம்...:))

  ReplyDelete
 15. வண்ட்டூ மாமா கதை சுவாரஸ்யம்.
  //பேச்சு வாக்கில் வீட்டைப் பூட்டி சாவியை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போய்விட்டார் கணவன் (திருமணத்துக்கு முன் இருந்த ஞாபகம்). கணவன் சென்ற பின் வீட்டுக்கு வந்து பார்த்தால் வீடு பூட்டியிருக்கிறது. சாவி கணவனிடம். பாவம் அவள் என்ன செய்வாள் ?//

  நீங்களாதானிருக்குமோன்னு கெஸ் செய்தேன்.வின்னராகிட்டேன்.அதுக்கப்புறம் சாவிய தொடவே பயம் வந்திருக்கும் உங்க கணவருக்கு.சரியா?

  ReplyDelete
 16. // கணவன் ”பூட்டுக் காரனை அழைத்து வந்து பூட்டை உடைத்துக் கொள் அல்லது தோழி வீட்டிலேயே இரு” என்று சொல்லி விடவே, அந்த அப்பாவி ஜீவன் மாலை கணவன் வரும்வரை அந்த தோழி வீட்டிலேயே இருந்து நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தாள்//. அனுபவதினை நல்ல ரசித்து சொல்லியிருக்கிங்க.. அப்பாவி பொண்ணுதானுங்க

  ReplyDelete
 17. எழுத்துலகில் தனக்கென தனி பாணி வகுத்துக்கொண்டு வெற்றிநடை பயிலும் கோவைபெருமாட்டியே,

  வண்டு மாமாவின் தவிப்பை கண்முன்னால் நேரில் கொண்டுவந்த தங்கள் எழுத்து திறமையினை கண்டு நானும் என் மனையாட்டியும் கரைகாணா இன்பமெய்தினோம். தன இல்லத்தரசியின் மறதியினை வெளிக்காட்டாமல் அவள் உள்ளத்தை குளிர்விக்க மிராண்டா பானம் வாங்கிவந்து, பிறகு சாவி கிடைத்தும் அவர்களை கடிந்து ஒரு வார்த்தை கூறாமல் சென்ற வண்டு மாமாவின் நேர்மை உள்ளத்தை தொட்டது. உதவிசெய்யும் சூழ்நிலை இல்லாதநிலையில் "பூட்டை உடை (அ) தோழியின் வீட்டில் (பத்து மணி நேரம்) தங்கியிரு "என்ற கடுமையான தீர்ப்பை வழங்கிய உங்களைவரின் வார்த்தைகளை "வள்ளுவரின் வாசுகியை"
  போல் செயல்படுத்திய பாங்கினை வியந்து போற்றுகிறேன்.
  மந்தவெளி நடராஜன்.
  23 09 11

  ReplyDelete
 18. ஞாபக மறதியில் வரும் சிக்கல்கள் தரும் அவதிகள் அனுபவிக்கும் போது கஷ்டம்.. அப்புறம் யோசித்தால் சிரிப்பு..
  நகைச்சுவை மிளிர அழகாய் எழுதியுள்ளீர்கள்.

  ReplyDelete
 19. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 20. வாங்க அமைதிச்சாரல்,

  ரெண்டு செட் எங்க வீட்டிலும் இருந்ததுங்க. வெளிய போனா எடுத்துக்கிட்டு போவேன். ஆனா கீழே கேட் வரைக்கும் தான போனேங்க. அதுக்கு எதுக்கு சாவின்னு விட்டது தப்பா போச்சு!

  தங்களின் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 21. வாங்க லக்ஷ்மிம்மா,

  தங்களின் வருகைக்கும், இனிய கருத்திற்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 22. வாங்க ரமா,

  நல்லா ரசிச்சீங்களா :)

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 23. வாங்க புவனா,

  அதானே! எல்லாரும் நியாயத்தை கேளுங்க.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 24. வாங்க ஆச்சி,

  இல்லவேயில்லை! அதுக்கப்புறத்தில் இருந்து நான் எப்பவுமே சாவியை வைத்துக் கொண்டே தான் இருக்கிறேன்.
  எதுக்கு இன்னொரு தடவை வம்பு.

  தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 25. வாங்க சிநேகிதி,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 26. வாங்க வீ.கே.நடராஜன் அவர்களே,

  தங்களுடைய கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 27. வாங்க ரிஷபன் சார்,

  ஆமாம் அந்த நேரத்தில் சிக்கலாக இருந்தாலும், இப்போதும் அதை நினைத்தால் சிரிப்பு தான் வரும்.

  தங்களின் வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 28. இந்த இடுகைக்கு தமிழ்மணம், இண்ட்லி, தமிழ்10 ஆகியவற்றில் வாக்களித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 29. இன்னிக்கு தாங்க உங்க தளத்துக்கு வரேன்!
  ரொம்ப சுவாரஸ்யமா இருக்குங்க!

  பழைய அனுபவங்களை அசை போடுவது அலாதிதான்!

  ReplyDelete
 30. அட என் அப்பாவித் தோழியே! இதை அன்னிக்கே என் கிட்ட சொல்லியிருந்தா நான் வன்ட்டூ தலைநகர அண்ணாச்சிய ரெண்டு கேள்வி கேட்டிருப்பேன்ல.
  இனி ஏதாச்சும்னா என் கிட்ட சொல்லுங்க.

  ReplyDelete
 31. வண்ட்டூ மாமா .... சாவியை வைத்தே தொலைத்த மாமி....சாவியை எடுத்து சென்ற மச்சான் .. என எதார்த்தமான நகைச்சுவையில் சொல்லியிருக்கிறீர்கள் சகோ...

  ReplyDelete
 32. வாங்க கோகுல்,

  தங்களின் முதல் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 33. வாங்க ராஜி,

  ஆஹா! ரெண்டு கேள்வி கேக்கறதுக்கும் ஆள் இருக்கு.
  இனிமேல் சொல்லிட்டா போச்சு.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 34. வாங்க பத்மநாபன்,

  தங்களின் வருகைக்கும், இனிய கருத்திற்கும் நன்றிங்க.

  ReplyDelete
 35. ஆதி,தங்களின் இந்த பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

  ReplyDelete
 36. hahahahaaha final touch super athu final punch aaaaa :P

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…