Monday, September 12, 2011

கண்டந்திப்பிலி ரசம்



நம் இன்றைய வாழ்வில் உடலுக்கு நன்மை தராத எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளையும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவையும் தான் அதிகமாக எடுத்துக் கொண்டு வருகிறோம். அப்படிப்பட்ட சூழலில் வாரத்தில் ஒரு நாளாவது இதுபோன்ற மருத்துவ குணமுள்ள உணவை எடுத்துக் கொண்டால் நல்லது. இது ஒரு மருத்துவ குணமுள்ள ரசம். ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, உடல்வலி, அஜீரணம் இவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை சாப்பிடலாம். மற்றவர்களும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்

கண்டந்திப்பிலி

தேவையான பொருட்கள்:-

புளிஎலுமிச்சம்பழ அளவு
உப்புதேவையான அளவு
பெருங்காயத்தூள்கால் டீஸ்பூன்
கண்டந்திப்பிலி குச்சிகள்சிறிதளவு
தனியா – 2 டீஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
துவரம்பருப்புஒரு டீஸ்பூன்
சீரகம்அரை டீஸ்பூன்
எண்ணெய்கால் டீஸ்பூன்

தாளிக்க:-

நெய்கால் டீஸ்பூன்
கடுகுகால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு

செய்முறை:-

சீரகம் தவிர மற்றவற்றை வாசனை வரும் வரை வறுத்து கடைசியாக சீரகத்தைப் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி, அதில் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இத்துடன் பெருங்காயத்தூளையும் சேர்க்கவும். பின்னர் பொடித்து வைத்துள்ள பொடியை ரசத்தில் சேர்க்கவும். நுரை கூடி வந்ததும் இறக்கி வைக்கவும். நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். அருமையான கண்டந்திப்பிலி ரசம் தயார்.

”நல்லதோர் ஜோடி” சுட்ட அப்பளம்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

இந்த குறிப்பை ஃபாயிஜா அவர்களின்  PASSION ON PLATE - GIVE AWAY ஈவண்ட்டிற்கு அனுப்பி வைக்கிறேன்.






50 comments:

  1. 5 to 6 in Indli.
    கண்டந்திப்பிலி ரசம் சாப்பிட்டது போலவே இருந்தது பதிவைப்படித்ததும். பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள். நன்றிகள்.

    ReplyDelete
  2. ippathan kandathipili, arisithippli, thesavaram, athimathuram, chithrathai pottu kashayam kudichen. :) nalla jaladosham. rasathai oru parcel anupivainga pls

    ReplyDelete
  3. இந்த மழைக்கும், இனிமே வரப்போற குளிருக்கும் ஏத்த ரசம் :-)

    ReplyDelete
  4. மருத்துவ குணங்களை கண்டவுடன் கண்டதிப்பிலி ரசத்தை சாப்பிடும் ஆவல் வந்துவிட்டது... நன்றி சகோ எளிய செய்முறைக்கு...

    ReplyDelete
  5. ம்ம்..சுட்ட அப்பளமும் திப்பிலி ரசமும் படத்தை காட்டி ஆசையை தூண்டி விட்டு விட்டிர்களே!:-)

    ReplyDelete
  6. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

    தங்களின் பாராட்டுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  7. வாங்க புதுகைத்தென்றல்,

    தாராளாமா பார்சல் அனுப்பிட்டா போச்சு. :))
    நானும் ஊருக்கு போகும் போதெல்லாம் சித்தரத்தை, கண்டந்திப்பிலி, அதிமதுரம் போன்ற நாட்டு மருந்துகள் அனைத்தும் வாங்கி வந்து விடுவேன். கஷாயம், தீபாவளி மருந்து போன்ற அனைத்துக்கும் பயன்படும்.
    தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  8. வாங்க அமைதிச்சாரல்,

    ஆமாங்க. மழைக்கும், குளிருக்கும் ஏற்ற ரசம் தான்.
    தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  9. வாங்க பத்மநாபன்,

    மிகவும் நல்லது. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  10. வாங்க ஸாதிகா,

    செய்து சாப்பிட்டு பாருங்கள். மிகவும் நல்லது.
    தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  11. ஓஹோ! இதுதான் கண்டந்திப்பிலியா? இனி ஜலதோஷம் வந்தால் கவலை இல்லை.

    (நீங்க போட்டோ எடுத்தது அந்த அப்பளத்துக்கு தெரியுமா?
    எப்படி தெரியும். அதத்தான் சுட்டுட்டீங்களே! சுட்டுட்டீங்களே!)

    ReplyDelete
  12. சமீபத்தில் நான் ஒரு ஆன்மீக பயிற்சியில்
    கலந்து கொண்டேன்
    அவர்கள் குழம்பு கூட வேண்டாம்
    நித்தம் ஒரு ரஸம் வைத்து சாப்பிடுங்கள்
    அது போதும் என்றார்கள்
    அப்படி ரஸம் மட்டும் வைத்து ஒரு வாரம்
    சாப்பிட்டுப் பார்த்தேன்
    நன்றாகத்தான் இருந்தது
    புதிய ரஸம் ஒன்றை அறிமுகம் செய்தமைக்கு நன்றி
    படமும் பதிவும் அருமை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. கண்டந்திப்பிலி ரசமும் சுட்ட அப்பளமும் செமை டேஸ்ட்

    ReplyDelete
  14. உடம்பு வலி போயே போச்சு..

    ReplyDelete
  15. எளிமையான சத்தான செய்முறையை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  16. புது வகை ரஸம் அருமை... கண்டங்கத்திரி தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன்.. கண்டந்திப்பிலி இப்போது தான் பார்க்கிறேன்.. அதுசரி..

    அப்பளம் சுடுவது எப்படின்னு சொல்லுங்களேன்..?

    ரெண்டொரு முறை செய்து நன்றாக வரவில்லை....

    ReplyDelete
  17. ஆஹா..திப்பிலி ரசம் சுட்ட அப்பளம்..நல்ல ஜோடி.
    இந்த வாரம் பண்ணிபார்த்து விடுகிறேன்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  18. வாங்க ஈஸ்வரன் சார்,

    உங்க பின்னூட்டம் பிரமாதம். எப்படித் தான் இப்படியெல்லாம் யோசிப்பீங்களோ!!!!!!

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  19. வாங்க ரமணி சார்,

    தங்களின் கவிதை போன்ற அழகான பின்னூட்டத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  20. வாங்க லக்ஷ்மிம்மா,

    தங்களின் வருகைக்கும், இனிய கருத்திற்கும் நன்றிம்மா.

    ReplyDelete
  21. வாங்க ரிஷபன் சார்,

    தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார்.

    ReplyDelete
  22. வாங்க ஆச்சி,

    தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிப்பா.

    ReplyDelete
  23. வாங்க ஸ்வர்ணரேக்கா,

    அப்பளம் சுடுவதை பகிர்கிறேன்.தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

    ReplyDelete
  24. வாங்க ரமா,

    செய்து பார்த்துக் கூறுங்கள். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

    ReplyDelete
  25. ரசமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  26. உடல் ஆரோக்கியம் பேண அருமையான ரசம்.பகிர்விற்கு நன்றி ஆதி

    ReplyDelete
  27. த.ம 7. இன்ட்லி 13

    ReplyDelete
  28. சூப்பர்.பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  29. நல்ல உபயோகமான தகவல் நண்பரே

    இதைப் படிப்பதுடன் நினைவிலும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்

    ReplyDelete
  30. தமிழ் மணம் ஒன்பது

    ReplyDelete
  31. ரசம் ரொம்ப சூப்பராக இருக்கு...அத்துடன் சுட்ட அப்பளம்...கலக்குறிங்க...


    ஆரோக்கிய சமையல்...சூப்பர்ப்...

    ReplyDelete
  32. வாங்க என் ராஜபாட்டை ராஜா,

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

    ReplyDelete
  33. வாங்க இராஜராஜேஸ்வரி,

    தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  34. வாங்க ராஜி,

    தங்களின் வருகைக்கும் இனிய கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  35. வாங்க ஆசியா உமர்,

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

    ReplyDelete
  36. வாங்க M.R ,

    தங்களின் வருகைக்கும் இனிய கருத்திற்கும் நன்றிங்க.

    ReplyDelete
  37. வாங்க கீதா ஆச்சல்,

    தங்களின் வருகைக்கும், இனிய கருத்திற்கும் நன்றிங்க.

    ReplyDelete
  38. இந்த இடுகைக்கு இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  39. இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

    தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

    ReplyDelete
  40. மிக அருமையான மருத்துவ குணம் நிறைந்த ரசம்
    அருமை
    நான் இங்கு திப்பிலி பொடி, அக்கரா பொடி இது போல் சேர்த்து ரசம் செய்வது

    ReplyDelete
  41. வாங்க வைரை சதிஷ்,

    தங்களின் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  42. வாங்க ஜலீலாக்கா,

    அக்கரா பொடி என்றால் என்ன?

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  43. என் பாட்டி இந்த ரசம் செய்வார்கள். மறந்தே போன சமாசாரம். கண்டந்திப்பிலி ரசம், சுட்ட அப்பளாத்தின் மேல் விழுது நெய் தடவிப் பரிமாறுவார்கள். ஹ்ம்ம்ம்.

    ReplyDelete
  44. வாங்க அப்பாதுரை சார்,

    மறந்து போய்க் கொண்டிருக்கிற விஷயம் தான். அடுத்து ஒரு கஷாயம் கூட பதிவிடலாம் என்று இருக்கிறேன்.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  45. திப்பிலி ரசம் அடிக்கடி செய்வதுண்டு கொஞ்சம் அரிசி திப்பிலியும் சேர்ப்போம் நாங்கள்(ஸ்ரீரங்கத்துவழக்கம்) ... தேசாவரம் என்பார்கள் திப்பிலியை.. இடுகையாய் இட்டு சிறப்பித்துவிட்டீர்கள் திப்பிலியை.. அதி ரசம் தான் இடுகை!

    ReplyDelete
  46. வாங்க ஷைலஜா,

    தேசாவரம்... இதுவும் கேள்விப்பட்டதாகத் தான் இருக்கிறது.அரிசி திப்பிலியும் சேர்ப்பீர்களா...

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  47. Healthy rasam.., Thanks for linking this recipe to my event and using the logo. Expecting more recipes from you

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…