Monday, September 19, 2011

கதம்பம் 4கதம்பம் என்ற பெயரில் நாட்டு நடப்புகளை இது வரை மூன்று பகுதிகளாக தொகுத்து தந்திருக்கிறேன்இந்த முறையும் சென்ற முறை போலவே ரசித்த சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்  பற்றியும், வேறு சில நிகழ்வுகள் பற்றியும் உங்களோடு பகிரப் போகிறேன்


ஆன்மீக நிகழ்ச்சி: 

விஜய் தொலைக்காட்சியில் காலை 7.15 மணியளவில்விஜயின் சமர்ப்பணம்என்ற நிகழ்ச்சியில் அவரவரின் நட்சத்திர பலன்கள், ராசி பலன்கள், நாம்  இதுவரை அறிந்திராத பல புதிய கோயில்கள், மற்றும்  தினம் ஒரு புதிய தகவலை தொலைக்காட்சி புகழ் வரதராஜன் அவர்கள் தருகிறார். காலை நேரத்தில் நல்ல விஷயங்களை கேட்பது நன்றாக இருக்கிறது. நீங்களும் பார்த்து கேட்டு ரசியுங்களேன்.

சமையல் நிகழ்ச்சிகள்:-


விஜய் தொலைக்காட்சியில் மாலை 5.30 மணியளவில்தினம் ஒரு சுவைஎன்ற புதிய நிகழ்ச்சி வந்து கொண்டிருக்கிறது. இதில் செவ்வாய் மாலை திருமதி ரேவதி சங்கரன் அவர்களின் நிகழ்ச்சியில் பாரம்பரிய சமையல், பாட்டி வைத்தியம் முதலியவற்றை பாட்டி பேத்திக்கு கதை சொல்வது போல் நல்ல விஷயங்களையும்  தற்போது உபயோகத்தில் இல்லாத ஆட்டுக்கல், அம்மிக்கல், மற்றும் நமது முன்னோர்கள் பயன்படுத்திய சமையலறை குறிப்புக்களையும் அழகாக சொல்கிறார்.


அடுத்து ஜெயா தொலைக்காட்சியில் மாலை 6 மணியளவில் தினமும் சமையல் நிகழ்ச்சிகள் வந்து கொண்டிருக்கிறது. இதில் திங்களன்று திருமதி ரேவதி சண்முகம் அவர்களின் நிகழ்ச்சியில் பல நல்ல ரெசிபிக்களை பொறுமையாக அழகாக சொல்லித் தருகிறார்.

ஏர்டெல் சூப்பர் சிங்கர்:-


சென்ற சீசனின்  இறுதியில் சில நாட்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த சீசனில் சென்ற கதம்ப பகுதியில் சிலர் சொல்லியிருந்ததை அடுத்து பார்க்க ஆரம்பித்தேன். எங்களுடைய விருப்பம் சாய்சரண் வெல்ல வேண்டும் என்று.  பார்க்கலாம்.

ஒரு நல்ல மனிதரின் பேட்டி :-


ரம்ஜான் அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடிகர் திரு நாசர் அவர்களின் பேட்டி நன்றாக இருந்தது. தன் சிறு வயதில் இருந்த ஒரே லட்சியம் எப்படியாவது பெரிய ஆளாகிசிந்தால்சோப்பு வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பதாம். அவரின் இன்றைய நிலையில் இதை வெளிப்படையாக சொன்னது மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. அவர் படித்த சில புத்தகங்களைப்  பற்றியும், நடிப்புத் துறைக்கு தான் வந்ததையும் சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வு குறித்தும் அவர் பேசினார். அவர் ஒரு நல்ல மனிதர் தான்.

ரோஷ்ணி கார்னர்:-

ரோஷ்ணிக்கு சிறு வயது முதலே தலைமுடியை வளர விடுவதில்லை. அவ்வப்போது வெட்டி விடுவோம். காரணம் அவள் வாரிக்கொள்ளவும் மாட்டாள். கிளிப்பும் போட்டுக் கொள்ள மாட்டாள். யூ.கே.ஜி படிக்கும் போது தான் அவ்வப்போது என் பின்னலை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டு தன் முடியும் பெரிதாக வளர வேண்டும் என்று ஆசைப்பட ஆரம்பித்தாள். அதன் பிறகு வளர்க்க ஆரம்பித்து இப்போது முதல் வகுப்பில் அரை அடிக்கு மேல் வளர்ந்திருக்கிறது. அவளுக்கு கால் வரை வளர்க்க வேண்டுமாம்.!!!!!

இப்போதெல்லாம்  அவள் அடம் பிடிக்கும் போது நாங்க சொன்ன படி கேட்கா விட்டால் முடியை வெட்டி  பாப் கட்டிங் வைத்துக் கொள்ளலாம் என்றால் அவள் நான் பின்னல் கட்டிங் தான் வைத்துக் கொள்வேன் என்கிறாள்!!!!!!!!!!!!! ”பின்னல் கட்டிங்நல்லாயிருக்குல்ல…….

மீண்டும் வேறு பகிர்வில் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.35 comments:

 1. ரோஷ்ணி முடியுடைய மூவேந்தியாக திகழ என் வாழ்த்துக்கள். ஆசிகள். பதிவு அருமை.
  தமிழ்மணம் 1 to 2 vgk

  ReplyDelete
 2. நாசர் அவர்களின் பேட்டியை நானும் பார்த்தேன்.வெளிப்படையாக பேசியதும்,தன் மனைவி பற்றி குறிப்பிட்டதும் அவர் நல்ல மனிதர் என்பதை உறுதிபடுத்தியது.

  தலைவாருவதில் என் மகளுக்கும் இதே பிரச்சனை.அதற்கு தகுந்தாற்போல பள்ளியிலும் ஒன்றாம் வகுப்பிற்கு பின்னரே முடிவளர்க்க அனுமதி.இப்போ கட் பன்னுங்கனு சொல்லுவதால் அடர்த்தியாக வளரும் மகளின் கூந்தலை பாப்கட்டிங்தான் செய்கிறோம் அரைமனதுடன்.

  ReplyDelete
 3. ”பின்னல் கட்டிங்” ... ஸ்வீட்!!

  இப்போவெல்லாம் சின்னக் குழந்தைகள் முதல் பெரிய பெண்கள் வரை, தோள் வரை வெட்டி விரித்துப் போடத்தான் விரும்பிகிறார்கள். என் மகனின் கிளாஸில் மலையாள மாணவிகள் சிலர்தான் நீள முடி வைத்து, பின்னல் போட்டு வருவார்கள். பார்க்கப் பார்க்கப் பொறாமையா இருக்கும். எனக்கும் இருக்கே எலிவால் மாதிரி.. :-((((

  ReplyDelete
 4. //இப்போது முதல் வகுப்பில் அரை அடிக்கு மேல் வளர்ந்திருக்கிறது. அவளுக்கு கால் வரை வளர்க்க வேண்டுமாம்.!!!!!//
  So, கால் is greater than அரை! (1/4 > 1/2). குழந்தைகள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

  ரோஷ்ணியின் எல்லா நல்ல ஆசைகளும் பூர்த்தியாக எங்கள் ஆசிகளும் வாழ்த்துக்களும் என்றும் உண்டு.

  ReplyDelete
 5. கதம்ப மலர் அருமையாக மணக்கிறது
  தொடர்ந்து தர வேண்டுகிறேன்
  த.ம 5

  ReplyDelete
 6. கதம்பத்தில் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் நல்லா இருக்கு. எனக்கு சன் டி.வி மட்டுமே இங்க வரும்.

  ReplyDelete
 7. கதம்பம் பல்சுவைப்பதிவு.
  சாய்சரண் ஜூனியரில் விட்டதைப் பிடிப்பாரா.. இந்த வாரம் தெரிந்து விடும்.

  ReplyDelete
 8. கதம்பம் டி வி பார்க்காத குறையை தீர்க்கிறது...வைல்ட் கார்டிலும் ஃபைனலிலும் சாய் சரணுக்குத்தான் எனது வோட்டு..முடிவு ஆவலோடு எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
 9. அருமையான கதம்பம் மணக்கிறது.

  ReplyDelete
 10. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 11. வாங்க ஆச்சி,

  தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 12. வாங்க ஹுஸைனம்மா,

  தில்லி வந்த இந்த ஒன்பது வருடங்களில் என் தலைமுடியின் அடர்த்தியும் போய் விட்டது. ஒரு கைக்குள் அடங்காதுன்னு அம்மா சொல்வாங்க. ஆனால் நீளம் அப்படியே இருக்கிறது. சீதோஷ்ணமும் தண்ணீரும் தான் காரணம். :(((

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 13. வாங்க ஈஸ்வரன் சார்,

  உங்க கணக்கு நல்லாயிருக்கே!!!!!
  தங்களின் வருகைக்கும், இனிய கருத்திற்கும் நன்றி சார்.

  ReplyDelete
 14. வாங்க ரமணி சார்,

  தங்களின் வருகைக்கும், தொடரும் ஆதரவுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 15. வாங்க லக்ஷ்மிம்மா,

  சில வருடங்கள் முன்பு வரை எங்களுக்கும் கேபிளில் சன், ஜெயா, ராஜ் மட்டுமே வந்து கொண்டிருந்தது. அதிலும் சில நேரம் சன் மட்டுமே வரும். இப்போது TATA SKYல் 11 தமிழ் சேனல்கள் வருகிறது.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 16. வாங்க ரிஷபன் சார்,

  ஆமாம். இந்த வாரம் இறுதிப் போட்டியில் தெரிந்து விடும்.

  தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்.

  ReplyDelete
 17. வாங்க பத்மநாபன் சார்,

  சாய் சரண் வெல்வாரா! இந்த வாரம் தெரிந்து விடும்.
  தங்களின் வருகைக்கும், தொடர்ந்து தரும் ஆதரவுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 18. வாங்க அமைதிச்சாரல்,

  தங்களின் வருகைக்கும், இனிய கருத்திற்கும் நன்றிங்க.

  ReplyDelete
 19. இந்த இடுகைக்கு இண்ட்லி, தமிழ்மணம், தமிழ் 10 ஆகியவற்றில் வாக்களித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 20. காலை நேரத்தில் நல்ல விஷயங்களை கேட்பது நன்றாக இருக்கிறது.

  ”பின்னல் கட்டிங்” ... ஸ்வீட்!!

  அருமையான கதம்பம் மணக்கிறது.

  ReplyDelete
 21. ஓ பின்னல் கட்டிங்:)) அது கீழாக கொஞ்சம் சமமா வெட்டிவிடுவதாக இருக்கும்..

  ReplyDelete
 22. Nice Blog. Convey my Regards to Roshini

  ReplyDelete
 23. ராஜியிடமிருந்து வந்த மின்னஞ்சல் பின்னூட்டம்.

  பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் கதம்பம் வெகு ஜோர்.
  கரு மேகக் கார்குழல் வளர ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.


  இதையேதான் கமென்ட் பாக்ஸ்லயும் போட்டேன்.பட்
  வரலை.

  ReplyDelete
 24. கதம்பத்தில் நல்ல தரமான சீரியல்கள் பற்றி சொல்லியிருக்கீங்க.
  “பின்னல் கட்டிங்” ரொம்ப பிரமாதம்.குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 26. வாங்க முத்துலெட்சுமி,

  பின்னல் போட்டுக் கொண்டு போவதைத் தான் பின்னல் கட்டிங் என்கிறாள்.:)))

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 27. வாங்க சந்துரு,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 28. வாங்க ராஜி,

  ஏன் கமெண்ட் போட முடியவில்லை என்று தெரியலயே.....:(

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 29. வாங்க ரமா,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 30. நல்ல கதம்பம்.

  வைஷு-வும் நீண்ட முடிதான் வைத்துள்ளாள். பராமரிப்புதான் மிகப் பெரிய பிரச்சனை. குளிர் காலத்தில் அடிக்கடி தலை முடி அலசுவது வேறு கடினம். ஆனாலும் அவள் (அவளுக்கு மட்டுமல்ல எங்கள்க்கும் தான்) ஆசையை மறுக்க முடியவில்லை.

  ReplyDelete
 31. வாங்க சீனு அண்ணா,

  வைஷூக்கும் நீண்ட முடியா! குளிரில் தலைக்கு குளிப்பது கஷ்டம் தான்.

  தங்களின் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 32. கதம்பம் வாசமாக‌ இருக்கிறது ஆதி! ரேவதி சங்கரன் நிகழ்ச்சி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். குறித்து வைத்துக் கொண்டேன். உங்கள் குழந்தை பழைய கால வழக்கப்படி நீளப்பின்னல் கேட்பது மகிழ்வாக இருக்கிறது!

  ReplyDelete
 33. இறுதியில் சாய் சரண் வென்றே விட்டார் ... கணிப்பு, வாக்களித்தது வீணாகவில்லை ....

  ReplyDelete
 34. வாங்க மனோம்மா,

  எனக்கும் ரேவதி சங்கரனின் நிகழ்ச்சிகள் மற்றும் எழுத்தும் மிகவும் பிடிக்கும்.

  தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  என்னுடைய அடுத்த பதிவான வண்ட்டூ மாமா படித்தீர்களா?

  ReplyDelete
 35. வாங்க பத்மநாபன்,

  ஆமாங்க.இறுதியில் நம் கணிப்புப்படி சாய்சரண் வென்றே விட்டார். அவர் தேர்வு செய்த இரு பாடல்களுமே நல்ல பாடல்கள். மேலும் பல வெற்றிகள் அவருக்கு தொடர்ந்து கிடைக்கட்டும்.

  வழக்கம் போல் என்னுடைய பதிவு அப்ப்டேட் ஆகவில்லை. வண்ட்டூ மாமா படித்தீர்களா?

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…