Tuesday, August 30, 2011

பிள்ளையார் பிள்ளையார்....


எனக்கு மிகவும் பிடித்த கடவுளான பிள்ளையாரினைத் துதிக்க நாம் வருடாவருடம் கொண்டாடும் பிள்ளையார் சதுர்த்தி வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி வருகிறது.   அவ்வப்போது நான் அவருடன் பேசுவதுண்டு. எல்லாவற்றுக்கும் என்னவரிடம் கேட்கிறேனோ இல்லையோ, பிள்ளையாரிடம் கேட்டு விடுவேன்!.  அம்மா சொல்வார், பிள்ளையார் சதுர்த்தி அன்று எத்தனை பிள்ளையார் கோவில் செல்கிறோமோ, அவ்வளவு நல்லது என.  அதனால் கோவையில் இருக்கும் போது 108 பிள்ளையார் கோவில், ஆசியாவிலேயே பெரிய பிள்ளையாரான புலியகுளம் முந்தி விநாயகர் என சென்று பார்ப்போம். 


அவ்வப்போது நான் செய்த சில பிள்ளையார் பொம்மைகள், கைவினைப் பொருட்கள் ஆகியவை கீழே உங்கள் பார்வைக்காக….

வீட்டில் தேவையற்று இருந்த சில குறுந்தகடுகளை வைத்து, பிள்ளையார் உருவம் பதித்து, அலங்காரம் செய்து [சுற்றிலும் ஒட்டி இருப்பது வெறும் ஸ்டிக்கர் பொட்டுகள் தான்!] அதைச் சுவற்றில் தொங்க விடும்படி செய்தது…..


மாயக்கண்ணன் மட்டும்தான் நீல நிறத்தில் இருக்க வேண்டுமா என்ன? என் பெண் விளையாடுவதற்காக வாங்கிய ”மோல்டிங் க்ளே”- இல் இருந்த நீலநிற க்ளே கொண்டு செய்த நீல நிற பிள்ளையார் எப்படி இருக்கிறார்?


இறுக்கம் தளர்ந்த குக்கர் கேஸ்கட்டைத் தூக்கித்தான் போடவேண்டுமா என்ன?. அதில் சிறிது உல்லன் நூலைச்சுற்றி கேலண்டரில் வீட்டுக்கு வந்த பிள்ளையார் படத்தினை வைத்து சுற்றிலும் ஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு சில அலங்காரங்கள் செய்து நான் செய்த ஒரு கைவினைப் பொருள் பாருங்களேன்….  


வேறு எதாவது இருக்கிறதா என்கிறீர்களா?  இருக்கிறது.  நான் பென்சில் கொண்டு வரைந்த ஒரு பிள்ளையார் படம்.  அதன் புகைப்படம் கீழே….


இதெல்லாம் சரி், ”பிள்ளையார் சதுர்த்திக்கு உங்கள் பக்கம் வந்தோமே, எங்களுக்கு இனிப்பு எதுவும் இல்லையா?” என்று கேட்பவர்களுக்கு பிள்ளையார் சதுர்த்திப் பண்டிகைக்கு செய்ய ஏற்ற “அரைத்து விட்ட அரிசி-தேங்காய் பாயசம்” கீழே….  உருளியிலும் வைத்திருக்கிறேன், பிளாஸ்டிக் கிண்ணத்திலும் வைத்திருக்கிறேன்.  அதாவது பாரம்பரியம் மற்றும் ஃபேஷன் இரண்டும்….  இருந்தாலும் உருளியில் இருக்கும் பாயசத்தின் சுவை தனிதான்…செய்முறை வேறு ஒரு பகிர்வில் தருகிறேன்.அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

மீண்டும் சந்திப்போம்…...

ஆதி வெங்கட்.44 comments:

 1. இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. கைவண்ணம் மனம் கொள்ளைகொள்கிறது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  நீலவண்ணக் கணபதி ஜோர்.
  அழகாக கண்களைக் கவர்கிறார்.

  ReplyDelete
 3. அருமையான கை வேலைப்பாடுகள்..வாழ்த்துகள் சகோ.. தடை தகர்க்கும் கணபதியை வணங்குவோம்...புலியகுளம் மஹா விநாயகரை நினவு படுத்தியதற்கு நன்றி...

  ReplyDelete
 4. சிடி மற்றும் குக்கர் காஸ்கட் வைத்து செய்து இருக்கும் விதம் புதுமையும் அழகும் மிகுந்தவை. மிகவும் ரசித்தேன். விரைவில் பாயாசம் ரெசிபி பகிர்ந்து கொள்ள மறக்காதீங்க. சனி - ஞாயிறு - அந்த பதிவை போட்டுறாதீங்க.... நான் மிஸ் பண்ணிடுவேன். ஹி,ஹி,ஹி,ஹி....

  ReplyDelete
 5. உங்க கைவண்ணம் அற்புதமாக இருக்கு,ஆதி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. தாங்கள் வரைந்துள்ள பிள்ளையார் படம் அருமையாக உள்ளது. மனதில் பதிந்துள்ள பிள்ளையார் தான், தங்களின் கரங்களால் அழகாக வரையப்பட்டுள்ளார்.
  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk


  Voted 8 to 9 in Indli

  ReplyDelete
 7. ஆஹா! ஆஹா! ஒவ்வொரு மனிதனின் கற்பனைகளும் உணர்வுகளும் கட்டுப்பாடின்றி வெளிப்பட பிள்ளையார் எப்படி உதவுகிறார்.

  (எங்க வீட்டுல கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று ஒரு ஐந்து நிமிடம் ஒரு இடத்தில் உட்கார்ந்தால், ‘பிடிச்சு வச்ச பிள்ளையாராட்டம்’ உட்கார்ந்திருக்கிறதப் பாருன்னு குரல் வருது)

  ReplyDelete
 8. பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்.

  கைவேலைகள் சூப்பர்.

  //செய்முறை வேறு ஒரு பகிர்வில் தருகிறேன்//

  அங்க வச்சீங்க சஸ்பென்ஸ் ......

  ReplyDelete
 9. இனிய வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். உங்க
  கை வண்ணம் அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. சூப்பர் பிள்ளையார் உங்கள் கைவண்ணத்தில் ஜொலிக்கிறார். அயித்தானுக்கு ரொம்ப பிடித்தவர் இவர். அயித்தானுக்காக ஒரு கலெக்‌ஷனே செய்து வருகிறேன். அப்புறமா படம் போடுறேன்.

  ReplyDelete
 11. அருமையான க்ளே பிள்ளையார்..

  அதுஎன்ன ஐஸ் குச்சி கலரிங்க் குட்டிப்பொண்ணின் கை வண்ணமா..?

  ReplyDelete
 12. கைவண்ணம் ஓவியத்திலும்
  கைப் பக்குவம் பாயாசத்திலும் கண்டு ரசித்தோம்
  இனிய சதுர்த்தி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. அழகு அழகான பிள்ளையார்களுடன் இனிப்பான பாயசமும்..

  இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. எல்லா பிள்ளையாரும் ஜொலிக்கிறார்.

  ReplyDelete
 15. வாங்க இராஜராஜேஸ்வரி,

  க்ளேவில் பிள்ளையார் செய்வதை என் தோழி ஒருமுறை சொல்லிக் கொடுத்தார். தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 16. வாங்க பத்மநாபன் சார்,

  நம்மூரின் பெருமை புலியகுளம் பிள்ளையார். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 17. வாங்க சித்ரா,

  கண்டிப்பா பாயசம் ரெசிபியை பொறுமையாகத் தான் போடுவேன். அவசியம் படித்துப் பாருங்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 18. வாங்க ரமா,

  தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 19. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 20. வாங்க ஈஸ்வரன் சார்,

  உங்களின் பின்னூட்டமே அற்புதமாக இருக்கிறது. தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 21. வாங்க ராஜி,

  ஒரு பதிவு தேத்திடலாம் இல்லையா ! தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 22. வாங்க லக்ஷ்மிம்மா,

  தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 23. வாங்க புதுகைத்தென்றல்,

  பிள்ளையார் கலெக்‌ஷன்ஸ் போட்டோ அவசியம் பகிருங்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 24. வாங்க முத்துலெட்சுமி,

  குட்டிப் பொண்ணு பண்ணல...நான் பண்ணியது தான். :)
  தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 25. வாங்க ஆச்சி,

  தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 26. வாங்க ரமணி சார்,

  தங்களின் கவிதைப் போன்ற பின்னூட்டங்கள் பிரமாதம் சார். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 27. வாங்க ரிஷபன் சார்,

  தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 28. வாங்க அமுதா கிருஷ்ணா,

  தங்களின் பொன்னான வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 29. நெடுநாட்களுக்கு பிறகு என்னுடைய நேற்றைய வைட்டமின்கள் பதிவும், இன்றைய பிள்ளையார் பதிவும் டாஷ்போர்டில் அப்டேட் ஆகியுள்ளன.

  இந்த இடுகைக்கு இண்ட்லியில் வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 30. விதவிதமா புள்ளையார் அழகா இருக்கார் :-)

  ReplyDelete
 31. கலை மகளின் தலை மகளாம்,ஆதி வெங்கட் அவர்களே,

  ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனே, தங்களை பாராட்டுவதற்கு நாக்குகள் போதவில்லையே என்று வெட்கப்படுவார் என்றால் மிகையாகாது, தங்களின் கலைவண்ணமும் , கைவண்ணமும், ஒன்றோடொன்று போட்டிக்கொண்டு பிரகாசிக்கின்றது.பன்முக படைப்பாளி என்று தங்களுக்கு பட்டமளிப்பதில் இந்த எளியேன் பெருமைபடுகிறேன்...ஆதி பரம்பொருள் தங்களை, தங்கள் நாயகனை, தங்கள் செல்வத்தை வாழ்த்தி அருள இறைஞ்சுகிறேன், இந்த நன் நாளிலே.

  மந்தவெளி நடராஜன்.
  டொரோண்டோ,

  ReplyDelete
 32. உங்கள் கைவண்ணங்களும் அருமை கை பக்குவமும் அருமை

  ReplyDelete
 33. gasket பிள்ளையார் சூப்பர்...

  ReplyDelete
 34. நீங்க இவ்வளவு கைவேலைகள் செய்வீங்கன்னு இப்பத்தான் தெரியுது!! பூனை மாதிரி இருந்துட்டு... :-))))))

  வாழ்த்துகள்!!

  ReplyDelete
 35. வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

  ReplyDelete
 36. வாங்க அமைதிச்சாரல்,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 37. வாங்க வீ.கே நடராஜன் அவர்களே,

  தங்கள் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 38. வாங்க ஜலீலாக்கா,

  தங்கள் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 39. வாங்க ஸ்வர்ணரேக்கா,

  தங்கள் கருத்துரைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 40. வாங்க ஹுஸைனம்மா,

  தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 41. வாங்க ரத்னவேல் அய்யா,

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…