Monday, August 29, 2011

அத்தியாவசியமான வைட்டமின்கள்சென்ற புத்தக கண்காட்சியில் திரு என். சொக்கன் அவர்கள் எழுதியவைட்டமின்கள் அத்தியாவசியத் தேவைஎன்ற புத்தகத்தை வாங்கியிருந்தேன். இப்போது தான் ஆழ்ந்து படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
நமது அன்றாட வாழ்வில் வைட்டமின்களின் அவசியத்தையும், உணவு பழக்கத்தில் வைட்டமின்களை பெறுவது பற்றியும், இதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்களை பற்றியும் விரிவாக கூறியுள்ளார்.

இனி இப்புத்தகத்தில் ஆசிரியர் கூறியுள்ள சில கருத்துக்களை இங்கே பார்க்கலாம்

வைட்டமின்என்ற சொல்லின் பெயர்க்காரணமே நமக்கு அதன் அடிப்படைப் பண்புகளைத் தெளிவாக வரையறுத்து விடுகிறது. உண்மையில் இரண்டு சொல்களின் தொகுப்பு இது – VITAL+ AMINE = VITAMIN.  வைடல் என்றால் (நம் உடலுக்கு) அவசியம் தேவைப்படுகிற ஒரு சமாசாரம். அமைன் என்றால் நைட்ரஜன் கலந்த கூட்டுப் பொருள். இந்த இரண்டையும் இணைத்து வைட்டமின் என்ற பெயரை தேர்வு செய்தவர், போலந்தைச் சேர்ந்த காசிமிர் ஃபன்க் (KAZIMIERZ FUNK) என்ற ஆய்வாளர். நம்முடைய உடலுக்குள் பல வேலைகள் நடைபெறுவதற்கு இந்த வைட்டமின்கள்தான் காரணமாக அமைகின்றன.

வைட்டமின்களின் வேலை:-

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இருந்து, நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெற்றுத் தருவதற்கு வைட்டமின்கள், குறிப்பாக B காம்ப்ளெக்ஸ் வரிசையைச் சேர்ந்த வைட்டமின்கள் துணை புரிகின்றன.நம்முடைய தினசரி உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றை உடைப்பதற்கும் எரிப்பதற்கும் வைட்டமின்களின் உதவி தேவைப்படுகிறது.

வைட்டமின்களின் அவசியத்தை பாருங்கள்:

நம் உடலில் ஒரே ஒரு வைட்டமின் குறைந்தால் கூட நோய்கள் தாக்குவதற்கான சாத்தியம் ஏற்பட்டு விடுகிறது. மற்ற வைட்டமின்கள் எவ்வளவு இருந்தும் பலன் இல்லை. ஒரு வைட்டமினின் வேலைகளை இன்னொரு வைட்டமின் செய்ய முடியாதாம்.

வைட்டமின்களை யாரும் சாப்பாட்டுக்குப் பதிலாக எடுத்துக் கொள்ள முடியாது. சாப்பாட்டில் பயன்படுத்தப்படும் சில பொருள்கள்., நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களை வழங்குகின்றன. அதற்காக இந்த வைட்டமின்களை மாத்திரை வடிவில் விழுங்கி விட்டால் சாப்பாடு தேவையில்லை என்று அர்த்தமில்லை.

மொத்தம் எத்தனை வைட்டமின்கள்:-

வைட்டமின் A
வைட்டமின் B (எட்டு வைட்டமின்களின் தொகுப்பு: B1, B2, B3, B5, B6, B7, B9, B12 )
வைட்டமின் C
வைட்டமின் D
வைட்டமின் E
வைட்டமின் K
இந்த பதிமூன்று வைட்டமின்களும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

1)   கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ( FAT SOLUBLE )
2)   நீரில் கரையும் வைட்டமின்கள் ( WATER SOLUBLE )

புத்தகத்தின் கடைசியில் வைட்டமின்களை பெறுவதற்கான பத்து கட்டளைகளை கூறியுள்ளார்.  அவற்றை நாம் தொடர்ந்தாலே நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களை பெற முடியும் என்பது திண்ணம்அந்த பத்து கட்டளைகள் என்ன என்பதை புத்தகத்தினை வாங்கிப் படியுங்கள்.  விலையும் அதிகம் இல்லை நண்பர்களே.  ரூபாய் இருபத்தி ஐந்து [25] மட்டுமே.  புத்தகத்தினை வாங்க கீழ்க்கண்ட முகவரியை அணுகுங்களேன்:-

கிழக்கு பதிப்பகம்
177/103,
அம்பாள் கட்டடம், முதல் மாடி
அவ்வை சண்முகம் சாலை (லாயிட்ஸ் ரோட்)
ராயப்பேட்டை, சென்னை 600014
தொலைபேசி: 4200-9601, தொலைநகல்: 4300-9701 
இணைய முகவரி:  www.nhm.in


மீண்டும் சந்திப்போம்.....

ஆதி வெங்கட்23 comments:

 1. நல்ல பயனுள்ள தகவல்கள்.
  புத்தகத்தை சீக்கிரம் வாங்கி விடுகிறேன்.
  பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 2. நல்ல பயனுள்ள தகவல்களுக்கு நன்றி

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 4. Interesting book.
  அந்த பத்து கட்டளைகள் என்ன என்பதை புத்தகத்தினை வாங்கிப் படியுங்கள். விலையும் அதிகம் இல்லை
  super finish..

  ReplyDelete
 5. மிக அருமையான பயனுள்ள தகவலை தந்து இருக்கீங்க

  நீங்கள் குறிப்பிட்டுள்ல இடம் எங்க ஏரியாதான்.

  ReplyDelete
 6. நல்ல பகிர்வு.தெரிந்துகொள்ள வேண்டிய விசியங்கள்

  ReplyDelete
 7. நல்ல பயனுள்ள அருமையான தகவல்கள், வைட்டமின்கள் போலவே! பாராட்டுக்கள்.
  வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 8. நானும் ஊருக்கு சென்ற பொழுது அம்மா வாங்கி வைத்து இருந்தாங்க...நானும் படித்து பார்த்தேன்...ரொம்ப நல்லா இருந்தது...

  ReplyDelete
 9. பன்முக எழுத்தாளினி ஆதி வெங்கட் அவர்களே,

  "தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற்றிடல் வேண்டும்", என்ற ஒரு சீரிய நோக்கத்தோடு நோயற்ற வாழ்வினை எல்லோரும் பெற்றிடல் வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் , அவற்றில் வைட்டமிகளின் பங்களிப்பு எத்தகையது என்பது பற்றி கூறி அந்த புத்தகம் கிடைக்கும் விலாசத்தையும் குறிப்பிட்டதற்கு நன்றி. ஊருக்குத் திரும்பியதும் இந்த புத்தகத்தை வாங்கி, படித்து, தங்கள் சார்பில் யாவருக்கும் எடுத்து கூறுவேன் என்று உறுதி அளிக்கின்றேன், அம்மா.!

  மந்தவெளி நடராஜன்,
  டொராண்டோ,
  29-08-2011.

  ReplyDelete
 10. சத்தான பதிவு.பகிர்விற்கு நன்றி ஆதி

  ReplyDelete
 11. வாங்க ரமா,

  வாங்கி படித்துப் பாருங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 12. வாங்க லக்ஷ்மிம்மா,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 13. வாங்க சித்ரா,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 14. வாங்க ரிஷபன் சார்,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 15. வாங்க ஜலீலாக்கா,

  அது உங்க ஏரியா தானா! தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 16. வாங்க ஆச்சி,

  இந்த புத்தகத்தில் உள்ளவை பயனுள்ள கருத்துக்கள். தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 17. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்கள் பொன்னான வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 18. வாங்க கீதா ஆச்சல்,

  படிச்சீங்களா! தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 19. வாங்க புவனா,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 20. வாங்க வீ.கே நடராஜன் அவர்களே,

  தங்கள் பொன்னான வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சித்தப்பா.

  ReplyDelete
 21. வாங்க ராஜி,

  தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 22. இந்த இடுகைக்கு இண்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…