Wednesday, August 17, 2011

பீட்ஸா - சீடை


இன்னும் இரண்டே நாளில் கோகுலாஷ்டமி வரப்போகிறது என்கிற நிலையில் உமாவுக்கு அவள் அம்மாவின் ஞாபகமாகவே இருந்தது. மகள் தியா பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாக இந்தப் பண்டிகையின் சிறப்புக்களைப் பற்றி கேட்க   கண்ணனின் லீலைகளையும், விஷமங்களையும் பற்றி அவள் சொல்லிக் கொண்டிருக்கவும், கணவன் அலுவலகத்திலிருந்து வரவும் சரியாக இருந்தது.  கோகுலாஷ்டமிக்கு என்னென்ன பட்சணங்களும் நைவேத்தியங்களும் செய்வார்கள் என்று கேட்ட தியாவிடம் சீடை, தட்டை போன்ற பட்சணங்களும், கண்ணனுக்கு மிகவும் பிடித்த அவலில் பாயசமும், பால், தயிர் வெண்ணெய் என்று விவரித்துக் கொண்டிருந்தாள்.

அம்மா நீ என்னென்ன பண்ணப் போற?” என்று தியா கேட்டு முடிப்பதற்குள்அதெல்லாம் ஒன்றும் இழுத்து விட்டுக் கொள்ளாதே?  கிருஷ்ணன் உன்னிடம் சீடை, முறுக்கு பண்ணித்தா என்று கேட்டாரா? இதெல்லாம் மனிதர்களா வகுத்துக் கொண்ட நியதி. விதவிதமாக சாப்பிட இப்படி ஒரு ஏற்பாடு. உன் திருப்திக்கு வேண்டுமென்றால் பாலையோ, பழத்தையோ நைவேத்தியம் செய்து விடுஎன்றான் கணேசன். அவன் எப்பவுமே இப்படித் தான்.

விஷப்பரிட்சை எதுக்கு என்று நினைத்திருக்கலாம் அல்லது மனைவியை கஷ்டப்பட வைக்க வேண்டாமென எண்ணியிருக்கலாம் என்று தனக்குள் பேசிக் கொண்ட உமா அடுத்து தனது அம்மாவுடன் கொண்டாடிய கோகுலாஷ்டமி பற்றிய நினைவுகளில் மூழ்கிப்போனாள்.அம்மா நினைத்தால் இரண்டே மணியில் ஐம்பது பேருக்கு சமையல் செய்து முடிப்பாள். கைமணம் அற்புதமாக இருக்கும். ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் பண்டிகைகளில் குறை வைத்ததே இல்லை. குழந்தைகள் பத்து நாட்கள் வைத்திருந்து சாப்பிடட்டுமே என்று பார்த்துப் பார்த்து செய்வாள். கோகுலாஷ்டமி வந்து விட்டால் வெல்ல சீடை, உப்பு சீடை, தேன்குழல், தட்டை, இன்னும் பிறவும் இருக்கும். ஒவ்வொன்றும் அரை டின் அளவுக்காகவாவது செய்வாள். குழந்தைகளான என்னையும், தம்பியையும் உதவிக்கு அழைத்துக் கொள்வாள். மாவு தயார் செய்து விட்டு சீடைக்கு அழுத்தி உருட்டி எண்ணையில் போட்டால் முகத்தில் வெடித்துடும்கறதாலே மாவை எடுத்து விரல்களின் இடையில் அழுத்தாமல் உருட்ட வேண்டும் என்பாள். நாங்களும் அம்மாவுக்கு ஒன்றும் ஆயிடக்கூடாதே என்று பவ்யமாக உருட்டி போடுவோம். இதுவரை ஒருநாளும் சீடையோ மற்ற பட்சணங்களோ நன்றாக வரவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை
ஆயிரம் குறை சொல்லும் பாட்டியும் (அப்பாவின் அம்மா) ”உன் பொண்டாட்டி செய்யும் தட்டை நன்றாக இருக்கும்என்பார்.  அம்மாவின் கைப் பக்குவத்தில் சரியான உப்பு காரத்துடன் கரகரவென தட்டை அபாரமாக இருக்கும். பண்டிகைக்கு மட்டும் தான் செய்வாளா என்றால் இல்லை. வெளியில் எங்காவது செல்லும் போதோ, கோவிலிலோ பார்ப்பவர்கள் யாராவது கர்ப்பமாக இருப்பதாகக் கூறினால் அம்மா உடனே மாவு அரைத்து தட்டை தட்டி, ஒரு பாட்டில் புளிக்காய்ச்சல் செய்து, ஒரு இனிப்புடன், இரண்டு முழம் பூவுடனும் கிளம்பி விடுவார்.

உமா கர்ப்பமாக இருந்த போது இந்த பாக்கியம் கிடைக்கவில்லை. புற்றுநோயால் அவதிப்பட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருந்த அம்மா உமாவின் திருமணத்துக்குப்பின் அவளுக்கு நல்வாழ்க்கை கிடைத்துவிட்ட திருப்தியுடன் அடுத்த வருடமே இறந்து விட்டாள். அடுத்த மாதமே உமா கர்ப்பமானாள். அம்மாவின் நட்சத்திரத்திலேயே பிறந்த தியாவை அம்மாவின் மறு உருவமாகவே எண்ணினாள். திடீரென யாரோ கையை பிடித்து உலுக்கும் உணர்வு ஏற்பட்டதும் பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டாள்.

இன்று பண்டிகைகள் வந்தாலே பெரும்பாலானவர்கள் கடையில் வாங்கி நைவேத்தியம் செய்து விடுகின்றனர். செய்ய செய்யத் தானே கைப்பழக்கம் வரும். ஒரு தடவை சொதப்பினாலும் மறு தடவை சுமாராகவாவது வரலாம். நாம் செய்தோம் என்ற திருப்தியும், கைக்கு அடக்கமான செலவுடனும், சுகாதாரமாகவும் இருக்கும். நம்முடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் எக்காரணத்தைக் கொண்டும் விட்டு விடக் கூடாது. ஆயிரந்தான் உலகம் முன்னேறினாலும் கடவுளுக்கு பீட்ஸாவையும் பர்கரையுமா நைவேத்தியம் செய்ய முடியும்? அம்மா எத்தனையோ விதமான பட்சணங்கள் செய்தார்கள். இன்று நாம் நாலு விதமாவது செய்தால்தான் நாளை நமது மகள் அவள் காலத்தில் இரண்டு விதமாவது செய்வாள். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவது என்னுடைய தலையாய கடமை அல்லவா?

முடிவெடுத்தவளாய் சமையலறைக்குச் சென்று பட்சணங்களுக்கு வேண்டிய பொருட்களுக்கான பட்டியலை எழுதத் துவங்கினாள்.

ஆதி வெங்கட்.

45 comments:

 1. நல்லா இருக்கு ஆதி.. பீட்ஸாவையும் வச்சிக்கும்பிடும் நிலைவருமோ தெரியல..என் தம்பி சொல்வான், இனிப்பு தான் செய்யனுமா பாயசம் தான் செய்யனுமா..காரமா செய்துகும்பிட்டு நாம சாப்பிடுக்கலாமேன்னு..:)

  உமாவோட சீடை நல்லாவே வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்..:)

  ReplyDelete
 2. கோவை அரசியே,

  தங்கள் கன்னி முயற்சியே வெற்றி படிகளின் உச்சியில் கூடிய விரைவில் கொண்டு சேர்த்துவிடும் என்பதில் எள்ளளவு ஐயமில்லை. மீன்குட்டிக்கு நீந்த சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை என்ற கூற்றுக்கு இலக்கணம் வகுத்து விட்டீர்கள் என்றால் மிகையாகாது.
  வாழ்க்கையில், பார்த்து, அனுபவித்த, மற்றும் , கேட்ட சம்பவங்களை மற்றவர்களுக்கு பகிரும் வண்ணம் அந்த நாட்ட்களுக்கு வாசகர்களை அழைத்துசெல்வதிலும் அந்த சூழ்நிலைகளில் படிப்பவர்களை மூழ்கடிப்பதிலுமே ஒரு படைப்பாளியின் வெற்றி அடங்கியிருக்கிறது என்பேன், உதாரணத்திற்கு கல்கி,தி.ஜ.ர சிவசங்கரி, அனுராதா ரமணன் போன்றோர்.வாழ்க,வளர்க.

  மந்தவெளி நடராஜன்,(தொரன்தொவில் இருந்து)

  ReplyDelete
 3. உங்க பதிவு எனக்கும் பழைய நினைவுகளை நினைக்க
  வைத்தது. எங்க வீட்டில் நிறைய குழந்தைகள் அவங்கவங்க விருப்பத்துக்காக நிறைய தின்பண்டங்கள்
  செய்துடுவேன். வெல்லச்சீடை எல்லாருக்குமே ரொம்ப பிடித்தை ஐட்டம். ஒரு வாட்டி நாங்க மத்யப்பிரதேசத்தில் இருந்தப்போ வெத்தலெ கிடைக்கவே இல்லே. பான் பீடாவைத்தான் நைவெத்தியத்துக்கு வைக்க வேண்டி இருந்தது.

  ReplyDelete
 4. வாங்க முத்துலெட்சுமி,

  முதல் கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 5. வாங்க V.K NATARAJAN அவர்களே,

  TORONTO விலிருந்தும் என்னை ஊக்கப்படுத்துவதற்கு நன்றி சித்தப்பா.

  ReplyDelete
 6. வாங்க லக்ஷ்மிமா,

  இந்த பதிவின் மூலம் தங்கள் பழைய நினைவுகளை மீண்டும் நினைவூட்டியதா!
  கருத்துக்களுக்கு நன்றிமா.

  ReplyDelete
 7. நல்லாருக்குங்க கதை.
  //நாம் செய்தோம் என்ற திருப்தியும், கைக்கு அடக்கமான செலவுடனும், சுகாதாரமாகவும் இருக்கும்//
  ஆமாங்க, சில சமயம் பலகார பட்சணங்கள் செய்வது அலுப்பைத் தந்தாலும், கடைகளில் வாங்குவதைவிட சுகாதாரமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே வீட்டில் செய்துவிடுகிறேன்.

  ReplyDelete
 8. வாஙக் ஹுஸைனம்மா,

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 9. தங்களின் கன்னி முயற்சிக்கு வாழ்த்துகள்.

  நாம்தான் நம் பிள்ளைகளுக்கு வழிகாட்டி,ரோல்மாடல்.வருங்காலத்தில் பாரம்பரியப்படி செய்கிறார்களோ இல்லையோ நாம் செய்தவற்றை நினைத்தாவது பார்ப்பார்களேனு திருப்தியடையலாம்.

  ReplyDelete
 10. நாம்தான் நம் பிள்ளைகளுக்கு முதல் ரோல்மாடல்.பாரம்பரிய பழக்கங்களை கடைபிடிக்கிறார்களோ இல்லையோ நாம் வழிகாட்டியதை நினைத்துப் பார்த்தாலே சந்தோஷம்தான்.

  கன்னி முயற்சி கதை நன்றாக உள்ளது.மேலும் கதைகள் எழுத வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. அருமையான பதிவு! அந்த புகைப்படத்திலிருக்கும் சீடைகள் நிஜமாகவே பசியைத் தூண்டின.

  ReplyDelete
 12. //இன்று நாம் நாலு விதமாவது செய்தால்தான் நாளை நமது மகள் அவள் காலத்தில் இரண்டு விதமாவது செய்வாள். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவது என்னுடைய தலையாய கடமை அல்லவா?//

  அருமையான வரிகள்.

  சீடை நல்ல மொறு மொறு.

  அந்தக் காலத்தில் கர்ப்பமானவர்களை பார்க்க வருபவர்கள் பெரிய பாத்திரங்களில் பலகாரம் செய்து கொண்டு வருவார்கள். உனக்கு இனிப்பு பிடிக்குதா, காரம் பிடிக்குதா என்று கேட்டு விருப்பமானதை செய்து கொடுப்பார்கள்.

  கதை நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 13. கதையாக சொன்ன செய்தி அருமை... சீடை எடுத்து சாப்பிடனும் போல அமைஞ்சிருக்கு...

  கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 14. நல்ல கதை(!!!!).
  சில சமயம் அனுபவங்களே பெரிய கதைகளைச் சொல்லும் அல்லவா.

  படம் மிக அருமை.

  ReplyDelete
 15. மலரும் நினைவுகளாய் அனுபவங்களே அருமையன கதை போல.. பாராட்டுக்கள்.

  கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. // இன்று நாம் நாலு விதமாவது செய்தால்தான் நாளை நமது மகள் அவள் காலத்தில் இரண்டு விதமாவது செய்வாள். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவது என்னுடைய தலையாய கடமை அல்லவா?//

  அருமை.

  நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் ஆதி.

  ReplyDelete
 17. வாங்க ஆச்சி,

  உங்க வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 18. வாங்க மனோம்மா,

  கருத்துக்களுக்கு நன்றிம்மா. அந்த சீடை படம் நெட்டில் சுட்டது.

  ReplyDelete
 19. வாங்க கோமதிம்மா,

  வருகைக்கும், தொடர்ந்து தரும் ஆதரவுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 20. வாங்க பத்மநாபன் சார்,

  சீடையா எடுத்துக்கோங்க. கருத்துக்களுக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துக்களுக்கும் நன்றி சார். உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. வாங்க சீனு அண்ணா,

  பலரது அனுபவங்கள் தானே கதைகளாக மாறுகின்றன.
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிண்ணா.

  ReplyDelete
 22. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 23. வாங்க ராம்வி,

  வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 24. நாங்கள் சமீப காலமாக கடையில் வாங்கித்தான்
  நைவேத்தியம் செய்து கொண்டிருக்கிறோம்
  தங்கள் பதிவைப் படித்தது நல்லாதாய் போயிற்று
  ஒருமுறை செய்துதான் பார்ப்போமே என
  என் மனைவி முடிவெடுத்துவிட்டாள்
  நீங்கள் சொல்கிறபடி ஒருமுறை முன்பின்னாக
  இருந்தாலும் பழகப் பழக சரியாகித்தானே ஆகவேண்டும்
  தக்க சமயத்தில் தக்க பதிவைத் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. கதை நன்றாக இருக்கிறது.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. கதையாக தெரியலையே!!

  நல்ல நேரேஷன்....

  உப்புச்சீடையில் கொஞ்சம் தண்ணீர் சேர்ந்துவிட்டால் பட்...படார்தான்....

  பர்கரையும் பிச்சாவையும் கிருஷ்ணர் இன்னும் கொஞ்ச நாளில் நெய்வேத்தியமாக ஏற்றுக் கொள்வாராம்... என் கிட்ட சொன்னார்.. ஹா..ஹஹ்...

  நல்ல சிறுகதை? (உங்களோட லேபிள்ல இப்படித்தான் போட்ருக்கீங்க) :-)))))

  ReplyDelete
 27. அம்மாவின் நினைவு மனதை நெகிழவைத்து விட்டது . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 28. வாங்க ரமணி சார்,

  தங்களின் மேலான கருத்துக்கும் இந்த கதை மூலம் நல்ல முடிவு எடுத்ததற்கும் நன்றி சார்.

  ReplyDelete
 29. வாங்க மாலதி,

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 30. வாங்க ஆர்.வீ.எஸ்,

  அனுபவம் தான். கூட என்னுடைய கருத்துக்களையும் சேர்த்து கதையாக முயற்சிக்கலாமே என்று பதிவிட்டேன்.
  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 31. வாங்க M.R,

  தங்கள் முதல் வரவுக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 32. வாங்க கோவை நேரம்,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 33. நல்ல கருத்தை வெளிப்படுத்தும் அருமையான கதை.முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
  முதல் முயற்சியே வெற்றியுடையதாகவும் அமைந்திருக்கிறது.மேலும் மெருகு பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 34. வாங்க ராஜி,

  தங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 35. கதை நன்றாக இருக்கிறது..சிறுகதை? சிறுகதைக்கு பின்னால் இருக்கும் ? ஐ தூக்கி விடுங்கள்..தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துகள்.

  ReplyDelete
 36. இக் கதையை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.நேரமிருப்பின் பார்வையிடவும்..நன்றி.

  ReplyDelete
 37. வாங்க மதுமதி சார்,

  வலைச்சரத்தில் இந்த கதையை அறிமுகப்படுத்தியதற்கும், தொடர்ந்து எழுதுமாறு ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி சார்.

  ReplyDelete
 38. கதை நல்லாருக்குங்க. அம்மாவின் நினைவுகளுடன், பண்டிகை கொண்டாடுவதின் அவசியத்தையும் அழகா சொல்லியிருக்கீங்க. மேலும் இதுபோன்ற கதைகளைத் தொடருங்கள்.

  ReplyDelete
 39. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா..

  ReplyDelete
 40. ஆதி நான்கூட இதே மாதிரி அம்மாதான். எங்கம்மாவும் இதற்குமேலிருந்தாள். ரொம்பவும் ஆழமாகவும் அழகாகவும் சொல்லி இருக்கிராய். நன்றாக உள்ளது பெண்ணே. அன்புடன்

  ReplyDelete
 41. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..

  ReplyDelete
 42. அம்மாவின் நினைவுடன் உங்களின் கதை எல்லோரையும் அம்மாவை நினைக்க வைக்கும். என் பெண் கூட சில சமயம் சொல்லுவாள்: ' நீ செய்வதைப்பார்த்து தான் மா நான் செய்கிறேன்' என்று. நான் என் அம்மாவைப் பார்த்து செய்தால் அவள் என்னைப்பார்த்து செய்கிறாள். நல்லவற்றை இப்படித்தான் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து செய்துவருகிறோம்.
  நல்ல கதை நல்லசெய்தியுடன், வாழ்த்துக்கள் ஆதி!

  இன்னும் பல கதைகள் எழுதலாமே!

  ReplyDelete
 43. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

  ReplyDelete
 44. அருமையா சொன்னீங்க ஆதி. பழகப் பழகத்தான் சமையல் வரும். பட்சணம் சாப்பிட்ட திருப்தி உங்கள்பதிவில் :)

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…