Wednesday, August 10, 2011

வலைப்பூவுக்கு பிறந்த நாள்



தலைப்பு சொல்வது போலவே இன்று எனது வலைப்பூவுக்கு முதல் பிறந்தநாள். சென்ற ஆகஸ்ட் மாதத்தில் தான் எனது முதல் பதிவை வெளியிட்டேன். எனது கணவரின் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்துக் கொண்டிருந்த என்னை நீயும் பதிவுகள் எழுது என்று அவர் கூறவே என்னுடைய டைரியில் என் கல்லூரிக் கால நினைவுகளைப் பற்றி எழுதி வைத்துக் காட்டினேன். நன்றாக இருக்கிறது நீயே கணினியில் டைப் செய் என்று சொல்லவே, டைப்பிங்கே தெரியாதே என்று முழித்தேன். முயற்சி செய் என்றார். நாலு வரி அடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அவசரமே இல்லை பொறுமையாக பிழையில்லாமல் டைப் செய்து பார் என்று ஊக்கப்படுத்தினார். அப்படி ஆரம்பித்து இதுவரை 50 பதிவுகளை வெற்றிகரமாக எழுதி விட்டேன். ஆம். இது எனது ஐம்பதாவது பதிவும் கூட


என் கணவரின் சித்தப்பாவான பதிவர் திரு ராகவன் (ரேகா ராகவன்) அவர்களின் ஊக்குவிப்பும் என்னை இதுவரை எழுத உதவி புரிந்தது. இவர்கள் இருவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் என்  நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன். நான் பத்து பதிவுகள் வெளியிட்ட பின் என் கணவர் தனது வலைப்பூவின் முதல் வருட நிறைவு பதிவில் என்னை இந்த பதிவுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

முதல் பதிவான புதுமுகம் ஒரு அறிமுகம் பதிவிற்கு பிறகு என் கல்லூரி நினைவுகளைப்  பற்றியும், நம் அன்றாட வாழ்வில் மறந்து கொண்டிருக்கும் கை வைத்தியங்களைப்  பற்றி என் மாமியார் எனக்கு எழுதிக் கொடுத்த குறிப்புகளையும், சமையல் பற்றியும், நான் இருக்கும் இடமான தில்லி பற்றியும், இரண்டு தொடர்பதிவுகளும், நான் சென்று வந்த கோவில்களின் பயணம் பற்றி, இப்படியாக பலதரப்பட்ட விஷயங்களை என்னால் முடிந்த அளவு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

பாடல்களுக்கென நானும் என் கணவரும் ரசித்த பாடல் என்ற தனி வலைப்பூ ஆரம்பித்து இருவரும் சில நல்ல பாடல்களை பகிர்ந்திருக்கிறோம். என் பதிவிற்கு தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் உங்களின் பின்னூட்டங்கள் என்னை மேலும் நல்ல பதிவுகள் தர ஊக்கப்படுத்துகிறது. என்னை 6-7 முறை வலைச்சரத்திலும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நல்ல நட்பு வட்டமும் கிடைத்திருக்கிறது. பதிவர் சந்திப்புகளும் அவ்வப்போது நடக்கிறது. இந்த பதிவுலகம் எனக்கு புது உலகை காட்டியிருக்கிறது. என் சில பதிவுகள் அப்டேட் ஆவதில்லை என்றாலும் படிக்கும் சிலரின் பின்னூட்டங்களே என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது.


இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வந்துள்ள அனைவரும் பாயசம் எடுத்துக் கொள்ளுங்கள். என்ன பாயசம் என்றா கேட்கிறீர்கள்  இது பரங்கிக்காய் பாயசம். அடுத்த பகிர்வில் இதன் செய்முறையை பகிர்கிறேன்.

மீண்டும் வேறு பகிர்வில் சந்திப்போம்

ஆதி வெங்கட்.




27 comments:

  1. வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  2. வெற்றி தொடர நல் வாழ்த்துகள் கோ .சகோ. ....

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.. உங்கள் வலைப்பயணம் இனிதே தொடரட்டும். வாழ்கவளமுடன் :)
    பாயசத்துக்கு நன்றி

    ReplyDelete
  4. வலைப் பூ வளர அன்பான வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. ஹை!ஹாப்பி பர்த்டேயா?
    வாழ்த்துக்கள்.
    அதென்ன ஃபோட்டோல பாயசம் போட்டா நாங்கள்லாம்
    சும்மா விட்டுருவோமாக்கும்.இந்த கதை எல்லாம் வேண்டாம்.
    பாக்க வேற சூப்பரா இருக்கே.

    *************************************************

    தாங்கள் மேலும் பல பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டு
    எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  6. ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள். மேலும் எழுதி விரைவில் எழுத்தாளர் ஆக வேண்டும்.

    ReplyDelete
  7. பதிவுலக ஆயுஷ்ஹோமத்திற்கும்,
    50 ஆவது பதிவுக்கும் வாழ்த்துக்கள்.
    பாராட்டுக்கள்.

    மிகவும் தித்திப்பாக அளித்துள்ள
    பாயஸத்திற்கு நன்றிகள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஆதி.

    ஒரு வருடத்தில் 50 பதிவுகள் இதில் கணவரும் மனைவியும் ஒற்றுமை ! வியக்க வைக்கிறது.

    வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    பரங்கிகாய் பாயசம் எடுத்துக் கொண்டேன் சுவை அற்புதம்.

    நன்றி.

    ReplyDelete
  9. வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
    முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை
    பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
    வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....

    ReplyDelete
  10. வாழ்த்துகள். அதுக்குள்ள ஒரு வருஷம் ஆகிடுச்சா?

    ReplyDelete
  11. வலைப்பூவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கோவை2தில்லி வார்த்தைச்சித்திரங்களை விட இரண்டு நாட்கள் சிறியவளா?
    ஐம்பதாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள்.
    இன்னும் நிறைய எழுதுங்க.
    உங்களது எழுத்துப் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
    பரங்கிக்காய் பாயசத்திற்கு நன்றிங்க.

    ReplyDelete
  12. வலைப்பூ ஆண்டு நிறைவிற்கும்
    ஐம்பதாவது பதிவிற்கும்
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
    இனிமையாய் ஊக்குவித்த வாழ்க்கைத்துணைக்கு
    இனிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
    வாழ்க வளமுடன்!
    வளர்க நலமுடன்!!

    ReplyDelete
  13. heiiiiiii... happy blog birthday Aadhi... payasam super... konjam sugar sethudunga avlo thaan..;)) ha ha... just kidding... waiting for the recipe though

    Once again, congrats on one year of blogging...

    ReplyDelete
  14. வாழ்க வளமுடன். மேன்மேலும் வளர்க.வாழ்த்துக்களுடன்.

    ReplyDelete
  15. வாங்க கலாநேசன்,
    நன்றி சகோ.

    வாங்க பத்மநாபன்,
    நன்றி சகோ.

    வாங்க முத்துலெட்சுமி,
    வாழ்த்துக்கு நன்றிங்க. பாயசம் எடுத்துக் கொண்டதற்கும் நன்றிங்க.

    வாங்க சுசீலாம்மா,
    உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.

    வாங்க ராஜி,
    வாழ்த்துக்கு நன்றி. தில்லிக்கு வாங்க. பாயசம் என்ன! தடபுடலா விருந்தே தந்துடறேன். என்ன டிக்கெட் புக் பண்ணீட்டீங்களா?

    வாங்க ரேகா ராகவன் அவர்களே,
    வாழ்த்துக்கு நன்றி சித்தப்பா. தங்களின் ஊக்குவிப்பால் தான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன்.

    வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,
    வாழ்த்துக்கும், பாயசம் எடுத்துக் கொண்டதற்கும் நன்றி சார்.

    ReplyDelete
  16. வாங்க கோமதிம்மா,
    வாழ்த்துக்கு நன்றிமா. பாயசம் நல்லா இருந்துச்சா?

    வாங்க அம்பாளடியாள்,
    வாழ்த்துக்கு நன்றிங்க.

    வாங்க ஹுஸைனம்மா,
    ஆமாங்க. அதுக்குள்ள ஒரு வருடம் ஆகி விட்டது.

    வாங்க CHANDRU,
    THANK U BROTHER.

    வாங்க ஜிஜி,
    வாழ்த்துக்கு நன்றிங்க. ஆமாங்க. வார்த்தை சித்திரங்களை விட கோவை2தில்லி இரண்டு நாட்கள் சிறியவள்.

    வாங்க இராஜராஜேஸ்வரி,
    வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

    வாங்க புவனா,
    வாழ்த்துக்கு நன்றிங்க. பாயசத்துக்கு சர்க்கரை இன்னும் சேர்த்து விட்டேன். எடுத்துக் கொள்ளுங்கள்.

    வாங்க லக்ஷ்மிமா,
    வாழ்த்துக்கு நன்றிமா.

    ReplyDelete
  17. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி, நம்ம கோவை காரங்க டெல்லியில போயி பதிவெழுதறது சாதாரணமா ?
    அப்படியே இந்த பக்கத்தையும் கோஞ்சம் பாருங்க
    http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

    ReplyDelete
  18. வலைப்பூவின் ஓராண்டு நிறைவுக்கும்
    50 வது பதிவிற்கும் எனது
    மனப் பூர்வமான வாழ்த்துக்கள்
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. 50க்கும் முதல் பிறந்தநாளுக்கும் வாழ்த்து.

    50 சீக்கிரம் 500 ஆகவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. வாங்க !ஸ்பார்க் கார்த்தி @ ,

    வாழ்த்துக்கு நன்றிங்க.

    வாங்க ரமணி சார்,

    வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

    வாங்க புதுகைத்தென்றல்,

    வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  21. 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், கணவரும், மனைவியும் சேர்ந்து பலே பலே சூப்பர்.

    50 500 ஆக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. முதல் ஆண்டுக்கும், 50 வது பதிவிர்க்கும்,வாழ்த்துக்கள் ஆதி.

    ReplyDelete
  23. 50 வது பதிவுக்கும் முதல் ஆண்டுக்கும் நல்வாழ்த்துகள்.
    மேன்மேலும் வளர்ச்சியுற அரங்கன் அருள் புரியட்டும்

    ReplyDelete
  24. வாங்க ஜலீலாக்கா,
    தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    வாங்க ராம்வி,
    வாழ்த்துக்கு நன்றிங்க.

    வாங்க ரிஷபன் சார்,
    தங்களின் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி சார். அரங்கனின் அருள் நிச்சயம் வேண்டும்.

    வாங்க சீனு அண்ணா,
    தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  25. பல பதிவுகள் பல்லாண்டு தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…