Saturday, August 6, 2011

கேரட் பராட்டா



காலையில் அவசரமாக சிற்றுண்டி தயார் செய்து குழந்தைகளுக்கும், கணவருக்கும் பேக் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். வீட்டில் கேரட்டும், கோதுமை மாவும் இருக்கிறதா? பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி எப்போதும் எல்லோர் வீட்டிலும் இருக்கும். இதை வைத்து சத்தான அதே சமயம் சுலபமாகவும் ஒரு சிற்றுண்டி செய்து அசத்தி விடலாம். வாருங்கள் அதன் செய்முறையை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:-

கோதுமை மாவு – 1 கப்
கேரட் – 2
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலைசிறிதளவு
கொத்தமல்லிசிறிதளவு
மிளகாய்த்தூள்தேவைப்பட்டால் சிறிதளவு
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
உப்புதேவைக்கேற்ப
மஞ்சள்தூள்சிறிதளவு
எண்ணெய்தேவையான அளவு

செய்முறை:-

கேரட்டைக்  கழுவி தோல் சீவி நன்றாக துருவிக் கொள்ளவும். இஞ்சியையும் கழுவி தோல் சீவி கேரட்டைப் போலவே துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, துருவிய கேரட், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், உப்பு, மஞ்சள்தூள், காரம் அதிகமாக வேண்டுமென்பவர்கள் சிறிதளவு மிளகாய்த்தூளையும் சேர்த்து தண்ணீர் தெளித்து  சிறிதளவு எண்ணெய் விட்டு நன்றாக பிசைந்து ஐந்திலிருந்து பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.


பின்பு சப்பாத்தியாக இட்டு சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு நன்றாக சுட்டு எடுக்க வேண்டும். சுவையான கேரட் பராட்டா தயார்.

இதை ஊறுகாய், மற்றும் தயிர் பச்சடியுடன் பரிமாறலாம். சிலசமயம் முள்ளங்கி, கேரட் இரண்டும் சேர்த்தும் இந்த மாதிரி பராட்டா செய்யலாம். ஆனால் தண்ணீர் தெளித்து பிசையும் போது பார்த்து செய்ய வேண்டும். காரணம் முள்ளங்கியிலும் தண்ணீர் இருக்கும்.

சென்ற வாரம் மகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த பராட்டாவை செய்து கொடுத்தேன். நன்றாக இருந்ததென்று காலி செய்து வந்திருந்தாள். கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரியும் செய்து தரலாம்.

என்ன உங்கள் வீட்டில் நாளை கேரட் பராட்டா தானே!!!!

இந்த ரெசிபியை  ஜலீலாக்காவின் பேச்சிலர்ஸ் ஈவன்ட்டிற்கு அனுப்பி உள்ளேன். 


மீண்டும் வேறு ஒரு பகிர்வில் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.



10 comments:

  1. முள்ளங்கி போட்டா எனக்கு பிடிக்கும்.. அப்ப கேரட்டையும் சேத்துப்போட்டா நல்லதாச்சுங்கறிங்க.. நெக்ஸ்ட் டைம் செய்துடரேன்..:)

    ReplyDelete
  2. ரொம்ப சத்துள்ளதாச்சே.. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள். voted 4 to 5

    ReplyDelete
  4. முள்ளங்கி போட்டு செய்து இருக்கிறேன், காரட் போட்டு செய்தது இல்லை செய்து விடுகிறேன்.
    குழந்தை நன்கு பிரியமாய் சாப்பிட்டாள் என்பதே மிகுந்த சந்தோஷம்.

    ReplyDelete
  5. கேரட் பராட்டாவிற்குப் பிடியுங்கள் ஒரு 24 கேரட் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. இந்த இடுகைக்கு கருத்துரைத்துள்ள அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  7. அருமையான சத்துள்ள சப்பாத்தி ,செய்யாமலேயே சுவைக்கிறது....செய்து பார்த்து சுவைத்த பின் ஆஹா பேஷ் பேஷ்ன்னு பின்னூட்டமிடுகிறேன்

    ReplyDelete
  8. வாங்க goma,
    கருத்துக்களுக்கு நன்றிங்க. செய்து பாருங்க.

    ReplyDelete
  9. செய்து பார்த்துடுவோம்

    ReplyDelete
  10. வாங்க ஜலீலாக்கா,
    செய்து பாருங்கள். நன்றி.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…