Thursday, July 7, 2011

கறிவேப்பிலைக் குழம்பு




கறிவேப்பிலையின் சிறப்புகளைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியது. தலை முடி கருகருவென வளர்வதில் கறிவேப்பிலையின் பங்கும் இருக்கிறது. கோவையில் இருந்தவரை தேங்காயெண்ணெயில் கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி, மருதாணி போன்றவற்றை அரைத்துக் காய்ச்சி கலந்து தலைக்கு பயன்படுத்தியிருக்கேன்.  அட சமையல் குறிப்பு சொல்லும்போது அழகுக் குறிப்பு வேற வந்துவிட்டதாஅதுவும் நல்லது தானே.


இந்த கறிவேப்பிலை குழம்பு செய்த அன்று மகளிடம் கறிவேப்பிலைக் குழம்பு சாதம் சாப்பிட்டால் தலைமுடி நீளமாக வளரும் என்று சொன்னேன். ஏற்கனவே நீளமாக வளர்க்க ஆசையாக இருக்கும் தலைமுடியைத் தொட்டபடி, ஒவ்வொரு வாய் சாப்பிட்ட பின்னர்அட முடி வளர்ந்துடுச்சு பாத்தியா?” எனக் கேட்பாள்.

சாம்பாரில் கறிவேப்பிலை போட்டால் நிறைய பேர் அப்படியே எடுத்து தூக்கிப் போட்டு விடுவார்களே. அது போன்றவர்களுக்கு ஏற்ற ஒரு சமையல் குறிப்பு இது. இலையாக இருந்தால் தானே தூக்கிப் போட முடியும். அதையே குழம்பாக செய்து விட்டால்... சுடச்சுட சாதத்தில் போட்டு கலந்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:


உதிர்த்த கறிவேப்பிலை – 2 கப்
புளிஎலுமிச்சை அளவு
மஞ்சள்தூள்கால் டீஸ்பூன்
உப்புதேவையான அளவு

தாளிக்க:

கடுகுஅரை டீஸ்பூன்
வெந்தயம்அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய்கால்  கப்

வறுத்து அரைக்க:

மிளகாய் – 8 [அதிக காரம் வேண்டுமெனில் கூட ஒன்றிரண்டு சேர்க்கலாம்]
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயம்அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை: 
  • கறிவேப்பிலையை மொத்தமாக போடாமல், சிறிது சிறிதாய் வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்துக் கொள்ளவும்.
  • வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை, வாணலியில் சிறிது எண்ணெயை காயவைத்து ஒன்றாக சிவக்க வறுத்து    கறிவேப்பிலையுடன் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
  • புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதில் பொடித்த பொடி, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  • எண்ணையைக் காயவைத்து கடுகு வெந்தயம் தாளித்து புளிக்கரைசலை ஊற்றவும்.
  • நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.



இரண்டு நாட்கள் ஆனாலும் இந்தக் கறிவேப்பிலைக் குழம்பு கெடாமல் நன்றாக இருக்கும். சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.  இட்லி, தோசை ஆகியவற்றுக்கும் தொட்டுக்கொள்ள இது சுவையான ஜோடி.  என்ன நாளைக்கு உங்க வீட்டில கறிவேப்பிலைக் குழம்பு தானே?

மீண்டும் வேறு ஒரு பகிர்வில் சந்திக்கிறேன்

ஆதி வெங்கட்.  


20 comments:

  1. வெயில் காலம் முடிந்ததும் என் வீட்டில் எப்போதும் இருக்கும் இது. மிளகாயை குறைத்து 1 ஸ்பூன் மிளகு சேர்த்துவிடுவேன்.

    பூண்டு விரும்புபவர்கள் தாளிக்கும்பொழுது தோலுரித்த பூண்டு பற்கள் சேர்த்துக்கொண்டால் சூப்பர். மழைக்காலத்தில் வயிற்றுக்கு இதமானது.

    பகிர்வுக்கு நன்ரி

    ReplyDelete
  2. ஹை..எனக்கும் பிடித்த ஐட்டம்.. என் தோழி ஒருத்தங்க, நான் குழந்தை உண்டாகி இருந்தப்ப செய்து கொண்டுவந்தாங்க அப்பலேர்ந்து எனக்கு பிடிச்சுப் போச்சு.
    அவங்க கொஞ்ச சின்னவெங்காயம் வெட்டிப்போட்டிருந்தாங்க..

    ReplyDelete
  3. இந்த மழைக்காலத்துக்கும் அடுத்தாப்ல வரப்போற குளிருக்கும் ஏத்த குழம்பு..

    ReplyDelete
  4. அருமையான கருவேப்பிலைக் குழம்பு செய்முறை.
    ஆத்தில் செய்யச்சொல்லி சொல்லிப்பார்க்கிறேன்.
    இல்லாவிட்டால் ஒரு நாள் நானே செய்து அசத்திவிடுகிறேன்.
    அதுவும் இல்லாவிட்டால் டெல்லிக்கே பறந்து வந்து விடுகிறேன்.
    நன்றி. நல்ல பயனுள்ள பதிவு.

    Where is the provision for Voting ?

    ReplyDelete
  5. பயனுள்ள நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த ஐட்டம் இது.நானும் மிளகாயை குறைத்து
    கொஞ்சம் மிளகு சேர்த்து விடுவேன்

    ReplyDelete
  7. //தலை முடி கருகருவென வளர்வதில் கறிவேப்பிலையின் பங்கும் இருக்கிறது.//

    உண்மை! எனது தந்தையின் தலைமுடி இன்னும் கருப்பாக இருப்பதன் மர்மம் எங்கள் வீட்டில் இருந்த கறிவேப்பிலை மரம்தான்.

    இங்கே தில்லியில் கறிவேப்பிலையை காசு கொடுத்து வாங்கலாம் என்றால் பாதி சம்பளத்தைக் கேட்கிறானே!

    ReplyDelete
  8. கருவேப்பிலை குழம்பு நல்லா இருக்கும்.

    நல்ல கருவேப்பிலை கிடைக்கும் போது செய்ய ஆசை வரும்.

    பகிர்வுக்கு நன்றி ஆதி.

    ReplyDelete
  9. ரொம்பப் பிடிச்ச ஒன்று . நன்றி

    ReplyDelete
  10. அதன் ருசியும் மணமும் அலாதி.

    பசியைத் தூண்டி நல்லா சாப்பிட வச்சிடும்.

    ReplyDelete
  11. நன்றி
    எங்கள் வீட்டில் கருவேப்பிலை மரம் இரண்டு இருக்க
    என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தோம்
    தங்கள் பதிவைக் காண மகிழ்ச்சி
    இன்று முயற்சித்துப் பார்க்கிறோம்
    பயனுள்ள பதிவு.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வாங்க புதுகைத்தென்றல்,

    நானும் இனி மேல் மிளகு சேர்த்து செய்கிறேன். தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

    வாங்க முத்துலெட்சுமி,

    வெங்காயமும் சேர்ப்பாங்களா? முயற்சி செய்கிறேன். தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

    வாங்க அமைதிச்சாரல்,

    ஆமாங்க. மழைக்காலத்துக்கு ஏற்றது தான். தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

    வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

    தில்லிக்கு உங்களை வரவேற்கிறோம். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.
    என்னுடைய பதிவுகள் அப்டேட் ஆவதுமில்லை. இண்ட்லியும் சதி செய்கிறது.

    வாங்க தமிழ்த்தோட்டம்,

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

    வாங்க ராஜி,

    எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் பிடித்த குழம்பு இது. தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

    வாங்க ஈஸ்வரன் சார்,

    ஆமாம். கறிவேப்பிலை விலை கொடுத்து வாங்கினாலும் வாசனையும் இல்லை. இது தோழி ஒருவர் கொடுத்ததில் செய்தது. தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

    வாங்க கோமதிம்மா,

    நல்ல தரமான கறிவேப்பிலையில் செய்தால் நன்றாக இருக்கும். தங்கள் கருத்துக்களுக்கு நன்றிமா.

    வாங்க எல்.கே,

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோ.

    வாங்க ரிஷபன் சார்,

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.

    வாங்க ரமணி சார்,

    அவசியம் செய்து பாருங்கள். உடலுக்கு நன்மை விளைவிக்ககூடியது. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  13. குழந்தைகளுக்கான உலக சினிமா,பெண்களுக்கான உலகசினிமா
    குடும்பத்தோடு பார்க்க முடிகின்ற உலக சினிமா எல்லாவற்றையும் எழுதி வருகிறேன்.
    தற்ப்போதைய பதிவு நாயகன்,தேவர்மகன் படங்களின் தாய்...காட்பாதர்.

    ReplyDelete
  14. நேற்று கருவேப்பிலை குழம்புவைத்துச் சாப்பிட்டோம்
    இன்றைக்கு மதியம்வரை நன்றாக இருந்தது
    நல்ல சமையல் குறிப்பு கொடுத்தமைக்கு நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வாங்க உலக சினிமா ரசிகன்,

    நன்றிங்க.

    வாங்க ரமணி சார்,

    இந்த குழம்பை செய்து பார்த்து கருத்து தெரிவித்ததற்கு நன்றி சார்.

    ReplyDelete
  16. பயனுள்ள சுவையான பகிர்வு. கறிவேப்பிலை பொடியும் கூடவே செய்து வைத்துக்கொண்டால் வசதியாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. உங்க குட்டி செல்லம், அழகு செல்லம், கேட்டதாக சொல்லவும்,

    ReplyDelete
  18. அருமையான மணமான கருவேப்பிலை குழம்பு.


    நான் எப்போதும் கருவேப்பிலை பொடித்தான் செய்து வைத்து கொள்வது, மிளகாயிக்கு பதில் மிளகு தான்.
    கூடுமானவரை கருவேப்பிலையை குழம்புவகைக்ளுக்கு ரசத்துக்கு அரைத்து சேர்த்து கொள்வது.

    ReplyDelete
  19. வணக்கம்...

    உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  20. http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
    வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…