Monday, June 20, 2011

கதம்பம் - 2


தலைநகர் தில்லியில் பட்டிமன்றம்:

தினமணி நாளிதழின் துவக்க விழாவிற்கு அலுவலகத்திலிருந்தே சென்று வந்த கணவர் அடுத்த நாள் பேராசிரியர் சாலமன் பாப்பையா குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம் இருப்பதாகவும் எல்லோரும் போகலாம் என்று சொல்லவே அதற்குக் கிளம்பினோம். முதன் முதலாக நான் பார்த்த மேடை நிகழ்ச்சி இது.  மாலை 6 மணிக்கு Mavalankar Hall-இல் பட்டிமன்றம் துவக்கம் என்பதால் நாங்கள் அரைமணி முன்னதாகவே சென்று காத்திருந்தோம். ஆனால் பட்டிமன்றம் ஆரம்பமானதோ 7.30 மணிக்கு தான். சாலமன் பாப்பையா அவர்களைப்  பார்த்ததும் என் மகள்,இந்தத் தாத்தாவை டி.வியில் பார்ப்போமே” என்று கூறினாள். என் அபிமான பேச்சாளரான திருமதி பாரதி பாஸ்கர் வந்திருந்தார். சிறப்பான முறையில் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்திற்கு விவாதம் செய்ய வேண்டிய தலைப்பு "இன்றைய ஊடகங்களின் போக்கு போற்றதக்கதா? மாற்றதக்கதா?" என்பது தான்.   மாற்றதக்கதே என்று தான் நடுவர் இறுதியில் தீர்ப்பு கூறினார்.


கால் கிலோ பதினைந்து ரூபாய்:


எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கடைத்தெருவில் வட இந்திய மளிகைக் கடை ஒன்று உள்ளது. இங்கு நம்ம ஊர் பொருட்கள் - பொன்னி அரிசியிலிருந்து, காபி பொடி, வாரப் பத்திரிகைகள், தேங்காய் போன்ற அனைத்தும் கிடைக்கிறது

நேற்று கடைக்கு சென்று ஹிந்தியில் கேட்கக் கேட்க அந்த கடைக்காரர் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கு சின்ன வெங்காயம் வைக்கப்பட்டிருந்தது.  நான்யே கித்னே கா ஹேஎன ஹிந்தியில் எவ்வளவு ரூபாய் என கேட்க அவர் அழகாக தமிழில்,கால் கிலோ பதினைந்து ரூபாய்” என்று கூறவே வாயடைத்துப்  போனேன்.

பில்வாஷ்டகம்


Tata sky-இல் Active Darshan-இல் காசி விஸ்வநாதர் தரிசனம் பண்ணிக் கொண்டிருந்தோம். அதில் பில்வாஷ்டகம் ஓடிக் கொண்டிருந்தது. திரும்பத்  திரும்ப அதே வந்து கொண்டிருந்தது. கார்ட்டூன் போடு என்று சொன்ன மகளிடம் இந்த ஸ்லோகத்தைக் கேளு இதில் வரும்ஏக பில்வம் சிவார்ப்பணம்என்பதை கூடவே சொல்லு நல்லது என்று சொல்லி விட்டு சமையல் வேலையில் மூழ்கிவிட்டேன். தினமும் அதைக்  கேட்டுக் கொண்டே வந்த மகள் இரண்டு மூன்று நாட்களிலேயே  அழகாக கூடவே  சொல்ல ஆரம்பித்து விட்டாள்.   சிறு வயதில் எந்த விஷயமும் மனதில் நன்றாக பதியும் என்று பெரியோர் சொல்வது உண்மை தான். மறக்காமல் இருக்க தினமும் சொல்ல வேண்டும் என்று சொல்லியுள்ளேன்சிறு வயதில் ரேடியோவில் சனிக்கிழமை காலையில் ஒளிப்பரப்பாகும் இது போன்ற ஸ்லோகங்களில் கந்த சஷ்டி கவசத்தையும், கந்த குரு கவசத்தையும்  நான் மனனம் செய்தது நினைவில் வருகிறது.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

19 comments:

 1. தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

  ReplyDelete
 2. கதம்பச்சரம் மனம் கொள்ளை கொள்ள வைக்கிறது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் ஸ்லோகங்களுக்கு.

  ReplyDelete
 3. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
  இந்ததங்களின் கதம்பமும் நல்ல மணம் வீசுகிறது. பாராட்டுக்கள்.

  Voted.

  ReplyDelete
 4. அந்தக் கடைக்காரர் எப்படி தமிழ் படிச்சாராம்? இல்ல அவர் தமிழரா?

  ReplyDelete
 5. பொண்ணு படம் சூப்பர்!
  பதிவும் ஜோர்! ;-))

  ReplyDelete
 6. எத்த‌னை ச‌ர‌மென்றாலும் அழ‌கும் ம‌ண‌மும் நிறைவாக‌வே இருப்ப‌து க‌த‌ம்ப‌த்தின் த‌னிச் சிற‌ப்பு.

  ReplyDelete
 7. சூப்பர்..பொண்ணை சொன்னேன்..

  ReplyDelete
 8. நல்ல பதிவு. நல்லா இருக்கு.

  ReplyDelete
 9. good..
  இன்னும் நிறைய விஷயங்கள்
  சேருங்கள் அப்போது தான் கதம்பம் ஆகும்

  ReplyDelete
 10. அவ்வப்போது இம்மாதிரி பல்சுவைக் கதம்பம் தருவது கூட சுவாரசியம் கூட்டுகிறது..

  ReplyDelete
 11. உண்மைதான் மேடம். குழந்தைகள் வெகு எழுத்தில் கற்றுக் கொள்வார்கள். என் மகளும் அப்படிதான்

  ReplyDelete
 12. கதம்பம் கட்ட ஆரம்பிச்சிருக்கீங்களா? நல்லா மணக்குது.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. வாங்க இராஜராஜேஸ்வரி,

  என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கும், கதம்பம் பற்றிய தங்களது கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  நன்றி சார்.

  வாங்க ஹுசைனம்மா,

  அவர் தமிழராய் இருந்தால் அவர் கூறியதில் ஏன் ஆச்சரியப்பட வேண்டும். அவர் வட இந்தியர் தான். நன்றிங்க.

  வாங்க ஆர்.வீ.எஸ்,

  நன்றி சகோ.

  வாங்க நிலாமகள்,

  நன்றிங்க.

  வாங்க அமுதா கிருஷ்ணா,

  நன்றிங்க.

  வாங்க லக்ஷ்மிமா,

  நன்றி.

  வாங்க சமுத்ரா,

  முதல் வருகை என்று நினைக்கிறேன். நன்றிங்க. நிறைய விஷயங்களை சேர்க்க முயல்கிறேன்.

  வாங்க ரிஷபன் சார்,

  நன்றி சார்.
  வாங்க எல்.கே,

  திவ்யாவும் கற்றுக் கொண்டு வருகிறாளா? நன்றி சகோ.

  வாங்க புதுகைத் தென்றல்,

  நன்றிங்க.

  வாங்க மாலதி,

  முதல் வருகைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 15. தலைநகரில் தமிழ் பட்டிமன்றம் , இந்திவாலாவின் தமிழ், செல்வியின் பில்வாஷ்டகம் என சுவாரசியமான கதம்பம்.

  ReplyDelete
 16. வாவ்... பட்டிமன்றம் பாத்தீங்களா? சூப்பர்... நான் நேர்ல இதுவரைக்கும் பாத்ததே இல்லிங்க... //கால் கிலோ பதினைந்து ரூபாய்// சூப்பர்...:))

  ஆமாங்க நான் கூட ஸ்கூல் போறதுக்கு முந்தியே திருப்பாவை முப்பதும் சொல்லுவேன்னு எங்க அம்மா சொல்வாங்க... தொடந்து சொல்லாம அப்புறம் மறந்து போச்சு... "வர வர கழுதையா போய்ட்டு இருக்கு"னு பாட்டி காலேஜ் நாட்கள்ல திட்டின நியாபகம் தான் வருது...:) தொடர்ந்து சொல்ல வெய்யுங்க குட்டி பொண்ணை... :)

  ReplyDelete
 17. வாங்க பத்மநாபன்,

  நன்றிங்க.

  வாங்க புவனா,

  நன்றிங்க. தினமும் சொல்லச் சொல்லி இருக்கேன்.

  ReplyDelete
 18. குழந்தைக்கு பாராட்டுக்கள்.
  இன்றைக்கும் வீட்டில் கேட்டு கேட்டே பழகிய ஸ்லோகங்கள் தான் நினைவிலிருக்கிறது..

  எங்க பக்கத்துலயும் ஒரு கடையில் சட்னி தால் தாங்கன்னு கேட்டு அவர் பொட்டுக்கடலே ந்னு திரும்பி எனக்கு அதிர்ச்சி கொடுத்தார். :) பழகிடராங்க.. நம்மை ஹிந்தி பழகவிடமாட்டேங்கராங்க போங்க..

  ReplyDelete
 19. வாங்க முத்துலெட்சுமி,

  நம்மை ஹிந்தி பழக விட மாட்டேங்கறாங்க என்பது உண்மை தாங்க. தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…