Wednesday, May 25, 2011

பரங்கிக்காய் தொக்கு


தொக்குகளில் மாங்காய், தக்காளி, இஞ்சி போன்ற பல வகைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம், சுவைத்திருப்போம். இந்த தொக்கு வகைகள் தயிர் சாதத்துக்கும் [ நான் சமையல் பற்றி எழுதும்போது என் ஃபேவரிட் ஆன தயிர் சாதம் பற்றி எழுதாம விடலாமா!], இட்லி, தோசைக்கும் நல்ல காம்பினேஷன். பிரயாணங்களின் போது நாம் பொதுவாய் எடுத்துச் செல்லும் சப்பாத்திக்கும் மேற்கண்ட வகை தொக்குகள் ஏற்றதாக இருக்கும்.

புதிய வகை தொக்கு ஒன்றை ஸ்ரீரங்கத்திலிருந்து வந்திருந்த என் மாமியார் சொல்லிக் கொடுத்து அதை செய்தும் காண்பித்தார். நன்றாக இருந்தது. அதுபரங்கிக்காய் தொக்கு”.  மாங்காய் தொக்கு போலவே தான் இருந்தது. ஒரு வாரம் வரை ப்ரிட்ஜில் கெடாமல் வைத்திருந்து பயன்படுத்தலாம். பொதுவாக கல்யாணம், மற்றும் ஹோட்டல்களில் போடும் சாம்பாரில் இந்த பரங்கிக்காய் தான் மிதக்கும்வேண்டா வெறுப்பாய் எடுத்துப் போட்டு விடுவோம்.  ஆனால் அதை வைத்து ஒரு சுவையான தொக்கின் செய்முறை உங்களுக்காக...

தேவையான பொருட்கள்:-

பரங்கிக்காய் – 1 துண்டு (சுமார் 200 கிராம் )
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி
உப்புதேவையான அளவு
பெருங்காயம்ஒரு சிட்டிகை
கடுகுதேவையான அளவு
வெந்தயம் – ½ தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 100 மில்லி

செய்முறை:-

பரங்கிக்காயை தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். அடுப்பை பற்றவைத்து வெறும் வாணலியில் வெந்தயத்தை வறுத்து பொடித்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை பொரிய விடவும். பெருங்காயம் சேர்க்கவும். துருவி வைத்த பரங்கிக்காயை சேர்த்து சுருள வதக்கவும். அதில் மேலே குறிப்பிட்ட பொடிகளான மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும். சூடு ஆறியதும் வெந்தயப் பொடியைச் சேர்த்து கிளறி விடவும். சுவையான பரங்கிக்காய் தொக்கு தயார். அட எங்க கிளம்பிட்டீங்க? அரசாணிக்காய் வாங்கவா?   என்னடா இது மேலே பரங்கிக்காய் தொக்கு பத்தி எழுதிட்டு, இப்ப திடீர்னு அரசாணிக்காய்னு சொல்றாங்களேன்னு பார்க்கறீங்களா?  எங்கூர் கோயம்புத்தூர்ல பரங்கிக்காயை அரசாணிக்காய்னு தான் சொல்வோமுங்க!

வேறு ஒரு பதிவில் மீண்டும் சந்திப்போம்!

ஆதி வெங்கட்.

18 comments:

 1. தொக்கு என்றாலே அது காரசாரமானதாக இருக்க வேண்டும். அதுவும் தச்சிமம்முவுக்கு (தயிர் சாதத்திற்கு) தொட்டுக்கொள்ள, நல்ல காரம் தேவை.
  தொக்குமாங்காய் என்று பிரும்மாண்டமாக ஒரு 2 கிலோ வெயிட்டில் இருக்குமே. அது தான் சரிப்படும்.

  பறங்கிக்காய் என்பதே ஒரு திதிப்பு வகையைச் சேர்ந்தது. அதில் தொக்கு என்பது எனக்கென்னவோ .... ஓகே ஓகே....நீங்கள் தானே சாப்பிடப்போகிறீர்கள். அருமையான பதிவு. பாராட்டுக்கள். செய்து சாப்பிட்டு அசத்துங்கள்.

  ReplyDelete
 2. பரங்கிக்காய் தொக்கா? அட பரவாயில்லையே!

  ReplyDelete
 3. சுவையான பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. //எங்கூர் கோயம்புத்தூர்ல பரங்கிக்காயை அரசாணிக்காய்னு தான் சொல்வோமுங்க!//

  ஸ்ஸ்ஸ்ப்பா... சொன்னீங்களே புண்ணியவதி... நானும் என்னடா இது பரங்கிக்காய்னு ஏதோ சொல்லிட்டு அரசாணிக்காய் படம் போட்டு இருக்கீங்களேனு கன்பூஸ் ஆய்ட்டேன்... பரங்கிக்காய்னு என்னனு கேக்கலாம்னு நெனச்சேன்... நன்றி சொன்னதுக்கு... ட்ரை பண்ணி பாக்கறேன் இந்த ரெசிபி...:)

  ReplyDelete
 5. பரங்கிக்காய் தொகையல் சாப்பிட்டு இருக்கேன்.. தொக்கா..?
  ஓக்கே.. அதையும் ட்ரை பண்ணீரலாம்..

  ReplyDelete
 6. அரசாணிக்காய்ல சாம்பார்-பொரியல் தவிர வேற எதுவும் செய்ததில்ல,தொக்கு புதுசா இருக்குங்க. போட்டோ போட்டீங்கன்னா ஒரு க்ளியர் ஐடியா கிடைச்சிருக்கும்,அடுத்தமுறை செய்யும்போது மறக்காம போட்டொ எடுத்துப்போடுங்க! :)

  ReplyDelete
 7. கருத்துரைத்த அனைவருக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 8. புதுசா இருக்கே. நன்றி

  ReplyDelete
 9. "முடியுமா முடியாதா”
  பதிவை நாங்கள் படிக்க
  முடியுமா முடியாதா?

  டேஷ் போர்டில் வருகிறது.
  ஓபன் செய்து உள்ளே போக முடியவில்லை.

  என்னாச்சு?

  ReplyDelete
 10. சூப்பராக இருக்கின்றது..இந்த் பதிவினை மிஸ் பன்னிவிட்டேன் போல..

  ReplyDelete
 11. படிக்கும் போதே சுவைக்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது மேடம்
  உடனே என் மனையாளிடம் படிக்க சொல்லி ..........................................
  நான் செஞ்சி தந்திரனும்

  ஆம்மாம் நம்ம வீட்டுல நான்தான் சமையல்
  எல்லோரும் பொண்டாட்டி நேசன்
  நான் தாசன்

  நன்றி நல்ல பதிவு

  ReplyDelete
 12. உங்களை வலைச்சரத்தில்
  அறிமுகப்படுத்தி இருக்கேன்.
  நேரம் கிடைக்கும் போது
  பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html

  ReplyDelete
 13. இது மஞ்சள் பூசணியா ஆதி? கேரளாவில், அவியல், கூட்டு, தட்டப்பயறு சேர்த்து கறி என்று செய்வார்கள். அதுவா?

  ReplyDelete
 14. கருத்துரைத்த அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.

  லஷ்மிமா வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிமா.

  ஹுசைனம்மா அது மஞ்சள் பூசணி தான்.

  ReplyDelete
 15. மாங்காய்த் தொக்கு மாதிரியிருக்க‌ புளிப்புக்கு ஒண்ணுமே சேர்க்க‌லையே ஆதி...?!
  ஏ.ஆர்.ஆர்.ன் நேர்மையை நாம் பாராட்டியே ஆக‌ வேண்டும்!

  //ஆம்மாம் நம்ம வீட்டுல நான்தான் சமையல்
  எல்லோரும் பொண்டாட்டி நேசன்
  நான் தாசன்//

  ReplyDelete
 16. எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

  ReplyDelete
 17. மேலும் வாசிக்க....

  Do Visit

  http://www.verysadhu.blogspot.com/

  ReplyDelete
 18. வாங்க நிலாமகள்,

  பார்ப்பதற்கு தான் மாங்காய் தொக்கு போல் இருக்கும். மற்றபடி புளிப்புக்கும் இந்த தொக்குக்கும் சம்பந்தமில்லை. நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…