Monday, April 25, 2011

இடப்பெயர்ச்சிசென்ற மாத இறுதியில் வீடு மாறினோம். இதனால் வேறு பள்ளியில் அட்மிஷன், வீடு மாற்றம்  தொடர்பான வேலைகள் என பலவித டென்ஷன்கள். திருமணமாகி தில்லி வந்து ஒன்பது வருடங்களாக வசித்த பகுதியிலிருந்து வீடு மாற வேண்டி வந்ததில் பல அனுபவங்கள் கிடைத்தது. அதில் ஒரு சில இங்கே...

வீட்டில் உள்ள பொருட்களை பேக்கிங் செய்வது என்பது  ஒரு பெரிய வேலை. வெளி ஊர்களுக்கு மாற்றிச் செல்லும்போதுபாக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்ஏற்பாடு செய்தால் அவர்களே வந்து எல்லா வேலைகளையும் செய்து விடுகின்றனர்.  ஆனால் உள்ளூரில் என்னும்போது இங்குள்ளவர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.  அதனால் நாங்களாகவே செய்ய வேண்டிய கட்டாயம்

பேக்கிங் செய்ய ஆரம்பித்த பின்பு தான் தெரிகிறது வீட்டில் எவ்வளவு தேவையில்லாத, உபயோகிக்காத பொருட்கள் இருக்கிறது என்று. நானும் கணவரும் எப்போதுமே தேவையில்லாத பொருட்களை சேர்ப்பவர்களும் இல்லை. வாங்குபவர்களும் இல்லை. அப்படியிருந்தும் எப்படியோ சேர்ந்திருக்கிறது. அதில் நல்ல நிலையில் உள்ள சிலவற்றை அருகில் இருக்கும் குஷ்ட ஆசிரமத்தில் கொடுத்தோம்.

புதிய வீடு தில்லியின் மையப்பகுதியில் உள்ளது. கணவரின் அலுவலகத்திற்கு பத்து நிமிட நடை தான் தொலைவு. மகளின் பள்ளியும் நடக்கும் தொலைவு தான். தில்லியில் சிறிது இடம் கிடைத்தாலே ப்ளாட் போட்டு விற்கும்  நிலையில் இந்த குடியிருப்பைச்  சுற்றி பல்வேறு  வகை மரங்களும், கீழேயே பூங்காவும் உள்ளது. சிறுவர், சிறுமியருக்கு விளையாட ஏற்ற வகையில் ஊஞ்சல்களும், சறுக்கு மரங்களும், இன்னும் பலதும் உள்ளன. மகளும் அங்கு தினமும் விளையாட சென்று வருகிறாள். மரங்கள் இருப்பதால் மைனாவும், புறாக்களும், அணிலும் அடிக்கடி விசிட் செய்கின்றன.

வீட்டின் பின்பக்கம் அதாவது சமையலறைக்கு நேரே ஒரு  வேப்ப மரம் உள்ளது. இது காற்றை சுத்தப்படுத்தும் என்று படித்திருக்கின்றேன். ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திரத்துக்கேற்ற மரங்கள் உண்டு என்றும் அந்த மரத்துக்கு கீழ் அமர்ந்தோ அல்லது அந்த மரத்தினிடத்தில் நம் பிரச்சனைகளை பகிர்ந்தோ கொண்டாலோ  தீர்வு கிடைக்கும் என்றும் ஒரு புத்தகத்தில் படித்திருக்கின்றேன். அந்த வகையில் என் நட்சத்திரத்திற்கேற்ற வேப்பமரம் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

தில்லியின் மையப்பகுதியான ”[G]கோல் மார்கெட்என்ற இடத்திற்குத்தான் இப்போது இடம் பெயர்ந்திருக்கிறோம். இங்கிருந்துகரோல் பாக்”, ”புது தில்லி ரயில்வே ஸ்டேஷன்போன்ற இடங்கள் மிக அருகில் உள்ளன. எங்கள் வீட்டின் பின்புற சாலையில் தான்பிர்லா மந்திர்என்று அழைக்கப்படுகிற லஷ்மிநாரயண மந்திர் உள்ளது. சென்ற வாரம் ஞாயிற்றுகிழமை கரோல் பாக் சென்று வந்தோம்.

பல வருடங்களாக இயங்கி வரும் ஒரு மலையாளி கடையில் சூடான மசாலா வடை மற்றும் உளுந்து வடை கிடைக்கிறது.  நீண்ட நாட்கள் கழித்து தமிழகம் போலவே வடை சாப்பிட்டதில் ஏதோ ஜென்மமே சாபல்யமடைந்தது போல் இருந்தது. இங்கு நிறைய தமிழர் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நம்மூர் அயிட்டங்களான அப்பளம், சின்ன வெங்காயம், வெற்றிலை, தமிழ்ப்  பத்திரிக்கைகள் போன்றவற்றை தமிழிலேயே கேட்டு வாங்கியதில் ஏதோ தமிழ்நாட்டில் வாங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அடுத்து பள்ளியில் இடம் கிடைக்க வேண்டுமே என்ற டென்ஷன். என்ன நடந்தது என்று அடுத்த பகிர்வில் சொல்கிறேனே….

மீண்டும் சந்திப்போம்

ஆதி.

13 comments:

 1. இடப்பெயர்ச்சி பற்றிய தங்கள் பதிவு அருமையாக சுவாரஸ்யமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கோ.

  ReplyDelete
 2. ஜலீலாக்கா கைகளினால் சிறந்த பிளாக்கர் என்ற பட்டத்தினை வென்ற மாதரசியே, பாராட்டுக்கள். பட்டங்கள் மேலும் பல வென்றிட வாழ்த்துக்கள்.
  எவ்வளவுதான் முயன்றாலும் பல வருடம் வாழ்ந்த வீட்டினை காலி செய்தல் துன்பமே. பொருட்களை எடுத்து செல்ல ஆரம்பிக்கும்போதுதான் நாம் செய்த தவறுகள் தெரிய வரும். தேவையற்றவற்றை ஆசிரமங்களுக்கு கொடுத்து விடுதலும் , மேலும் வாங்காமல் இருத்தலும் பயன் தரும். புதிய இடத்தின் பல நன்மைகள் நமக்கு இளமையை கூட்டி நம்மை மேலும் உற்சாகமாக செயல் பட வைக்கும். என்பதில் எள்ளவும் ஐயமில்லை. தங்கள் பெண்ணரசிக்கு நல்லதொரு பள்ளியில் இடம் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவன் துணை வருவான்.

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 3. புது இடம், வேப்ப மரம், நடக்கும் தொலையில் ஹஸுக்கு ஆபீஸ், பிள்ளைகளுக்க் பள்ளி, பூங்கா ம்ம் கலக்குங்க,,

  ReplyDelete
 4. இடபெயர்ச்சி எவ்ளோ கொடுமையோ அவ்வளவுக்கு சுவாரஸ்யமும் கூட... புது மனிதர்கள்... புது இடம்... அந்த தேடலில் ஒரு வித சுகம் உண்டு என்பது என் சொந்த அனுபவம்... நீங்க சொன்ன விதத்துல உங்க வீட்டு வேப்ப மரத்து காத்து மேல ஆசை வந்துடுச்சு போங்க... பள்ளி அட்மிசன் பத்தி கேட்க ஆவல் சொல்லுங்க தோழி...:)

  ReplyDelete
 5. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  வாங்க வி.கே நடராஜன் அவர்களே,

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க ஜலீலாக்கா,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  வாங்க புவனா,

  டெல்லிக்கு வாங்க. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 6. தோய்ப்பு நடனத்தை ரொம்ப மிஸ் பண்ரீங்களா.....?
  இங்கேயும் பக்கத்துக்கு வீட்ல பேசறதெல்லாம் கேக்குதுங்களா?

  ReplyDelete
 7. உங்கள் பார்வையில் டெல்லி குறித்து
  அதிகம் எழுதுங்கள்
  படிக்க ஆவலாக உள்ளோம்
  படங்களுடன் பதிவும் இருக்குமாயின்
  கூடுதல் மகிழ்ச்சி தரும்
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. புதுவீட்லயும் சுவாரஸ்யமான சம்பவங்களை சந்திக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. ஓ இயற்கையான சூழலுடன் வீடு அமைந்தது மகிழ்ச்சி..

  ReplyDelete
 10. @கலாநேசன் கேள்விகள் அட்டகாசம்..:))

  ReplyDelete
 11. //வீட்டின் பின்பக்கம் அதாவது சமையலறைக்கு நேரே ஒரு வேப்ப மரம் உள்ளது. இது காற்றை சுத்தப்படுத்தும் என்று படித்திருக்கின்றேன். ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திரத்துக்கேற்ற மரங்கள் உண்டு என்றும் அந்த மரத்துக்கு கீழ் அமர்ந்தோ அல்லது அந்த மரத்தினிடத்தில் நம் பிரச்சனைகளை பகிர்ந்தோ கொண்டாலோ தீர்வு கிடைக்கும் என்றும் ஒரு புத்தகத்தில் படித்திருக்கின்றேன். அந்த வகையில் என் நட்சத்திரத்திற்கேற்ற வேப்பமரம் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.//

  வேப்பமரம் எல்லோருக்கும் நல்லது, குறிப்பாய் உங்கள் ராசிக்கு நல்லது என்றால் மேலும் மகிழ்ச்சி ஆதி.

  குழந்தைகள் விளையாட இடம் இருப்பது மிகவும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 12. வாங்க கலாநேசன்,

  ஆமாங்க தோய்ப்பு நடனத்தை ரொம்ப மிஸ் பண்றேன். இங்க ஒண்ணும் கேட்பதில்லை. நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்களே!

  வாங்க ரமணி சார்,

  தங்கள் வாழ்த்துக்கு நன்றி சார். முயற்சி செய்கிறேன்.
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  வாங்க அமைதிச்சாரல்,

  தங்கள் வாழ்த்துக்கு நன்றிங்க.

  வாங்க முத்துலெட்சுமி,

  ஆமாம்பா. இயற்கையான சூழல் தான். கலாநேசன் மறக்காம கேட்கிறார்.
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க கோமதி அரசு அம்மா,

  ஆமாம்மா. குழந்தைகள் விளையாட நல்ல அருமையான இடம் இருக்கின்றது. வருகைக்கும், கருத்துக்களுக்கு நன்றிமா.

  ReplyDelete
 13. இண்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…