Tuesday, April 5, 2011

குடமிளகாய் சாதம்
இந்த ரெசிபியை எனக்கு தோழி ஒருவர் சொல்லிக் கொடுத்தார். குட மிளகாயை  சாம்பாரிலும், சப்ஜிகளிலும் போட்டுக் கொண்டிருந்த நான்  அதன்  பின்னர் அவ்வப்போது இந்த குட மிளகாய் சாதத்தையும் செய்வதுண்டு. இது அலுவலகம் மற்றும் பள்ளி செல்பவர்களுக்கு  மதிய உணவுக்காக  எடுத்துச் செல்ல ஏற்ற உணவு. உடனே சாப்பிடுவதை விட காலையில் செய்து மதியம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். புளியோதரை எப்படி ஊற ஊற ருசி கூடுமோ அது போலத்  தான் இதுவும்.

தேவையானப் பொருட்கள் :-

குடமிளகாய் – 2 ( விதைகளை அகற்றி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
வடித்த சாதம் – 1 டம்ளர் அரிசியில் செய்தது
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
கரம் மசாலாசிறிதளவு
உப்புதேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப
தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன்
கடுகு – ¼ டீஸ்பூன்
கடலைப் பருப்பு – ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
பெருங்காயம் – ¼ டீஸ்பூன்

செய்முறை :-

வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் கடுகு போட்டு அது வெடித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும். வறுபட்டதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின்பு உப்பு, சாம்பார்ப் பொடி, கரம் மசாலா, ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும் தேங்காய்த்துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும். இதில் வடித்த சாதத்தை போட்டு நன்றாக கலக்கவும். இப்போது சுவையான குடமிளகாய் சாதம் தயார்.

பின் குறிப்பு :-

கரம் மசாலாவை விருப்பமிருப்பின் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையெனிலும் நன்றாக இருக்கும். இந்த சாதத்துடன் அப்பளம், வற்றல் [வடாம்] தொட்டுக்கொண்டு சாப்பிட காம்பினேஷன் நல்லா இருக்கும்.

இந்த ரெசிபியை ஜலீலாக்காவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் ஈவன்ட்டிற்கு அனுப்பி உள்ளேன்.


மீண்டும் சந்திப்போம்

ஆதி வெங்கட்.

31 comments:

 1. குடமிளகாய் ருசி தனிதான். :-)

  ReplyDelete
 2. குடமிளகாய் பிடிக்காது

  ReplyDelete
 3. சாப்ட்டாச்சு.. ரொம்ப நல்லா இருந்தது. ;-))

  ReplyDelete
 4. இதை நாளைக்கு என் திருமதியிடம் செய்ய சொல்லி ஆஃபீஸ் சென்று அசத்துகிறேன்...

  ReplyDelete
 5. நாவில் நீர் ஊறுகிறது...

  ReplyDelete
 6. நீங்க சொன்ன செய்முறை பிரமாதம்.

  ஆனால், தேவையான பொருட்கள் லிஸ்டில் இந்தக் குடமிளகாய்& கரம் மசாலா தவிர மீதியெல்லாம் எனக்குப் பிடித்த ஐட்டங்கள் தான்.

  எனவே நான் எஸ்கேப். நீங்களே செய்து நீங்களே சாப்பிடவும்.

  ReplyDelete
 7. குடமிளகாயை என்ன சாப்பாட்டுல போட்டாலும் சாப்பிடுவேன் நான்..:)
  குட்டீஸுக்கும் ரொம்ப நல்லதாச்சே..

  ReplyDelete
 8. அச்சச்சோ! எல் கே சார், கோபாலகிருஷ்ணன் சார் எல்லாம்
  எதிர் அணிக்கு போயிட்டாங்களே!

  ஆதி! எனக்கு குட மிளகாய் எப்படி பண்ணினாலும் என்ன பண்ணினாலும்
  பிடிக்கும்.இது நல்ல ரெசிப்பி.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 9. nice.குடமிளகாய் சேர்த்து சாதம்,நூடில்ஸ்,உப்மா செய்தால் தனி ஃபிளேவர் கிடைக்குமே.

  ReplyDelete
 10. குடமிளகாய் சாதம் மிகவும் நல்லா இருக்கிறது ஆதி.

  மதிய உணவுக்கு ஏற்ற உணவுதான்.

  ReplyDelete
 11. வித்தியாசமான சாதம்..

  ReplyDelete
 12. கொடைமிளகாய் சமையல் எல்லாம் பிடிக்கும்,இப்ப ஃப்ரிட்ஜில் ஸ்டாக் வைக்கும் காய்களில் இதற்கும் முக்கிய இடம் தான்..சாதம் பார்க்கவே அருமையாக இருக்கும்,சாம்பார் பொடி சேர்த்து செய்வது புதுசாக இருக்கு.

  ReplyDelete
 13. நல்ல குறிப்பு. லன்ச் பாக்ஸுக்கு ஏற்றதும்.

  ReplyDelete
 14. வித்தியாச ஐடியாவா இருக்கே. நாளைக்கே லன்ச்சுக்கு முயற்சி செய்துட வேண்டியது தான்.

  ReplyDelete
 15. குடமிளகாயை என்ன சாப்பாட்டுல போட்டாலும் சாப்பிடுவேன் நான்..:) //

  நானும் தான். :)) ரெசிப்பிக்கு நன்றி

  ReplyDelete
 16. சமையல் கலையை பாங்காக கற்றதுமில்லாது அதை , சமையல் என்றால் காத தூரம் ஓடுபவர்களும் "இதை நாம் என் ஒரு முறை செய்து கரம் பிடித்தவனை அசத்தக்கூடாது" என்று நாரிமணிகள் சபதம் பூணும் வகையில், எளிமையாக அதே சமயத்தில் புரியும்படியாகவும் சுவைபடவும் எடுத்து இயம்பிடும்/எழுத்தினில் வடித்திடும் எமது "கோவை அரசியே, ரெசிப்பி சக்ரவர்த்தினியே," குடமிளகாய் சாதம் செய்முறை விளக்கத்தை படிக்கும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கத்தொடங்கி விட்டது.எனது வெற்றிகளுக்கு பின்னால் என்றென்றும் இருந்துகொண்டிருக்கும் , எனனை எக்காலத்திலும் ஊக்குவிக்கும் என் இல்லக்கிழத்தி இதோ புறப்பட்டு விடடாள், குட மிளாகாய் சாதத்தின் ருசியை அருமை பெருமைகளை ஊரரியச்செய்திட." நன்றி, வாழ்க வளர்க.

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 17. எனக்கு மிகவும் பிடித்த கலந்த சாதம்...ரொம்ப சூப்பராக இருக்கு...

  ReplyDelete
 18. மிக அருமையாக இருக்கு,எனக்கு ரொம்ப பிடிக்கும்...

  ReplyDelete
 19. Sounds like simple and nice recipe... picture looks nice too...thanks for sharing freind...:)

  ReplyDelete
 20. கருத்துரையிட்டு மற்றும் இண்ட்லியில் வாக்களித்து இந்த இடுகையை பிரபலமாக்கிய அனைத்து நட்புள்ளங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 21. வித்தியாசமான சாதம்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 22. மிகவும் சுவையான குறிப்பு. செய்துபாத்திட வேண்டியதுதான்.

  ReplyDelete
 23. நம்ம சைடும் வந்து படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க>>> அன்புடன் காத்திருக்கிறோம்!!

  http://sagamanithan.blogspot.com/

  ReplyDelete
 24. குடைமிளகாய் சாதம் நல்லா இருக்குங்க.எங்கவீட்டிலும் குடைமிளகாய் ஒரு பேவரிட் காய்,செய்துபார்க்கிறேன்.

  சாப்பிடவாங்க வலைப்பூவில் இருக்கும் தேப்லா-ரெசிப்பி உங்களோடதா? அதைபார்த்து செய்து அங்கு பின்னூட்டமும் கொடுத்தேன்,பார்த்தீங்களான்னு தெரியல,தேப்லா மிகவும் ருசியா இருந்தது. நன்றி!

  ReplyDelete
 25. அற்புதமான ரிசிபிஎங்க ஆதி! நான் கூட ஒரு ரிசிபி வானவில்லில் போட்டிருக்கிறேன் பாருங்க!

  ReplyDelete
 26. குடை மிளகாய் வாசத்துடன் அருமையாக இருக்குமே.

  ReplyDelete
 27. கொடமிளகாய்!! சைனீஸ் ஐட்டங்கள்க்கு மட்டும்தான் பயன்படுத்துவேன். இப்படியும் செய்யலாமா? அட!!

  ReplyDelete
 28. வாங்க இராஜராஜேஸ்வரி,

  நன்றிங்க.

  வாங்க லஷ்மிமா,

  கண்டிப்பா செய்து பாருங்க. நன்றிமா.

  வாங்க சகமனிதன்,

  கண்டிப்பா வருகிறேன்.

  வாங்க மஹி,

  கண்டிப்பா செய்து பாருங்க. தேப்லா ரெசிபி போட்டது புதுகைத் தென்றல் அவர்கள். கருதுக்கு நன்றிங்க.

  வாங்க மோகன்ஜி,

  வானவில்லி பார்த்தாச்சு. நன்றி சகோ.

  வாங்க ஜலீலா கமல்,

  நன்றிங்க.
  வாங்க ஹுசைனம்மா,

  செய்து பாருங்கள். நன்றிங்க.

  ReplyDelete
 29. வணக்கம்


  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

  அறிமுகம் செய்தவர்-காவியகவி


  பார்வையிடமுகவரி-வலைச்சரம்


  அறிமுகம் செய்த திகதி-25.07.2014

  -நன்றி-

  -அன்புடன்-

  -ரூபன்-

  ReplyDelete
 30. அருமை. ஒருமுறை செய்து பார்க்கிறோம்!

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…