Wednesday, April 27, 2011

இடப் பெயர்ச்சி – பகுதி 2


சென்ற பகுதியைப் படிக்க… 

வீடு மாறுவதற்கு முன்பாக எனக்கு அதிக கவலை ஏற்படுத்திய விஷயம்  பெண்ணிற்கு புதிய பள்ளியில் இடம் கிடைக்க வேண்டுமே என்பதுதான்.  இந்த வருடம் UKG யில் இருந்து முதல் வகுப்பு சென்றுள்ளாள் மகள்.  இப்போது மாற்றி வந்திருக்கும் பகுதியில் உள்ள சிறந்த பள்ளிகளில் சிலவற்றில் அவளை சேர்க்க இடம் கேட்டு  விண்ணப்பித்திருந்தோம். அதில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட அனுபவம். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.500. படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்த பின்னர் எழுத்துத் தேர்வுக்கான நாள் குறிப்பிட்டனர். தேர்வுக்கு சுமார் 200 குழந்தைகள் வந்திருந்தனர். ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் தன்னுடைய குழந்தைக்கு இந்த பள்ளியில் இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில்  குழந்தைகளிடம் நன்றாக எழுத வேண்டும் என்றும் சக குழந்தையின் பெற்றோரிடம் உங்கள் குழந்தைக்கு அதை சொல்லிக் கொடுத்தீர்களா? இதை சொல்லிக் கொடுத்தீர்களா? என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக வரிசையாக தேர்வறைக்குள் அழைத்துச் சென்று இரண்டு மணிநேர காத்திருப்புக்கு பின் குழந்தைகளை வெளியே அனுப்பி விட்டு முடிவுகளை  பத்து நாட்களுக்கு பின் வெளியிடுவதாக தெரிவித்தனர். இந்த இரண்டு மணி நேர இடைவேளையில் நானும் என்னவரும் காதலர்கள் போல ஒரு வித ஐயத்தோடு அங்கு இருந்த புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். எங்களைப் போலவே எல்லா பெற்றோரும். கேண்டீனில் ஐஸ்க்ரீம், சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை அமோகமாக இருந்தது.

குறிப்பிட்ட நாளும் வந்தது. முடிவுகளை பார்த்தால்தேர்வு எழுதியதோ 200 குழந்தைகள். நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருப்பதோ 18 குழந்தைகளை .. அந்த 18-லும் எத்தனை பேருக்கு அட்மிஷன் கிடைக்கும் என்று தெரியவில்லை.  எங்கள் மகளுக்கும் கிடைக்க வில்லை. அட்மிஷன் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், ”நான் நன்றாகத்தானேம்மா எழுதினேன். எதையும் விட வில்லையே?” என்று என் மகள் அழ ஆரம்பித்து விட்டாள்குழந்தைகளுக்கு இந்த பள்ளிகளின் வியாபார தந்திரங்கள் எங்கே தெரியப் போகிறதுஇதை விட நல்ல பள்ளியில் உனக்கு இடம் கிடைக்கும் என்று சமாதானப்படுத்தினேன். அன்று தான் மகள் வளர்ந்து விட்டாள் என்பதை தெரிந்து கொண்டேன். இரண்டு மூன்று அனுபவங்களுக்கு பின் ஒரு வழியாக ஒரு பள்ளியில் இடம் கிடைத்தது. எல்லாம் பணம் பண்ணுகிற வேலை! கல்வி வியாபாரமாகி வருவது வேதனையான உண்மை.

முன்பு இருந்த பகுதியில் 300 தமிழ் குடும்பங்கள் இருந்தன. பிள்ளையார் கோயிலும், விழாக்களும் இருந்தது. இந்த பகுதியிலும் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள் என என்னவர் சொன்னாலும், தெரிந்து கொள்ள நிறைய நாட்கள் ஆகும். முன்பு இருந்த வீட்டுக்கும் இப்போது இருக்கும் வீட்டுக்கும் ஒப்பிட்டுப்  பார்க்கையில் நிறை குறைகள் இருந்தாலும் இப்போது ஓரளவுக்கு செட்டிலாகி விட்டோம். இந்த வீட்டில் மன நிம்மதியும், உடல் ஆரோக்கியத்தையும் கடவுள் வழங்குவார் என்று எண்ணுகிறேன்!

வேறு ஒரு பகிர்வுடன்  மீண்டும் சந்திக்கிறேன்….

ஆதி.

25 comments:

 1. வளர்ந்துட்டாளா சரிதான் புரிந்துகொள்ளும் திறன் வந்துவிட்டால் எல்லாம் சுகமே.. வாழ்த்துக்கள் குழந்தைக்கு:)

  ReplyDelete
 2. //இதை விட நல்ல பள்ளியில் உனக்கு இடம் கிடைக்கும் என்று சமாதானப்படுத்தினேன்.//

  கரெக்ட். அப்படித்தான் சொல்லி சமாதானப்படுத்தி, நம்மை நாமும் சமாதானம் செய்து கொள்ள வேண்டியுள்ளது.

  //அன்று தான் மகள் வளர்ந்து விட்டாள் என்பதை தெரிந்து கொண்டேன். //

  அவளும் சின்னக்குழந்தை தானே, பாவம்.

  //எல்லாம் பணம் பண்ணுகிற வேலை! கல்வி வியாபாரமாகி வருவது வேதனையான உண்மை.//

  மிகவும் கசப்பான ஆனால் மறுக்கமுடியாத உண்மை.
  200 பேர்களிடம் மனுவுக்காக மட்டுமே ரூ.500 வீதம் வாங்கிக்கொண்டு, 18 பேர்களுக்கு மட்டும் அட்மிஷனுக்குத் தேர்வானதாகச்சொல்கிறார்களே; அதிலிருந்தே தெரிகிறதே.

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. கவலைப் படாதீங்க.. எல்லாம் செட்டில் ஆயிடும். ;-))

  ReplyDelete
 4. குழந்தைக்கு புதிய பள்ளியில் இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி . வாழ்த்துக்கள் குழந்தைக்கு.

  புதிய வீட்டில் மனநிறைவும், உடல் ஆரோக்கியமும் நலமாய் இருக்க இறைவன் அருள்வார். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. புதிய இடத்தில் புத்துணர்வாக , மகிழ்வு பொங்க வாழ்த்துக்கள்.....

  குட்டி கிராஜ்வெட்டுக்கு வாழ்த்துக்கள் ( அந்த பதிவில் பின்னூட்டம் காணவில்லை)..புது பள்ளியிலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. கல்வி வியாபாரமாகி ரொம்ப நாளாச்சுங்க..

  அதிலும், நுழைவுத்தேர்வுகளெல்லாம் வெச்சு, வெற்றி தோல்வி மனப்பான்மையை இந்த பிஞ்சு மனங்கள்ல விதைக்கிறது ரொம்ப கொடுமையா இருக்கு.

  ReplyDelete
 7. வாங்க முத்துலெட்சுமி,

  ஆமாங்க மகள் வளர்ந்து விட்டாள் தான்.

  வரவுக்கு கருத்துக்கும் நன்றிங்க.

  வாங்க கவிதை வீதி செளந்தர்,

  வரவுக்கு கருத்துக்கும் நன்றிங்க.

  வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  ஆமாம் சார். அப்படித் தான் நானும் சமாதானம் செய்து கொண்டேன்.
  வரவுக்கு கருத்துக்கும் நன்றி சார்.

  வாங்க ஆர்.வீ.எஸ்,

  வரவுக்கு கருத்துக்கும் நன்றி சகோ.

  வாங்க கோமதி அரசு அம்மா,

  தங்கள் வாழ்த்துக்கு நன்றிமா.

  வாங்க பத்மநாபன்,

  தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சகோ. பின்னூட்டம் இருந்திருந்தால் பப்ளிஷ் செய்திருப்பேனே. வரவில்லையே. வாழ்த்துக்களை மகளுக்கு தெரிவிக்கிறேன்.

  வாங்க அமைதிச்சாரல்,

  நீங்க சொல்லியிருப்பது சரிதாங்க. அப்படித் தான் இப்ப்போதைய நிலைமை. வரவுக்கு கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 8. இண்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 9. உடல் ஆரோக்கியத்தையும் கடவுள் வழங்க பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 10. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்கள் பிரார்த்தனைக்கு நன்றிங்க.

  வாங்க புதுகைத்தென்றல்,

  நன்றிங்க.

  ReplyDelete
 11. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_06.html

  ReplyDelete
 12. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி புவனா.

  ReplyDelete
 13. புது இடத்தில், எல்லாம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. கோவை2தில்லி "ஆதிபுவனா", பல நாளா உங்க ப்லாக் வரணும்னு நினைச்சுட்டு இருக்கேன், ஆனா சமயம் கிடைக்கலே (அதான் நான் கும்மி அடிக்க போற எல்லா இடத்துலயும் உங்களை பாத்துருக்கேனே! நீங்க ஒரு வேளை என்னுடைய ப்லாகுக்கு வந்துருக்கீங்க நான் தான் மறந்துட்டேன்னா, சாரி எனக்கு மறதி ரொம்பவே அதிகம்.) ஒரு conponent code பண்ணி முடிக்காம எழுதிருக்க மாட்டேன்னு சொல்லிட்டு by mistake உங்க ப்லாக் பக்கம் வந்துட்டேனா.. ஒரே சிட்டிங்ல எல்லா பழைய சிலபசும் படிச்சு ரிவைஸ் கூட பண்ணியாச்சு. :) தோய்ப்பு நடனம், கொத்தமல்லி சாதம், தசாவதார், சட்னி, உங்களுடைய நாமகரணங்களான "ஹலோ", "பப்லு".. :D உங்கள் எழுத்துக்கு இன்ஸ்டன்ட் விசிறி ஆகிட்டேன்.

  என்னுடைய லிஸ்டில் ஒரு ரெண்டு மூணு பேர் இருக்கீங்க, சின்ன சின்ன விஷயங்களையும் சுவாரஸ்யமாய் எழுதி படிக்கும் போதே ஒரு சந்தோஷ உணர்வு கொண்டு வர்றது அவ்வளவு ஈஸி இல்லை. ரொம்ப பிடிச்சுருக்கு, தொடர்ந்து எழுதுங்க.

  போதாக்குறைக்கு உங்க ரங்கமணியும் பதிவரா!!! பதிவர்களா இருந்து தம்பதி ஆன கதைகள் தெரியும், ஆனா தம்பதிகள் பதிவர்கள் ஆகறதும் ஒரு சாதனை தான் போங்க! வாழ்த்துக்கள் உங்க ரெண்டு பேருக்கும் சுட்டிக்கும்.

  ஏப்ரல் 27க்கு அப்புறம் இன்னும் ஒண்ணும் வரலியே, ஏன்?

  ReplyDelete
 15. இந்த வீட்டில் மன நிம்மதியும், உடல் ஆரோக்கியத்தையும் கடவுள் வழங்குவார் என்று எண்ணுகிறேன்!

  நிச்சயமாய் வழங்குவார்.. எங்கள் வாழ்த்துகளும்.

  ReplyDelete
 16. மன நிம்மதியும், உடல் ஆரோக்கியத்தையும் கடவுள் வழங்குவார் !!

  ReplyDelete
 17. வியபார மயமாகி போனது,

  சின்ன கிலாசுக்கே இப்படி ஆகுதா?

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள்,நல்ல பகிர்வு,இங்கு ஒரு பிரபல பள்ளியில் ஆயிரக்கணக்கில் அப்ளிகேஷன் வழங்கி 20 குழந்தைகளை குலுக்கள் முறையில் தேர்ந்தெடுத்த முறையும் நடந்தது.

  ReplyDelete
 19. வாங்க சித்ரா,

  தங்கள் வாழ்த்துக்கு நன்றிங்க.

  வாங்க பொற்கொடி,

  தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் பின் தொடருவதற்கும் நன்றிப்பா. மன்னிக்கவும். நான் உங்கள் பதிவு பக்கம் வந்ததில்லை. கண்டிப்பா வருவேன். இங்கு என்னுடைய மாமனார், மாமியார் திருச்சியிலிருந்து வந்துள்ளார்கள். அதனால் புதிய பதிவுகள் எழுத நேரமில்லை. விரைவில் எதிர்பார்க்கலாம்.

  வாங்க ரிஷபன் சார்,

  தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

  வாங்க நிலாமகள்,

  வாழ்த்துக்கு நன்றிப்பா.

  வாங்க ஜலீலா கமல்,

  ஆமாங்க வியாபாரமயம் தான். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க ஆசியா உமர்,

  எல்லா இடத்திலயும் இப்படித்தானா! கருத்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 20. புது எடத்தில் சீக்கரம் செட்டில் ஆக வாழ்த்துக்கள்.... ஸ்கூல் அட்மிசன் பத்தி இப்போ கொஞ்ச நாளா நெறைய போஸ்ட் வருது... பாவம் கொழந்தைங்க... :((

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் நம்மை விட நம்ம குட்டிஸுக்கு எல்லாம் செட் ஆகனுமே என்ற கவலை தாங்க நிறய்ய.

  ReplyDelete
 22. வாங்க புவனா,

  தங்கள் வாழ்த்துக்கு நன்றிப்பா. எல்லா இடத்திலயும் இப்படித் தான் போலிருக்கிறது. :(

  வாங்க Vijiskitchencreations,

  ஆமாங்க. வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 23. வீடு மாறதுனாலே ரொம்ப கஷ்டம. எல்லாம் நமக்கு ஏற்றவாறு இருக்கணும். ஸ்கூல் பக்கத்தில் இருக்கனும். அப்புறம் அலுவலகம். ரொம்ப கஷ்டம....

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…